Thursday 14 January 2016

தனி பாதையில் முதல் TEX..!

வணக்கங்கள் நண்பர்களே..!

முதலில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!


இந்த பதிவு டெக்ஸ் தனி சந்தாவில் முதல் கதையான 'சட்டத்திற்கொரு ஒரு சவக்குழி!' பற்றிய ஒரு விரிவான விமர்சனம்.

வரிசைபடி TEX MAXI கதைகள் அடுத்தடுத்து போடாமல்  ஏன் 16 வதா வந்த கதையை போடணும்..?

டெக்ஸ் தனி சந்தாவின் முதல் கதைங்கிறது தானே அந்த முக்கிய காராணம்..!! அப்படி என்னதான் இருக்கு அந்த 16வது மேக்சியில் ஸ்பெஷலாக..? எடிட்டர் ஏன் அந்த கதையை தேர்ந்தெடுக்கணும்...?

* ஏதும் இதுவரையில் வராதா கதையா..?
* இல்லை இதுவரையில் தொடாத கதை களமா..?
* அல்லது டெக்ஸ் சந்திக்காத கொடூர வில்லனா..?
* ஒருவேளை டெக்ஸ் இதுவரையில் பார்க்காத பிரச்சினையா..?
*அல்லது டெக்ஸ் மட்டுமே முக்கால்வாசி கதைவரையில் தனித்து வருவதோ..?
* ம்...மிக சிக்கலான அரசியல்,வரலாறு பின்னணிகள் ஏதும்..? 
* ஆங்...திடும் திடுமென திருப்பங்கள் இதுவரையில் வராத மாதிரி ஏதும்..?
* வித்தியாசமான காஸ்ட்டியூம் ஏதும் போட்டு டெக்ஸ்..?
* இரும்பு பாதை, செவ்விந்தியர்கள், நவோஜோ கோட்டை ராணுவம் இப்படி..?
* மொத்த டெக்ஸ் கோஷ்டியும் இறங்கிகளைகட்டும் அதகளம்..?

மேற்குறிப்பிட்ட எந்த ஸ்பெஷல் அயிட்டமும் இந்த 16 வது maxi கதையில் கிடையாது. ஒரு முரட்டு போக்கிரி செரீப்பா,மேயரா,நீதிபதியா ஒரு நகரை பரிபாலம் பண்ணுகிறான்.அந்த நீதி பரிபாலம் பண்ணும் செரீப்புக்கு ரெண்டு சோதா கைத்தடிகள், வேறு ஒரு திருடனை தேடி வரும் டெக்ஸ் போக்கிரியின் கைங்கரியத்தை மோப்பம் பிடித்துதோல்உரித்துகாட்டுகிறார்... அவ்வளவுதாங்க சட்டத்திற்கொரு சவக்குழி!  கதை.
இதை 320 பக்கத்துக்கு கொஞ்சம் கூட தொய்வேஇல்லாம,விறுவிறுப்பா நகர்த்திட்டு போறதுங்கிறது லேசான காரியமில்லை.ஆனால் படிப்பவரை மயக்கும், விடாமல் கட்டி இழுத்து செல்லும் ஒரு அருமையான நுட்பத்தை கதாசிரியர் கையாண்டுள்ளார்.அந்த நுட்பம் ரொம்பவே என்னை வசீகரித்து விட்டது என்பதை விட, அந்த திரைக்கதைக்கு மயங்காதவர்கள் இல்லை எனலாம்..!

ஒரு ஸாகச வீரனை மானசீகமாக, நாயகன் நாற்காலி போட்டு மனதின் நடுவில் கம்பீரமாக உட்காரவைக்கும்படியான ஒரு குணாதிசயங்களோடு படைப்பதென்பது சாதாரணமான காரியமல்ல. வீரம்,விவேகம்,துணிவு,நேர்மைஎன எதையும் ஒரு படி உயர்த்தி சொன்னாலும் 'டேய்..இவன்ரொம்பதான் சீன் காட்றான்' என மனம் நொடியில் விலகி வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும். அப்படியில்லாமல் அதில் மனம் ஒன்றிட செய்யும் அந்த கணக்கை ரொம்பவே கச்சிதமாக இந்த கதையில் கதாசிரியர் செய்திருப்பதுதான் திரு விஜயன் இந்த 16 வது MAXI கதையை தேர்ந்தெடுத்திருப்பதாக எனக்கு பட்டது. 

டெக்ஸ் வில்லரின் அந்த மிளிரும் தலைமைபண்புகளை இந்த கதையில் தெறிக்கவிட்டிருப்பதை மட்டும்  தனியே பிரித்தெடுத்து இந்த பதிவில் விமர்சிக்க இருக்கிறேன்..!

