Monday 29 January 2018

'புலன் விசாரணை' பிரித்து மேயலாம் வாங்க.!

வணக்கங்கள் நண்பர்களே.!

இதோ...

ஆஆஆ...வஊவுவுவுவ்...என மலைக்கவைப்பதாக எடிட்டர் சொல்லும் 'புலன் விசாரணை' ஆங்கில பதிப்பு.! மொத்தமே 38 பக்கங்கள்.ஆளுகொரு பக்கம் எடுத்து அன்புகூர்ந்து மொழிபெயர்த்து எடிட்டருக்கு மெயில் பண்ணுங்கள்.அல்லது இங்கும் பதிவிடாலம்.! உங்கள் விருப்பம்...

ஸ்டாட் மியூசிக்...

நட்புடன்
மாயாவி.சிவா










































Monday 21 August 2017

கர்னல் ஆமோஸ்... ஒரு புலனாய்வு.!


வணக்கங்கள் நண்பர்களே.!

மங்குஸ் பற்றிய விரியனின் விரோதி.! 
XIII பற்றிய காலனின் கைகூலி.!  
கதைகள் வரிசையை போலவே... பல மர்மங்களுக்கு விடை சொல்லும் என ரொம்பவே எதிர்ப்பார்க்கப்பட்ட இன்னுமொரு முக்கிய கதை கர்னல் ஆமோஸ் spinoff ஆல்பம்.! எப்பதான் இது வருமோ..??? என்ற கேள்விகள் ஓயாமல் ஒலித்து அடங்கிவிட்ட நேரத்தில் சர்ப்ரைஸ் இதழாக BOOK FAIR ஸ்பெஷல்! என கிடைத்தது உண்மையில் சொல்ல முடியாத  மகிழ்ச்சி.!


புத்தகத்தின் பின் அட்டையில் உள்ள...

யாரிந்த முதியவர் ஆமோஸ்..?

XIII - ன் கதையோடு இவருக்கென்ன தொடர்பு..?

காமிக்ஸ் உலகின் ஒரு மைல்கல் படைப்பின், இந்த spinoff ஆல்பம் விடை சொல்லும்.!

இப்படி கதையின் உள்அடக்கிய விஷயங்களை பற்றி சொல்லும் அந்த வரிகளுக்கு எதிராகவே ஒவ்வொரு வாசக நண்பரின் விமர்சனமும் இருந்தது. XIII கதைகளுக்கும் இந்த கர்னல் ஆமோஸ் கதைக்கும் துளியும் தொடர்பில்லை என்றே ஒட்டுமொத்த கருத்துகளாக இருந்தது.!

ஆனால் ஏனோ எனக்கு அப்படி ஒரு வரிகள் ஆசிரியர் போட காரணமில்லாமல் இருக்காது என்றே தோன்றியது. கொஞ்சமே ஜம்போ ஸ்பெஷல் கதையை நினைவில் கொண்டுவந்து கதைக்குள் பயணித்தில்...

கதையில் வந்த கதாபாத்திரமும்,பெயர்களும் ரொம்பவே பரிச்சியமானதாகவே தோன்றியது.அந்த பெயர் வரிசைகள்...

வில்லியம்
ப்ராங்க் ஜியார்டினோ
ஹெய்டேஜ்ர்
இரினா
ஜெஸ்ஸிகா

இந்த பெயர்கள் பின்னால் உள்ள கதாபாத்திரங்கள் பற்றிய நினைவுகள் ஆழமாக இருந்தாலும்கூட...அதை அகலமாக்க மீண்டும் ஜம்போ இதழை புரட்டினேன் கவனமாக..!

விடைகள் மெல்ல புலப்பட்டன.மறைந்திருக்கும் மர்மம முடிச்சிகள் வெளிப்பட்டன. என் சின்ன அறிவுக்கு எட்டிய சில உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.!

அதற்கும் முன்னால் எனக்கு ரொம்பவே ஆச்சரியமும் அதிர்ச்சியும் தந்த விஷயம்... கர்னல் ஆமோஸிக்கு ஒரு கை இல்லை என்பதுதான்.! என்னால் இந்த விஷயத்தை நம்பவே முடியவில்லை. ஒருவேளை பௌன்சர் ஓவியர் வரைந்தால், அவருக்கு கையில்லாமல் வரைய ரொம்பவே ஆசைபோலும் என நினைத்துவிட்டேன்.பின் கலெக்டர்ஸ் ஸ்பெஷல் எடுத்து புரட்டியபோதுதான் மண்டையில் பொளிர்ன்னு உறைத்து...

