Saturday 13 December 2014

வரலாறும்,வானமே எங்கள் வீதியும்...!
அந்த நபர் யார்...? விடை ஹிட்லர்...!

.
உலக வரலாற்றில் நடுநடுங்கவைத்த மிக கொடூரமான சம்பவங்கள் அது...விடை நாளை...


யூதர்களை பற்றிய ஹிட்லர் அபிப்பிராயம்....படிக்கவே பயங்கரமானவை,சில வரிகள் நாளை....

இரண்டாம் உலகப்போர் எப்படி எங்கே பிள்ளையார் சுழி போடப்பட்டது...விடை
நாளை...

சில மணிக்குள் ஒரு குட்டி நாடு சுடுகாடு ஆகிவிட்டதற்கு, முக்கிய காரணமாக சொல்லப்படும் அந்த சம்பவம் பற்றிய விவரம் நாளை...
நம் இளம் கதாநாயகி  ஹன்னா பற்றிய சரித்திர தகவல் நாளை...நாளை...?
வரலாறும்,வானமே எங்கள் வீதியும்...! (நிறைவு பகுதி)

1.மாக்ஸ் ஏன் கைது செய்யப்படுகிறான் ?
2. மாக்ஸ்,வெர்னர் உருவ ஒற்றுமையின் உள்ளார்த்தம் என்ன ?
3.வெர்னர் பற்றிய தகவலே கூறப்படவில்லையே ?
4.போலந்து புரட்சியாளர்களிடம் மாட்டிகொண்ட'வெர்னர்' இளவயது சிறுவனா ?
5.ஹிட்லர் முசோலினி ஆரம்பத்தில் எதிரிகளா ?
6.நண்பனுக்காக விரல்களை வெர்னர் வெட்டிக்கொண்டானா  ?
7.கடைசியில் தான் ஹன்னா மாக்சை அடையாளம் தெரியுமா என்ன ?
8.ஓட்டோ முசோலினிஐ தப்பிக்க வைத்தவரா,அவரிடமிருந்து தப்பியவரா ?

என இப்படி முதல் வாசிப்பில் வா.எ.வீ கதையை  படித்தபோது சில சந்தேகங்கள் வந்தாலும், இரண்டாம் வாசிப்பில் பல எளிதாக புரிபவையே.

என் ஆராய்ச்சிக்கு காரணம் புத்தகம் கைக்குகிடைத்த நாள்-டிசம்பர் 7.

இதே நாளில்தான் 'பியரல் ஹார்பர்' தாக்குதல் நடந்தது. அடடே...இந்த கதைக்கு வேறேன்ன என்ன தொடர்புகள் என சின்னதாய் தேடியவை..கொஞ்சம் நீண்டுவிட்டது...!

எளிதாக பயணிக்கும் இந்த கதையின் வரலாற்று பின்னணி பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டவை சுவையானவை...!

முக்கியமாக செல்வம் அபிராமியுடன் வரலாற்று நிகழ்வுகள் பற்றியும்,மிஸ்டர் மரமண்டையுடன் வெர்னர் விரல்களை வெட்டிகொண்டான் என்பதை மறுத்து மெயிலிலும், கண்ணன் ரவியுடன் நேரிலும் பகிர்ந்து கொண்டவைகள்..!

பகிர்ந்ததில் முடிவாக எடுத்த சில குறிப்புகள், கணிப்புகளுடன் இந்த பதிவின் முடிவுரை+கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் பார்க்க...


Friday 7 November 2014

கருப்பாய் வருவான் காலன் ! part - 2


வணக்கம் நண்பர்களே,

டக்குனு கொஞ்சம் புரியாத கதை இ.இ.கொ. அது எங்க கைல மாட்டிக்கிட்டு, நாங்க அத புரிய வெக்குரோன்னு செய்யற கலாட்டாபத்தி சொல்லவே வேண்டியதில்ல. இதனால நீங்க எத்தன 'லொச்சு' கொட்டினிங்களோ தெரியலை, இத சொல்லிடனம், அத விட்டுடக்கூடாது, இந்த மாதிரி சொன்ன 'செமையா' இருக்குன்னு ஆளாளுக்கு போட்டி போட்டு 'பாயிண்ட்'டக்கொட்டினோம் (?).
அதோட உச்சம்( மிச்சம்) தாங்க இந்த part 'டூ' . ஊருக்குள்ள 'கண்ணு' 'ரவி' ன்னு பாசக்கார மேச்சேரிகாரங்க கூப்புடற...'மேச்சேரி மங்கூஸ்' ன்னு தனக்கு தானே பேரு வச்சுக்கிட்டு நம்மள சிரிக்கவெக்கற 'கனல்' கண்ணன்...சாரி...'காமெடி' கண்ணன்....
"இந்தப்பா இன்னுஎன்னப்பா...சீரியசா யோசிச்சிகிட்டு...விட்ட என்னையும் சவடிச்சுடிவிங்க போல...நகருங்கப்பா மிச்ச கதையை நா ஒரு கைபாக்குறேன்..."
...ன்னு தடாலடியாக எறங்கி காமெடியா தந்த ஸ்கிரிப்ட பாத்து 'அட இப்பிடியும் ஒரு சூப்பரா ரூட்ல சொல்லலாமில்ல...' ன்னு சிரிச்சு சிரிச்சு அவர பாராட்டி தள்ளிகிட்டே (?) இந்த பதிவை செஞ்சேன், நீங்களே படிச்சுபாருங்க...'குபீர்வெடி' சிரிப்புவந்தா( வரும்) ரெண்டுக்கு மூனா 'கமெண்ட்' போடுங்க...!

நட்புடன்,
மாயாவி.சிவா

பின் குறிப்பு:
இந்த மனுஷன் டிஸ்கசன்ல கெடச்ச பாராட்ட ஒட்டுமொத்த 'வெய்ட்' போட்டு...இன்னு "ரெண்டுநாள்ல ஹிந்து பேப்பர்ல இந்த 'புக்'கபத்தி நியூஸ் வரப்போவுது...அடுத்து டைம்ஸ் ஆப் அமெரிக்கவுல வருவாங்க...நம்ம காமெடி டைலாகபடிச்சி எப்படியும் ஒரு வெள்ளக்காரன் 'வயிறு வெடிச்சி' நியூஸாகும், இதே ரூட்டல போன...'டக்கரான' சான்ஸ் தேடிவரும், அப்போ டீசண்ட ஒரு நேம் இருந்த தேவலாம்..."
...ன்னு ஏதேதோ கணக்கு போட்டு வாஸ்துபடி (?) 'Modern Mangoose' ன்னு மத்திக்கிட்டாருன்னா பாத்துகோங்களேன்...!

Nov 7 தி இந்து  தினசரியில் நண்பர் 'கிங் விஸ்வா' வின் இ.இ.கொ விமர்சனம்...


Monday 3 November 2014

கருப்பாய் வருவான் காலன் ! part - 1வணக்கம் நண்பர்களே,

முதல்முறையாக 'ஈரோடு விஜய்' மற்றும் 'மேச்சேரி மங்கூஸ்'
என்னுடன் இணைந்து சற்றே வித்தியாசமான இந்த பதிவை
வழங்கியுள்ளோம்.
பார்த்து,படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்களேன்....

நட்புடன்,
மாயாவி.சிவா