கதையின் துவக்கத்திலேயே பிணங்களை ஓடிவரும் கோச்சிவண்டியில் பயணிகள் லக்கேஜோ,குதிரையோ திருடபடாமல்,படுகொலைசெய்வதே நோக்கமாக இருக்குமோ என துப்பறிந்துகொண்டிருக்கும் போது புழுதிபறக்க நுழையும் அந்த பகுதி செரிப், டெக்ஸ் வில்லரை பற்றி தெரிந்தும்கூட மரியாதை நிமித்தமாக கைகுலுக்காமல், தன் பிரச்சனையை தீர்க்க ஒரு ரேஞ்சர் கிடைத்தாரே என சந்தோஷம் காட்டாமல்... டெக்ஸ் பேசும் அதே வழிமுறையை விரல் நீட்டி பேசும் செரிப்புக்கு, அதே மிடுக்குடன் பதில் சொல்லும் டெக்ஸ் அந்த இடம் உணர்த்துவது  டெக்ஸின் மிடுக்கு மட்டுமல்ல...

புதிதாக படிப்பவரானாலும்கூட, அதுன்னா டெக்ஸ் வழிமுறை..? பலருக்கும் ஏற்புடையதாக இல்லாத வழிமுறை..? என்ற ஆர்வத்தை தூண்டில் போட்டு துவக்கும் இடமும் கூட..!

* ஆட்டுமந்தையை போல நகரமக்களை செரீப் தனது சொற்பொழிவில் நனைய செய்வதை கேட்கும் 'டெக்ஸ்', மயங்கிக்கிடக்கும் மக்களின் முன்பே கொஞ்சமே நையாண்டியுடன்.... 


விமர்சிக்கும் போது, உணர்ச்சி பொங்க வீர வசனம் பேசிவிட்டு வரும் அந்த செரீப் 'இதைநான் பாராட்டாகவே நான் எடுத்து கொள்கிறேன் வில்லர் ..." என சொல்ல...
கொஞ்சமும் அசராமல் "அதுதான் புத்திசாலித்தனம்!" என கிடுக்கிபிடியாய் பதில் சொல்லும்போது வெளிப்படும் நேருக்கு நேர்...ஜோர்..!

* கொல்லையில் குதிரையை கட்டபோகும் டெக்ஸ் பூட்டிய லாயத்தை திறக்க, அங்குவரும் உதவி செரீப்புகள் "அது தனியாருக்கு சொந்தமானது.." என எச்சரித்து சீண்ட..
'ஒவ்..ஸாரி,இது குதிரை கட்டும் லாயமில்லையா..? அந்த சலுனில் தங்க நான் குதிரை எங்கு கட்டவேண்டும் சொல்லுங்க உதவி செரீப்..?" என பதிலுக்கு கேட்கமால்...


"அடடே..வாலில்லா தடி குரங்குகளுக்கு பேசவும் வருமா..? " என ஏன் இப்படி டெக்ஸ் எகிறுகிறார் என நாம் யோசிக்கும் கணத்தில் அடித்து துவைத்து இருவரையும் பல இடங்களில் வீங்கசெய்வதுடன்,சுட சுட சுடுபறக்கும் தொனியில் நகர செரிப்பிடம்...


"உங்கள் சொறிநாய்களை அடக்கி வையுங்கள்!" என டெக்ஸ் அனாவசியமான கோபமூட்டும் படி ஏன் பேசுகிறார்...? என குழப்பமாக ஒரு கணம் தோன்றியது.

ஆனால் பிறகுதான் புரிந்து அந்த சொறிநாய்களை அனுப்பிவைத்ததே 'செரிப்'தான் என்பதும், 'என்னிடம் உன் பப்பு வேகாது தம்பி' என எதிராளி நரித்தனத்தை கையோட கிள்ளிஎரியும் மின்னல் வேக ஸ்டெப்ஸ் தான் டெக்ஸ் பாணிஎன்பது..!

* டெக்ஸ் வில்லரை 'உங்களை போன்ற அடாவடிபேர்வழிகளை நாங்கள் மன்னிப்பதில்லை.." என செரிப் சீரும்போது,கொஞ்சம் கூட கோபப்டாமல்,சிரித்துகொண்டே...'பிறர் மன்னிக்கும்படியான காரியங்கள் நான் செய்வதுமில்லை, என்னை மன்னிக்கும் அளவிற்கு நீ யோக்கியனுமில்லை' என எதிராளியை வார்த்தையில் மறைமுகமாக பந்தாடும் வேகம், ரசிக்கவைக்கும் தலைமை பண்பு..!

* தன்னை தாக்கிய சொறிநாயின் உயிர் ஊஞ்ச்சலாடிகொண்டிருக்கும்போது, உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாடாமல்,  பழகாத புதிய குதிரையை நம்பி தன் உயிரை பணயம் வைத்து...