ஆமோஸ்க்கு ஒரு கை இல்லாமல்தான் இருக்கிறார். நான் அவர் கை இல்லாமல் இருப்பதை ஒரு துளி அளவு கூட கவனித்தே இல்லை.ஓவிய அழகும்,நேர்த்தியும் இப்படி கவனிக்காமல் கடந்த போக செய்தது எனக்கு மட்டும்தானா.!?!?


இந்த ஓவிய நுணுக்கத்தை மட்டும் நீங்கள் இரண்டாம் பாகத்தில் கண்டுபிடித்திருந்தால்...நீங்கள் கிரேட்.!

 * பல இடங்களில் பெயர் பிரித்து போட்டிருந்தாலும் கூட, அந்த பெயரும் பின்னணியும் நமக்கு சொல்வது...

XIII கதையில் மையப்புள்ளியே அமெரிக்க ஜனாதிபதி கொலைதான்.!சாட்ஷாத் அப்படி கொல்லப்படப்போகும் வில்லியம் ஷெரிடன் தான் இங்கு ப்ராங்க் ஜியார்டினோ உடனும், ஆமோஸ் பேசிக்கொண்டிருப்பவர்..!


* யார் இந்த ப்ராங்க் ஜியார்டினோ..? XIII கதையில் எங்குதான் அவர் வருகிறார்..? என தேடிய போது முதல் அறிமுகம் சிக்கியது..


 * சரி இந்த ஜியார்டினோ என்னதான் செய்திருக்கிறார்..? இந்த மெயின்கதையில் இவருக்கு என்னதான் ரோல்...? பதில்...


* ஜியார்டினோ தன் சொந்ததங்கையையே கொலை செய்தவர் என்ற உண்மையை FBI டைரக்டர் சொல்கிறார். அவரின் தங்கை பெயர் கார்லா. அவளின் கணவர் பெயர் சான் மால்வே. தங்கையில் காதலை பொறுக்காமல் போட்டுத்தள்ளியது மட்டும்தானா..? இதுக்கு FBI எதுக்கு..? ஆமோஸ் ஒரு இடத்தில் ஜியார்டினோ-மாபியாக்கு உள்ள உறவு பற்றிய கேள்வி வருதே ..?  
                         

* ஜியார்டினோ ஏன் மாபியாவை தொடர்பு கொள்ளவேண்டும்..? அவருக்கும் மாபியாக்களுக்கும் உள்ள உறவுதான் என்ன..? பதில்...



* அரசியல் கொலைகள் செய்யத்தான் மாபியாவுடன் தொடர்பா..? அந்த தொழில்முறை கொலை செய்யும் இரினா ஆமோஸ் கதையில் வந்த மாதிரி இருக்கே..? அது எங்கே.? பதில்....


ஜியார்டினோ தன் உதவியாளன் மைல்கேலை ஆமோஸுன் ரகசியம் காக்க,தொழில்முறை கொலையாளியான இரினா வைத்து காரியத்தை முடிக்கிறார் ரைட். யாரிந்த இரினா..? இரத்தபடலத்தில் அடிக்கடி வரும் பெயராச்சே..? அவள் எங்கு அறிமுகம் ஆகிறாள்..? பதில்...


அட கடவுளே..இரினா மங்கூஸின் புது அசிஸ்டெண்டா..? இவள்தானே நர்ஸ் வேடத்தில் XIII - ஐ கொலை செய்ய வருபவள்.! கண்ணில் கத்திகுத்து வாங்கி ஓடும் இவள் அவ்வளவு தானா..? இவள் பின்னணிதான் ..? பதில்...


* இந்த இரினா தொழிலில்முறை கொலை செய்யும் மாபியா கேங் லிடர் என்பது ஒருபுறம் இருக்கட்டும்...நாம் ஜியார்டினோ தங்கையின் கணவரான ஸான் மால்வே யார்..? அவருக்கும் XIII க்கும் என்ன தொடர்பு..? பதில்....



* ஸான் மால்வேவுக்கும் கார்லாவுக்கும் பிறந்தவன் நாம் ஜேசன் ப்ளை என்னும் XIII எனில்....ப்ராங்க் ஜியார்டினோவுக்கும் XIII என்ன உறவு என புரிகிறதா..? எஸ்...சாட்சாத் சொந்த தாய்மாமனே தான்..! சரி இந்த தாய்மாமன் எப்படிதான் அமெரிக்காவின் புலனாய்வு தடுப்புதுறைக்கே தலைவரானார்..? அது எப்படி சாத்தியம்..? பதில்....


