Monday, 15 June 2015

விடுதலையே உன் விலை என்ன..? பகுதி-1

வணக்கங்கள் நண்பர்களே..!

ஏன் நண்பர்களால் கிராபிக்ஸ் நாவல்கள் படிக்கமுடியவில்லை..? ஒரு எளிய கதையை கூட புரிந்துகொள்ளாமல் அடம்பிடிக்கிறாங்க..! இதுக்கு என்ன தான் காரணம்..? மேலோட்டமா யோசிச்சதுல ஒரு வேளை...தி லயன் 250-முத்து 350-கார்ட்டூன் கிளாஸிக் கலெக்சன்-டெக்ஸ் வில்லர்-குண்டு புக் இப்படி நிறைய அறிவிப்புக்கு மத்தியில வர்ற கிராபிக்ஸ் நாவல்களை சரியாக நண்பர்கள் (பெரிய பேனர் படத்துக்காக, சின்ன பேனர் படம் பாக்காம இருக்கற மாதிரி) சரியாக நண்பர்கள் படிக்கவில்லையோ  அல்லது படிக்கவே இல்லையோன்னு முதல் ஒரு எண்ணம் இருந்தது. கொஞ்சம் யோசிச்சதுல ரெண்டு பாயின்ட்ஸ் கிடைச்சது..!


அமெரிக்காவுல நடக்கறமாதிரி எடுக்கறபடமோ, கதையோ, கட்டுரையோ... அதிரடி, ஆக்சன், பிரம்மாண்டம்ன்னு பட்டையை கிளப்புது..! சூப்பர்பவர் ஹீரோ முதல் சாதாரண ராணுவ வீரனின் கதை வரை அதகளமாக இருக்கு..! ஒரு பல் விழுந்துட்டா கூட பரபரப்பாக்கி,  அதை செய்தியா போட்டு, வரலாறா மாத்தற அமெரிக்காவின் ஜனரஞ்சகமானபோக்குக்கு அப்படியே எதிரானது ரஷ்யா. ஒரு ஊரே புதைந்தாலும் சத்தமில்லாமல் மறைக்கும் சுபாவம் ரஷ்யாவோடது. கிளர்ச்சியை அடக்கும் ரஷ்யகொள்கைவாதிங்க கிட்ட இருந்து கவர்ச்சியான பொழுதுபோக்கு எண்ணங்கள் வளராமலே போய்விட்டது..! 
ரஷ்யர்கள் தான் தங்கள் வரலாறை ஜனரஞ்சகமாக்கவில்லை..போகட்டும். ஒரு ஐரோப்பியர் அமெரிக்கவரலாறை மையப்படுத்தி கதைகள் எழுதின சக்சஸ்...அதே ஐரோப்பியர் மறைக்கப்பட்ட பல ரஷ்யா சம்பவங்கள வெச்சி எழுதினால் கொஞ்சங்கூட சலசலப்பே இல்லாம போறது ரஷ்யாவின் சாபமோ என்னமோ.  அதுவும் வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் வெளிவரும் பொழுதுபோக்கு புத்தகங்கள்கிறபோது...அதை வேறு நாட்டவரே எழுதினாலும் அதை ரசிக்கிறது கொஞ்சம் புருவத்தை சுருங்கசெய்யுது..! இதுக்கு முக்கிய காரணம் நமக்கு ரஷ்யா வரலாறு தெரியாதது தான்னு நான் நினைக்கிறேன்.

நம்ம பார்வைக்கே வராத ஒரு பிரமாண்டமான ரஷ்யசாதனையின் வரலாற்று சம்பவத்தோட ஒரு முக்கிய குறிப்பை வெச்சி உருவாக்கப்பட்ட குட்டி படைப்புதான் 'விடுதலையே உன் விலை என்ன?'. ரஷ்யாவோட வரலாறு தெரிஞ்சிகிட்டு படிச்சா...இது மாதிரி கிராபிக்ஸ் நாவலை நல்லவே ரசிக்கமுடியலாம்ன்னு தோணுது..! எனக்கும் இந்த வரலாறெல்லாம் சுத்தமா தெரியாதுங்க, இது என்ன ரயில் ? என்ன ஜெயில் ? எங்க ஆரம்பிக்குது கதை ன்னு கொஞ்சம் கூகிளில் தேடினப்போ கிடைச்சா தகவல்கள் பிரமிப்பா இருந்தது. இந்த கி.நா மூலமா ஒரு அட்டகாசமான வரலாறு தெரிஞ்சிக்க முடிஞ்சது. So நான் தெரிஞ்சி கிட்ட, கதையின் பின்னணியில் உள்ள வரலாற்று குறிப்பையும்,கதை எழுதின கண்ணோட்டத்தையும் உங்ககிட்ட பகிர்ந்துகிலாம்ன்னு  நினைக்கிறேன்..! இது மூலமாக கிராபிக்ஸ் நாவல்களை 'மாத்தியோசி'ச்சி படிக்கமாட்டிங்களான்னு ஒரு ஆசை..! முடிந்தவரை குழப்பாம சொல்கிறேன். ஏதாவது தேறுகிறதாமான்னு பாத்து சொன்னா நான் தேறவோ,ஓடவோ உதவியா இருக்கும்..!

நட்புடன்,
மாயாவி.சிவா
   
கதைக்குள் போகும் முன்...திரு விஜயன் அவர்கள் குறிப்பிட்ட LA GRANDE EVASION என்ற பெயரில் வந்த எட்டு புத்தகங்களில் விவரங்கள் பார்த்து தெரிந்து கொள்ள அதன் அட்டைகள் உங்கள் பார்வைக்கு..

  
கதை பற்றிய அலசல்கள் நாளைக்கு...


பல தலைசுற்றும் விவாதம் & தகவல்கள் பகுதி-2 ல் தொடர்கிறது...

98 comments:

 1. தெய்வமே! நீங்க எங்கியோ போயிட்டீங்க!!! :-)

  ReplyDelete
  Replies
  1. உங்களையும் சேத்து தான் கூட்டிட்டு போபோறேன் 'பர்த் டே பாய்' ..! இன்னும் ஆரம்பிக்கவேஇல்லை...அதுக்குள்ளேயே ஏன் சாமிய கூப்பிடுரீங்க..காமிக்ஸ் கலைவாணரே..!