கௌபாய் உலகின் ஜீவநாடியான அந்த நான்குகால் ஜீவனிடம் தன் நம்பிக்கையை தடவி தெரிவிக்கும் இடம், வாய்பேசா உயிரிடம் டெக்ஸ் தான் நினைத்தை புரியவைக்கும்... உயிர்களின் உள்ளே ஊடுருவி எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் வில்லரின் திறமையை சொல்லும் இடம் டச்சிங் ..!!

* மாவுமில் 'நீராலை' கூப்பரையும், டெக்ஸ் வில்லரையும் தன் சகாக்களால் கொன்று விட்டாதாக நம்பும் செரீப், தப்பியோடிய நிக் லூயிஸினை கொல்ல தேடி புறப்பட்டு, நிக் லூயிஸ் விரித்த வலையில் கயிற்று பாலத்தில் செரீப் மாட்டிக்கொள்ள...கொலைகார கூட்டத்தை சேர்ந்த எல்லோரையும் 'தான்' ஒழித்து கட்டிவிட்டதாக தம்பட்டம் அடித்த செரீப், யாரையோ தேடிபிடிக்கதான் இவ்வளவு விரைவாக கிளம்பியிருகிறார் என கண்டுபிடிக்கும் டெக்ஸ் "என்ன ஒரு கடமையுணர்ச்சி " என பட்டும் படாமல் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் பிடி போடும் சாதுர்யம்...

எதை சொன்னால் எதிராளி பதறுவான்..? எப்படி பதறினால் தன் கணிப்பு உறுதியாகும் என சரியாக கணித்து பரீட்சை வைக்கும் டெக்ஸ் தனி திறமைக்கு இந்த இடம் சரியான சீன்..!  

*  "தவறு எங்கே என்று ? யாரிடம் என்று ? தவறாக நான் ஒருபோதும் கணிப்பைதேயில்லை..! என் கணிப்பு மெல்ல உறுதியாக ஆரம்பித்து விட்டால்  சம்மந்தப்பட்டவனை எமனே விட்டாலும் நான் விடுவதேயில்லை" என...டெக்ஸ்: "தொலைந்தது பீடை என்று முடிவு கட்டி விடாதீர்கள்!" என எச்சரிக்கும் கர்ஜனை அமர்க்களம் தான் போங்கள்..!

* ஆற்றில் உயிரைவிட்ட தன் குதிரைக்கு மாற்றாக புதிய குதிரையில் தன் பயணத்தை தொடர்ந்தாலும், கரமுரடான தன் விரட்டலுக்கு பணிந்து செல்லும் அந்த நாலுகால் நண்பனிடம்...


"ஸாரிடா..." என மன்னிப்பு கேட்டு, அதன் நிம்மதிக்கு உத்திரவாதம் தரும் டெக்ஸ், தனிஒருவனாக மோசமான சூழலில் போராடினாலும்கூட, பிற உயிர்களுக்கு மதிப்பளிக்கும் குணம் மற்றொரு தலைமை பண்பு..!

* துப்பாக்கி முனையில் உயிர்கள் ஊஞ்ச்சலாடிக்கொண்டிருக்க, தேடிவந்த கொலைகாரனின் அடுத்த செயல் என்னவாக இருக்கும்..? அவனிடம் இருந்து அந்த அப்பாவி உயிர்களை காப்பாற்ற தான் என்ன செய்ய வேண்டும்..? எதை சொல்லி அவனை தன் வழிக்கு கொண்டுவரலாம்...மின்னல் வேகத்தில் கணக்கிட்டு, அந்த கௌபாய் உலக அரசியலை கச்சிதமாக விளையாடும் சதுரங்க சாதுர்யம் மற்றொரு தலைமை பண்பு..! புதிதாக படிப்பார்கள் கூட டெக்ஸ் பக்கத்திற்கு பக்கம் பிரச்சனையை இழுத்துபோட்டு துவைக்கும் நளினத்தை பார்த்து சொக்கித்தான் போவார்கள்..!

* செரீப்பின் மேல் உள்ள சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக வில்லருக்கு அதிகமாகிக்கொண்டே வர, எதையோ மறைக்க செரீப் படும் திண்ட்டாட்டத்தை ...


எரிகிற நெருப்பில் எண்ணெய் உற்றியது போல, இறுக்கமான முகத்துடன் டெக்ஸ் நேர்பட கேட்டும் அந்த தைரியம் எந்த எதிரிக்கும் உள்ளுர உறல் எடுக்கும் வழிமுறை..!

* நேர்பட பேசும் துணி, முரட்டுதனம், சாதுர்யம்,கோபம், கருணை,அன்பு, நட்புபாரட்டுதல் என...