* அட மாபியா கும்பலின் வாரிசான ஜியார்டினோ ஒரு வக்கீலாவது வேண்டுமானால் சாத்தியமாகலாம்.ஆனால் அந்த NSA தலைவராவது என்பது எப்படிங்க..?  பதில்....




* மேற்கண்ட இரண்டு படத்தின் வசனங்களுமே உங்களுக்கு ஜியார்டினோ எப்படி அவ்வளவு உயரத்திற்கு போனார். வில்லியம் என ஜனாதிபதியையே பெயர் சொல்லி அழைக்கும் படியான செல்வாக்கு பெற்றார் என்பது புரிந்திருக்கும். அவரின் குடும்பம் எவ்வளவு பெரிய மாபியா குடும்பம் என்பதும் புரிந்திருக்கும். 

இந்த பலத்தை வைத்துகொண்டு ப்ராங்க் ஜியார்டினோ என்ன செய்தார்..? XIII கதையில் அவர் பங்குதான் என்ன..? பதில்...




ஜியார்டினோவின் கேவலாமா சூழ்ச்சியில் பலியானது அமெரிக்க ஜனாதிபதி வாலி செரிடன் உயிர். மீண்டும் ஒரு ஜனாதிபதி கொலை.! அந்த பழியை தான் தூக்கிபோட இருக்கவே இருக்கிறார் நம்ம XIII. முதல் பாதியில் மங்குஸ் விரட்டல் என்றால் பின்பாதியில் ப்ராங்க் ஜியார்டினோவின் விரட்டல் என மிக முக்கிய பங்கு அவருக்குதான்.!

* அதுசரி ஆமோஸ் கதை முடிவில் ஒரு இளம்பெண் ஜெஸ்ஸிகா என வருகிறாளே... அவளுக்கும் XIII இரத்தபடலம்கதைக்கும் ஏதும் சம்மந்தம் இருக்கா..? 


அந்த இளம் பெண்ணுக்கும் இரத்தபடலம் கதைக்கும் சம்மந்தம் இருக்கா..? என்ற பதிலை பார்க்கும்முன் உங்களிடம் இரத்தப்படலம் கலெக்டர் ஸ்பெஷல் புக் இருந்தால் அதன் பின் அட்டையை கொஞ்சம் எடுத்து பாருங்கள். அந்த பின்னட்டையில் இருக்கும் அந்த இளம்பெண் வேறுயாருமல்ல...அது ஜெஸ்சிகாவே தான்.!


நமது லயன் காமிக்ஸில் மட்டுமல்ல...பெல்ஜியம் படைப்பிலும் 14 & 15 இரண்டு பாகத்தின் அட்டைபடத்திலும் பிரதானமாக இதே ஜெஸ்ஸிகா இடம்பெற்றுள்ளாள்.!




* அட்டைபடத்தில் இடம்பெறும் அளவிற்கு முக்கிய கதாபாத்திரமான ஜெஸ்ஸிகா ஆமோஸ் கதையில் ஒரு டைபிஸ்ட் ஆக அல்லவா ஜியார்டினோவிடம் பணிக்கு சேர்ந்தாள். அவள் எப்படி இவ்வளவு பெரிய கொலைகாரி ஆனால்..? பதில்...


18 வயது பெண்ணை தன் அரசியல் கொலைக்கும்,உளவுக்கும் கைப்பொம்மையாக பயன்படுத்திக்கொண்டதை மட்டுமல்ல....அவளை வேறுவிதமாகவும் பிரம்மச்சாரியான ஜியார்டினோ பயன்படுத்திக்கொண்டார் என்பதை இரத்தப்படலத்தை மறுவாசிப்பின்போது புரிந்துகொள்வீர்கள்.!

* ஒரு டெலாஸ்கோப் வசதி கொண்ட ஸ்னைப்பர் ஷாட் துப்பாக்கியில் குறிவைத்து கச்சிதமான கொலையில் துவங்கும் கதை...முடிவில் அதே போலவே ஒரு குறிவைத்த கொலையில் முடித்து, வட்டத்தை நிறைவு செய்துள்ளார் கதாசிரியர்.

அப்படி குறிவைத்து கொல்லப்படுவது யார்..? பதில்...



