Monday 22 June 2015

விடுதலையே உன் விலை என்ன..? பகுதி-3

நீளும் இந்த பதிவின் மூன்றாவது வணக்கங்கள்..!

முதலில் உறுதிமொழி : இந்த தொடர் சத்தியமாக இத்துடன் நிறைவுற்றது.

பிரச்சனைகளை கையால்வதும், அதை எதிர்கொள்வதும், முடியவில்லையேனில் அதில் இருந்து தப்பிப்பதும் ஒரு பெரிய கலை..! தப்பித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை பெற...பிறர் தப்பித்த அனுபவங்கள் படிக்கும்போது நம்பிக்கை பல மடங்கு கூடுகிறது. தப்பிக்க வாய்ப்பேஇல்லாத இடமாக மனிதர்களால் அமைக்கப்பட்ட ஒரு பெரிய அமைப்பு சிறைசாலைகள்..! அங்கிருந்தும் தப்பிக்க முயன்று...வென்ற மனோபலத்தை சொல்லும் கதைகள் படிக்கும்போது...நம்முன்னே உள்ள பிரச்சினையின் (நம் கற்பனையின்) வீரியம் கரைத்து, ஒன்றுமேயில்லை என்ற எண்ணம் புன்னகைகிறது என்ற... இந்த எனது சிந்தனையை விதைத்த முதல் கதை...ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மொழிபெயர்த்த 'பட்டம்பூச்சி' என்ற, குமுதத்தில் நூறு வாரங்கள் தொடராக வந்த உண்மை கதைதான்..!

"விடுதலையே உன் விலை என்ன ?" என்ற கைதிகள் escape தலைப்பை படித்த மாத்திரத்தில்,என் மனதில் விதையாக விழுந்து நொடியில் முளைத்த மரத்தில்கிளைகளை... என் mind map ன் வரைபடத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..! மனதில் முதலில் தோன்றிய காமிக்ஸ்....இரத்தபடலம் மூன்றாம் பாகம் தான்..! சிறையில் XIII சந்திக்கும் பிரச்சினைகளும், அவரின் மனோதிடமும் அபாரமானவை...

 

நான் படித்து அசந்த தொடர்கதைகள்...குமுதத்தில் 1972-ம் வருடம், தமிழ்புத்தாண்டில் துவங்கிய  'பட்டம்பூச்சி' தொடர்... ரா.கி.ரங்கராஜன் மீண்டும் 'இன்னொரு பட்டம்பூச்சி' என 1983 ல் நாற்பது வாரங்கள் எழுதிய தொடர்...

பாக்யா வார இதழில்...சௌதாமினி எழுதிய 'சின்ன பெண்ணும் ஜென்மகைதிகளும்' என்ற அட்டகாசமான தொடர்...

அதை அடுத்து பாக்யா வார இதழில்...சௌதாமினி எழுதிய 'போர்களத்து பூ' என்னும் ஹிட்லரின் கொடூரத்தை பின்னணியாக எழுதப்பட்ட பதிப்பில் வாராத அறுபது வார தொடர்...

அதை அடுத்து பாக்யா வார இதழில்...சித்தார்த் எழுதிய 'ப்ளிஸ்..அனுஷ்யா நான் பணய கைதி..!' என்ற இந்திய சுதந்திர காலகட்டத்து தொடர்...

இதே போல் 'மர்மகதை மன்னன் தமிழ்வாணன்'...சுபா.பட்டுகோட்டை பிரபாகர் எழுதிய பல மர்ம கதைகள் சொல்லாம்..! சமீபத்தில் தி தமிழ் இந்துவில் என் கருத்திற்கு வலுசேர்க்கும் ஒரு கட்டுரை வந்தன, அதுவும் உங்கள் பார்வைக்கு...

இந்த கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் பல இங்கிலிஷ் படங்கள் வந்துள்ளன, அதில் சமீபத்தில் உலகில் சிறந்த ஜெயில்களில் போய் அங்கிருந்து தப்பித்து காட்டும் சவால்களை, வாழ்க்கையாக கொண்ட ஒரு அட்டகாசமான படம்...

