வணக்கங்கள் நண்பர்களே..!
A.P.J.அப்துல் கலாம்...இந்த நாமம் தான் இந்த மூன்று நாட்களில் இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்பட்டதாக இருக்கும்..! கனவுகளின் காதலருக்கு, காமிக்ஸ் காதலர்கள் அனைவரின் சார்பாக இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..!
அவரின் மரணம்..எனக்கு என் முதல் கனவை நினைவுட்டிவிட்டது. பதினான்கு வயதில் நான் கண்ட கனவு என்னதெரியுமா..? மரணம் பற்றியது, என் மரணம் பற்றியது. எப்போது என் மரணம் நிகழவேண்டும் என்பது பற்றியது. மறைந்த கலாம் வாழ்ந்த 84 வயதே என் வாழ்நாள் இலக்கும்..! 84 வயதுவரையில் வாழவேண்டும் என..என் சிறுவயதிலேயே நான் கனவுகாண காரணம்...
என்னுடன் விளையாடி,உரையாடி,விவாதித்து, பட்டாசு வெடித்து, உடற்பயிற்சி செய்து,உணவில் பங்கு கொடுத்து...உலகின் பல விஷயங்களை அறிமுகப்படுத்திய..என் வயோதிக நண்பரின் மரணமே நான் பார்த்த முதல் மரணம்..!அந்த மரணத்தை பார்த்தபின், அவர் வாழ்ந்த 84 வருடங்கள் போலவே நாமும் வாழவேண்டும் என்ற கனவு அன்று முளைத்தது. நான் வருந்திய அந்த முதல் மரணம் வேறுயாருடையதுமல்ல...என் தாத்தா தான்..!
நான் பார்த்த வயோதிக நண்பரின் மரணம்.. விரும்பியதை படித்துக்கொண்டே அவர் உயிர் பிரிந்தது. அவ்விதமே 'கலாம்' தனக்கு பிடித்ததை பேசிக்கொண்டே உயிர் துறந்தார். எனக்கும் அப்படியொரு மரணம் கொடு 'பராசக்தி'..! 84 வயதில் விரும்பியதை படித்துக்கொண்டே மரணம்..! அதுவும் காமிக்ஸ்படித்துக்கொண்டே மரணம்..தா..தேவி..! என்பதே நான் கண்ட முதல் கனவு..! படிப்பதற்கு நகைப்பாகவே இருக்கும்...நெருங்கிய நண்பர்களுக்கு இது...கவர்ச்சி வரிகள் அல்ல என்பது நன்கு தெரியும்..!
பதினான்கு வயதில் நான் கண்டகனவை நிஜமாக்க...அன்று தொட்டு என் இளமை நினைவுகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்..!என் இலக்கை அடையும் கடைசி நேரத்திலும்...என் மனதில் வயோதிகம் நெருங்கவிடாமல் காக்க, நான் கண்ட தங்கபஸ்பம், பதினான்கு வயதில் துவங்கிய இந்த பயணத்தின் நினைவுகளை என்றும் மறக்காமல் பாதுகாத்து வருவதே..! அந்த நினைவுகளை மீட்டெடுக்க என்னிடமுள்ள ஒரு மந்திரசாவி தான் காமிக்ஸ்..!
இந்த காமிக்ஸ் உலகில் நான் பெற்றவை ஏராளம்..! விசா வாங்காமலே...பல நாடுகளுக்கு பயணித்துள்ளேன். எந்த ஆயுதமும் ஏந்தாமலேயே பல போர்களங்களில் சண்டையிட்டுள்ளேன். எந்த ஸ்தாபனத்திலும் சேராமல், பல சர்வதேச மர்மங்கள் துப்பறிந்தவர்களுடன் பயணித்திருக்கிறேன். பதட்டமான பல நெருக்கடிகளை..சிறுதும் பதறாமல் தாண்டும் கலையை பல நாயகர்கள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நெஞ்சில் குண்டு பாயாமலேயே வலியில் துடித்திருக்கிறேன்..! பூமியை தாண்டாமலேயே பல கிரகங்கள் பார்த்திருக்கிறேன். இழப்புகள் எதுவுமின்றி கண்ணீருடன் உறக்கத்தை தொலைத்திருக்கிறேன். மரணத்தை கனவுகண்ட எனக்கு..வாழ்க்கைகனவை காமிக்ஸ் எளிதாக்கியது என்பதே நிஜம்..!
இந்த காமிக்ஸ் உலகில் நான் பெற்றவைக்கு கைமாறாக... பிரதிபலனாக நான் செய்யும் சின்ன முயற்சிகள், இந்த காமிக்ஸ் உலகை வளர்க்க செய்யும் சின்ன கால்தடம்... பார்ப்பவர்களுக்கு, என்னை வளர்த்துக்கொள்ள காமிக்ஸை பயன்படுத்துவதாக தோன்றுவது யதார்த்தமே..! தவறேதுமில்லை..! எந்த விதமானவளர்ச்சியாக இருந்தாலும்கூட, சேவை என வந்துவிட்டால் விமர்சனம் என்பது பொதுவே என்ற உண்மையை நான் உணர்ந்தேயிருக்கிறேன்..!
கடந்த வாரம் திரு விஜயன் அவர்கள் நம் முன்னே மூன்று கேள்விகள் வைத்தார்..! காமிக்ஸ் உலகின் எதிர்காலத்தை மாற்றபோகும் அந்த முக்கிய கேள்விகள் இதோ...
1.சீரான விலையோடு, இரண்டல்லது / மூன்று பாகங்களாய் டெக்சின் கதைகள் தொடர்கதைகளாய் வலம் வர செய்யலாமா?
2.Maxi டெக்ஸ் ; Color டெக்ஸ் ; Giant டெக்ஸ் என்று விதவிதமான format-களில் இத்தாலியில் அவர்கள் செய்யும் அதகளங்களைப் பார்த்து நாமும் சூடு போட்டுக் கொள்ளாது – நமக்கு ஏற்றதொரு பார்முலாவாக அமைத்துக் கொள்ளக்கூடியது தான் எதுவாக இருக்க முடியும் ?
3.‘தேவையானோர் முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம்‘ என சந்தாக்களோடு சம்பந்தப்படுத்தாது ஒரு தனிப்பட்ட ‘புல்லட் டிரெயின்‘ தடத்துக்கு TEX -ன் கூடுதல் எண்ணிக்கைகளைத் திசைதிருப்பினால் நலம் தருமா?
.....அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் தேடிய விடை, பெரும்பாலான காமிக்ஸ் காதலர்களின் கனவாவே எனக்கு தோன்றியது..! அதை எழுத்துக்களால் சிலைவடிக்காமல்...டெக்ஸ் வில்லரும் கார்சனும் இது குறித்து பேசுவது போல ஒரு முயற்சியை துவங்கினேன். பலரின் கனவை, பிடித்த பார்முலாவை உருவம் கொடுக்க முயன்றபோது...APJ.கலாமின் மறைவு..என் கனவை விருச்சகமாக வளர்த்துவிட்டது.