   Delete
 2. ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சா.....நல்லா நடக்க வாழ்த்துக்கள் மாயாவி சார் .....
  காமிக்ஸ் ...Comics ..காமிக்ஸ் ..உங்கள் டரேட் நேம் ஆஆ..சார் ? சின்ன சந்தேகம் தான் வாழ்க்கை பூராவும் இருக்கப்போகும் ப்ளாக்குக்கும் அதே பேரு......ஓரிரு நாட்களே இருக்க போகும் சிறு இடமென்றாலும் அதே பேரு.....அதான் கேட்டேன் சார் ?ஹி..ஹி.

  ReplyDelete
  Replies
  1. @சேலம் tex

   ஒரு அவசரத்துல வேற பேர் அகப்பாடலை...அதுமட்டுமில்லாம வேற பேர் போட்டா..கட்டுபாடில்லாம நானே எதாச்சும் போட்டுடுவேன் பாருங்க..அதான்..!
   'சேந்தம்பட்டி குழு மேக்கப் ரூம்' ன்னு ஒரு பதிவை ரெடி பண்ணி..அப்புறம் நம்ம ப்ளாக் பேர் படிச்சேன்..தலையை செரிஞ்ச்சிட்டே போடலை..ஹீ..ஹீ..அதை பாக்க...இங்கே'கிளிக்'

   Delete
  2. பாஸா சாரிடம் ஏதோ பலகாரம் கேட்டீஙகளே அதன் பெருமையை கூறுங்களேன் டெக்ஸ் விஜய் அவர்களே.!

   Delete
  3. பாஸா சாரிடம் ஏதோ பலகாரம் கேட்டீஙகளே அதன் பெருமையை கூறுங்களேன் டெக்ஸ் விஜய் அவர்களே.!

   Delete
  4. (மாயாவி சார் மன்னிச்சூ......)
   ஆற்காடு மக்கன் பேடா...
   படிக்கவும் கேட்கவும் சுவையானது
   வரலாறு. அதுவும் இனிப்பைப் பற்றிய
   வரலாறு எனில் சுவை கூடுதல்தான். பொதுவாகவே
   தமிழ் நாட்டு உணவுகளுக்கு ஒரு வரலாற்றுப்
   பின்னணி யும் சுவையான கதையும் இருக்கும்.
   ஊருக்கு ஒரு சிறப்பான உணவில், இந்த முறை நாம்
   ஆற்காடு நோக்கி பயணம் செய்யலாம். வேலூர்
   மாவட்டத்தைச் சேர்ந்த இந்த நகரம், மக்கன் பேடாவுக்குப்
   புகழ் பெற்றது. அது என்ன மக்கன் பேடா? குலாப்
   ஜாமூனின் அக்கா போல இருக்கும் இந்த இனிப்பு,
   சுவையிலும் போட்டி போட முடியாத அளவு
   மிகப்பெரியதாக இருக்கிறது!
   180 ஆண்டுகளுக்கு முன் ஆற்காடு நவாப்பின் நண்பர்
   என்ற முறையில் அவர் வீட்டு விசேஷத்துக்குச்
   சென்றிருக்கிறார் கோவிந்தசாமி செட்டியார்.
   விருந்தில் பரிமாறப்பட்ட ஒரு வகை இனிப்பு அவரை
   மிகவும் கவர்ந்திருக்கிறது. இனிப்பு மிட்டாய் கடை
   நடத்தி வந்த கோவிந்தசாமி, அந்த இனிப்புக்கு இன்னும்
   சிலபல செய்முறைகளால் சிறப்புச் சேர்த்திருக்கிறார்.
   உயர்ந்த வகை உலர் பருப்புகளையும் சேர்த்து அவர்
   உருவாக்கிய மக்கன் பேடா பிற்காலத்தில் ஆற்காடின்
   அடையாளமாகவே ஆகிவிட்டது. கோவிந்தசாமி
   செட்டியாருக்குப்பின் அவர் வழித்தோன்றல்கள்
   கோவிந்தராஜ், வரதராஜர், வேணுகோபால் செட்டியார்
   என்று, 182வது வருடத்தில் ஐந்தாம் தலைமுறை
   இனிப்புக் கடையாக சுந்தரம் செட்டியாரால்
   நடத்தப்படுகிறது. பொறியியல் படிக்கும் இவரது மகன்
   சிவசங்கரும் அடுத்த தலைமுறைக்கு மக்கன் பேடாவை
   தொடரத்தயாராக உள்ளார்.
   மக்கன் பேடா என்பது மைதா, கோவா சேர்த்த இனிப்பு...
   உள்ளே உலர் பருப்புகளால் பொதியப்பட்ட, வாயில்
   இட்டதும் கரையக்கூடிய சுவையுடன் இருக்கும்.
   பொன்னிறமான மக்கன் பேடாவை ஸ்பூனால் சிறிது
   எடுக்கும் போதே மிருதுவான அதன் உட்புறம் நம்
   விழிகளை நிறைக்கும். ‘செட்டியார் கடை’ என்று பெயர்
   பெற்ற இந்தக் கடையின் இனிப்பு பெரியார் முதல்
   அனைத்து அரசியல், சினிமா நட்சத்திரங்களையும்
   கவர்ந்த சுவை. அது மட்டுமல்ல... வெளிநாடுகளுக்கும்
   பறந்து கொண்டிருக்கிறது. மக்கன் பேடா வாசனை
   இல்லாத எந்த விசேஷங்களும் வேலூர் பகுதியில்
   நடப்பதில்லை.

   Delete
  5. நன்றி.!ஒ.!இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்டதா?உங்களுக்கும் பாஸா சாருக்கும் நல்ல மனசு சார்.அப்போ ஈ.பு.க. தித்திக்க போகுதுன்னு சொல்லுங்கள்.!நன்றி.!!

   Delete
  6. இந்த முக்கியமான பகுதிய விட்டுட்டீங்களே விஜயராகவன்...(குளுங்க குளுங்க சிரிக்கும் படங்கள் நான்கு )

   சீக்ரெட் ரெசிபி ஆற்காடு மக்கன் பேடா

   பண்டிகைக் காலம் நெருங்குகிறது. வழக்கமான ஜாமூன் மிக்ஸ் வாங்கி வேலையை சுலபமாக்கலாம். அல்லது சிறிது மெனக்கெட்டு ஆற்காடு மக்கன் பேடாவை நம் வீட்டிலேயே தயாரிக்கலாமே! வழக்கம் போல எந்த ஒரு இனிப்புக்கும் அளவும் பதமும் அதைவிட கூடுதல் பொறுமையும் அவசியம். நமது பாரம்பரிய இனிப்புகள் போல அன்றி மக்கன் பேடா செய்முறை மிகவும் எளிதானது. மேலே பொன்னிறமாகவும் உள்ளே மிருதுவாகவும் வாயில் வைத்ததும் சுவையில் வழுக்கி செல்லும் மக்கன் பேடா தயாரிப்பது, ஜாமூன் செய்வது போன்ற வேலையே... எனினும் பதம் அவசியம்.
   என்னென்ன தேவை?