தமிழில் இதே சாயலில் பல படங்கள் வந்திருந்தாலும் அந்தமான் சிறையில் இருந்து தப்பிக்கும் கதையாக பிரபு,மோகன்லால் நடித்த 'சிறைசாலை' எனக்கு பிடித்த ஒன்று...


சமீபத்தில் வந்த 'புறம்போக்கு' என்னும் பொதுயுடைமை...படம் கூட தப்பித்தாலும், பிடிபடுதலும், மீண்டும் தப்பித்தல் என சுறுசுறுப்பாகவே சென்று யதார்த்தத்தை முகத்தில் அறைந்து சொல்லும் படம்... 

 national geographic channel தொடராக வந்த great escape  ஒரு மணிநேர தொடர் கூட குறிப்பிட வேண்டும்..

சரி எனது 'மன வரைபடம்' பற்றிய புராணத்தை முடித்து கொண்டு 'வி.உ.எ..?' கதை பற்றிய அலசலுக்கு செல்கிறேன்...அதற்குமுன்...அது என்ன மன வரைபடம்(mind map) என்பவருக்கு, இந்த புத்தகம் உதவும்...
  

இந்த பதிவிற்கு முக்கிய காரணம்...எனக்குள் கீழ்க்கண்ட கேள்விகள் விதைத்த தேடுதலே..!

karthik karthik அவர்களின் கேள்விகள்...

* 1900ல் ஜாரின் சிறையிலிருந்து டில்மான் ரஸ்ஸல் என்னும் ஹீரோவாக நடித்து வெளியேறும் யூஜிக்கு இருபது வயதென்று வைத்துக்கொள்வோம்.அவன் ரயில் மூலம் தப்பித்து சீனாசென்றானா,மங்கோலியா சென்றானா.?

* மறுபடியும்1942ல் ஜெர்மன் ஆளுகைக்குட்பட்ட ஸ்டாலின் கிரேட் சிறைக்கு எப்படி வந்தான்.?அப்போது வயது 62அல்லவா ஆகியிருக்கும்.அவன் ஏன் சம்பந்தமில்லாமல் அமெரிக்கா போக ஆசைப்படுகிறான்.?

* ரயிலோடு சேர்ந்து அவன் தப்பிக்கவே இல்லையா.?சைபீரியாவின் புகழ் டில்மான் ரஸ்ஸல் ஸ்டாலின் கிரேடிலிருந்து தப்புவதாக காட்டுவது லாஜிக்படி சரியா.?

*உண்மையாகவே டில்மான் ரஸ்ஸல்கிற பேர்ல எதாவது சாகஸம் பண்ணியிருந்தால் மட்டுமே கற்பனை கதாபாத்திரம் நம்பதகுந்ததாக மாறும்.ரஸ்ஸல் எழுதும் மிரட்டல் கடிதத்தை எழுதியது யார்...?

செல்வம் அபிராமி & இத்தாலி விஜய் அவர்களின் சில கேள்விகள்...

* ஒரு கப்பலை கிளப்ப எவ்வளவு நேரமாகும் ...???அதற்குள் பணி மையத்தில் இருந்து காவலர்கள் உருண்டு வந்தாலும் இவர்களை பிடித்து விடலாமே ??

* அருகில் இருந்து ஆதிவாசிகளை துணைக்கு அழைத்த கைதிகள் ஏன் இந்த தூரத்தை நடந்து கடக்க முயலவில்லை ?

* ஒன்றும் இல்லாத ரயிலை ஏன் இருப்புப்பாதை அமைத்து அதை இழுத்து (?????சாத்தியமா?????)செல்ல வேண்டும் ?