அந்த கனவின் உருவம்..இதோ....
இந்த பதிவின் நோக்கம் : "முகமூடி அணிந்தவர்களின் பின்னால் எப்போதுமே உயிர்ப்புடன் ஒரு சர்ப்பம் துடித்துக்கொண்டே இருக்கும், அது யார் மீதுவேண்டுமானாலும் வீசப்பட்டு திசைதிருப்பபடும்" என்ற கசப்பை நிரூபிக்கும் விதம், மீண்டும் திரு:விஜயன் மீது "இன்னும் வரப்போகும் நாட்களில், புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்க வரும் வாசகர் வட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தே போகும் என்பதிலும் சந்தேகம் ஏது ?" என ஒரு சர்ப்பம் வீசப்பட்டது..! இதற்கு நேர் எதிர்திசையில் பயணிக்க வைக்கும் வலிமையான கனவே இந்த பதிவு..!
இந்தகனவு மெய்ப்பட கைகொடுங்கள் தேழர்களே..! இந்த கனவு ஒரு புரட்சியோ, பிரார்த்தனையோ, உரிமையோ அல்ல..! நிறைவேற்றவேண்டிய கடமை..! இந்த ஒரு முறை மட்டும் "அருமை,அசத்தல்,அசாத்தியம், பாராட்டுகள், தொடருங்கள்" என்ற சாதாரண வரிகளை தாண்டி...காமிக்ஸ் பற்றிய உங்கள் கனவுகளை ஒரு வரியேனும் பகிருங்கள் நண்பர்களே..!
நட்புடன்
மாயாவி.சிவா
குறிப்பு: காதில் விழுந்த பலகருத்துகளை..நண்பர்கள் சொல்வதுபோல் கற்பனையில் அமைத்துள்ளேன். விருப்பமில்லாத கருத்தின் கீழ் உங்கள் பெயர் இருப்பின் மன்னிக்க..! நீக்கவேண்டிய கட்டாயம் or மாற்றவேன்டியவை பற்றி தெரிவிக்க..!
இலவச..ஸாரி..ஸாரி...ஸ்பெஷல் இணைப்பு : இவ்வளவு நீளமா நான் நீட்டி சொல்லியும், அந்த பார்முலாவை என்னால பளிச்சின்னு சொல்லமுடியலை...அதை இத்தாலி விஜய் அருமையா சொல்லிட்டார்...அவை ஜாலியாய் கீழே....
Smurf எல்லாம் குழந்தைகள் படிப்பது போலன்னு இன்றைய வாசகர்கள் நினைப்பார்களோன்னு ஆசிரியர் முத்து350 ஐ தவிர்த்து விட்டாரா.?இல்லை இப்போதுதான் டெக்ஸ் சிறப்பிதழ் 450க்கு வெளியிட்டோம்.அதற்குள் இன்னொரு சிறப்பிதழை வெளியிட்டு வாசகர்களின் பர்ஸை ஏன் காலியாக்கனும்னு நினைச்சுட்டாரோ.?இல்லை பழைய மாயாவி,மாண்ட்ரேக்குக்கெல்லாம் ரீபிரிண்ட் பண்ண அனுமதி கிட்டவில்லையா.?ஆசிரியருக்கே வெளிச்சம்.!அருமையான யோசனை.!ஈரோட்டில் படைகள் முற்றுகையிடட்டும்.போர் ஆமாம்.!போர்.!மாயாஜி! நீங்களே ஒரு காமிக்ஸ் நடத்தலாம் போலத் தெரியுதே.!
ReplyDelete@ karthik karthik
Deleteஜெய்...மகிழ் மதி...! பாகுபலி பாத்துட்டு வந்திங்களா கார்த்திக்..? இல்ல போர்..! போர்ன்னு சொன்னதும் எனக்கு 'பாகுபலி' நியாபகம் வந்துடிச்சி அதுதான்...!
மாயாஜீ ...பதிவின் ஆரம்ப வரிகள் மனதை வலிக்க செய்கிறது என்பது உண்மை ...
ReplyDeleteஎனது வாழ்க்கையில் காமிக்ஸ் என்பதை விட காமிக்ஸ் வாழ்க்கையில் நான் ஒரு அங்கம் என்பதே உண்மை ...இதை சாத்தியபடுத்தும் ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு துணை நிற்கா விட்டாலும் பரவாயில்லை தடை கற்களை போட வேண்டாம் என்பதே என் நிலைப்பாடு ...என்னுடைய கனவு நமது காமிக்ஸ் இதழ்களை முழுமையாக சேர்த்து பின் தினம் ஒரு காமிக்ஸ் இதழை முதலில் இருந்து படிக்க வேண்டும் என்பதே என் பேராசை ...லட்சியம் ...எனலாம் ..ஆச்சர்யம் இன்று காலை இதை பற்றி வாட்ஸ்அப் பில் நண்பர்களிடம் பகிர்ந்தேன் ..இப்பொழுது இங்கே பகிரும் அளவில் உங்கள் கருத்துக்களும் ....ஆனால் என் பேராசை பலிக்கும் என்ற கனவு ...கனவாகவே அமையும் சூழ்நிலை தான் இன்றைய பழைய காமிக்ஸ் நிலை ...
பார்ககலாம் எனது கனவு நினைவேறும் சூழ்நிலை ஏற்படுகிறதா என்று ...:(
@ Paranitharan K
Deleteஎந்த வரிகள் தலீவா..? அந்த மரணம் பத்தி என் கனவா..? அப்படி அமைய நிறையவே தவம் செய்யனும் இல்ல..! என்ன செய்ய ஆசை யாரை விட்டது..!
ReplyDeleteசென்னை மற்றும் ஈரோடு புத்தகத் திருவிழாக்கள்ல கண்டிப்பா டெக்ஸின் ஒரு குண்ண்ண்டு புக் வெளியீடு இருக்கணும்; இருந்தே ஆகணும் - இதானே நீங்க சொல்ல வருவது? குட்! சில விசயங்களை இதுமாதிரி சாதாரணமாச் சொல்லிட்டா அதோட வீரியம் புரியாதுதான்! அந்த வகையில உங்களோட இந்தப் பதிவு ரொம்ம்ம்ம்ம்பவே அவசியமானது!
ஒவ்வொரு புத்தகத் திருவிழாவும் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான திருவிழாவாக அமைய வேண்டுமென்றால்....
காமிக்ஸ் ரசிகர்கள் ஆர்வத்துடன் சங்கமிக்கும் ஒரு இடமாக இனி வரும் புத்தகத் திருவிழாக்கள் அமையவேண்டுமென்றால்.....
