வணக்கங்கள் நண்பர்களே..!
மனுசங்களுக்கு புதுவிஷயம் எதுமேல் திடீர்ன்னு ஆர்வம் அதிகமாகுதோ...அந்த சப்ஜெக்ட் ஆரோக்கியமான போட்டியா...பல படைப்புகள் சவால் விட்டு கிளம்புற புரட்சி எல்லா காலகட்டத்துலையும், எல்லா விஷயத்திலையும் நடந்துட்டு தான் வருது. புதுசா ஒரு ஜீன்ஸ் வந்த... போட்டியா பலது, புதுசா ஒரு டிவி சேனல் வந்தா...போட்டியா பலது, புதுசா ஒரு கார் வந்தா அதுக்கு போட்டி பலது...என மக்களை எது கவர்ந்தாலும், அதுக்கு ஈடுகொடுக்க படைப்புகள் கொட்டுவது தவறாமல் நடக்கும் பரிணாமம்..!
அப்படித்தான் இங்க 1985 to 1990 வாக்கில் பல காமிக்ஸ்கள் படையெடுத்து..! அதேபோல ஐரோப்பாவில 1965 to 1975 ல காமிக்ஸ் படைப்புகளை நோக்கி ஒரு படையெடுப்பு நடந்தது..! அந்த டைம்ல வந்தவைகள் அதிஅற்புதமான படைப்புகள், கதைகள், ஓவியங்கள்..! அப்படி பிரான்ஸ்,பெல்ஜியம்ல உருவான, சரித்திரம் படைச்ச, காமிக்ஸ் உலகத்துல என்னிக்கும் பேசப்படும் கதாபாத்திரம்& ஓவியர்கள் டின் டின்,கேப்டன் டைகர்,XIII,லக்கிலுக்,கேப்டன் பிரின்ஸ்,ஆஸ்டின் அண்ட் ஒப்பிளிஸ்,கமான்சே,ரிப்போர்ட் ஜானி, சிக்பில் என நமக்கு தெரிந்தவை.
அன்று உருவான படைப்புக்கு நிகராக...அவர்களாலே இன்று உருவாக்கமுடியவில்லை என்பதே நிஜம்..! முதல் இடத்துல இருக்குற tintin,Asterix பக்கத்துல நாம போகமுடியலைன்னாலும்...இரண்டாம் இடத்துல இருக்குற William Vance[XIII],Jean Giraud[கேப்டன் டைகர்], hermann huppen[கேப்டன் பிரின்ஸ்,காமன்சே],Morris [லக்கிலுக்] இவர்களின் படைப்புகள் திரு விஜயன் அவர்களின் முயற்சி மூலமா நமக்கு கிடைச்சது பெரிய லக்..!
அதுவும் ஓவியர் ஹெர்மெனின் படைப்புகள், அவர் தேர்தெடுக்கும் கதைகளம் யாருடனும் ஒப்பிடவே முடியாது..! அவரோட ஓவியங்களின் பாணி மனிதர்களின் எல்லா உணர்வுகளை, நம் கற்பனைக்கே எட்டாத உலகின் கடைகோடியில் உள்ள பயங்கரமான சூழ்நிலைகளை அப்படியே கண்முன்னே விரித்து காட்டும் சந்திவாய்ந்தவை..! அவருடைய படைப்புக்கு சரியான தினி போட்டவர் கதாசிரியர் Greg (Michel Régnier)
இந்த இருவர் கூட்டணியில் வந்த மாபெரும் சூப்பர் ஹிட் ஹீரோஸ் ரெண்டு பேர். அவங்களை தெரியாத ஐரோப்பிய காமிக்ஸ் ரசிகர்களே கிடையாது. முதலிடத்தில் இருக்குற ஹீரோ கேப்டன் பிரின்ஸ்.அடுத்து 'கமான்சே'.இந்த இருவரும் இந்த மாதம் ஒருசேர வருந்திருப்பது, என்னை பொறுத்தவரையில் சரியான வேட்டை..!
முதலில் கேப்டன் பிரின்ஸின் 'சைத்தான் துறைமுகம்'....
1986 ம் வருடம்...வெளிஉலகம் பற்றிய அதிக தகவல்கள் தெரியாத, எழுத்துக்களாலும், ஒரு சில போட்டோகள், DD டிவி மூலமாக பார்த்த ஓரிரண்டு காட்சிகள் தாண்டி...பனிகடல் பற்றிய தகவல் தெரியாத காலகட்டம்..! பனிமண்டலக்கோட்டைகிற முதல் பிரின்ஸ் கதையில...படுபயங்கர கந்தகமலைகுகைகளும், சதையை கிழிக்கும் குத்து பாறைகளும், உடலை ஊனமாக்கும் வாயுக்கள் கசியும்..முடிவேயில்லாத குகைபாதையும் என் வாழ்வில் முதல் முறையாக காமிக்ஸ் படங்களில் பார்த்திருந்த சமயம்...!
அந்த மூச்சு மூட்டும் குகையின் சூடேகுறையாம...அதே நினைவுல இருந்தப்போ வந்த சைத்தான் துறைமுகத்தின் பயங்கர பனி காத்து...இப்ப நினைச்சாலும் ஊசியா எலும்புல குத்துறது..! அந்த 14 வயசுல படிச்ச கதை எனக்குள்ள தோணின கலர் கனவுவை, நான் என் கற்பனையில வரைஞ்ச ஒரு கலர் ஆர்ட் என்றுமே மறக்கமுடியாத படைப்பு..! இன்று அதை எடுத்து பார்த்தபோது..நானா அதை வரைஞ்சேன்னு ஆச்சரியமா இருக்கு..!