பதில்கள்: 290 அடி நீளமுள்ள இந்த  icebreaking steamer...300 பயணிகள் உள்ள 27 ரயில் பெட்டிகளை சுமந்துகொண்டு, குளிரில் உறைந்த ஏரியின் பனிப்பாளங்களை உடைத்து கொண்டு செல்லும் இந்த பிரம்மாண்டமான 'ஸ்டீமரை இயக்குவது டீசல் அல்ல, நீராவி..! அவ்வளவு பெரிய இஞ்சினை இயக்க...தண்ணீர் கொதித்து நீராவியாக மாறிவது என்பது மிக நீண்ட வேலை..! உடனே முடியும் விஷயமல்ல..!

15 கிலோமிட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த 'ஸ்டீமர்' மறுகரை அடைய நான்கு மணிநேரம் ஆகும்...பைகால் ஏரி ஒரு துறைமுகம் என்பதால்...வேறு  icebreaking சரக்கு, இராணுவ கப்பல் மூலமாக இரண்டு மணிநேரத்தில், மொத்த இராணுவபடையே எதிர்கரைக்கு சென்று ராஜ மரியாதையுடன் கைதிகளை வரவேற்கலாம்..!

இவ்வளவு பெரிய 'லாஜிக்' ஓட்டை எப்படி எழுத்தாளரோ, ஓவியரோ, பப்ளிசரோ கவனிக்காமல் விட்டார்கள்..? இது பெரிய பூ சுத்தல் இல்லையா..?என்றகேள்வி ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது...கொஞ்சம் நுட்பமாக யோசித்ததில்...அந்த கேள்விக்கான விடை விளங்கியது..!

இந்த சாதனைசரித்திர கதையை 'யூஜுன்' சிறையில் சொல்வது...பெரும் வரலாற்று மேதைகள் கூடிய சபையில் அல்ல...மாடாய் உழைக்கும், சாதாரண, கைது செய்யப்பட்ட, கூலிக்கு வேலைபார்க்கும் தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்தவர்களிடம்..! தொழிலாளர் வர்க்கத்தினரிடம் நம்பிக்கையை, ஒரு அந்தஸ்தை, அவர்களின் பக்கபலத்தை பெறவேண்டுமென்றால்...சின்னவிஷயத்தைகூட, நிறைய தங்கமுலாம் பூசித்தான் சொல்லவேண்டும் என்ற அரசியல் நான் சொல்லவே வேண்டியதில்லை..!

'டில்மான் ராசைன்' என்ற கற்பனை வீரனுக்கு பின்னால்...ஒரு தப்பிக்கும் திட்டம்உருவாக்கியது வரை சரி..! ஆனால் அந்த குழு தப்பிக்கும் போது மாட்டிக்கொண்டதான் விளைவே 'ஸ்டாலின்கிராட்' சிறைசாலையில் 'யூஜுன்' (கதையில்) இருப்பதற்கான காரணம்..! சுமார் நாற்பது வருடங்களாக சிறையில் இருக்கும், வயதான நம் நாயகன் மீண்டும் தப்பிக்கும் திட்டத்திற்கு ஆள் பலம் சேர்க்க வேண்டியே...கதையை மிகைபடுத்தி...லாஜிக்கை தாண்டி...---சாதாரண முரட்டு குறுநிலமன்னரான கட்டபொம்மனை...சினிமா வீரபாண்டியகட்டபொம்மனாக சித்தரித்தது போல---...'நாங்கள் திட்டப்படியே தப்பித்தோம்' என மிகையாக உணர்ச்சி பொங்க கூறுகிறார்...! இதை புரிந்துகொண்டால்...ஆயா நிலவில் வடை சுட்டால் ஓகே...ஆனால் நிலவுக்கு எப்படி போனால்..? என்பது போன்ற ஆராய்ச்சிகள் கரைந்துவிடும்..!