   பால் கோவா
   (சர்க்கரை இல்லாதது) - 100 கிராம்
   மைதா - கால் கிலோ
   ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
   தயிர் - 100 கிராம்
   நெய் - 25 கிராம்
   வனஸ்பதி - 50 கிராம்
   எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

   ஸ்டப்பிங்குக்கு...

   பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி, திராட்சை, சாரைப் பருப்பு, வெள்ளரி விதை, பேரீச்சம்பழம் (சரிசமமான எடையில்) - 100 கிராம் தோராயமாக பொடியாக நறுக்கியது. இத்துடன் ஏலக்காய் 3 பொடி செய்து கலக்கி வைக்கவும்.

   பாகு செய்ய...

   சர்க்கரை - 750 கிராம்
   தண்ணீர் - தேவையான அளவு.

   எப்படிச் செய்வது?

   சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சி ஆறவிடவும். மைதாவை ஆப்ப சோடாவுடன் சேர்த்து சலித்து வைக்கவும். பால்கோவா, வனஸ்பதி, மைதா, தயிர் சேர்த்து மென்மையான மாவாக பிசையவும். பிசைந்த மாவை 5 நிமிடம் ஊற விடவும். நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து மோதகம் செய்வது போல செய்து உள்ளே உலர் பருப்புகளின் கலவையை வைக்கவும். மாவை மூடி அடுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ச்சவும். மக்கன் பேடாவை எடுத்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து வைக்கவும். எண்ணெய் வடிந்ததும் சர்க்கரைப் பாகில் போட்டு நெய் ஊற்றி மூடி வைக்கவும். 5 மணி நேரம் ஊற விடவும்.

   உங்கள் கவனத்துக்கு...

   பால்கோவாவை கட்டி இல்லாமல் மிருதுவாக பிசைந்து கொள்ள வேண்டும். சர்க்கரை ஒரு கம்பி பதம் போதுமானது. அதிகம் ஊறவிட அவசியம் இல்லை. 5 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். உலர்பருப்புகள் மெலிதாக சீவி கலந்து போடுவது சுவை கூட்டும். ஜாமூன் செய்யும் போது எண்ணெயில் எடுத்த ஜாமூனை, உடனே பாகில் போடாவிட்டால், ஜாமூன் உடைந்து விடும். மக்கன் பேடா சூடாகவும் சர்க்கரைப்பாகு சிறிது ஆறியும் இருக்க வேண்டும்.

   Delete
  7. செய்முறை கொஞ்சம் கடினமான தாகத்தான் உள்ளது ......அதைப்பற்றி நமக்கென்ன கவலை .....எத்தனை எண்ணம் உள்றே தள்ளப்போகிறோம் என்பது தான் நமக்கு முக்கியம் ..... ஹி...ஹி......நல்ல மனசு பாசா பாய்க்குத்தான்.....

   Delete
  8. MV சார் உங்கள் செலவில் ஸ்பெசல் லட்டு வந்து விடவேண்டும் ...அது முக்கியம்... ஹி...ஹி..டெக்ஸ் கதை 3படித்து ஃபார்ம் ல வேறு இருப்பேன் ....அப்புறம் உங்கள் விருப்பம் ....

   Delete
  9. காலைல இப்படி இனிப்பு ராஜ்ஜியம் ...மதியம் ஸ்டாலின் சாரின் விருந்து ....இரவுக்கு பிறந்த நாள் ட்ரீட்டு க்கும் ஒரு வாய்ப்பு உண்டு ..... ஒரே உணவு கொண்டாட்டம்தான் போங்கள் ...இப்பவே டிக்கெட் போட்டு விடுங்களேன் MV சார் ...ஹி..ஹி...

   Delete
  10. அசல் நெய்யினால் செய்யப்பட்ட தரமான இனிப்பு கார வகைகளுக்கு ஏற்ற ஒரே இடம்தான்... 'மாயாவி சிவா பலகாரக்கடை' - இது மட்டும்தான் பாக்கி" ;)

   Delete
  11. நல்ல நண்பரை ...பாசமாக ஈரோடுக்கு அழைத்த விதம் சூப்பர்..! உங்களுக்காகவே M.V. கட்டாயம் வருவார்..டெக்ஸ்..!

   Delete
  12. ஈரோட்ல நடக்கவிருப்பது புத்தகத் திருவிழாவா இல்லை உணவுத் திருவிழாவா'னு சந்தேகம் வந்திடுச்சு எனக்கு! ( எப்படியோ எனக்கு ரெண்டு மாக்கான் பீடா கிடைச்சா சரிதான்! ;) )

   Delete
  13. க்ர்ர் ...விஜய் ...மாக்கான் அல்ல...மக்கன்...மக்கன் பேடா..

   Delete
  14. எடிட்டர் நிச்சயமாக ஏதாவது சர்பிரைஸ் கொடுப்பார்,நண்பர்களின் உற்சாகம்,கார்ட்டூன் ஸ்பெஷல்.!லட்டு,பாஸா சாரின் மக்கான் ,என்று சிறுவயதில் தீபாவளியை நினைத்து உற்சாகப்படுவதற்கு சமமான சந்தோசத்தை கொடுக்கிறது.இருந்தாலும் மனைவியிடம் எப்படி அனுமதி வாங்கபோறேன் என்று நினைத்தால்,கலக்கமாக உள்ளது.!பொதுவாக கேளிக்கைகளில் அவ்வளவாக ஆர்வம் செலுத்தாத நான்,மாடஸ்டி கதையான காட்டேறி கானகம் கதையில் வரும் ஹான்ஸ்@போன்ஸ் கேரக்டர் போல் உள்ள நான்.,ஒருஅடிமை வசமா சிக்கிட்டான்டோய் என்று என் மனைவியிடம் என்ன பாடு படப்போகிறோனோ தெரியவில்லை.கடவுளை நீதான் எல்லாத்தையும் நல்லபடிய நடத்தி வைக்கனும்.!!

   Delete
  15. //மாக்கான் பீடா//ஈரோடு விஜய் எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலயே.??

   Delete
 3. எல்லா அட்டைப்படங்களுமே அசத்தலா இருக்கே.???

  ReplyDelete
 4. அப்படி போடுங்க! இதை இதைத்தான் எதிர்பார்த்தோம்.!படங்கள் அருமை.!!