அன்று வந்த பாக்கெட் சைஸ் புக்ல நமக்கு தெரிந்த, பிரபல மக்கன்பேடா சுவீட்ஸ் கொடுத்த நண்பரின் கடிதம் வந்திருப்பது ஒரு குட்டி செய்தி....
அடுத்து கமான்சே....
இந்த கமான்சேவுக்கும் முத்துகாமிக்ஸ்க்கும் ஒரு தொடர்பிருக்கு..! அது என்னனா...முத்துகாமிக்ஸும் கமான்சே தொடரும் ஏககாலத்துல, ஒரு மாதத்துல ஆரம்பிக்கபட்டது தான்...அந்த தொடர்பு..! ஆமாம் இரண்டுமே 1972ம் வருஷம்,ஜனவரி மாசத்துல தான் ஆரம்பிக்கபட்டது..! இந்த தொடர் முடிக்க கிட்டத்தட்ட இருபது வருஷம் ஆச்சி.ஆகஸ்ட்,2002 ம் வருடம் இதோட கடைசி பாகத்தை போட்டு முடிவு செஞ்சாங்க..!
Hermann &Greg இருவர் கூட்டணியில் உருவான கடல் வாழ்க்கை,கௌபாய் வாழக்கை என சாகசவீரர்கள் கைகோர்த்து வலம்வரும் கேப்டன் பிரின்ஸ்,கமான்சே இரு படைப்பும் , அட்டகாசமான பொக்கிஷங்கள்..! மாதம் ஒன்று என தவறாமல் வரும் டெக்ஸ்,டைலான் டாக் கதைகளின் சிறந்தவை பத்துக்கு இரண்டு தேறும்..! ஆனால் ரெண்டு வருஷத்துக்கு ஒன்று என வந்த கமான்சே கதைகள் பார்த்து பார்த்து செதுக்கிற ரத்தினங்கள்..! அதை தொடரவா ? அல்லது நிறுத்திவிடலாமா ? என விளிம்பு நிலை நாயகர் பட்டியலில் முதல் பெயராக இந்த தொடரை திரு விஜயன் சேர்த்திருப்பது...கமான்சே கதைகளை சாத்விகமாய் ரசிக்கும் சிங்கங்களை சீண்டி பார்க்கவே ஒழிய, நீக்கிபார்க்க என எனக்கு தோன்றவில்லை..!
இந்த தொடரோட ஓவியர்....
பல வெற்றி தொடரின் எழுத்தாளர்...
பதினைந்து பாக தொடரில், சேர்ந்தே பயணிக்கும் கதாபாத்திரங்களை நீங்கள் நினைவில் கொள்ள ஒரு அட்டவணை...
செயன்னீ,சிப்பாய்கள்,விவசாயிகள்...வெள்ளையர்கள்,கறுப்பர்கள்..என்று உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் வந்து ஒரு அணியாகத் திரள்வது வன்மேற்கில் ஒரு புதுமையான சங்கதியே அல்லதான்.அவர்களுடைய வாழ்க்கை முறை எளிமையானதாக இருந்தாலும் அங்கே சந்தோசத்துக்கும்,உல்லாசத்துக்கும் குறைவேதும் கிடையாது...துப்பாக்கிகளும் விஸ்கி பாட்டில்களும் அங்கே பிரதானமாக மக்களுக்கு கடும் உழைப்பே முதன்மை இலட்சியம் ! அதுமாதிரியான கட்டமைப்புகளின் பட்டியலில் முக்கிய இடம்பிடிக்க போராடும் 666 பண்ணை சந்திக்கும் கஷ்டங்கள், பிரச்சினைகள் பற்றிய அருமையான தொடரே 'கமான்சே' என எடிட்டர் குறிப்பிட்டு துவங்கிய இந்தகதையின் முதல்
நான்கு தொடரின் கதை மறந்தவர்களுக்கு, மீண்டும் ஒருமுறை நான்கையும் படிக்க தூண்ட...கதைசுருக்கம்...டைகரின் கதைகள் கூட உண்மையான கௌபாய் கதை அல்ல..! உண்மையான கௌபாய் உலகை நம் கண்முன்னே காட்டும் மெகா ஹெட் தொடர் 'கமான்சே' கதையே..! இப்படி ஒரு கதை இனி வரபோவதுமில்லை... இதுவரையில் இதுபோல் வந்ததுமில்லை..! வருடங்கள் பத்து உருண்டால் தான் நமக்கு பழசின் அருமை மெல்ல புரியவருகிறது..! சைன்ஸ் பிக்ஷன்,சூப்பர் பவர் ஹீரோக்கள்,மங்கா போல வெற்றிக்கொடிகட்டிய படைப்புகள் நோக்கி... நம் காமிக்ஸ் பயணம் தடம் மாறும்போது... இந்த கௌபாய் கதையின் அருமை உணர்ந்து படிக்கும்போது, மனதை நிச்சயம் ஏதோதோ செய்யும்..! மனதை புரட்டும்,எத்தனை முறை படித்தாலும் அலுக்காத இந்த கதையை...மி.ம. போலவே மொத்தமாய் பார்த்து ரசிக்க...நாம் மறுபதிப்பு போடுங்கள் என்ற முதல் கோரிக்கையே 2025 வருடம்தான் எடிட்டரின் முன் வைப்போம் என்பது என் கணிப்பு..!