கால்தடங்களை எண்ணிக்கொண்டே "தினமும் மாலைப்பொழுதில் 5௦ தப்படிகள் நடந்து வருகிறேன்.இதையே நான் தொடர்ந்தால்அமெரிக்க கடற்கரையைத் தொட்டிவிட்டிருப்பது உறுதி." என வயதான 'யூஜுன்' கூற காரணம்...திட்டமிடுவதில், கணக்கு போடுவதில் தான் ஒரு கெட்டிக்காரர் என சக கைதிகளுக்கு மறைமுகமாக உணர்த்தி...தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்தவர்களை தனது கட்டுபாட்டில் கொண்டுவரும் மனோவசிய செய்கையே..! 

இதே போல சில விஷயங்களின் விளக்கங்கள் படங்களில்...'டில்மான் ராசைன்' பல்வேறு முகங்களில் பேசிய வலைதளங்கள் பட்டியல்...

நல்ல பிசாசு!
http://nallapisaasu.blogspot.com/

baraniwithcomics
http://baraniwithcomics.blogspot.com/

BLADEPEDIA
http://www.bladepedia.com/

BLUEBERRY @ TIGER COMICS
http://blueberry-soundarss.blogspot.com/

Comicology
http://www.comicology.in/

Comics
http://modestynwillie.blogspot.com/

comics
http://worldcomicraj.blogspot.com/

COMICS ARAKKAN
http://phantomtheking.blogspot.com/

COMICS GALATTA
http://comicsgalaata.blogspot.com/

Dark Knight
http://picturesanimated.blogspot.com/

Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்
http://mokkaicomics.blogspot.com/

ILLUMINATI
http://illuminati8.blogspot.com/

jsc johny
http://johny-johnsimon.blogspot.com/

Lion-Muthu Comics
http://lion-muthucomics.blogspot.com/

Lucky Limat
http://luckylimat.blogspot.com/

PHANTOM THE LEGEND - SoundarSS
http://vethalar-mayavi.blogspot.com/

Tamil comics பள்ளிக்கூடம்..!
http://maramandaii.blogspot.com/

Tamil Comics - SoundarSS
http://tamilcomics-soundarss.blogspot.com/

Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்
http://tamilcomicsulagam.blogspot.com/

அ.கொ.தீ.க.
http://akotheeka.blogspot.com/

இரவுக்கழுகு
http://www.kittz.info/

க.கொ.க.கூ = கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு
http://kakokaku.blogspot.com/

கனவுகளின் காதலன்
http://kanuvukalinkathalan.blogspot.com/

காமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்!
http://muthufanblog.blogspot.com/

காமிக்ஸ் பூக்கள்
http://ayyampalayam.blogspot.com/

சித்திரக்கதை
http://comicstamil.blogspot.com/

தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை
http://tamilcomicskadanthapaathai.blogspot.com/

தமிழ் காமிக்ஸ் உலகம்
http://tcuintamil.blogspot.com/

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
http://tamilcomic.blogspot.com/

நானுற்றி நாலு
http://vimalaharan.blogspot.com/

முதலை பட்டாளம்
http://mudhalaipattalam.blogspot.com/

மேய்ச்சல் மைதானம்
http://horsethought.blogspot.com/

விகடகவி
http://kavinthjeev.blogspot.com/

ஹாய் தமிழா
http://www.haitamila.com/

Thursday 18 June 2015

விடுதலையே உன் விலை என்ன..? பகுதி-2

வணக்கங்கள் நண்பர்களே..!

கொஞ்சம் சுருக்கமாவே முடிக்க நினைத்தேன்..! ஆனால் நண்பர்களின் கேள்விகளும், என் தேடல்களும்,கையிருப்பு தகவல்களும் சுவையாக இருப்பதால் பகிர்வை இரண்டாக்கிவிட்டேன்..!

எதிர்பார்த்தது போலவே நண்பர்களிடமிருந்து வந்த கேள்விகள்,விவாதங்கள் சுறுசுறுப்பாக இருந்தன. செல்வம் அபிராமி,கார்த்திக்,மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்  மற்றும் பிற நண்பர்கள் கேட்ட சில கேள்வியும் என்னால் முடிந்த பதில்களும் முதலில்...