  ReplyDelete
 5. * Evasion தொடரின் அத்தனை அட்டைப்படங்களும் அள்ளுகின்றன. தமிழில் வெளியாகியிருந்தால் குறைந்தபட்சம் நான்கு கதைகளாவது ஹிட் ஆகியிருக்கும் என்று தோன்றுகிறது!

  * அமெரிக்க, ரஷ்ய புள்ளி விவரங்கள் அருமை!

  * அந்த தேதி ஒற்றுமை - ஆச்சர்யம்! ( அதை நீங்கள் கண்டுபிடித்தது மற்றொரு ஆச்சர்யம்! எதிர்காலத்துல பெரிய டிடெக்டிவ்வா வருவீங்க!)

  * இனிமேதான் கதைக்குள்ளயே போகப் போறீங்களா? கடவுளே... அந்த புக்கை வேற எங்கயோ வச்சுத் தொலைச்சுட்டேனே...

  * தொடர்ந்து அசத்துங்கள்!

  ReplyDelete
  Replies
  1. இத்தாலி விஜய் அவர்களே..காலை வணக்கங்கள்...புக்கை கண்டுபிடிச்சிட்டிங்களா..? (காணாமல் போனாதானே தேட..:D)

   Delete
 6. அருமையான பதிவு. இன்றுதான் நேரம் கிடைக்கும் கி.நா. படிதுவிடவேண்டியதுதான்

  ReplyDelete
 7. ஆசிரியர்மதம் செய்ய வேண்டீயதை நாம் சொந்த ஆர்வத்தில் செய்வது வரமா,சாபமான்னு புரியலையேஜீ.!நீங்க செய்யற பிரத்யேக ஆராய்ச்சிகளை நாங்க செய்ய முடியாது.!எங்க வேலய சுலபமாக்க ஏதோ பண்றீங்க! பண்ணுங்க.!இதாவது புரியுதான்னு பார்க்கலாம்.ஆல் த பெஸ்ட்.!

  ReplyDelete
  Replies
  1. கார்த்திக்..வி.உ.எ. சிம்பிள் கதை, இதெல்லாம் உங்களுக்கு புரியலைன்னு சொல்றது...நகைச்சுவைக்குன்னு நினைக்கிறேன்..!

   Delete
 8. வாழ்த்துக்கள் சார் ....


  கிராபிக் நாவல் படிப்பதே ஆராய்ச்சி போல எங்களுக்கு இருக்கும் பொழுது கிராபிக் நாவல் ரசிகர்கள் ஆக்க பாடுபடும் உங்கள் முயற்சி உண்மையில் போற்றதலுக்கு உரியது ..பாராட்டுக்கள் சார் ..

  ReplyDelete
  Replies
  1. இப்படி வாழ்த்துச் சொல்லிட்டு அப்படியே பதிவைப் படிக்காம எஸ்கேப் ஆகுற வேலையெல்லாம் வேண்டாம் தலீவரே! ;)

   Delete
  2. தலீவருக்கு ஏத்த செயலாளர்...ஹஹஹா...!

   Delete
  3. //கிராபிக் நாவல் படிப்பதே ஆராய்ச்சி செய்றமாதிரி இருக்கு//தலைவரே!" ஒரு வாசகம் சொன்னாலும் திரு வாசகம்"தலைவரே.!!!

   Delete
 9. உங்கள் ஆர்வம் வியக்கவைக்கிறது.!இந்தேடல் நிச்சயமாக நிறைய நேரத்தை எடுத்துக்கொண்டிருக்கும் .மிக்க நன்றி.நீங்கள் கி.நா.புரிய வைக்க முயற்சி செய்கிறேன் எனக்கு கூறியது மிகவும் சந்தோசமாக இருந்தது.நான் இன்று இந்த தளங்களில் உல்லாசமாக வலம் வருகிறேன் என்றால் அது உங்கள் தன்னலமில்லா உதவியினால் மட்டுமே.!இத்தளங்களில் டைப் செய்து பதிவிடுவது இமாலய சாதனை என்று எண்ணிக்கொண்டிருந்தவனை எளிமையாக புரிய வைத்தவர் நீங்கள்.அது போலவே கி.நாவலிலும்மாத்தியோசிப்பேன் என்று நம்புகிறேன்.!!தவறாக எழதியிருந்தால் இந்த சிஷயனை மன்னியுங்கள்.!!!

  ReplyDelete
  Replies
  1. அடடா!... இப்படியொரு அடக்கமான சிஷ்யப்பிள்ளை வந்து வாய்ததற்கு நீங்களும் கொடுத்து வைத்திருக்கணும் மாயாவி அவர்களே! ;)

   Delete
 10. மாயாவிஜி ...அற்புதம் !!! இரவே இருளே கொல்லாதே பற்றி எழுதி நீங்கள் கலக்கி இருந்தது ஞாபகம் வருகிறது ....தொடருங்கள் ...பின்னாலே வருவோம் ....:-)

  ReplyDelete
  Replies
  1. வரலாறு விஷயத்தில்'வானமே எங்கள் வீதி' கதையில் பல விவரங்கள் நீங்கள் எடுத்து கொடுத்தது எனக்கு ஞாபகம் வருகிறது...செல்வம் அபிராமி அவர்களே..! :-)

   Delete
 11. மாயாவி சார்,
  எனது 7வருட பிலாக் வாசிப்பில் முதல் பங்களிப்பு/கருத்து :
  எனக்கு இன்னும் இந்த கி நா கிடைக்கவிட்டாலும் உங்கள் விவரிப்பின்மூலம் இது எனக்கு பிடித்த வகை(வரலாறு) என்று தெரிகிறது. தொடர்ச்சியை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இக்கதைக்கும் snowpiercer படத்துக்கும் ஏதாவது தொடர்புண்டா?

  (மீண்டும் நன்றி சார் என்னையும் எழுத/கருத்து பரிமாற வைத்ததற்க்கு)
  - ஹசன்

  ReplyDelete
  Replies
  1. //எனது 7வருட பிலாக் வாசிப்பில் முதல் பங்களிப்பு/கருத்து ///

   மாயாவியின் வித்தியாசமான யோசனைகளுக்கும், உழைப்புக்கும் கிடைத்த பரிசு இது - என்றால் மிகை ஆகாது!

   Delete
  2. உங்கள் முதல் தடத்தை என் தளத்தில் பதித்தமைக்கு நன்றிகள் ! பிரான்ஸில் வாழும் ஹசன் முகமத் அவர்களே...லயன் ப்ளாக்கில் உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்..!