பல அசரடிக்கும் குணங்களுக்கு மட்டும் சொந்தகாரனில்லை டெக்ஸ், இரும்பு கரங்களுக்கும், 'பன்ச்' டையலாக் விடுவதிலும் தனிரகம் என்பதற்கு இந்த 'பன்ச்' நல்ல உதராணம்..!

* டெக்ஸ் தேவையில்லாமல் எனர்ஜியை வீணடிக்கவே மாட்டார், ஏன் அந்த அறுவை மீல் எருமைகடவிடம் சண்டை போட்டு தான் நேரத்தை வீண்அடிக்கணும், பகைவர்களின் எண்ணிக்கையை ஏன் கூட்டிட்டே போகணும்...? கதையை  கதாசிரியர் நீட்றாரே... 


ஏதும் சுவைக்கு நாலுகுத்து,நாலு பன்ச், பத்து டுமீல் டுமீல் பார்முலா போட்டு கதை சொதப்ப போறாரோன்னு ஒரு சின்ன கிலேஷம் தோணின நேரத்துல, "நான் ஊருக்குள்ள போக முடியாததால...அந்த தடியனை அடிச்சது செரீப் கோஷ்டியை நகரத்தை விட்டு வெளிய வர வெச்ச பொறி.."என விளக்கும்போது சரியான ராஜதந்திரம்..!

*  "அடிபணித்த தெரிந்தவனுக்கு தான் ஆட்டிபடைக்க சூட்சமம் தெரியும்" என்ற புகழ்பெற்ற தத்துவத்தை தன் பாணியில் அந்த...


கறுப்பின சிறுவனிடம் பதமாக சொல்லும் காட்சி எல்லோர் மனதிலும் ஆழமாக பதியும் காட்சி..! 

* ஒவ்வொரு அடிக்கும் எதிரொலி இருக்கவேண்டும், தேவையில்லாமல் ஒரு அடி கூட யார்மீது விழக்கூடாது..! எங்குஅடித்தால் சாதிக்கலாம் என்ற தெளிவு...


யாரை ஓடவிட்டு, யாரை விரட்டி பிடித்து தோல் உரிக்கவேண்டும் என்ற சதுரங்கம் இன்னுமொரு தலைமை பண்பு..!

* கறுப்பினபாகுபாடை வன்மையாக கண்டிக்கும் தார் தடவி பாடம் புகட்டுவது...* போராளி என்றால் மரணம் எப்போதுமே அருகிலேயே இருக்கும், அந்த மரண பயம் பற்றிய தீர்க்கம்...


* தேடப்பட்டுவரும் குற்றவாளிபோல் மறைந்து ஒழியாமல்...சிங்கம்போலவே கர்ஜித்து தன்னை வெளிப்படுத்தி கொண்டு சுடேற்றுவது...


* தன் நண்பன் கார்சனை காப்பாற்ற உயிரை பிடித்துக்கொண்டு வண்டியின் அடியில் தொற்றிக்கொண்டு போகும் உடல்+மனோதிடம்...


* ஒதுக்கப்பட்ட இனம் வளர தன் நேர்மைக்கு கிடைத்த பரிசை சட்டப்பூர்வமாக வளர்ச்சிக்கு கொடுக்கும் சமூக சிந்தனை...


* ஒரு நீண்ட சாகசத்தின் முடிவில் முத்தாய்ப்பாய்...தெறிக்கவிடும் நம்பிக்கை வரிகள் சொல்லும்போது...


என நிறையவே இன்னும் இந்த கதையில் உள்ள பல விஷயங்களை பேசிக்கொண்டே போகலாம். இப்படி கதை முழுதும் டெக்ஸ் வில்லர் என்னும் ஒரு வீரனின் பல குணாம்சத்தை கதையின் பின்னால் அழகாக இழையோடும் அந்த கம்பீரத்தை கொண்ட காரணத்தால்தான், TEX தனி வரிசையில் முதல் கதையாக திரு விஜயன் அவர்கள் தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக நான் நினைக்கிறேன்..!

இந்த கதை திரும்ப படிக்க எடுத்துகொள்ளும் காலம்: அடுத்த maxi டெக்ஸ் கதை அறிவிப்பு வந்ததும், அது கைக்கு வரும் நாள் நெருங்கும் நேரத்தில்..இடைப்பட்ட இடைவெளியில் ஏற்படும் பதட்டத்தை தணிக்க திரும்ப 'சட்டத்திற்கு ஒரு சவக்குழி! படிக்க தோன்றும்..! 

மொத்தத்தில் சட்டத்திற்க்கொரு ஒரு சவக்குழி! தனி டெக்ஸ் துவக்கத்திற்கு சரியான வெடி..!


மீண்டும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..!

நட்புடன்,
மாயாவி.சிவா