இன்னும் பத்து வருடங்கள் கழித்து, இதை படிக்க தவறவிட்டவர்களுக்காகவே... கூடுதலாக இரண்டு காபிகள் வாங்க திட்டமிட்டு என் போக்கை நினைத்து..... ஹாஹா...நானே சிரிக்க ஆரம்பித்து விட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்...! இந்த தொடரின் அருமையை, என் முயற்சி கொஞ்சமேனும் உங்களுக்கு உணர்த்தியிருக்கும் என நம்புகிறேன்..! உங்கள் பிரதிகளை இப்போதிருந்தே பத்திரபடுத்த ஆரம்பித்துவிடுங்கள்..!
இனி வரும் காலங்களில் ஒர்ஜினல் அட்டைபடங்களே வரவாய்ப்புள்ளதால், அதன் பெரிய அளவின் படங்களை இங்கே போட்டு, எடிட்டர் அட்டையாக பெரிய அளவில் போடும்போது ஏற்படும் உணர்வை கெடுக்காது... மொத்தவரிசையையும் சின்னதாக போட்டுள்ளேன். அதேசமயம் ஒவ்வொரு கதையிலும் ஓவியர் ஒரு முக்கால் பக்கத்திற்கு அசத்தலான ஒரு சீன் பெரிய ஓவியமாக போட தவறுவதேயில்லை..! நான் ரசித்த பெரியசைஸ் படங்களை வரிசையாக பதிவிட்டுள்ளேன்..! பார்த்து ரசியுங்கள்...இந்த தொடரின் சிறப்பை உள்வாங்குங்கள்..! இடையில் ஏதும் தோன்றினால் கமெண்ட்ஸ் ப்ளிஸ்..!
நட்புடன்
மாயாவி.சிவா
அருமை,சூப்பரு.!
ReplyDelete@ கார்த்திக்
Deleteமுதல் வருகைக்கு நன்றிகள்..!
சூப்பர் மாயாவி சார். தொடருங்கள்
ReplyDelete@ பிரபானந்த்
Deleteஉங்கள் உடல் நலம் எப்படியுள்ளது நண்பரே..! உங்களுக்கு செய்யப்பட்ட மூன்று ஆபரேஷன்களும் பழைய வாழ்வை மீட்டுதந்தனவா...!
மாயாஜீ அட்டகாசம் ...மேலும் கலக்க வாழ்த்துக்கள் ....:-)
ReplyDeleteதலீவரே...நல்ல கலக்ககிறேன்... :D
Deleteமாயாவி...
ReplyDeleteஉங்கள் காமிக்ஸ் அறிவும் ஆர்வமும் அபாரம். பட்டையைக் கிளப்புகிறீர்கள்.
//உண்மையான கௌபாய் உலகை நம் கண்முன்னே காட்டும் மெகா ஹெட் தொடர் 'கமான்சே' கதையே..//
+1
@ மகேந்திரன் பரமசிவம்
Deleteநன்றிகள் பல...பட்டையை எல்லாம் கிளப்பவில்லை...எதோ முடிஞ்சமட்டும் கிடைச்சதை வெச்சி சிங்காரிச்சிருக்கேன்...ஹாஹா..!
Super siva ji
ReplyDelete@கணேஷ் K
Deleteஅப்படியா ஜி..!!!
மிகவும் நேரத்தை செலவு செய்து பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டே கட்டுரைகளை படைக்கிறீர்கள்..உங்களது dedication என்னை வியக்க வைக்கிறது...
ReplyDeleteஇன்னும் பல கட்டுரைகளை நீங்கள் படைக்க வேண்டும்,அதை நாம் படிக்க வேண்டும்..!
@ Kavinth
Deleteநீங்களும் இதுபோலவே முயற்சி செய்யும் திறமையானவரே...சில நுணுக்கங்கள் உங்களிடம் கற்றவைதான்...ஆனால் ஏனோ பதிவுதான் முன்போல் போடுவதில்லை..!
எங்கள் காமிக்ஸ் என்சைக்ளோபீடியா மாயாவிஜி . உங்கள் முயற்சி வார்த்தை வரையறைக்குள் வர இயலாத பிரவாகம் .இதற்கான நேர ஒதுக்கீடு . எங்களுக்கு இந்த தகவலை வழங்க எண்னும் ஆர்வம் . வியக்க வைக்கிறது . உங்கள் நண்பர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் . உங்கள் போன்ற சிறந்த எழுத்து நடை தெரியாது . எனினும் மனமார வாழ்த்துகிறேன் .
ReplyDeleteஎங்கள் காமிக்ஸ் என்சைக்ளோபீடியா மாயாவிஜி . உங்கள் முயற்சி வார்த்தை வரையறைக்குள் வர இயலாத பிரவாகம் .இதற்கான நேர ஒதுக்கீடு . எங்களுக்கு இந்த தகவலை வழங்க எண்னும் ஆர்வம் . வியக்க வைக்கிறது . உங்கள் நண்பர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் . உங்கள் போன்ற சிறந்த எழுத்து நடை தெரியாது . எனினும் மனமார வாழ்த்துகிறேன் .
ReplyDeleteஎங்கள் காமிக்ஸ் என்சைக்ளோபீடியா மாயாவிஜி . உங்கள் முயற்சி வார்த்தை வரையறைக்குள் வர இயலாத பிரவாகம் .இதற்கான நேர ஒதுக்கீடு . எங்களுக்கு இந்த தகவலை வழங்க எண்னும் ஆர்வம் . வியக்க வைக்கிறது . உங்கள் நண்பர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் . உங்கள் போன்ற சிறந்த எழுத்து நடை தெரியாது . எனினும் மனமார வாழ்த்துகிறேன் .
ReplyDelete@ மயிலாடுதுறை ராஜா
Deleteஏதேதோ பெரிய பெரிய வார்த்தையெல்லாம் போட்டிருக்கிங்க..! ரெண்டுமட்டும் புரியுது..