'எடிட்டர் வருகிறார்', 'காமிக்ஸ் நண்பர்கள்' வருகிறார்கள் என்ற உற்சாகங்களையும் தாண்டி ஒவ்வொரு காமிக்ஸ் பிரியரையும் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் புத்தகத் திருவிழாவை நோக்கி படையெடுக்க வைக்க வேண்டுமென்றால்....
ஒரு சிறப்பு வெளியீடு அவசியம் வேண்டும்!
அந்த வெளியீடு சற்றே குண்ண்டாய் அமையவேண்டும்!
அது பெரும்பான்மை ரசிகர்களின் கண்களை விரியச் செய்வதாய் இருக்கவேண்டும்!
அதற்கு அட்டகாசமாய் ஒரு நாயகன் வேண்டும்!
அது டெக்ஸ் வில்லராய் இருக்கவேண்டும்!
இதைவிட ஒரு எளிய; ஆனால் effective ஆன formula கிடைப்பது மிகவும் சிரமமே!
@ இத்தாலி விஜய்
Delete"ஆழ்ந்த கருத்துக்கள்..! எல்லோர் ஐயப்பாட்டையும் நீக்கும் அற்புத வரிகள்..! தீர்ந்தது என் பிரச்சனை..! யாரங்கே அந்த காமிக்ஸ் பரிசு மூட்டையை இவருக்கே வழங்குங்கள்..!"
..என திருவிளையாடல் முத்துராமன் போல சொல்ல ஆசைதான்...நான் அரசனுமில்லை...பரிசுதரும் மூட்டையுமில்லை...எனவே நீங்க பொடிஞ்சதை, இலவச இணைப்பாக பதிவில் பொடிஞ்ச்சிவிட்டேன்..ஹீ.ஹீ..!
இலவச இணைப்புக்கு நன்றி மாயாவி அவர்களே! இந்தப் பதிவை நீங்க தயாரிச்சிருக்கும் பிரம்மாண்டத்துல மயங்கிப்போய் யாராவது 'கருத்தை' கோட்டை விட்டுடக் கூடாதே என்கிற ஆதங்கமே எனது அந்தப் பின்னூட்டம்! சற்றே அதிகப் பிரசங்கித் தனமானதுதான் என்றாலும், அதையும் அழகுபடுத்திப் பார்க்கும் உங்களின் பெருந்தன்மையை என்னவென்பது!!
Delete@ இத்தாலி விஜய்
Deleteஉங்கள் அக்கறையான...உங்களுக்கே உரிய எளிய நடையில் (அது அவ்வளவு எளிதல்ல..) ரொம்பவே 'பளிச்' சொன்னதை நான் தவறாக...இலவச இணைப்பு என அறிவித்துவிட்டேன்...மிகசரியான பெயர் ஸ்பெஷல் இணைப்பு என்பதே..! வேகத்தில் விவேகம் கொஞ்சம் வெர்க்பண்ணலை பொடிஞ்சிகோங்க..!
மாயாவி சிவா நல்ல கனவு இது பகல் கனவாக இருப்பினும் இதை ஆசிரியர் புரிந்து நனவாக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ReplyDelete@ இளமாறன்
Deleteஅடுத்த ஞாயிறுகளில் முடிவு தெரிந்துவிடும் நண்பரே..!
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமேலும் பக்கம் 12 ல் மடிப்பாக்கம் வெங்கட் அவர்கள் கருத்தில் டெக்ஸ் என்னும் இடத்தில் டெக்ஸ்-ஐ என்று வர வேண்டும். தயவுசெய்து மாற்றி விடுங்கள். பிளீஸ்.
ReplyDeleteநீங்கள் சுட்டிகாட்டிய தவறு சரிசெய்துவிட்டேன் இளமாறன்..!
Deletethavaru illai, just pizai
Deleteமாயாவி சிவா சார்.! நான் டெக்ஸ் ரசிகன்தான்.,ஆனாலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம் சொல்லுவார்.""மதுரையை பற்றி பேச விஷால்,சசிகுமார்,விஜயகாந் போன்று நிறையப்பேர் உள்ளனர்.!மெட்ராஸ் பத்திபேச நான் மட்டும்தான் இருக்கேன்.""என்பார்.!அதைப்போலத்தான் டெக்ஸ்வில்லரைப் பற்றி பேச நிறையப்பேர் உள்ளனர்.!ஆனால் இலவரசியை பற்றிப்பேச நான் மற்றும் விரல் விட்டு என்னக்கூடிய சிலபேர்தான் உள்ளனர்.!
Delete@ MV
Deleteஅப்போ உங்ககிட்ட இருந்து விரைவில் அம்மையார் பத்தி ஒரு அசத்தல் பதிவை எதிர்பார்க்கலாம்..! (மாடஸ்டி...துப்பாக்கியில் வரும் புகையை சிகப்பு உதடில் ஊதும் ஒரு வண்ண படம்)
மாயாவி ஜி
ReplyDeleteஎனது எண்ணமும் அதுவே .... இதோ நமது லயன் ப்ளாக்கில் எனது பதில் ....
//
ஜனவரி - சென்னை புத்தக திருவிழா (3 கதைகள் கலர் / B & W) - தனி இதழ்கள் - customized imprints
பெப்ரவரி
மார்ச் -- 1 கதை - லயன் சந்தாவில்
ஏப்ரல் -- -- 1 கதை - லயன் சந்தாவில்
மே
ஜூன் -- லயன் ஆண்டு மலர் - 3 டெக்ஸ் (கலரில்) -- லயன் சந்தாவில்
ஜூலை
ஆகஸ்ட் - -- 1 கதை - லயன் சந்தாவில்
செப்டம்பர் -- 1 கதை - லயன் சந்தாவில்
அக்டோபர்
நவம்பர் - தீபாவளி மலர் - 2 டெக்ஸ் கதைகள் B & W -- லயன் சந்தாவில்
டிசம்பர்
ஆக மொத்தம் 12 கதைகள் .... மாதம் தோறும் டெக்ஸ் மட்டும் இல்லை டைகர் கதைகள் வெளிவந்தாலும் ஒரு கட்டத்தில் திகட்ட ஆரம்பித்து விடும் ... எனவே கொஞ்சம் இடைவெளி விட்டு வருவதே நமக்கும், டெக்ஸ்கும் நல்லது .... //
@ நாகராஜன்
Deleteஉங்கள் பதிலை லயன் ப்ளாக்கில் கவனித்தேன்..! பலரின் விருப்பமும் அதுவே...! அதற்கு ஒரு உருவம் கொடுத்தது தாண்டி வேறு ஒன்றும் நான் செய்துவிடவில்லை..! ஆமாம் பதிவில் நான் போட்ட உங்கள் மைண்டுவாய்ஸ் பலிக்குமா நண்பரே..!
லயன் ஆண்டு மலர், ஈரோடு புத்தக திருவிழாவில் வெளியிடும் வகையில் ஏற்பாடு செய்து கொண்டால் சரியாகிவிடும் ....
ReplyDeleteஅருமை மாயாவி!