   Delete
 12. கலக்குங்கள் மாயாவி!!! எனக்கென்னமோ கிராபிக் நாவல் படிப்பது பயிற்சியால் வந்து விடும் என்று தோன்றுகிறது. உதாரணமாக இறந்த காலம் இறப்பதில்லை. LMS-ல் நான் கடைசியாக படித்த கதை. நிறைய விமர்சனங்கள் கதையை மட்டம் தட்டியதால் தொடவே இல்லை. ஆனால் அந்த கதை நன்றாகவே இருந்தது. உண்மையாக சொல்லப் போனால் அந்தக் கதை சொன்ன விதமும் I திரைப்படம் கதை சொன்ன விதமும் ஒன்றே..திடீர் என்று கதையில் வரும் பிளாஷ்பேக்குகளை தெரிந்து கொள்ள அறிந்து கொண்டால் அந்தக் கதை எளிதாக இருந்திருக்கும் நிறைய பேருக்கு. நிறைய சுபா, ராஜேஷ்குமார் போன்றோர் எழுதிய கதைகள் (ஒரு அத்தியாயம் நிகழ் காலம் அடுத்தது கடந்த காலம் என்று வரும்). இந்த கதையில் நிகழ் காலத்தையும் கடந்த காலத்தையும் வில்லன் (ஹீரோ?) மண்டையில் இருக்கும் முடியின் அளவைக் கொண்டு தெரிந்துகொள்ள வேண்டியது கொஞ்சம் சவால் தான். ஒரு வேளை வண்ணத்தில் இருந்தால் எளிதாக இருக்குமோ என்னவோ.

  கி. நாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு இருந்தாலும் ஆசிரியரின் பாக்கெட்டிற்கு பழுதில்லாமல் இருக்கும் வரை மட்டுமே அவர் தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இது ஒரு ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சி அனைவருக்கும் வேண்டிய கதைகள் வருவதே இந்த சிறு குழுவை ஒருங்கிணைக்கும். மற்றபடி இந்த அறிவிப்பை ஸ்வீட் கொடுத்து கொண்டாடுவது என்பதெல்லாம் நம்மைப் போல் உள்ள சிறு குழுவுக்கு ஆரோக்கியமானதா என்று தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. அடடா! அம்சமா எழுதறீங்க மகேந்திரன் பரமசிவம் அவர்களே! நீங்கள் 'எழுதுதற்கு சோம்பேறித்தனமாக உள்ளது' என்று கூறிக்கொள்வதில் வருத்தம் எனக்கு!

   Delete
  2. நீங்க வேற விஜய். செல் போனில் செலேனியும் நிறுவினேன். ஆனால் அது என்னுடைய ஆபீஸ் சம்பந்தப்பட்ட மற்ற மெயில் மற்றும் appகளை பாதித்தால் அதை நீக்கி விட்டேன். எனக்கு பதிவு செய்ய மடிக் கணினி இருந்தால் மட்டுமே முடியும். கருத்துக்களை பதிவு செய்யா விட்டால் டெக்ஸ் மற்றும் மாடஸ்டி தவிர வேறு கதைகளை டெக்ஸ் விஜய், MV, மற்றும் பரணி வர விட மாட்டார்கள் போலிருக்கிறது.:). சும்மா ஜாலியா வந்தமா பதிவை படிச்சமான்னு இருந்த எங்களுக்குள்ள தூங்கிட்டு இருந்த டிராகன தட்டி எழுப்பின பெருமை இவர்களையே சேரும் :)

   Delete
  3. வாங்க மகி சார் ...எழுத்தர்கள் சங்கத்திற்கு வருக வருக என வரவேற்கிறோம் .................கி.நா.க்களை நான் எப்படி சிலாகித்து படித்து உள்ளேன்...என பின்வரும் என் கமெண்டை பாருங்கள் .......
   ///சார் ,இந்த அட்டைப்படத்தை பார்த்தால் "மனதில்
   மிருகம் வேண்டும் "-ஞாபகம் வருகிறது சார் .
   இதுவும் அதுபோலவே சூப்பர் கொலைகளுடன்
   இருக்குமா சார் . ஏன்னா அந்த கதை படித்த
   போது நானே சில கொலைகளை கூட இருந்து
   செய்தது போல ஒரு சந்தோஷம் ஆக இருந்தது
   Reply
   சேலம் Tex விஜயராகவன் 4 June 2015 at 11:44:00
   GMT+5:30
   ......., அதேபோல இ.இ.கொ . கிளைமாக்ஸ்
   படிக்கும் போதும் அப்படியே இருந்தது சார்.
   இதுவும் அப்படி இருக்க வேண்டி மனம்
   லேசாக ஏங்குகிறது சார் .
   Erode VIJAY 4 June 2015 at 12:07:00 GMT+5:30
   //அந்த கதை படித்த போது நானே சில
   கொலைகளை கூட இருந்து செய்தது போல
   ஒரு சந்தோஷம் ஆக இருந்தது///
   //மனம் லேசாக ஏங்குகிறது சார் . //
   (((( ய்யீயீக்க்... ))))
   சேலம் Tex விஜயராகவன் 4 June 2015 at 12:58:00
   GMT+5:30
   கதையின் ஓட்டத்தில் நானும் கலப்பதை அப்படி
   சொன்னேன் விஜய் . வாரம் 3நாள் அசைவ
   உணவு காரணமாக லேசாக இப்படி ஒரு இரத்த
   வெறி கதைகள் மேல் தனியான பிரியம்
   உண்டு . க்ரீன் மேனர் , மனதில் மிருகம்
   வேண்டும் ,, இரவே இருளே கொல்லாதே
   ....போன்ற கதைகள் என்னுடைய ஆல் டைம்
   பேவரைட் . மசாலா கதைகள் உடனடியாக
   மறந்து போய் விடும் . ஆனால் இது போன்ற
   வித்தியாசமான கதைகள் கால வெள்ளத்தை
   வென்று நிற்கும் .
   அடுத்து என்ன என்பதை சற்றும் ஊகிக்க
   முடியாமல் தன் வழியே நடைபோட்டதே க்ரீன்
   மேனரின் பலம் மற்றும் பிரமாண்டம் ./////

   Delete
  4. மகேந்திரன் சார்.நீங்களும் களத்தில் இறங்கி தூள் கிளப்புங்க.!மனதில் தோன்றுவதை எங்களிடம் பகிரந்து கொள்ளுங்கள்.!நான் இதற்குஎன்றே தனி போன்,எண் வைத்துள்ளேன்.