சில விளக்கங்கள்.

1.முதல் என்ன ....பக்கம் 15 -ல் வரும் ஹைதர் காலத்து பழசு என்ற சொல்லாட்சியை ஒரு ரஷ்ய காவலாளி சொல்வது இந்த கதையை பொறுத்தவரை நெருடல்தான் ....

பதில்: ஹைதர் பழசு என சொல்வது..ரஷ்ய காவலாளி அல்ல..! பெட்டி
நிறையதங்கம் கொண்டுவரும் 'பாரோன் கோர்ப்'..! "ரஷ்யாவின் நவீனஇராணுவ ஆயுதங்களுக்கு முன்... போக்கிரிகளிடம் இருக்கும் ஹைதர் பழசான துருப்பித்த ஆயுதங்கள், வெறும் குப்பை" என்பதாக தான் அவர் கூறுகிறார்..!

2.கதையில் சொல்லபடுவது போல் இந்த மாபெரும் கப்பலை 6,7மாதங்களில் கட்டி முடிப்பது சாத்தியமா "என்ன "?.....
பதில்: SS Baikal - ice-breaking train ferry பற்றிய விவரங்கள் கொட்டியிருக்கிறேன்...பார்த்துக்கொள்ளுங்கள்..!
3.இத்தகைய ரயிலில் தேடப்படும் ஒரு குற்றவாளி பாதிரியார் வேஷத்தில் வருவதும் ரகசிய ஆயுதங்கள் ஏந்திய ஒரு கும்பலே பயணிப்பதும் சாத்தியமா என்ன ????
பதில்: ஜனாதிபதி பயணிக்கும் விமானத்திலேயே தீவிவாதிகள் ஊடுருவி

விளையாடும் இந்த நவீன காலத்தில் நடக்கும்போது... ஒரு இரயிலில் பாதிரியார் வேஷத்தில் வருவதும் ரகசிய ஆயுதங்கள் ஏந்திய ஒரு கும்பலே
பயணிப்பதும் அந்த காலத்தில் சாத்தியமில்லையா என்ன..!


4.சுரங்க பாதையில் சுரங்க பாதையையே சிதைக்குமளவு அதில் நீர்கசிவு ஏற்படும் என்பதுதானே அடிப்படை ஜ்யாலஜி விதி ......அதை மீறி தோண்டுவதுஎன்பது சாத்தியமா என்ன ???
பதில்: நான் வசிக்கும் ஏற்காடு ஏரியில் இருந்து 100iஅடி துரத்தில் 50iஅடி ஆழகிணற்றிலும், 500i அடி போர்வெல்லிலும் சொட்டு தண்ணீர் இல்லைஎன்பதே நிஜம்..!சிறையில் இருந்து சுரங்கம் தோண்டி தப்பித்த கதைகள் எவ்வளவோ உள்ளன. இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கணக்கில் கொள்ளவேண்டும். அவர்கள் சுரங்கம் வெட்டி தப்பிப்பது பலமான சிறைசாலையில் இருந்து அல்ல. பாதுகாப்பு வளையம் போட்ட துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஒரு 'கேம்பஸ்'..!


5.இதில் ரயில் என்ஜினை டஸ்ட் கிளப்புவதையாவது ஒருவாறாக ஒப்பு கொள்ளலாம்...ஆனால் ஒரு கப்பலை கிளப்ப எவ்வளவு நேரமாகும் ...???
பதில்: மூன்று வருடங்கள் கப்பலை கட்டிய தொழிலார்களால்.(வெள்ளோட்டம் பார்த்தவர்கள் அவர்களே என்னும்போது) அதை ஓட்டுவது சாத்தியமில்லையா என்ன..!

6. இரயில் கப்பலில் ஏற தயார் நிலையில் தான் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன...
சீதோசண நிலை சரியாகும் பொருட்டு காத்திருந்தனர்.