ReplyDeleteஉங்கள் பதிவு என் கருத்து ஓட்டத்துடன் முழுவதும் ஒத்து போகிறது . இறுதியாக எங்கள் அன்பு நண்பர் ஈரோடு விஜய் சொன்னது போல இந்த முறை சிறப்பாக அமையும் . ஆசிரியர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை .
ReplyDelete@ POSTAL PHOENIX @ மயிலாடுதுறை ராஜா
Deleteநாம் நினைப்பதை தாண்டி ஆசிரியர் ஒன்று நினைக்கும் வாய்ப்புகள் இனி குறைவு..! ஜூனியரின் குட்டி project report இதை ஒட்டியோ,இதை விட சிறப்பான ஒன்றாகவே இருக்கும் என நம்புகிறேன்..!
@ postal Phoenix
Deleteஈரோடு வரீங்கதானே?
நிச்சயமாக அன்பு நண்பர் விஜய் அவர்களே . ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்களை சந்திக்க ஆண்டவர் அருள் புரியட்டும் .1 ம் தேதி லீவு போட்டுவிட்டு பின்னர் திரும்ப 8 ம். தேதி லீவு கேட்டு இருக்கிறேன் .
Deleteஎல்லோரும் ஒரே குரலில் பேசினால் கனவு மெய்ப்படும் வாய்ப்புகள் அதிகம் நண்பர்களே! பெரும்பான்மை ஆதரவு பெற்ற கருத்துகளை அமல்படுத்துவதுதானே சபாநாயகரின் வேலை.!
ReplyDelete@ கார்த்திக் கார்த்திக்
Delete//எல்லோரும் ஒரே குரலில்// ஆமாம்...ஒரே குரல்..."பாகுபலி..பாகுபலி..பாகுபலி..பாகுபலி..பாகுபலி.."
where tex vijayaragavan? tex parriya pathivil vijayaragavan enke?
ReplyDelete@ இளமாறன்
Deleteஎழுகுண்டலவாடா...கோவிந்தா..கோவிந்தா..!! ஏழுமலையானை...தரிக்க பாதயாத்திரை முடித்து நாளை இரவு திரும்பி விடுவார்..!
எல்லோரும் ஒரே குரலில் பேசினால் கனவு மெய்ப்படும் வாய்ப்புகள் அதிகம் நண்பர்களே! பெரும்பான்மை ஆதரவு பெற்ற கருத்துகளை அமல்படுத்துவதுதானே சபாநாயகரின் வேலை.!
ReplyDelete@ இளமாறன்
ReplyDeleteநண்பரே, இந்த புத்தகத் திருவிழாவிலாவது உங்களைச் சந்தித்திடும் பாக்கியம் கிடைக்குமா?
சேலம் நண்பர்களில் நான் சந்திக்க விரும்பிடும் இன்னொருவர் - கி.நா'களின் பரம வைரி திரு.S.V. VENKATESH!
Delete8,9ம் தேதி மூணாறு பேமிலி டூர். (1,2 வர எண்ணி இருந்தேன்). மற்ற ஏதாவது ஒரு நாள் கட்டாயம் வர முயற்சி செய்கிறேன் இத்தாலி விஜய்.
Delete8,9ம் தேதி மூணாறு பேமிலி டூர். (1,2 வர எண்ணி இருந்தேன்). மற்ற ஏதாவது ஒரு நாள் கட்டாயம் வர முயற்சி செய்கிறேன் இத்தாலி விஜய்.
Delete8,9ம் தேதி மூணாறு பேமிலி டூர். (1,2 வர எண்ணி இருந்தேன்). மற்ற ஏதாவது ஒரு நாள் கட்டாயம் வர முயற்சி செய்கிறேன் இத்தாலி விஜய்.
Deleteமாயாவி சிவா :-
ReplyDeleteகனவு மெய்ப்பட வேண்டும்.!!!
(உங்கள் பதிவின் ஆரம்ப வரிகள்., மேற்கொண்டு கவனத்தை செலுத்த விடவில்லை.!)
@ கிட் ஆர்ட்டின் கண்ணன்
Deleteநீங்கள் எந்த வரிகளை உள்வாங்கி நிற்கிறிர்கள் என என்னால் உணர முடிகிறது..! தாண்டி வாருங்கள் நண்பரே..! தாண்டி வாருங்கள்..!
எல்லோரும் ஒரே குரலில் பேசினால் கனவு மெய்ப்படும் வாய்ப்புகள் அதிகம் நண்பர்களே! பெரும்பான்மை ஆதரவு பெற்ற கருத்துகளை அமல்படுத்துவதுதானே சபாநாயகரின் வேலை.!
ReplyDeleteகனவு மெய்படவேண்டும்..! ....
ReplyDeleteஉண்மை தான் மாயாவி சார்... அனைவர் கனவுகளும் மெய்பட வேண்டும்...
என்னை பொருத்தவரை லார்கோவின் தந்தை சொல்வதைப் போல தேவைகளை காத்திருந்து வாங்குவதை விட தேவைகளை தேவையான நேரத்தில் வாங்குவது சாலச் சிறந்தது.. எங்களை போன்றவர்களுக்கு அதாவது 40 வயதுக்கு மேல் ஆனா இளங்காளையர்களுக்கு இருப்பது மேலும் 30 அல்லது 40 வருடங்களே... அதற்குள் டெக்ஸின் அனைத்து புத்தகங்களையும் தமிழில் புத்தகமாக படித்து விட வேண்டிய ஆசை மற்றும் நிர்பந்தம்.. எனவே தான் வருடத்திற்கு 24 புத்தகங்களை கேட்டேன்.. இப்போது உள்ள காமிக்ஸ் வாசகர்கள் வட்டம் குறைந்தது 20 வருடங்க்களுக்காகவாவது வாங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது...
புத்தக விழாக்களில் ஒரு மெகா புத்தகமாவது வெளியிடுவது அவசியம் ... அது அங்கு கூடும் மற்றும் அனைத்து வாசக நண்பர்களுக்கும் மிகப்பெரிய சந்தோசத்தை தரும்... மேலும் புதிய வாசகர்களை ஈர்க்கும்.. அதை வரும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் மிஸ் பண்ணுகிறோமோ என்ற ஐயம் உள்ளது.. பார்ப்போம்..
அனைவர் கனவுகளும் மெய்பட வேண்டும்...
@கரூர் சரவணன்
Deleteநானும் இளங்காளை தான் சரவணன்..! என்கையிருப்பும் 30 அல்ல..சரியாக 41 வருடங்களே..! ஆனால் டெக்ஸ் வில்லரின் கதைகள் மட்டுமே ஒரே இலக்கு அல்ல..! காமிக்ஸ் காதலர்களின் சங்கமம் ..இப்போதுள்ள காமிக்ஸ் வளர்ச்சிக்கு மிக அவசியாமான தேவை..! அந்த சங்கமத்தின் அதிர்வலைகள் நமக்குள்ளே உறவை பலப்படுத்துவது மட்டுமல்ல்ல...வட்டத்தை விரிவாக்கவும் செய்யும்..அதை நோக்கிய கனவு மெய்ப்பாட்டால் பிறகு எல்லாம் எளிது..! அனைவர் கனவுகளும் மெய்படுவது எளிது..!