1. ஒரே கமெண்ட்ஸ் முனு தடவை போட்டதைபார்த்தா எனக்கு சரியா எழுத வரலைங்கிறது..அதை டெக்ஸ் கரெக்டா சொல்லிட்டாரு...சரிபண்ணிக்கிறேன்..!
2. தேவரகசியம் தேடலுக்கு அல்ல.! புக் எனக்கு கிடைக்காமல் புலம்பிய நேரம்... ஏன் கிடைக்கலைன்னு போன் போட்டு பேசிய முதல் நண்பர் நீங்கதான்...அதோட விளைவு..இப்படி ஒரு முயற்சிக்கு துவக்கம்..!
Sir...super
ReplyDelete@se
Delete:-)))
Sir...super
ReplyDeleteஅருமையான முயற்சி மாயாவி சார் .....உங்களின் அற்புத ஆற்றலுக்கு தீனி போட்டுள்ளது இந்த கமான்சே தொடர் ....15பாகத்தில் முடியும் மற்றும் ஒவ்வொரு கதையிலும் பெரிய படங்கள் என தெரியாத தகவல்களை தந்து ரசிக்க,வியக்க வைத்து விட்டீர்கள் ....சூப்பர் ...சூப்பர் ...ஒரே ஒரு சிறு குறை மட்டுமே,ஆங்காங்கே உள்ள எழுத்து பிழைகளை நீக்கம் செய்யுங்கள் சார் .....மற்றபடி இதுதான் உண்மை கொளபாய் தொடர் என்பதை எந்த அளவு நண்பர்கள் ஒப்பு கொள்ள போகிறார்கள் என தெரியவில்லை சார் ....ஓவியங்கள் அருமைதான் . ......ஆனால் அந்த அளவு கதை வலுவானது அல்ல என்பது என் கருத்து ....ஓவியத்தில் டைகரை மிஞ்சி இருக்கலாம் ...ஆனால் கதை களத்தில் அப்படி என நான் நினைக்கவில்லை சார் .....அதே மாதிரி 15பாக மறுபதிப்பு க்கெல்லாம் வாய்ப்பு நஹி.......இதற்கு பதிலாக வலுவான கதையம்சம் கொண்ட பிரின்ஸ் டைஜஸ்ட் களுக்கே அதிக வாய்ப்பு உள்ளது என்பது என் கருத்து ...
ReplyDelete@ சேலம் இரவுகழுகார்
Deleteதியேட்டரில் எப்பவுமே ரஜினி,கமல்,அஜித்,விஜய் படம் மட்டுமே ஓட்டுறது இல்லை...எல்லாரும் ஒரே மாதிரி படம் எடுக்குறதுமில்லை..! விஜய்சேதுபதி வாங்கற மார்க்,வருமானம்...பெரியதலைங்க வாங்குறதுமில்லை...! காமன்சே ஒரு விஜய்சேதுபதி படம்..! :-))
ஒரு மாதிரி யாரும் படம் எடுக்க முடியாது ....ஒப்புக் கொள்கிறேன் சார் ....ஆனால் விஜயசேதுபதி நடித்தது தான் உண்மையான படம் ....மற்றதெல்லாம் படம் மாதிரி ,, படம் அல்ல -என நீங்கள் சொன்னால் ..........அது உண்மை யாகி விடாதே....நீங்கள் குறிப்பிட்ட பெரிய நாயகர்கள் எப்பவாச்சும் தான் சொதப்புவார்கள்,, ஆனால் விஜயசேதுபதி மாதிரி ஆட்கள் எப்பவாச்சும் தான் அதாவது லைஃப் க்கே ஒரு ஹிட் தானே தர முடிகிறது ....அதே தான் டெக்ஸ் ,டைகர்,லார்கோ போன்ற பெரிய நாயகர்களுக்கும் ....டஸ்ட் மாதிரி சிறிய நாயகர்களுக்கும் உள்ள வேறுபாடு .....
Delete@ சேலம் இரவுகழுகார்
Delete//விஜயசேதுபதி மாதிரி ஆட்கள் எப்பவாச்சும் தான் அதாவது லைஃப் க்கே ஒரு ஹிட் தானே தர முடிகிறது //
சரியான வார்த்தைகள் நண்பரே...அதைதான் நானும் சொல்கிறேன்..! அந்த ஹிட் படம் கூட பாதியில் நிறுத்தினால் எப்படி...? அல்லது ஐந்து நாளில் எடுத்துவிட்டால் எப்படி..? குறைந்தபட்சம் அடுத்த மெகா நாயகர்கள் படம் ரிலீஸ் ஆகும் வரையாவது, அந்த மினி பட்ஜெட் 'ஹிட்' படம் ஓட்டனுமில்லையா..!!!
ReplyDelete///வருடங்கள் பத்து உருண்டால் தான் நமக்கு பழசின் அருமை மெல்ல புரியவருகிறது..! சைன்ஸ் பிக்ஷன்,சூப்பர் பவர் ஹீரோக்கள்,மங்கா போல வெற்றிக்கொடிகட்டிய படைப்புகள் நோக்கி... நம் காமிக்ஸ் பயணம் தடம் மாறும்போது... இந்த கௌபாய் கதையின் அருமை உணர்ந்து படிக்கும்போது, மனதை நிச்சயம் ஏதோதோ செய்யும்..! மனதை புரட்டும்,எத்தனை முறை படித்தாலும் அலுக்காத இந்த கதையை...மி.ம. போலவே மொத்தமாய் பார்த்து ரசிக்க...நாம் மறுபதிப்பு போடுங்கள் என்ற முதல் கோரிக்கையே 2025 வருடம்தான் எடிட்டரின் முன் வைப்போம் என்பது என் கணிப்பு..!///
பின்றீங்க மாயாவி அவர்களே!