7.யூஜின் ,வோர்ஸ்லோ மற்றும் அந்த இளவரசி முக்கோணம் சொல்லும் கதைதான் என்ன...?
பதில்: யூஜின் ,வோர்ஸ்லோ மற்றும் அந்த இளவரசி முக்கோணம் சொல்லும் கதை விரிவாக படங்களுடன் தந்துள்ளேன்..!

8. பிரிட்ஷ்கார கிழவனை போய் அலீனா எப்படி திருமணம் செய்ய சம்மதிப்பாள் ?
இளவரசி 'அலீனா' வயதான இன்ஜினியரை திருமணம் செய்து கொள்ள காரணம் தன் காதலன் 'யூஜினை' சிறையில் இருந்து மீட்கவே, விவரங்கள் படத்தில்...


இன்னும் ஒரு வரலாற்று குறிப்பை மட்டும் சொல்லிவிட்டு கதைக்குள் போய்விடுகிறேன்...இந்த பிரமாண்டமான பயணத்தில் பங்கு கொண்ட ரயில் இன்ஞ்சின் 'பைகால் துறைமுகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்ல அந்த துறைமுகத்தில் ஒரு ரயில்வே மியூசியம் உள்ளது, அதில் இந்த பிரம்மாண்டமான ஏரியை கடக்கும் ரயில் கப்பலில் எப்படி கடக்கிறது என்ற மினியேச்சர் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த மியூசியத்தில் பார்வையாளர்கள் எடுத்த புகைபடங்கள் உங்கள் பார்வைக்கு... 


இவ்வளவு பிரமாண்டமான சரித்திர புகழ்பெற்ற வரலாற்று சாதனைகளை பின்னணியாக கொண்டு எழுதுதப்பட்ட 65 பக்க ஒரு குட்டி காமிக்ஸுக்கு முன்னால் ஓடும் சின்னஞ்சிறு ஆழமானகருத்து பற்றி மூன்றாவது பகுதியில் பகிர்கிறேனே..!

Monday 15 June 2015

விடுதலையே உன் விலை என்ன..? பகுதி-1

வணக்கங்கள் நண்பர்களே..!

ஏன் நண்பர்களால் கிராபிக்ஸ் நாவல்கள் படிக்கமுடியவில்லை..? ஒரு எளிய கதையை கூட புரிந்துகொள்ளாமல் அடம்பிடிக்கிறாங்க..! இதுக்கு என்ன தான் காரணம்..? மேலோட்டமா யோசிச்சதுல ஒரு வேளை...தி லயன் 250-முத்து 350-கார்ட்டூன் கிளாஸிக் கலெக்சன்-டெக்ஸ் வில்லர்-குண்டு புக் இப்படி நிறைய அறிவிப்புக்கு மத்தியில வர்ற கிராபிக்ஸ் நாவல்களை சரியாக நண்பர்கள் (பெரிய பேனர் படத்துக்காக, சின்ன பேனர் படம் பாக்காம இருக்கற மாதிரி) சரியாக நண்பர்கள் படிக்கவில்லையோ  அல்லது படிக்கவே இல்லையோன்னு முதல் ஒரு எண்ணம் இருந்தது. கொஞ்சம் யோசிச்சதுல ரெண்டு பாயின்ட்ஸ் கிடைச்சது..!