This comment has been removed by the author.
ReplyDelete//"இன்னும் வரப்போகும் நாட்களில், புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்க வரும் வாசகர் வட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தே போகும் என்பதிலும் சந்தேகம் ஏது ?" //
ReplyDeleteவேதாளரே.,
இது மிஸ்டர் மரமண்டை அவர்களின் கருத்துதானே.?
எங்க போட்டோவையெல்லாம் போட்டு டயலாக்ஸை எழுதின மாதிரி.,
மிஸ்டர் மரமண்டை அவர்களின் போட்டோவைப் போட்டு இந்த டயலாக்கை எழுதி இருந்தீர்கள் என்றால்.,
ஹிஹிஹி!!!
இந்த பதிவு எங்கியோ போயிருக்குமே??? :-) :-) :-)
@ கிட் அர்டின் கண்ணன்
Deleteஓஓஓஓஓ....மேலிருந்து தாண்டி கீழ் வந்துவிட்டிர்களா...!! நீங்க பிராகெட் போட்ட வரிகளுக்கு முன்பின் இருந்த வரிகளையும் சேர்த்து படித்திர்கள் இல்லையா..! சர்ப்பங்களை வீசி ஆடுவது காமெடியல்ல..!
//என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை யாரறிவார்? ஆனந்தக் கண்ணீரென்று ஏமாற வேண்டாம் நண்பர்களே.. ப்ளீஸ்...//ரூபாய் 450 கொடுத்து வாங்கிய அழகிய காமிக் புத்தகம், பபரப்... பப்பரப்பே... என்று அலங்கோலமாக காட்சியளிக்கிறது.// ...இதோ வாதத்தில் ஜெயிக்க வீசி எறிந்த இன்னொரு சர்ப்பம்..!காமிக்ஸ் நண்பர்கள் என்றால் என்னவென்றே தெரியாத...இதுவரையில் யாரையும் சந்தித்தே இராத...திருவிழாவின் வாசனையே தெரியாத...அதை தெரிந்துகொள்ளவும் மாட்டேன் என சொல்லும் ஒரு கிணற்று தவளையுடன் வாதிக்கும் போது கிடைக்கும்...பரபரப்பு போதை தவளைக்கு வேண்டுமானால்தேவைபடாலாம்..!
குகைக்கு மேல் அருவியும், கால் தடத்துக்கு கீழ் சலசலக்கும் நதியும், வழிநெடுக்க மனம் வீசும்பசுமையான வனத்திற்கு நடுவில் உள்ள, எனக்கு அந்த போதை தேவை என்றா நினைக்கிறிர்கள் கண்ணன்..:-)))
(இடுப்பில் இரு கைளை வைத்துக்கொண்டு சிரிக்கும் வேதாளரின் வண்ண படம் ஒன்று)
Really a Nice idea mayavi siva sir. the way u expressed ur idea is awesome
ReplyDeletewe will insist this idea to our editor when we meet him at erode book fair
starting lines of this post is breathtaking.What a man u r! am proud to have such a passionate guy as my friend
@ ராமையா ராஜா
Deleteஇப்படியெல்லாம் எழுதி நண்பர்களை அரவணைக்க ஒரு தெளிவுவேண்டும்..! இந்த தெளிவை, எந்த நாளில், நான் ஈரோடில் பார்க்காலாம் ராமையா அவர்களே..!!!
வணக்கம் மாயாவி சார் %நண்பர்களே......பாதயாத்திரை சென்று ஏழுமலையானை திவ்ய தரிசனம் கண்டு வந்தேன் ....ஆனந்தம் . .ஆனந்தம் ...ஆனத்தமே ....நம் அனைவரின் நலனுக்காகவும் வில்லரின் கதைகளை நாம் அனைவரும் முடிந்தளவு படிக்க அருள வேண்டியும் பிரார்த்தனைகள் செய்து வந்தேன் நண்பர்களே......
ReplyDeleteஇங்கே இந்த பதிவை இன்று காலை படித்தவுடன் ஆகா...பிரார்த்தனை உடனடியாக பலிக்க வழி தேடிக்கொண்டு உள்ளார்கள் .....நம் நண்பர்கள் என்ற எண்ணத்தை விதைக்க ஆரம்பித்து விட்டது ..இந்த பதிவின் நோக்கம் ....பரம திருப்தி மாயாவி சார் , விஜய் & நண்பர்களே......இப்போது ஆசிரியர் மனதிலும் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் ...என்ற எண்ணம் நிச்சயமாக உதிக்க ஆரம்பித்து இருக்கும் ....அதை நாம் 9ம் தேதி உறுதியாக அறியலாம் என்றே என் உள்ளுணர்வு சொல்கிறது ....
மாயாவி சார் & நண்பர்களே........காமிக்ஸ் என்னும் விருட்சம் பல விழுதுகள் விட்டு அசைக்க முடியாத பிரம்மாண்டமான வளர்ச்சி கண்டுவிட்டது கண்கூடு ....பொறாமை எண்ணங்கள் இன்னும் பலப்பல வழிகளில் வெளிப்படும் ...அவற்றை சட்டையில் படியும் தூசியாக தட்டிவிட்டு பீடு நடை போடுவோம் ....வேண்டாத எண்ணங்களை நம் சிந்தைக்குள் நுழைக்க வேணாமே.......ஜெய் மகிழ்மதி....
//வேண்டாத எண்ணங்களை நம் சிந்தைக்குள் நுழைக்க வேணாமே.......ஜெய் மகிழ்மதி....//
Deleteநாமோ 25000 பேர்கள்தான். (மகிழ்மதி)
காலகேயர்களின் படைபலம் நூறாயிரம் பேர்களாம்.! !!
@ சேலம் இரவுகழுகாரே
Deleteஇந்த கட்டப்பா வேறென்ன சொல்லப்போகிறேன்..! ஜெய் மகிழ்மதி..!!!
//வேண்டாத எண்ணங்களை நம் சிந்தைக்குள் நுழைக்க வேணாமே.......ஜெய் மகிழ்மதி....//
Deleteநாமோ 25000 பேர்கள்தான். (மகிழ்மதி)
காலகேயர்களின் படைபலம் நூறாயிரம் பேர்களாம்.! !!
மாயாத்மா!
Deleteதொப்பி போட்ட கட்டப்பா.?!! (செம்ம) .!!!!
சிவகாமி அம்மையார் யாருங்கோ.? :-) :-) - :-)
மாயாத்மா!
Deleteதொப்பி போட்ட கட்டப்பா.?!! (செம்ம) .!!!!