தகவல்களை தேடிப்பிடித்து பதிவாய்ப் போட நிறைய நண்பர்கள் உண்டு. ஆனால், பல மணிநேரம் கண்கள் வலிக்க, மெனக்கெட்டு கம்ப்யூட்டர் திரையை வெறித்து, ஒரு அருமையான Visual treat தர மாயாவியைத் தவிர யாரால் முடியும்?
இந்த மொத்தப் பதிவையும் பார்த்து (ரசித்து) படித்தபின்னே...
* 'கமான்சே' தொடரின் மீதிருந்த மதிப்பு பல மடங்கு கூடிவிட்டது
* இத்தொடரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படித்து ரசிக்கவேண்டும் என்ற ஆவல் பல மடங்கு அதிகரித்திருக்கிறது!
போராட்டக் குழுவை துயில் எழுப்பும் நேரம் தெருங்கிவிட்டது! எங்கே தலீவர்? ;)
அதற்கு இன்னும் அவகாசம் நிறைய உள்ளது விஜய் ...
Deleteடெக்ஸின் பல கதைகள் ,, இரத்த கோட்டை மற்றும் இரத்த படலம் -மறுபதிப்பு வேணும் வேணும் என அனேகர் கேட்பது போல...கமான்சே வையும் கேட்க வைக்க கமான்சே இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் ....
Delete@ இத்தாலி விஜய் @ சேலம் இரவுகழுகார்
Deleteஅவர் போராட்டத்துக்கு தயாரானது...மறுபதிப்புக்கு இல்லிங்க....இந்த தொடருக்கு, ரெண்டு சேத்து, ஒரு சிலாட் 2016 அட்டவணையில சேர்க்க சொல்லிதானுங்க..! [இத்தாலிகார் சொன்னதை சரியா புரிஞ்சிட்டுதான் பேசறேனா..இல்ல 'மாத்தியோசிச்சி மாட்டிக்கிட்டேனா...தெர்லியே...ஹீ..ஹீ..!]
அருமை.... அட்டகாசமான தகவல்கள்... சிறப்பான வடிவமைப்பு... வாழ்த்துகள் மாயாவிஜி....
ReplyDelete@ ரமேஷ்
Delete:-)))
மிக நீண்டநாள் கழித்து ஒரு அருமையான பதிவு வாத்தியாரே
ReplyDelete:)
இந்த பதிவை படித்தவுடன்
ReplyDeleteகண்கள் பனித்தன , இதயம் இனித்தின
எங்கள் காமிக்ஸ் கட்டப்பா நீடுழி வாழ்க என வாழ்த்த வயதில்லை , அதனால் இரு கரம் கூப்பி வணங்குகிறேன் .
sham1881@gmail.com
உங்கள் காமிக்ஸ் காதலை பார்த்து வியக்கிறேன் மாயாவி சார்
ReplyDelete@ நரேஷ்
Deleteம்....வியக்கும் நண்பரை இன்னும் நேரில் சந்திக்கமுடியவில்லையே..! :P
டாப் டென் வெஸ்டர்ன் காமிக்ஸ் எவை எனWestern Fictioneers: THE TOP TEN WESTERN COMICS- and a whole slew of runners-up- நடத்தியதில் நமக்கு தெரிந்த ப்ளூபெர்ரி 10வது இடத்தில் வந்துள்ளது ......பெளன்சர் 19வது இடம் .....கமான்சே 25வது இடம் ......உலக அளவில் பேமசான தொடர்களை பரிசீலித்து அவர்கள் இந்த ரிசல்ட்ஸ் தந்து உள்ளார்கள் ... . ...அவர்களுக்கு தெரியுது ப்ளூபெர்ரி உண்மையான கொளபாய் வெஸ்டர்ன் காமிக்ஸ் னு......ஆனால் நம்ம மாயாவி சார்தான் எதையுமே மாத்தி யோசிப்பவர் ஆயிற்றே .....அதான் 25ஐ டாப் னு சொங்கிறார் ....அதற்கான லிங்க் .....http://westernfictioneers.blogspot.com/2011/04/top-ten-western-comics-and-whole-slew.html?m=1
ReplyDelete@ சேலம் இரவுகழுகார்
Deleteஅட்டகாசம்...[ஒரு நிமிடம்தொடர்ந்து விசில்கள்..உய்ய்ய்ய்]
இதுபோலவே தேடி தகவலில் மடக்குங்கள்..! ஆனால் நமக்கு தெரிந்த கௌபாய் நாயகர்களில் தங்க தலைவன் கேப்டன் டைகருக்கு அடுத்து கான்சே போடவேண்டியது பாக்கியுள்ளது...அதற்கு ஆப்பு வைக்கலாமா..!!! [பௌன்சர் நிலைமைதான் தெரியுமே...அடுத்து ஒரு கதை போட்டால் முடிந்தது..] என் சந்தேகம் ஒரு டெக்ஸ் கதை கூட பட்டியலில் இல்லையே அது ஏன்...!?!?!
///என்சந்தேகம் ஒரு டெக்ஸ் கதை கூட பட்டியலில் இல்லையே அது ஏன்...!?!?!///---- நல்ல கேள்வி மாயாவி சார் .....இதற்கு சற்றே விரிவான பதில் --
Delete*வெஸ்டர்ன் கொளபாய் சீரியஸ் --- என்ற வரையறைக்கு ஏற்ப இந்த மேற்கண்ட டாப் கொளபாய் கதைகள் அனைத்தும் ஒரு ஒற்றுமையை கொண்டு உள்ளன ....அது , இவைகள் அனைத்தும் ஒரே கதையின் பல பாகங்களை தொடர்ச்சியாக கொண்டு வெளிவந்தவை.....அல்லது பழைய சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ச்சியாக நுண்ணிய வலையில் பின்னப்பட்டு இருக்கும் ......