ஆமோஸ் கதையில் மட்டுமல்ல...இரத்தபடலம் 18 பாகத்தில் ரொம்பவே நீட்டமாக ஆடுபுலி ஆட்டம் ஆடும் ப்ராங்க் ஜியார்டினோ தான் அந்த குறியின் பலி ஆடு. அவ்வளவு முக்கியத்துவம்வாய்ந்த அந்த குள்ளநரியை குறிவைப்பது யார்..? 

*ஜியார்டினோவை கொன்றது யார்..?  பதில்....


கர்னல் ஆமோஸ் கதை முடிவில் யாரை அறிமுகப்படுத்தி கதை முடிக்கப்பட்டதோ...அதே ஜெஸ்ஸிகா மார்ட்டின் தான் ஜியார்டினோவை கொல்கிறாள். இங்கு ஒரு சிறப்பையும்,திரு விஜயன் அவர்களின் சிந்தனைபின்னணியையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.

குறிபார்த்து கொலை செய்வதில் துவங்கும் கதை...அந்த கொலையை செய்வது XIII என்பதால், அவரின் படம் முன்அட்டையிலும்,
அதே குறிபார்த்த கொலையில் முடியும் கதை....அந்த கொலையை செய்வது ஜெஸ்ஸிகா என்பதால் அவளின் படம் பின் அட்டையிலும் போட்ட நுட்பத்தை இங்கு பாரட்டத்தான் வேண்டும்.

ஜெஸ்ஸிகா இரத்தபடலம் கதையை  முடித்து வைப்பதில் என்ன பங்கு..? எனதெரிந்து விட்டது. இரினா என்னவானாள்..?  பதில்....


எஸ் மீண்டும்மீண்டும் அதே ஜெஸ்ஸிகா என்பதுதான் பதில்.!

"இரத்தபடலம் பற்றியே பதிவு சுத்திவருதே..கர்னல் ஆமோஸ் கதையை பற்றி எதையும் காணேமே..? சில இடங்கள் குழப்பமா இருக்கே.." என்ற உங்கள் கேள்வி நியாயமே. 

இந்த ஸ்பின்ஆப் கதை அரசியலின் நுட்பமான பின்னணியும்,உளவும் ஒற்றர்களின் குள்ளநரிதனமும் அடிப்படையாக கொண்டகதை என்பதால் சட்டென்று புரிந்துகொள்வது கடினம். அதுவும் முக்கியமான ஒரு இடம் புரிந்து கொள்வது நிறைய குழப்பத்தை ஏற்படுத்தும்,அந்த ஒரு சிக்கலை மட்டும் இங்கு விளக்குவது உங்கள் பார்வையை முற்றிலும் மாற்றும் என நம்புகிறேன்.!

வசனமே இல்லாத இந்த பக்கத்தில் சொல்லப்படும் செய்தி என்ன..? அந்த இளவயது நினைவுகள் மூலமாக ஆமோஸ் நமக்கு சொல்லும் செய்தி என்ன..? 


அமெரிக்காவிற்கு சாதகமாக பேசியதற்காக இஸ்ரேல் துவேஷி என இஸ்ரேலின் இராணுவ மேஜரால்   முத்திரை குத்தப்பட்டு விரட்டியக்கப்படும் ஆமோஸ்...வெறுப்படைந்து,மொஸாட்டில் இருந்து விலகி,இஸ்ரேலை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்கு பயணமாவதும்,அங்கு சென்று அமெரிக்காவின் உளவுத்துறையில் நம்பிக்கையை பெற்று ஊடுருவதும் என்பதெல்லாமே...

மொஸாட்டின் தந்திரமான திட்டமே..!

"இனி வாழ்நாளில் இஸ்ரேலுக்கு என்றுமே திரும்ப போவதில்லை, ஆனால் விசுவாசம் மட்டும் இரசியமாக மொஸ்ஸாட் மூலம் தன் தேசத்திற்காக அர்பணிக்கப்படும்."

இப்படி ஒரு தீர்க்கமான முடிவுக்கு திடமாக போகும் பொருட்டுதான் ஆமோஸ் அந்த இளவயதில்,அந்த மலை முகட்டில் நின்று தன்னை நாட்டுக்கு அற்பணிக்கும் விதமாக...இஸ்ரேல் துவேஷ் என்ற துரோகிபட்டத்தை சுமந்து அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்.

அப்படி அவரை அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்கும் சூத்திரதாரி வேருயாமல்ல...அவரை துரோகி என குற்றம் சாட்டிய [ஒரு கண்ணை இழந்த இராணுவ ஜெனரல்] மேஜர் மோசே டயான் தான் அவரை "நாடு இவரை செய்த சேவையை கௌரவிக்கும்...இனி வாழ்நாள் முழுவதும் செய்யப்போகும் சேவையை மண்ணோடு மண்ணாக புதைத்துவிடும்.." என நாசூக்காக அறிவுறுத்துகிறார்.