சிவகாமி அம்மையார் யாருங்கோ.? :-) :-) - :-)
அப்புறம் 'அவந்திகா "??,
Delete@ கிட் ஆர்ட்டின் கண்ணன்
Deleteஎண்ணிக்கை முக்கியமல்ல...மந்திரியாரே...! எண்ணம் தான் முக்கியம்..! எத்தனை கைகள் கொண்ட போர்களம் என்பது முக்கியமல்ல..! எவ்வளவு நம்பிக்கையானது என்பதே முக்கியம்..! இந்த கட்டப்பாஇருக்கிறேன்..மந்திரியாரே..பாகுபலிக்கு இந்த கட்டப்பாஇருக்கிறேன்..! (கர்ஜிக்கும் கிராபிக்ஸ் கட்டப்பா கட்டவுட் ஒன்று)
@ கிட் ஆர்ட்டின் கண்ணன்
Deleteகாலகேயர்களின் படைகளின் எண்ணிக்கை உங்களை ரொம்பவே மறதியை விதைத்து விட்டது என நினைக்கிறன்..! குறித்துகொள்ளுங்கள்....
சிவகாமி அம்மையார் = சௌந்திரபாண்டியன் ஐயா
பாகுபலி = எடிட்டர் விஜயன்
அவந்திகா = ஜூனியர் விக்ரம்
காலகேயர் = அவரே தான்...(!)
மேற்கொண்டு தொடர்வது உங்களுக்கு கைக்கு வந்தகலையல்லவோ...மந்திரியாரே...ஹாஹா..ஜெய்மகிழ்மதி..!
கிட் மாமா@ மகிழ்மதி(நாம் )25000 பேர்கள் என்றாலும் நம்மிடம் பாகுபலி(டெக்ஸ்வில்லர்) உள்ளார் ....மேலும் நம்மிடம் திரிசூல வியூகம் (வருடம் 2கலர் குண்டு , தீபாவளி கருப்பு வெள்ளை குண்டு ) என்ற அசைக்க முடியாத வியூகம் உள்ளது .....அவந்திகா (மாடஸ்தி ) உள்ளாள் ....மரணத்தை தாண்டி வாழப்போகும் நம் எண்ணங்கள் உள்ளன. .....பாகுபலி (டெக்ஸ்வில்லர்)...நம்மை வெற்றி வழியில் நடத்தி செல்வார்.....ஜெய் (காமிக்ஸ்) மகிழ்மதி.....
Delete@ சேலம் இரவுகழுகாரே
Deleteஅட...இந்த பதவிகள் ரொம்பவே சூப்பர்..! (காதை கிழிக்கும் விசில்கள்..தொடர்ந்து 3 நிமிடம்)
நான் தேவையில்லாமல் அரசியல் நெடி தேர்த்து விட்டேன்..! மன்னிச்சூ...இப்படியே தொடர்வோம்..ஜெய் (காமிக்ஸ்) மகிழ்மதி..!!!
////இந்த கட்டப்பா வேறென்ன சொல்லப்போகிறேன்..! ஜெய் மகிழ்மதி..!!!?////----மாயாவி சார் ...ஹா ஹா ஹா .....கட்டப்பா ஒற்றுமை ரகசியம் எங்களுக்கு தெரியும் என்பதால் சிரித்து சிரித்து ...வயிறே வழி எடுத்து விட்டது .....செம்ம டைமிங் போங்கள் ....(கண் சிமிட்டும் படங்கள் பத்து ).....
Deleteஉஸ்ஸ்ஸ்...பப்ளிக்..பப்ளிக்..!
Deleteஎல்லோரும் ஒரே குரலில் பேசினால் கனவு மெய்ப்படும் வாய்ப்புகள் அதிகம் நண்பர்களே! பெரும்பான்மை ஆதரவு பெற்ற கருத்துகளை அமல்படுத்துவதுதானே சபாநாயகரின் வேலை.!
ReplyDeleteஎல்லோரும் ஒரே குரலில் பேசினால் கனவு மெய்ப்படும் வாய்ப்புகள் அதிகம் நண்பர்களே! பெரும்பான்மை ஆதரவு பெற்ற கருத்துகளை அமல்படுத்துவதுதானே சபாநாயகரின் வேலை.!
ReplyDelete@ கார்த்திக்
Delete//எல்லோரும் ஒரே குரலில்// ஆமாம்...ஒரே குரல்..."பாகுபலி(டெக்ஸ்)..பாகுபலி(டெக்ஸ்)..பாகுபலி(டெக்ஸ்)..பாகுபலி(டெக்ஸ்)..பாகுபலி(டெக்ஸ்)..."
அடுத்த சனி ஞாயிறுகளில் சந்தேகமின்றி ஒரே குரலில் ஒலிக்கும் கார்த்திக்...எங்கள் வரவேற்க காத்திருங்கள்..! இந்த ஞாயிறு ஒரு சில நண்பர்கள் வருவார்கள்...நாளை தெரிவிக்கிறேன்..!(ஜெய்மகிழ்மதி..!!!)
மாயாவி சார்,
ReplyDeleteஎனது உருவத்தையும் காமிக்ஸ் (டைம்) பிலாக்கில் பதிந்து அதற்க்கு எனது உண்மையான மனவோட்டத்தையும் வார்த்தையில் வடித்ததற்க்கு முதற்க்கண் நன்றி!
காமிக்ஸை விட அடக்கமுடியா உற்சாகம் தரக்கூடிய விசயம் வேறு என்ன இருந்துவிட போகிறது ஒரு காமிக்ஸ் ரசிகனுக்கு??
அதுவும் குண்டு புக், ஸ்பெசல் மலரென்றால் பாற்கடல் அமிர்தத்திற்க்கு இணையல்லவா?
அதில் டெக்ஸ்....
உருவகப்படுத்த வார்த்தையை தேடுகிறேன்....
புத்தக திருவிழாக்களில் காமிக்ஸ் காதலர்களுடன் "குண்டு டெக்ஸ் புக்"!!!
- எனது ஆயுள் ஓட்டு இதற்கே.
கரைந்து போகும் வாழ்வில், உயிர்புடன் வாழ வைப்பது தமிழ் காமிக்ஸும், அதன் எழுத்துகளுமே!!!!
@ஹசன்
Deleteஉங்க ள் முகம் போலவே உங்கள் சொற்களும் 'பளிச்'..! தவறாது அடுத்த சனி,ஞாயிறு களில் வந்துவிடுங்கள்..! எடிட்டரின் தேதி மாற்றத்தால் உங்கள் பயண திட்டத்தில் சிக்கல் ஏதும் நிகழ்ந்திருப்பின்...அவர் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன்...மன்னிக்கவும்..!
கலாம், காமிக்ஸ் டைம் கார்சன் & டெக்ஸ், லார்கோ - மாயாவி சார், நீங்க ஒரு "காமிக்ஸ் கலா ரசிகர்". வாழ்வியல் கருத்துகளுடன் காமிக்ஸ் (டைம்). மிக்க நன்றி சார் நினைவூட்டலுக்கு...
