Friday, 7 November 2014

கருப்பாய் வருவான் காலன் ! part - 2


வணக்கம் நண்பர்களே,

டக்குனு கொஞ்சம் புரியாத கதை இ.இ.கொ. அது எங்க கைல மாட்டிக்கிட்டு, நாங்க அத புரிய வெக்குரோன்னு செய்யற கலாட்டாபத்தி சொல்லவே வேண்டியதில்ல. இதனால நீங்க எத்தன 'லொச்சு' கொட்டினிங்களோ தெரியலை, இத சொல்லிடனம், அத விட்டுடக்கூடாது, இந்த மாதிரி சொன்ன 'செமையா' இருக்குன்னு ஆளாளுக்கு போட்டி போட்டு 'பாயிண்ட்'டக்கொட்டினோம் (?).
அதோட உச்சம்( மிச்சம்) தாங்க இந்த part 'டூ' . ஊருக்குள்ள 'கண்ணு' 'ரவி' ன்னு பாசக்கார மேச்சேரிகாரங்க கூப்புடற...'மேச்சேரி மங்கூஸ்' ன்னு தனக்கு தானே பேரு வச்சுக்கிட்டு நம்மள சிரிக்கவெக்கற 'கனல்' கண்ணன்...சாரி...'காமெடி' கண்ணன்....
"இந்தப்பா இன்னுஎன்னப்பா...சீரியசா யோசிச்சிகிட்டு...விட்ட என்னையும் சவடிச்சுடிவிங்க போல...நகருங்கப்பா மிச்ச கதையை நா ஒரு கைபாக்குறேன்..."
...ன்னு தடாலடியாக எறங்கி காமெடியா தந்த ஸ்கிரிப்ட பாத்து 'அட இப்பிடியும் ஒரு சூப்பரா ரூட்ல சொல்லலாமில்ல...' ன்னு சிரிச்சு சிரிச்சு அவர பாராட்டி தள்ளிகிட்டே (?) இந்த பதிவை செஞ்சேன், நீங்களே படிச்சுபாருங்க...'குபீர்வெடி' சிரிப்புவந்தா( வரும்) ரெண்டுக்கு மூனா 'கமெண்ட்' போடுங்க...!

நட்புடன்,
மாயாவி.சிவா

பின் குறிப்பு:
இந்த மனுஷன் டிஸ்கசன்ல கெடச்ச பாராட்ட ஒட்டுமொத்த 'வெய்ட்' போட்டு...இன்னு "ரெண்டுநாள்ல ஹிந்து பேப்பர்ல இந்த 'புக்'கபத்தி நியூஸ் வரப்போவுது...அடுத்து டைம்ஸ் ஆப் அமெரிக்கவுல வருவாங்க...நம்ம காமெடி டைலாகபடிச்சி எப்படியும் ஒரு வெள்ளக்காரன் 'வயிறு வெடிச்சி' நியூஸாகும், இதே ரூட்டல போன...'டக்கரான' சான்ஸ் தேடிவரும், அப்போ டீசண்ட ஒரு நேம் இருந்த தேவலாம்..."
...ன்னு ஏதேதோ கணக்கு போட்டு வாஸ்துபடி (?) 'Modern Mangoose' ன்னு மத்திக்கிட்டாருன்னா பாத்துகோங்களேன்...!

Nov 7 தி இந்து  தினசரியில் நண்பர் 'கிங் விஸ்வா' வின் இ.இ.கொ விமர்சனம்...


10 comments:

 1. Super ......இனி மங்கூஸ் ...சேலத்தின் ஷேக்ஸ்பியர் ,மேச்சேரியின் பெர்னார்ட்ஷா ,வாலிப வான் ஹாம்மே என அறிய படுவாராக ......:)

  ReplyDelete
  Replies
  1. சூப்பர்...சூப்பர்..சூசூசூப்பர்ர்ர்....!

   Delete
  2. @ selvam Abirami

   உங்கள் பாராட்டுக்களில் "வாலிப " என்பது மட்டும் எனக்கு தொடர்புடைய வார்த்தையாக தெரிகிறது.
   மற்ற எதுவுமே என் சிற்றறிவுக்கு எட்டவில்லையே.!

   Delete
 2. Replies
  1. @ Raj Muthu Kumar S

   நன்றிகள் நண்பரே..!

   Delete
 3. இது நீங்களாக உருவாக்கியதா?பாராட்டுக்கள் இ.இ.கோ டன் தொடர்புடைய கதை என்பதால் குழப்பம் தவிர்க்க இ.இ.கோ கிடைத்த பின் இவற்றை படித்து பின்னூட்டம் போடுகிறேன் ஸார்!

  ReplyDelete
  Replies
  1. @ Abisheg

   உங்கள் வருகைக்கு நன்றி, கதையை புரிந்து கொள்ள இவை உதவினால் ஓகே.
   கதையை புரிந்துகொள்ள இந்த பதிவுகள் உங்களுக்கு தேவைபடவில்லை என்றால் டபுள் ஓகே. இங்கு சொல்லப்படாத புது விஷயங்களை, கண்டுபிடித்து சொன்னால் டிரிபிள் ஓகே....அபிஷேக்...!

   Delete

 4. உயர்திரு மாயாவி சிவா அவர்களுக்கு.!
  நண்பரே உங்களுக்கு இரண்டு விசயங்கள் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.!
  1.இ.இ.கொல்லாதே., சைனா பாஷையில் எழுதப்பட்ட கதையல்ல.! தமிழ் படிக்கத் தெரிந்த அனைவராலுமே புரிந்துகொள்ள கூடிய வகையில் எளிய தமிழில்தான் எழுதப் பட்டுள்ளது.
  2.கரு. வரு. காலன் கதை இ.இ.கொல்லாதே கதைக்கு எழுதப்பட்ட கோனார் நோட்ஸ் அல்ல. ஒரு ஜாலியான கிளைக்கதை முயற்சி.,அவ்வளவே.!

  இவற்றை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டீர்கள் என்றால் நன்றியுடையவனாக இருப்பேன்.!:):):)

  ReplyDelete
  Replies
  1. @மாயாவி சிவா.
   உங்களின் முன்னுரையை படித்தபோது "ஆட்டடம் நடக்குற ஊருக்கெல்லாம் வா " எனும் கரகாட்டக்காரன் காமெடி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஹிஹிஹி.!
   (மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பரே.!)

   Delete
 5. இனி மங்கூஸ் ...சேலத்தின் ஷேக்ஸ்பியர் ,மேச்சேரியின் பெர்னார்ட்ஷா ,வாலிப வான் ஹாம்மே என அறிய படுவாராக

  கதையை விட இந்த கமெண்ட் நல்ல இருக்கு , விட்ட நம்ம மாயாவி அடுத்தது ஈரோடு விஜய், டெக்ஸ் விஜய் , எல்லா நண்பர்களையும் வைத்து கதை எழுதி விடுவார் போல ?

  ReplyDelete