   Delete
  5. //வாங்க மகி சார்//

   அன்பாக மகி என்று சுருக்கிய பின்னர் சார் என்று நீட்ட வேண்டாமே. நண்பர்கள் அனைவரும் மகி என்றோ மகேந்திரன் என்றே அழைக்கலாம். (இல்லேன்னா ரொம்ப வயசான மாதிரி ஒரு பீலிங்).

   உண்மையை சொல்ல வேண்டுமானால் கிரீன் மேனரும், ம.மி.வே. இ.இ. கொ வை விட மிகவும் மேம்பட்ட கதைகள். ஆசிரியர் சற்றே எளிதான விறு விருப்பான கதைகளை தேர்ந்தெடுத்தால் போதும் என்று நினைக்கிறேன்.

   Delete
  6. அப்படியே மகி எனவே அழைக்கின்றோம் நண்பரே, காமிக்ஸ் காதலரே ....

   Delete
  7. எப்படியோ மகேந்திரன் சாரை தூங்கிட்டு இருந் டிராகனை தட்டி எழப்பியமாதிரி எழப்பிவிட்டோம்..!அவர் நெருப்பை கக்கும் டிராகனை உதாரணமாக குறிப்பிட்டாலும்.,அவர் எழத்துக்கள் மயில்இறகினால் வருடிகொடுத்த மாதிரி இதமாக இருக்கிறது.!!

   Delete
 13. தலைவருக்கு புரிய வச்சிட்டீங்கனா போதும் மாயாவி சார்
  எங்கள்க்கும் புரிந்தது போல் ஆகிவிடும் சார்

  ReplyDelete
 14. நாளைவரை காத்திருக்க வேண்டுமா...................,,?

  ReplyDelete
 15. LA GRANDE EVASION
  உங்களின் பதிவு முடிவில் மற்ற 7 கதைகளில் சிறந்த கதைகளை 2016இல் தொகுப்பு கதையாக பிரசுரிக்க கேட்பீர்கள் என நம்பிகையுடன்
  special +1
  :)

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியரிடம் எனக்கு எந்த விண்ணப்பமும் இல்லை.மாறாக சக வாசக நண்பர்களிடம் எனக்கொரு விண்ணப்பம் இருக்கு சதிஷ்குமார்..! அதை பதிவின் இறுதியில் சொல்கிறேனே..! :-)

   Delete
  2. மாயாவி உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்...

   Delete
  3. @ மகேந்திரன்

   இதே பதிவில் மதியமே நான்கு புதிய படங்களை அப்டேட் செய்துள்ளேன்...செக் பண்ணுங்கள் நண்பரே..ப்ளிஸ்..! நாளையும் இதே போல் புதியவை அப்டேட்ஸ் ஆகும்.

   Delete
  4. நன்றி மாயாவி. பத்தி பத்தியாய் பதிவை தேடினேன். நீங்கள் காமிக்ஸ் போல் எழுதி விட்டதை கவனிக்கவில்லை.

   Delete
 16. சதீஸ்குமார்.,ஏன் இந்த கொலைவெறி.?என்னை பொருத்தவரை சிலபேரை தூரத்தில் பார்த்தால் சூப்பராக தெரிவார்கள் .,பக்கத்தில் வந்து பார்த்தால் மொக்கையாக தெரியும்.!அதுபோலத்தான் கி.நா.பெரும்பாலும் உள்ளது.!

  ReplyDelete
  Replies
  1. சரக்கில்லாமல் 8 கதைகளை தொகுப்பாய் வெளியிட்டிருக்கமாட்டார்கள் நண்பரே, நாம் நேரடியாக 8வது கதைகுள் நுழைந்ததால் நமக்கு கதையில் surprise factor இல்லை.

   விதவிதமாக எஸ்கேப்ஆவதை மையகருவாக(உண்மை கதையின் புனைவாக) கொண்டு தொடங்கப்பட்ட ஒரு series நிச்சயம் சில நல்லா கதைகள் இருக்கும் நண்பரே

   Delete
 17. மாயாவி சார் நமது பதிப்பில் வராத மற்ற 7 கதைகளையும் சிறிதளவேனும் அலசுங்க நண்பரே

  ReplyDelete
  Replies
  1. நான் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டேங்க..என்னைய நம்புங்க..!அந்த அளவுக்கு நான் வொர்த் இல்லிங்க... :-(((

   Delete
 18. சதீஸ்குமார்.!பழகினால் பிடிக்கும் என்று நம்புவோம்.!

  ReplyDelete
 19. @மாயாவி சிவா:

  நீண்ட நாள் கழித்து ஒரு அருமையான பதிவு...:-):-):-)
  நானும் தான் 'இன்டெர்நெட்' லயே இருக்கேன்...ஆனா நீங்க எங்கிருந்துதான் இவ்வளவு தகவல்கள் collect செய்தீர்களோ...சான்சே இல்லை...
  வாவ்!!! கலக்கிட்டீங்க மாயாத்மா...

  அப்புறம் ஒரு சின்ன suggestion-இத்தளத்தின் background color black ல் உள்ளது படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது...background color ஐ மாற்றினால் இன்னும் நலம்....

  தொடரட்டும் உங்களது காமிக்ஸ் ஆர்வம் :-)

  ReplyDelete
  Replies
  1. @ SVV @ சத்யா

   டோட்டலா ப்ளாக்கின் கலர் எல்லாத்தையும் மாத்திட்டேன்..இப்ப ஓகோ..?

   Delete
  2. ஊக்கும் முன்னயே பரவாயில்லை ....இப்ப தடவி தடவித்தான் படிக்கனும் ...க்ர்ர்..

   Delete
 20. ஆமாம் மாயாவி சிவா அவர்களே, தயவு செய்து டிஸ்பிளே கலரை மாற்றி விடுங்களேன்... ப்ளீஸ்.

  அப்புறம் டெக்ஸ்விஜய்.... மக்கன்பேடா ஒரு சைவ பதார்த்தமா? நான் அது ஏதோ ஒரு மாம்ச பட்சணம் என்று கருதியிருந்தேன்... அப்படியில்லை என்னறால், என்னனோட பேரையும் பேப்பர்ல கடேசியாவாவது எழுதுங்கப்பா....

  ReplyDelete
  Replies
  1. மக்கன் பேடா சுத்த 101%, சைவம் தான் வெங்கடேஸ் சார் .......கடைசி பேர் MV ,அதற்கும் முன்னாடி பேரு S.V.V. ...