அதை உறுதிபடுத்தும் இடம்....


தன் மகளுக்கு அவர் எழுதும் கடைசி கடிதத்தில்...நான் ஒரு மொஸாட்டின் ஒற்றன்.! என தன் உண்மைமுகத்தை ஒப்புக்கொள்வதன் மூலமாக, சுமார் 30 வருடங்களாக அமெரிக்காவில் குடியேறி அங்கு அரசுக்கு வேலைபார்த்தாலும்கூட...அமெரிக்காவிற்கு வந்த நோக்கம் ஒற்றனாக வேவுபார்க்கும் பொருட்டே என்பதே நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தி.!

இஸ்ரேல் துவேஷ் என முத்திரை குத்தப்படும் காட்சிக்கும்,அவர் இஸ்ரேலை விட்டு வெளியேறும் விமான காட்சிக்கும் இடைபட்ட நிகழ்வுதான் அந்த மலைபாதையில் நின்று தீர்க்கமாக பார்க்கும் 53 & 54 பக்கங்களில் உள்ளவை.


இங்கு அந்த ஓவியம் பற்றிய ஒரு நுட்பமான விஷயத்தை விவரிக்க ஆசை. அந்த மலை உச்சியும்,பறந்து விரிந்த இஸ்ரேல் மலைபகுதியும் சரித்திரத்தில் ஒரு முக்கியமான இடம். இஸ்ரேலிய யூதரான அவதாரபுருஷனான இயேசு அந்த மலைமுகட்டில் தான் சாத்தனுடன் விவாதிக்கிறார்.அதன் முடிவில் சாத்தான் அவரை விட்டு அங்குதான் விலகுகிறது.




தன் மனதில் உள்ள சாத்தானை ஒரு மன போராட்டத்திற்கு பின், அங்கு சுயநலம் என்னும்  சாத்தானை தூக்கி எறிந்துவிட்டு,மானசீகமாக நாட்டுக்கு தன்னை அற்பணிக்கிறேன்...என ஆமோஸ் தீர்மானிக்கும் அந்த காட்சியை ஓவியர் காட்சிபடுத்தியுள்ள விதம் யாருமே கவனிக்க தவறிய...கவனிக்க வேண்டிய ஒன்று.!

* அடுத்து...இன்னுமொரு புரிதலில் சின்னதாக குழப்பம் ஏற்படும் இடம்...



ஆமோஸுக்கும் மைக்கேலுக்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்வதுதான். ஆமோஸின் ஒரே அசிஸ்டெண்ட் கேட்டி மட்டும்தான்.! மைக்கேல் ஜியார்டினோவின் அசிஸ்டெண்ட். காரியம் முடிந்ததும் ஆமோஸ் தன் அசிஸ்டெண்டை வெளிநாட்டுக்கு  புது வாழ்க்கை தொடங்க அனுப்பிவைத்து விடுகிறார்.

ஆனால் ஜியார்டினோ தன்னுடைய அசிஸ்டெண்டை இரினா மூலமாக பரலோகத்திற்கு புது வாழ்க்கை தொடங்க அனுப்பிவைக்கிறார்.இதுதான் இந்த இரண்டு கட்டுவிரியான்களுக்கும் உள்ள வித்தியாசம்.!

அடுத்து... 

* அட்மிரல் ஹைடேஜர் இந்த கதையில் ஏதும் பங்கு உண்டா..?

* ஆமோஸ் வீட்டு டிவி மேல் உள்ள ஜெஸ்ஸிகா&கிரா போட்டோவை பார்த்து ஜியார்டினோ ஏதும் புரிந்துகொண்டாரா..?

* இரண்டு கடும்தாக்குதலுக்கும் பின்னால் ஆமோஸ் தப்பிபிழைத்தாரா..?

* தன் மறைவுக்கு பின்னால் ஜெஸ்ஸிகாவிற்கு செய்தி எழுதியது ஏன்..?

* காலி துப்பாக்கியுடன் குறிபார்க்கும், கேட்டி சுட்டுத்தள்ளும் அந்த பயர்மேன் யார்..?

பதில்....



என்னது..? இவ்வளவு கேள்விக்கும் ஒரு பதிலையும் மேற்கண்ட படத்தில் காணமேன்னு தானே யோசிக்கிறிங்க...!?! அதற்கு பதிலை நான் சொல்வதை விட கர்னல் ஆமோஸ் சொல்றார் பாருங்களேன்....