அமெரிக்காவுல நடக்கறமாதிரி எடுக்கறபடமோ, கதையோ, கட்டுரையோ... அதிரடி, ஆக்சன், பிரம்மாண்டம்ன்னு பட்டையை கிளப்புது..! சூப்பர்பவர் ஹீரோ முதல் சாதாரண ராணுவ வீரனின் கதை வரை அதகளமாக இருக்கு..! ஒரு பல் விழுந்துட்டா கூட பரபரப்பாக்கி,  அதை செய்தியா போட்டு, வரலாறா மாத்தற அமெரிக்காவின் ஜனரஞ்சகமானபோக்குக்கு அப்படியே எதிரானது ரஷ்யா. ஒரு ஊரே புதைந்தாலும் சத்தமில்லாமல் மறைக்கும் சுபாவம் ரஷ்யாவோடது. கிளர்ச்சியை அடக்கும் ரஷ்யகொள்கைவாதிங்க கிட்ட இருந்து கவர்ச்சியான பொழுதுபோக்கு எண்ணங்கள் வளராமலே போய்விட்டது..! 
ரஷ்யர்கள் தான் தங்கள் வரலாறை ஜனரஞ்சகமாக்கவில்லை..போகட்டும். ஒரு ஐரோப்பியர் அமெரிக்கவரலாறை மையப்படுத்தி கதைகள் எழுதின சக்சஸ்...அதே ஐரோப்பியர் மறைக்கப்பட்ட பல ரஷ்யா சம்பவங்கள வெச்சி எழுதினால் கொஞ்சங்கூட சலசலப்பே இல்லாம போறது ரஷ்யாவின் சாபமோ என்னமோ.  அதுவும் வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் வெளிவரும் பொழுதுபோக்கு புத்தகங்கள்கிறபோது...அதை வேறு நாட்டவரே எழுதினாலும் அதை ரசிக்கிறது கொஞ்சம் புருவத்தை சுருங்கசெய்யுது..! இதுக்கு முக்கிய காரணம் நமக்கு ரஷ்யா வரலாறு தெரியாதது தான்னு நான் நினைக்கிறேன்.

நம்ம பார்வைக்கே வராத ஒரு பிரமாண்டமான ரஷ்யசாதனையின் வரலாற்று சம்பவத்தோட ஒரு முக்கிய குறிப்பை வெச்சி உருவாக்கப்பட்ட குட்டி படைப்புதான் 'விடுதலையே உன் விலை என்ன?'. ரஷ்யாவோட வரலாறு தெரிஞ்சிகிட்டு படிச்சா...இது மாதிரி கிராபிக்ஸ் நாவலை நல்லவே ரசிக்கமுடியலாம்ன்னு தோணுது..! எனக்கும் இந்த வரலாறெல்லாம் சுத்தமா தெரியாதுங்க, இது என்ன ரயில் ? என்ன ஜெயில் ? எங்க ஆரம்பிக்குது கதை ன்னு கொஞ்சம் கூகிளில் தேடினப்போ கிடைச்சா தகவல்கள் பிரமிப்பா இருந்தது. இந்த கி.நா மூலமா ஒரு அட்டகாசமான வரலாறு தெரிஞ்சிக்க முடிஞ்சது. So நான் தெரிஞ்சி கிட்ட, கதையின் பின்னணியில் உள்ள வரலாற்று குறிப்பையும்,கதை எழுதின கண்ணோட்டத்தையும் உங்ககிட்ட பகிர்ந்துகிலாம்ன்னு  நினைக்கிறேன்..! இது மூலமாக கிராபிக்ஸ் நாவல்களை 'மாத்தியோசி'ச்சி படிக்கமாட்டிங்களான்னு ஒரு ஆசை..! முடிந்தவரை குழப்பாம சொல்கிறேன். ஏதாவது தேறுகிறதாமான்னு பாத்து சொன்னா நான் தேறவோ,ஓடவோ உதவியா இருக்கும்..!

நட்புடன்,
மாயாவி.சிவா
   
கதைக்குள் போகும் முன்...திரு விஜயன் அவர்கள் குறிப்பிட்ட LA GRANDE EVASION என்ற பெயரில் வந்த எட்டு புத்தகங்களில் விவரங்கள் பார்த்து தெரிந்து கொள்ள அதன் அட்டைகள் உங்கள் பார்வைக்கு..

  
கதை பற்றிய அலசல்கள் நாளைக்கு...


பல தலைசுற்றும் விவாதம் & தகவல்கள் பகுதி-2 ல் தொடர்கிறது...