   Delete
  2. இல்ல விஜயராகவன்... அந்த மைதா மாவுல முட்டை கலப்பாங்கன்னு கேள்விப்பட்டிருகேன்... அதனாலதான்... (இருந்தாலும் ஈரோடு வர்றதுக்குள்ள தீவிர புலனாய்வு நடத்திடறேன்... எழுதுன பேரு எழுதுனவாக்குலயே இருக்கட்டும்... )

   Delete
 21. மக்கன்பேடாவைப் பத்தி எழுதிட்டு, பதிவைப்பத்தி எழுத மறந்தேன்....

  இப்ப என்னன்னா... மாயாவி வந்து இஇகொ-வுக்கு அப்பறம் இப்ப மறுபடியும் உரை எழுத துவங்கிட்டார்... போற போக்க பாத்தா, கிராபிக் நாவல் படிக்கலைன்னா அல்லாம் சேந்து தள்ளி வச்சுருவீங்க போல தெரியுது...

  கி.நா. தீவிர எதிர்ப்பாளர்களா தெரிஞ்ச தலீவர், மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கிநா ஆதரவாளர்களா வேற மாறிட்டு வர்றாங்க...

  புதுசா வர்ற ஸ்மர்ப் கதைய நான் தமாசு கதைன்னு நினைச்சா, அது அப்பூடி இல்ல... அதுவும் கி.நா.தான்... அப்படின்னு எடிட்டர் பேதி குடுக்கறார்... (அதுக்குள்ளாற கிட்ஆர்டின் கண்ணன் ஸ்மர்ப் படத்த போட்டுக்கிட்டாரு... கட்டக்கடசீல என்ன பண்றாருன்னு பாக்கலாம்...)

  ReplyDelete
 22. ஆமா, இன்னக்க தேதி 16 தான? இந்த பிளாக்ல மட்டும் 15 காட்டுது?

  ReplyDelete
  Replies
  1. வாங்க SVV. அப்படியா...டையமிங் சரியாகத்தானே இருக்கு...(ஹீ..ஹீ..மாத்திட்டேன்..யப்பா..என்னா சார்ப்பு..)

   Delete
 23. மாயாவி சார், கலர மாத்துங்க.... கலர மாத்ததுங்க...
  (ராசுக்குட்டி படத்துல பாக்யராஜ் டெண்ட் கொட்டாய்ல படம் பாக்கப்போன எபெக்ட் வந்துடுச்சு எனக்கு...)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார்.முன்னே இருந்த கலரே பரவாயில்லை.!!

   Delete
 24. மாயாவி, கிநா ஆராய்ச்சிக்கட்டுரை சப்மிட் பண்றதுக்கு முன்னாடி, இந்த ஜில்ஜோர்டன் கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு ஒரு ஆராய்ச்சி பண்ணி முடிவ அறிவிச்சீங்கன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. 'கொரியரில் வந்த தொல்லை'னு டைட்டில் வச்சிருந்தா கனகச்சிதமா பொருந்தும்னு நினைக்கறீங்களா வெங்கடேஷ் அவர்களே? ;)

   Delete
  2. நீங்கல்லாம் சந்தா பார்ட்டி... நான்லாம் கடைக்குப் போயில்ல வாங்குறேன்? அதனால இந்த விளக்கம் செல்லாது செல்லாது.... வேற கரீக்டான விளக்கம் சொல்லுங்க... (அந்த விளக்கத்த எடிட்டர் ஏத்துக்கினார்னா, எங்கிட்ட இருக்கற இஇகொ கிநா-வை பரிசளிக்க* தயாரா இருக்கேன்...)

   *போட்டி அனைவருக்கும் பொதுவானது

   Delete
 25. அம்மாடியோவ்! அ..அந்த ஃபோட்டோக்களும், அதை ப்ரெசன்ட் செஞ்சிருக்கும் விதமும்!!! மலைக்க வைக்குது மாயாவி அவர்களே!
  அ..ஆனா, ரயிலை ஏத்திக்கிட்டு பனிப்பாளங்களை உடைச்சுகிட்டுப் போற கப்பல்ஸ் இல்லைன்னா சொல்றீங்க? கதையில அந்த இடத்தைத்தானே நான் மலைப்போட படிச்சேன்! அதுவும் கப்ஸாவா? ;(

  நாளைக்கு 'ஜீரணிக்க கஷ்டமானதைச் சொல்றேன்'னு வேற சொல்றீங்க. கி.நாக்களை ஜீரணிக்க முடியாமத்தானே பலபேர் மாயாவியின் பதிவைத் தேடி இங்கே ஓடி வந்திருக்கோம்... நீங்களும் 'ஜீரணமாக விடமாட்டேன்'னு சொன்னா எப்படி மாயாவி அவர்களே?

  இந்தப் பதிவு எங்களைத் தெளிய வைப்பதற்கா? இல்லை... தெளியவைத்து தெளியவைத்து அடிப்பதற்கா? ;)

  ReplyDelete
  Replies
  1. //இந்தப் பதிவு எங்களைத் தெளிய வைப்பதற்கா? இல்லை... தெளியவைத்து தெளியவைத்து அடிப்பதற்கா? ;)// ரெண்டுமே தான் இத்தாலி விஜய் அவர்களே..கொஞ்சமேனும் 'பிட்டு' (உபயம்:சேலம் tex) போட்டால் தானே நல்லாயிருக்கும்...! :D

   Delete
  2. கப்சா இல்லை விஜய்
   https://en.wikipedia.org/wiki/SS_Baikal

   Delete
  3. அருணாசலம் ...

   மாயாவிஜி குறிப்பிடுவது ரயிலையே ஏற்றி செல்ல கூடிய ஸ்டீமர் கப்பல் .....

   லின்க் -ல் குறிப்பிட பட்டுள்ளது

   ஸ்டீமர் ஃபெர்ரி கப்பல் ...

   இது பயணிகள், அவர்களுடைய உடமைகள் ,சிறு வாகனங்களை ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு கொண்டு செல்வது ...

   இரண்டிற்கும் வேறுபாடு உண்டு ...:-)

   Delete
  4. செல்வம் அபிராமி அந்த லிங்க் லேயே தெளிவா போட்டுருக்கே ice-breaking train ferry ன்னு.
   படிக்கலையா?

   Delete
  5. @அருணாசலம்

   பல தலைசுற்றும் விவாதம் & தகவல்கள் பகுதி-2 ல் தொடர்கிறது...