ReplyDeleteஸ்பெசல் இனைப்புக்கு ஸ்பெசல் நன்றி எனது பக்கத்துநாட்டுகாரர் இத்தாலி விஜய்க்கு :)
இன்று ஒரு வாசகர் ஈரோடு புத்தக திருவிழாவில் காமிக்ஸ் டைம் வந்து விட்டதா என நச்சு புடுங்கினார் அது உங்களின் இந்த படைப்பை பார்த்ததன் விழைவாக இருக்குமோ என இப்போது சிந்திக்கிறேன்
ReplyDelete@ ஸ்டாலின்
Deleteஸார் அப்படியெல்லாம் இருக்காது..! அந்த காமிக்ஸ் டைம் வந்தா மட்டும் எனக்கு இரண்டு copy வாங்கிவைங்க..!
To whom so ever it may concern !
ReplyDeleteசெல்வம் அபிராமியின் பதிவுகளைப் படிக்கும் போது, ''முழு வடையையும் நீங்கள் மட்டுமே லவட்டிக் கொள்ள ஆசைப் படலாமா'' என்று வாசக நண்பர் ஒருவர் இங்கே பதிவிட்டது தான் ஞாபகத்தில் வருகிறது :))
//அடிப்படை ஞானம் இன்றி , வாளாவிருத்தல் நலம் என்ற பண்புமின்றி,கிஞ்சித்தும் நாணம் இன்றி //
ஏற்கனவே வெட்டுக்கிளி என்ற நண்பர், ''என்னை, நீ தான் மரமண்டை என்று சாடும் போது, ஏன் என்னை / நண்பரைக் காப்பாற்ற வரவில்லை, நீர் சுத்த வேஸ்ட்'' என்று உரிமையுடன் கடுமையாக என்னைச் சாடியது - அனைவருக்கும் தெரிந்து இருக்கும். அது போல் ஒரு நிலை மீண்டும் வந்து விடவேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் தான் அவ்வாறு பதிவிட்டேன். நான் அங்கு சொல்லியிருக்கா விட்டாலும், அவரைத் தான் ராகவன் குறிப்பிடுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே? செல்வம் அபிராமி மீது வீண் பழி சுமத்தாதீர்கள் என்பது அல்லவா என் கருத்தின் சாரம் ?!
//காமிக்ஸ் பதிவால் குறிப்பால் உணர்த்த தலைபட்டால் கூனி குறுகி செல்வார் என பதில் வருகிறது//
மற்றவர்கள் என்னை, எப்படிக் கீழ்த்தரமாகச் சாடினாலும் சும்மா ஜாலியாக வேடிக்கைப் பார்த்து விட்டு, நான் மறு விவாதம் செய்தால் பலர் வரிந்து கட்டி கொண்டு வந்து, இது காமிக்ஸ் blog, காமிக்ஸ் பற்றி மட்டுமே பதிவிடுங்கள் என்பதும் ; என் மீதான மற்றவரின் (example ; ஸ்டீல்க்ளா பொன்ராஜ்) கீழ்த்தரமானத் தாக்குதலை வேடிக்கைப் பார்ப்பதாலும் பின்வருமாறு எழுதினேன். அது எப்படி செல்வம் அபிராமியை சம்பந்தப்படுத்தும்? - ''காமிக்ஸ் blogல் வீண் விவாதமெல்லாம் செய்யமாட்டேன் என்று / உள்ளுக்குள் குமுறும் அவமானத்தில் கூனிக் குறுகிச் சென்று விட்டால் - அவனும் என் நண்பனே என்று விதி ரொம்பவே வித்தியாசமானது தான்'' - என்று அந்தப் பதிவில் எழுதியது முழுமையாக எனக்கானது. அதை இவர் ஏன் தம்மோடு சமபந்தப் படுத்திக் கொள்கிறார். இது புரிதலில் ஏற்படும் குழப்பமே !
காமிக்ஸ் மெக்கானிக் என்று குறிப்பிட்டது மாயாவி சிவாவை மட்டுமே. ஏனெனில், இரவே இருளே கொள்ளாதே'', ''வானமே எங்கள் வீதி'' ''விடுதலையே உன் விலையென்ன'' என்று தற்போது ஓக்லஹோமா வரை, மாயாவி சிவா தான் ஒவ்வொரு காமிக்ஸ் கதைகளின் உண்மையையும், பின்னணியையும் ஆராய்ந்து அவர் blogல் பதிவிட்டு வருகிறார். இதில் செல்வம் அபிராமி, ஏன் தன்னுடன் அதை இணைத்துக் கொள்கிறார்? இது புரிதலில் உள்ள குழப்பமே !
'வரலாற்றின் மறுபக்கம்' என்ற என்னுடைய இரண்டு பதிவுகளும், ஒரு வாசகனாக என்னுடைய பார்வை என்றும் / நாணயத்தின் மறுபக்கம் என்று தானே குறிப்பிட்டு பதிவிட்டுள்ளேன். செல்வம் அபிராமியையோ ; மாயாவி சிவாவையோ எதிர்க்கவில்லையே.. இதில் என்ன தவறு இருக்க முடியும்? இங்கு உண்மைப் பெயரில் உலாவந்து கொண்டு, தன்னுடைய குள்ள நரித்தனத்தால் கூட்டம் சேர்த்து கும்மி அடித்து, அடுத்தவருக்கு குழிப்பறிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. உதாரணத்திற்கு மாயாவி சிவா எனக்கு அனுப்பிய தனிப்பட்ட ஈமெயில்/ஐ கீழே copy / paste செய்கிறேன்... யார் சகுனி என்றும் ; யாருடைய மனது குரூரம் நிறைந்தது என்றும் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே !
1.//mayavi. siva mayavisivakumar@gmail.com 15 July 2015 at 08:55 subject: வாக்குறுதி// //மிஸ்டர் மரமண்டை அவர்களுக்கு, இன்றைக்கு உள்ள விஞ்ஞான வளர்ச்சியில், இந்த போன் எண்ணுக்கு சொந்தகாரர் யார் ? இந்த மெயில் எந்த சர்வரில் இருந்து வருகிறது என...கொஞ்சம் மேல் மட்ட நண்பர்கள் முலம் தெரிந்து கொள்வது ஒரு சிரமமான காரியம் அல்ல..!ஒரு ஆர்வத்தில் எதோச்சையாக உங்கள் வலைப்பதிவு வரும் பகுதியை சைபர்கிரைம் நண்பர் மூலமாக தெரிந்து கொண்டுவிட்டேன். pincode:621714 மற்றும் STD code:0439 இருந்து வரும் upload யாருக்கு சொந்தம் என தெரிந்து கொள்வதில் சிரமமேதும் இருக்கவில்லை..!இதைபற்றி யாரிடமும் சொல்லி பேர் வாங்கும் எண்ணம் இல்லையென்றாலும், ஒரு நீங்கள் பாவமன்னிப்பு கேட்டும் அளவிற்கு எதுவும் எழுதாமலே...உங்கள் அடையாளத்தை அழிக்க நினைத்தது...படித்தவுடன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு எழுதிவிட்டேன்..! ஒரு மருத்துவரான உங்களுக்கு தெரியாத மனோதத்துவமா என்ன..?//
2. //mayavi. siva mayavisivakumar@gmail.com 25 July 2015 at 14:45////ஹலோ மரமண்டையாரே..! பார்ப்பவர்களுக்கு நான் நொந்துபோய்...கோபமாக...உங்களுக்கு எதிராக..திரும்பிவிட்டதாக தோன்றும்..! உண்மையில் நான் ஜாலியாகவே இந்த சதுரங்கத்தை ஆடுகிறேன்..! நாம் இருவரும் சமஅளவு மனோதிடம் கொண்ட நண்பர்கள் என்றே நம்புகிறேன்.. கோபித்துகொள்ளாமல்... நாடகத்தைபுரிந்துகொண்டு தொடருங்கள்..! என் பதிவு பற்றிய உங்கள் கருத்தை எதிர்ப்பார்த்து கொண்டுள்ளேன், தவறாமல் போடுங்கள் நண்பரே..! //
contd..
3. //mayavi. siva mayavisivakumar@gmail.com 27 July 2015 at 08:48// ////ஒதுங்குவதில் தேர்ச்சிப் பெற்றுப் பயனில்லை ; ஒதுக்குவதில் தான், தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற அனுபவம் கிடைத்த நாள் இன்று :-)) //அட்டகாசம் நண்பரே...! வெளியில் பார்ப்பவர்களுக்கு நாம் அடித்துக்கொண்டாதாக தோன்றும்..! ஆனால் எனக்கு அப்படி ஒரு சதவிகிதம் தோன்றவில்லை..! செல்வம் அபிராமி என்ற பெயரை காப்பதே தளையான கடமை என்பதால், சில வரிகள் உங்கள் மீது வீசவேண்டியதாகிவிட்டது..! மன்னிக்க..! //
Deleteஈமெயில்/ன் தேதி, நேரம் பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். உறவாடி கெடுக்கும் சகுனி யார் என்று :(
////mayavi. siva has left a new comment on the post "கேள்விகள் : 3 ;
ReplyDeleteகோரிக்கை : 1":
@ மிஸ்டர் சகுனி
"முகமூடி அணிந்தவர்களின் பின்னால் எப்போதுமே உயிர்ப்புடன் ஒரு சர்ப்பம் துடித்துக்கொண்டே இருக்கும், அது யார் மீதுவேண்டுமானாலும் வீசப்பட்டு திசைதிருப்பபடும்" என்ற கசப்பை நிரூபிக்கும் விதமாக, மீண்டும் ஒரு சர்ப்பம்..!
உண்மை முகத்தின் அருமை மறந்து, இல்லாதமுகத்தை காக்க போராடும் மிஸ்டர் சகுனியே... "நான் சொன்னதே சரி...என்னை எதிர்த்தவனுடைய நட்பும் சுற்றமும் கெடுப்பதே...என் மூச்சு.." என உறவை கெடுக்க போராடும் வெறியில்... உற்சாகமான விடியலை பார்க்கமுடியாமல்... படுக்கையில் உறக்கத்தை தொலைத்து
விட்டு தவிக்கும்...மனவியாதியின் மோசமான நிலைக்கு அருகில் இருப்பதை, உங்கள் செய்கை [விதவிதமாக டைப் செய்து எனக்கு வந்த copy என ஆத்துவது...] அழகாக காட்டுகிறது..!
மனோதிடத்தில் எனக்கு இணையானவர் என தவறாக ஒப்பிட்டு விட்டேன்...என் மனோபலத்திற்கு நேர் எதிரானவர் என்பது வெட்டவெளிச்சமாக தெரிவதால்...உங்களை பார்த்து பரிதாபப்படுவதை தாண்டி ஒன்றும் தோன்றவில்லை..!
“கடைசியாக சகுனியே...மதம் கொண்ட யானை (சகுனி) என்ன செய்யும் தெரியுமா?”
சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடிப் போகும்...ஜெய் மகிழ்மதி..!” -- கட்டப்பா
இதை கிளிக்காக பார்க்க, அடுத்த பதிவில் உள்ள கமெண்ட் : mayavi. siva2 August 2015 at 11:18:00 GMT+5:30
Posted by mayavi. siva to Lion-Muthu Comics at 2 August 2015 at 22:45:00 GMT+5:30 /////
இதை ஏன் இங்கு போட்டேன் தெரியுமா..மிஸ்டர் சகுனி..? உங்கள் படுக்கையில் கொஞ்சம் நேரமாவது தூக்கத்தின் கதவை திறக்கும் இரண்டு சாவிகளில் [லயன் ப்ளாக்கிலும் இங்கும் அடுத்த பதிவு வரும்வரை
காத்திருந்து போட்ட கமெண்ட்ஸ்கள்] இப்போது... ஒன்று மட்டுமே, அதுவும் இங்கு மட்டுமே உள்ளது..! சினம் கொண்ட சிங்கம் அப்போதே அதை delete செய்துவிட்டார்..!
நான் ஏன் delete செய்யவில்லை தெரியுமா..? நிச்சயம் ஒரு நாள் நீங்களே முகத்திரையைகிழித்துஎறிந்துவிட்டு...
மீண்டும் 'பாவமன்னிப்பு' கேட்டு, இங்கு வந்து...உங்கள் கைகளாலே உங்கள் கமெண்ட்ஸை நீக்க...உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவே..! ஜெய் மகிழ்மதி..!
அருமையான பதிவு சிவா....
ReplyDeleteவாழ்த்துக்கள்
@ அகமத் பாஷா
Deleteவாழ்த்துக்கள் சொல்லி விலகிவிட்டால் எப்படி...? குரல் கொடுங்கள் நண்பரே..! இது என் கனவு மட்டுமா..? நம் கனவு அல்லவா...!!!
அருமையான பதிவு மாயாவி ஜி,எதார்த்தமும்,உண்மையும் என்றும் கசப்பானதுதான்,ஆனால் மறுக்க முடியாததல்ல,நாம் விரும்பும் மரணம் கிட்டுவதைவிட வேறு பாக்கியம் வேண்டுமா என்ன.படிப்பது ஒரு காதலான விஷயம்,அதுவும் காமிக்ஸ் படிப்பது அலாதியான காதல்,அந்த காதலில் நீங்கள் கசிந்துருக நினைக்கிறீர்கள்.நல்ல கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள்,அவை நடக்கும் என்று நம்புவோம்,எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மாயாவி ஜி.
ReplyDelete