என்ன நண்பர்களே...பதிவு பார்ப்பதற்கு நீட்டமா இருந்தாலும்கூட,பெரிசா ஒன்னுமில்லை இல்லையா.! இந்த பதிவின் சாராம்சம் ஆமோஸ் கதையில் வந்த ஒற்றை பெயருக்கு பின்னால் என்ன மாதிரியான கதாபாத்திரமும்,செய்கையும் [இரத்தப்படலம் 18 பாகத்தில்] உள்ளன என்பதை பற்றிய ஒரு  சின்னஞ்சிறு தொடர்பை மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லியுள்ளேன்.

படங்கள் உள்ள பக்கத்தை கூட சொல்லாமல்,வரிசைபடி இல்லாமல், ஒரு பேனல் மாத்திரமே சொல்ல காரணம்... அதை 858 பக்கத்தில்  தேடிப்படிக்கும் சுவைக்காக மட்டுமல்ல,உங்கள் நினைவுகளை கிளரும் தூண்டிலும் கூட.! மற்றபடிக்கு இந்த மறதிக்காரரின் மெகா காவியத்தில் நான் சொல்ல தவற விட்டவை கணக்கில்லாமலும்,சொன்னவை சொற்பமுமே. உங்களை சொல்ல தூண்டுவது மட்டுமே இந்த பதிவின் நோக்கம்.!!

தூண்டுகோள் லயன் ப்ளாக்கில் நண்பர் பெங்களூர் பரணி கேட்ட கேள்விகள் தான்...



மொஸ்ஸாட் பற்றிய அவருடைய வரலாற்றுபதிவும் அருமை...



அதே போல செல்வம் அபிராமியின் வருடப்பட்டியல்...


அவருடைய சில விளக்கங்களும்...


நண்பர் மிதுன் சக்ரவர்த்தியின் யூதர்கள் பற்றிய விளக்கம் அபாரம்...


நண்பர்களின் மேற்கண்ட விளக்கங்கள் உங்களுக்கு கர்னல் ஆமோஸ் படிக்கும்போது மிக உதவியாக இருக்கும்.மேலும் இந்த BOOK FAIR  ஸ்பெஷல் இன்னுமும் கடைகளில் விற்பனைக்கோ,சந்தா நண்பர்களின் அனைவரின் கைகளுக்கோ வரும் மாதத்தில் தான் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் இந்த ஸ்பெஷலை ஆன்லைனில் வாங்கிடவே வாய்ப்புள்ளதால்...தேவையானோர் வாங்கிட...இங்கே'கிளிக்'

இந்த ஆமோஸ் கதையை படித்ததில் அதன் கதாசிரியர் வேறு என்றாலும்கூட, மூலக்கதையை பாதிக்காதளவிற்கு இந்த பின்னணி கதையில் ஆமோஸின் மகள் ஜெஸ்ஸிகா என்ற இடைசொறுகளும்,ஆமோஸ் ஒரு மொஸாட் ஒற்றனாகவும் சித்தரித்தும்...முடிவில் அவர் அமெரிக்காவின் பாதுகாப்பின் ஜீவநாடி வரையில் உட்புகுந்து சாத்தியத்தை தாண்டி...பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை.! என்றளவில் சில ஒற்றர்களின் மறுபக்கத்தை அழகாக காட்டியுள்ளார்.

இந்த பதிவை அலச உங்களுக்கு 18 பாக இரத்தபடலம் அவசியம் தேவை.இதை உடனே செய்ய சாத்தியமில்லா விட்டாலும் அந்த மறதிக்காரரின் மேல் உள்ள அலாதியான ஈர்ப்பு...ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் ஒரு அலசலுக்கு கட்டாயம் கொண்டுவரும் என்றே நம்புகிறேன்.!

அடுத்து ஒரு பதிவு தோர்கல் பற்றியது.தொடர்ந்து இப்படி பதிவின் மூலமாக விரிவாக அலச உங்கள் உற்சாக வரிகள் அவசியம் தேவைப்படுகிறது நண்பர்களே.! எனவே...

ஒரு வருட இடைவெளிக்கு பின் உங்கள் கருத்துகளை....ஆச்சரியமுட்டும் விளக்கங்களை  தெரிந்து கொள்ள வரவேற்பறையில் காத்திருக்கும்...அதே...

நட்புடன்
மாயாவி.சிவா