   Delete
 26. கி.நா.என்றாலே கடுப்பாகும் MV, S.V.V. ,பாசாபாய் ,தலீவர் மற்றும் பல நண்பர்கள் கவனத்திற்கு ......கேப்டன் டைகர் தொடரும் கி.நா.வகை தான் ..
  Blueberry
  Format Graphic novel
  Genre Western
  Publication date 1963–present
  Main character(s) Mike S. Blueberry (born as Michael
  Steven Donovan)
  Creative team
  Writer(s) Jean-Michel Charlier (1963-1990), Jean
  Giraud (1995-2012)
  Artist(s) Jean "Mœbius" Giraud
  Creator(s) Jean-Michel Charlier
  Jean Giraud......
  லார்கோ வின்ச் ம் கி. நா. தான் ...
  Formats Original material for the series has been
  published as a set of graphic novels .
  Original language French
  Genre Action / adventure
  Main character(s) Largo Winch
  Nerio Winch
  John D. Sullivan
  Dwight E. Cochrane
  Simon Ovronnaz
  Creative team
  Creator(s) Philippe Francq
  Jean Van Hamme
  இரத்தப்படலமும் கி நா தான் ...
  XIII ( Thirteen) is a Belgian graphic novel about an amnesiac
  protagonist who seeks to discover his concealed past. இப்படி இன்னும் நாம் ரசிக்கும் பலப்பல தொடர்களும் கி நா என்றே தயாரிக்கப்பட்டுள்ளன ..........
  ஏன் தலை டெக்ஸின் கா.க.காலம் , வல்லவர்கள் வீழ்வதில்லை இரண்டும் கி.நா. களுக்கு உண்டான சகல சாமுத்ரிகா லட்சணங்களையும் கொண்டே உள்ளனவே............இப்ப என்னா செய்வீங்க !இப்ப என்னா செய்வீங்க !

  ReplyDelete
  Replies
  1. அட்ட்டகாசம் டெக்ஸ்...(ஐந்து கைதட்டல் படங்கள்) பட்டியல் போட்டு பின்னிட்டிங்க...சூப்பர்..!

   Delete
  2. அப்படி ன்னா இதை ப்ளாக்ல போட்டுமா.....கும்மு கிடைக்காதே ...

   Delete
 27. அதானே... நானும் அப்பல்லேர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கேன்... யாரும் ஒத்துக்கிற மாட்றாங்க... கிநா-னனா கிநா-தான்... எவ்வளவு சூப்பரா இருக்கு... பளீர்னு புளிபோட்டு வௌக்குன பித்தளை பாத்திரமாட்டம்... அதப்போய் புரியல, பிரியலன்னுக்கிட்டு... எல்லாருக்கும் நல்ல பாடம் கத்துக்குடுத்தீங்க டெக்சு...

  ReplyDelete
 28. அதானே... நானும் அப்பல்லேர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கேன்... யாரும் ஒத்துக்கிற மாட்றாங்க... கிநா-னனா கிநா-தான்... எவ்வளவு சூப்பரா இருக்கு... பளீர்னு புளிபோட்டு வௌக்குன பித்தளை பாத்திரமாட்டம்... அதப்போய் புரியல, பிரியலன்னுக்கிட்டு... எல்லாருக்கும் நல்ல பாடம் கத்துக்குடுத்தீங்க டெக்சு...

  ReplyDelete
 29. நீங்கள் ஒரு தகவல் பெட்டகம் என்பதனை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்....சூப்பர் சிவா:)

  ReplyDelete
 30. //ஓரிரு நாட்களே இருக்க போகும் சிறு இடமென்றாலும் அதே பேரு.....அதான் கேட்டேன் சார் ?ஹி..ஹி. //

  இதன் மூலம் இந்த உலகத்துக்கு தாங்கள் சொல்ல வரும் தகவல் தான் புரியவில்லை ராகவன்

  ReplyDelete
  Replies
  1. அது அவருக்கான கேள்வி மக்கள் ஜி..அவரும் பதில் போட்டுட்டாரு.....
   உலகத்துக்கு தட் மீன்ஸ் காமிக்ஸ் உலகத்துக்கு சொல்ல வரும் தகவல்--- "நண்பர்களுக்காக எதையும் செய்வேன் , டெக்ஸ்சுக்காக அந்த நண்பர்களையே இழக்க துணிவேன்".
   டெக்ஸின் 60வருடம் 660கதைகளுடன் வெற்றி உலா ரகசியம் -"அதிரடி ,அதிரடி ,அதிரடி "...... நானும் அதையே பாலோ செய்வதில் ரகசியம் ஒன்றுமே இல்லை மக்கள் ஜி....

   Delete
  2. டெக்ஸ் விஜய்.,இதை நீங்கள் சொல்ல வேண்டுமா சார்.?இந்த தளத்தில் உள்ள அனைவரும் நீங்கள் கண்ணப்ப நாயன்மார் போல் முரட்டு பக்தர் என்பதை அறிவோம்.!!!

   Delete
 31. மாயாவி சிவா சார்.!எழத்துக்கள் கண்ணுக்கு தெரிய வில்லையே சார்.!!அதற்கு என்ன செய்ய வேண்டும்.(கலர் மாறிய பிறகு.)

  ReplyDelete
 32. //எழத்துக்கள் கண்ணுக்கு தெரிய வில்லையே சார் //

  எழுத்தா சார் முக்கியம்?.... படத்தப் பாருங்க சார்... ;)

  ReplyDelete
  Replies
  1. படங்கள் அட்டகாசம் சார்.!அவர் சுவராசியமாக மிக நீளமான ரயில் பாதை பற்றி மீதியை இங்கு எழதியுள்ளதாக குறிப்பிட்டார். அதைத்தான் தேடுகிறேன்.!!

   Delete
 33. இன்னிக்கான பதிவை இன்னுமா போடலை? ஒரு பொறுப்பு வாணாம்?

  ReplyDelete
  Replies
  1. 'ஜீரணிக்க கஷ்டமானதை' இன்னிக்கு பதிவுல போடப்போறேன்னு சொன்னீங்களேன்னு நான் ஜெலுசில், 7up எல்லாம் வாங்கிவச்சுக்கிட்டு உட்கார்ந்திட்டிருக்கேன்...,

   Delete
  2. @இத்தாலி விஜய்

   நிறைய கேள்விகளை எழுப்பிய 'செல்வம் அபிராமி' அவர்களுக்கு நன்றிகள்.. விடைகள் தேடி கண்டுபிடித்துகொண்டிருக்கிறேன்..! நேற்று தொழில் நிமித்தமாக பயணத்தில் இருந்ததால் பதிவிடமுடியவில்லை நண்பர்களே..! விரிவான விளக்கத்துடன் மாலையில் வருகிறேன்..!

   Delete
 34. ஒரு சின்ன காமிக்ஸுக்கு பின்னால் எவ்வளவு பெரிய வரலாறு? உண்மையாகவே வியக்க செய்கிறது.
  நன்றிகள்

  ReplyDelete