*உதாரணமாக நமது தங்க தலைவன் டைகரின் சீரியஸ்ல பார்ப்போம் (டைகரின் தீவிர ரசிகர்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன் )......மின்னும் மரணத்தில் 6வது பாகத்தில் "பெளவி" கோட்டை அவுட் போஸ்டில் ராணுவ வீரர்கள் பேசும் டயலாக் -"இருவருடம் முன்பு இங்கே இந்த நிலை இல்லை ,இதைவிட மோசமான சண்டை இருந்து நிலவுயது ,அப்போது டைகர் என்னும் லெப்டினன்ட் கோஸைஸ் உடன் ஏதோ மந்திரம் போல சமாதானம் பேசி நிலையை மாற்றினார்"-- என இரத்த கோட்டை சம்பவங்களை இங்கே கோர்த்து இருப்பார்கள் .....இரும்புக்கை எத்தன் - கதையின் இறுதியில் வரும் ஜெனரல் அலிஸ்டைர் தான் மின்னும் மரணத்தின் பிரதான வில்லன் , அந்த கதையில் தப்பும் ஜெனரல் , மின்னும் மரணத்தில் கிளைமாக்ஸ்ல தான் சாவார் ....இப்படி பல தொடர்புகள் ,அந்த இரத்த கோட்டை முதல் வரப்போகும் என் பெயர் டைகரின் கடைசி பாகமான 28வது கதை வரை பின்னப்பட்டு இருக்கும் ......
*இன்னும் பெளன்சர் , கமான்சே என அனைத்திலும் இதே தொடர்கதைகள் -இணைந்து இருக்கும் .....ஆனால் டெக்ஸ் கதையில் இந்த தொடர்ச்சி இல்லை .....660கதைகள் இருந்தாலும் கன்சிடர் பண்ணும் அளவு தொடர்சியான கதைகள் இல்லை ...அத்தனையும் தொடர்பில்லாத கதையமைப்பு .....ஆகவே டாப் இடத்தில் வரமுடியவில்லை.....
*இது அனைத்து கதைகளையும் உன்னிப்பாக பார்க்கும் போது எனக்கு தோன்றியது , தவறான அனுமானம் ஆக கூட இருக்கலாம் ...அவர்கள் எந்த அளவுகோல் கொண்டு நிர்ணயம் செய்கிறார்கள் என தெரியவில்லை ....
@ சேலம் இரவுகழுகார்
Deleteஉய்ய்ய்ய்...[மீண்டும் விசில்கள்] அசத்தல் பார்வை...கச்சிதமான விளக்கம்..! ஆனாலும் டெக்ஸ் அரசியலக்கப்பட்டிருக்கலாம்ன்னு ஒரு டவுட் வருது..!
This comment has been removed by the author.
Deleteஇந்தப் பட்டியல் அமெரிக்காவில், ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட காமிக்ஸ் கதைகளுக்கானது.
Deleteஇத்தாலிய டெக்ஸ் வில்லரின் கதைகள் 1970 களில் மொத்தம் 13 மட்டுமே ஆங்கிலத்தில் வெளியாயிற்று. பின்னர் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரே ஒரு கதை மட்டுமே அமெரிக்காவில், ஆங்கிலத்தில் வெளியானது. ஆக, ஒரு கதை ஹீரோவையெல்லாம் பட்டியலில் போட நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள தளத்தின் உரிமையாளர் ஃப்ராங்க் ராடரஸ் அனுமதிக்கவே மாட்டார்.
மேலும், ஆங்கிலத்தில், அமெரிக்காவில் வெளியான கதைகள் மட்டுமே எனும்போது, ஐரோப்பிய கதாபாத்திரங்களான ப்ளூபெர்ரி, கமான்ச்சே போன்றவற்றுக்கு இதில் இடம் கிடைத்ததே பெரிய விஷயம். அப்படி இருக்க, பத்தாவது இடம், 25 ஆவது இடம் என்றெல்லாம் பார்ப்பது டூ மச். (ப்ளூபெர்ரி கதைகள் அமெரிக்காவில் ஏன் பிரபலம் அடைந்தது என்றால், மோபியஸ் என்ற Brand Name தான் காரணம். அவரது கையொப்பமிட்ட புத்தகங்கள் வெகு பிரபலம்). இப்படி ஓவியர்களின் பிரபலத்தால் மட்டுமே இந்தக் கதைகள் இந்த அமெரிக்க லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளன.
அவ்வளவே.
@ கிங் விஸ்வா
Deleteசெம..! இதை நான் எதிபார்க்கவேயில்லை..! டெக்ஸ் பட்டியல்ல இல்லாதது பத்தின டவுட் ரொம்பவே கிளியராயிடிச்சி...! உண்மையை சொல்லவேண்டுமென்றால்...தரமான கதை..அருமையான ஓவியம்...ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு...என ஐரோப்பாவில் வெற்றிப்பெற்ற தொடர்...எனக்கும் கொஞ்சம் சரிதானேன்னு பட்டத்தை, குகிள் ஆண்டவரிடம் விசாரித்து ஒன்றிரண்டு தகவல்களை தெரிந்து கொள்கிறேன்..! கிடைச்சதை போட்டோஷாபில் மேக்கப் போட்டு அழகுபாக்கிறேன்..! மத்தபடி உங்களை மாதிரி புட்டு புட்டு வெச்சி...அட்டகாசபடுத்த உங்களலதான் முடியும் கிங் விஸ்வா அவர்களே..!
//பத்தாவது இடம், 25 ஆவது இடம் என்றெல்லாம் பார்ப்பது டூ மச்//
//மோபியஸ் என்ற Brand Name தான் காரணம்// பாயின்ட்ஸ் அட்டகாஸ்..!
supper மாயாவி Sir!
ReplyDeleteஅற்புதமான சித்திரம் மாறுபட்ட கதை என comanche தவிர்க்க இயலாத ஒரு தொடர் தான்!
@ சதிஷ்
Deleteஇதை திரு விஜயனிடம் நாம் ஒரேகுரலில், உரக்க சொல்லவேண்டியவை தானே.!
சொல்லிட்டேன் மாயாவி சார், 2016இக்கு 6 issue கேட்டேன் முடியதுன்க்ரார்!
Deleteமாயாவி சிவா, வணக்கம்.
Deleteஒரு பத்து நாட்கள் முன்பாக இந்தப் பதிவை போட்டிருந்தீர்கள் என்றால், கமான்சேவை கடாசிவிடலாமா? என்று எடிட்டர் பொடி வைத்து கேட்ட ஒரு கேள்வி வந்திருக்காது. யாரும் கமான்சேவை கண்டுகொள்ளவில்லை என்பதால், எடிட்டர் அவர் ஸ்டைலில் போட்டு வாங்கியிருக்கிறார் என நினைக்கிறேன்.
லயன் காமிக்ஸின் மீள்வருகை (கிட்டத்தட்ட) ஒரு வருடம் கழித்துத்தான் எனக்குத் தெரிய வந்தது. சென்ற வருட ஈரோடு புத்தகத் திருவிழாவின் போதுதான் அனைத்துப் புத்தகங்களையும் வாங்கினேன். அதிலிருந்து இப்போது வரை வந்த புதிய கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதைகளின் வரிசையில் லார்கோ, ஷெல்டனுக்குப் பிறகு கமான்சேதான் இடம் பிடிக்கிறது. ஆனால் வெளியில் சொன்னதில்லை. இப்போது சொல்ல காரணம் உங்களுடைய பதிவுதான்.
ஓநாய் கணவாய் வெளியிடாமல் எடிட்டர் தாண்டிப்போனது மிகவும் வருத்தத்தை தந்தது. முதலிரண்டு பாகங்களும் அட்டகாசமான கதைதான். திரும்பத்திரும்ப படிக்கும் புத்தக வரிசகளில் தான் அவைகள் இருக்கின்றன. (மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும் தோன்றுகின்றன). ஆனால் 3-வதாக வந்த 4ம் பாகம் சற்று இடைவெளியைத் தோற்றுவித்திருந்தது. காரணம் நான் ஓநாய் கணவாய் படித்ததில்லை.
சென்ற வாரத்தில் டெக்ஸ்விஜயின் அன்பு காரணமாக 3-வது புத்தகம் படிக்க முடிந்தது. படித்த போதே, முதலில் மனதில் தோன்றிய எண்ணம் - வரிசைக்கிரமமாக இதையும் கலரில் வெளியிட்டு இருக்கலாம் என்பதே.
அதே சமயம் இதில் இன்னுமொன்றைக் கவனிக்க வேண்டும் - ஆரம்பமும் இல்லாமல், முடிவும் இல்லாமல் கருப்பு வெள்ளையில், அச்சுத் தரமற்று வந்த நிலையிலேயே வெற்றி பெற்றிருந்திருக்கிறது - கமான்சே.
அப்படி இருக்க, கமான்சேவை வேண்டாம் என்று சில நண்பர்கள் கூறுவது - என்ன சொல்வது?
சந்தாக்களை மனதில் வைத்துக் கொள்ளாமல், கஸ்டமைஸ்டு பிரிண்ட்களாகவாவது கமான்சேவை வெளியிடலாம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
@ SVV
Deleteஇவ்வளவு விரிவான விளக்கத்துடன்...இப்படி ஒரு அலசலையும் விளக்கத்தையும் நான் இங்கு துளியும் எதிர்பார்க்கவில்லை..! கொஞ்சமேனும் விரிவான பதிலுடன் உணவுவேளைக்கு பின் வருகிறேன் வெங்கடேஷ்...!
// அதிலிருந்து இப்போது வரை வந்த புதிய கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதைகளின் வரிசையில் லார்கோ, ஷெல்டனுக்குப் பிறகு கமான்சேதான் இடம் பிடிக்கிறது. ஆனால் வெளியில் சொன்னதில்லை. இப்போது சொல்ல காரணம் உங்களுடைய பதிவுதான்.//
Deleteஉங்கள் பதிவின் வெற்றி ஆகா இந்த வார்தைகள் சிவா !
மிக மகிழ்ச்சி SVVsir, இது கஸ்டம் பிரிண்ட் அல்ல ரெகுலர் பிரிண்ட்இல் வரவேண்டிய தொடர் SVV சார். ஆசிரியர தளத்தில் நீங்கள் உங்கள் எண்ணத்தை கூறவேண்டும் இந்த தொடருக்கு பெரும்பான்மை வாசகர்கள் அதரவு தெரிவிப்பது அவருக்கும் புரியவேண்டும் SVV சார்.
//ஓநாய் கணவாய் வெளியிடாமல் எடிட்டர் தாண்டிப்போனது மிகவும் வருத்தத்தை தந்தது.////வரிசைக்கிரமமாக இதையும் கலரில் வெளியிட்டு இருக்கலாம் என்பதே.//
நீங்கள் இதை நிச்சயம் ஆசிரியர் தளத்தில் தெரிவிக்கவேண்டும் நண்பரே, நண்பர்களின் சுருக்க கதை கொண்டு நான் understand செய்ய முற்படுகிறேன் இது போல பலரும் இருக்க கூடும். நிதர்சனத்தை ஆசிரியர் உணர்தால் 2016இல் ஆவது ஓநாய் கணவாய் அனைத்து வாசகர்களுக்கும் ிடைக்கும்.
உண்மைதான் சதிஷ்...! svv மாதிரி ஆழமான பார்வையுள்ளவர்களிடமிருந்து...இப்படிவொரு கமெண்ட்ஸ் வாங்குவது எளிதல்ல. அவர் வரிகள் முகஸ்துதிக்கானவை அல்ல, நேர்படவருபவை..!
Deleteஎன் கவலை ஓநாய் கனவாய்-கலர்-மறுபதிப்பு என்பது பற்றியல்ல, அவை தொடரவேண்டும் என்பதே...இப்போதைக்கு 'காமன்சே'-வை ஓரம்கட்டலாம் என சொல்லும் ஒரே கமெண்ட்ஸ் டெக்ஸ்.வி.ரா அவர்களுடையது மட்டுமே..!
சில சமயம் எடிட்டர் உல்டா ஆவதும் உண்டு...! உதாரணமாக "450 எதுக்கு..? விலையை குறைங்க.." ன்னு கேட்டா "கம்மி ரேட்ல வேணும்ன்னா [காமிக்ஸ் லவ்வர்] ராகவன் சொன்னமாதிரி b&w வாங்கிகங்க அது 250 தான் ரெண்டும் போடுறேன்.." ன்னு அந்த ராகவன் பேச்சை ஆயுதமாக்கான மாதிரியே...இந்த ராகவன் பேச்சை எடி ஆயுதமாக்க கூடாதுங்கிறது தான் என் கவலை..!:P
காத்திருக்கிறேன் சார்... அப்புறம் ஒரு சின்ன யோசனை... பின்னனி வர்ணத்தை இளம்பச்சையிலும், எழுத்துக்களை அடர்பச்சை அல்லது பிரெளனிலும் என மாற்றிப் பாருங்களேன்... தற்போதைய கருப்பு - வெள்ளை கண்களை வலிக்கச் செய்கிறது....
ReplyDelete@ svv
Deleteபத்துநாட்களுக்கு முன்பு 'காமன்சே' தொடர் பற்றிய விரிவான அலசல் லயன் ப்ளாக்கில் நடந்தது...அதில் ஒரு பகுதி...
//mayavi. siva27 August 2015 at 08:45:00 GMT+5:30
எடிட்டர் & நண்பர்களே...
உண்மையில் சொல்லவேண்டுமானால்...பிரஞ்சில் உள்ள 'ஓநாய் கணவாய்' கலர்படங்களை ஒரு நிமிடம் ரசித்துவிட்டு அதற்கான வசனங்களை லயன் காமிக்ஸில் படித்துகொண்டேன்...! மொத்தம் வந்த நான்கு கதைகளையும் வரிசையாக வண்ணத்தில் படிக்கும்போது ஏற்படும் உணர்வு...ஹாலிவுட் படத்தை மிஞ்சிவிட்டது..! என்னை பொறுத்தவரையில்...ஒவ்வொரு கமான்சே கதை வரும்போதும், திரும்ப முதல் கதையில் இருந்து படித்து...அந்த கௌபாய் உலகில் ஒருநாள் முழுதும் சுற்றி சுற்றி வருவேன்..!
ஒருமுறை மட்டும், பேருக்கு படித்துவிட்டு குறைந்தது ஐந்து வருடங்கள் திறந்தே பார்க்காத சிலாட் எத்தனை உள்ளன என ஒருமுறை திரும்பிபாருங்கள்..! திரும்ப திரும்ப படிக்கபோகும் கதையை ஒரு அறுபது ரூபாய்க்கு முறையாக, திருத்தங்களுடன் கலரில் போடுவது தப்பிலையே..! சராசரியாக நம் ஒருமணிநேரத்தில் மதிப்பு அறுபது ரூபாய்..! பல மணிநேரம் யோசித்து,கைவலிக்க டைப் அடித்து, பல நாள் கோரிக்கை வைப்பதைவிட, ஒரு மணிநேர உழைப்பை தாரளமாக கமான்சேவுக்கு கொடுக்கலாம். ஒருகரண்டி மாவு, ஒருஸ்பூன் நெய், கொஞ்சம் கெட்டி சட்னி என கால்வயிறுக்கு சாப்பிட்டால் அறுபது ரூபாய் சுவாகா..! ஒரு தோசையை தியாகம் செய்து அறுபது ரூபாய்க்கு மெகா ஹிட் கௌபாய் உலகை கலரில் ஒரு ரவுண்ட் பார்க்கலாம்..! இல்லைன்னா கொஞ்சம் வெங்காயம் முறுவலாக போட்டு எண்பது ரூபாய்க்கு ஆனியன் தோசையும் சாப்பிட்டுகலாம்...! ரெண்டும் எனக்கு ஒகே தான்..! நோ போராட்டம்...நோ கோரிக்கை...ஒன்லி சஜஷன் மட்டுமே..! :-)))
அப்புறம்.... பதினேழு வருஷம்கிறது அருகாமைன்னும், தொலைவு என்பது நூத்தி எழுபது வருஷம்ன்னு அசால்ட்டா சொல்ற அளவுக்கு, என்னோட ஆயிசு smurf மாதிரி ஐநூறு வருசமில்லை..! அல்ப ஆயிசுக்காரன்...எதுனா பாத்துசெய்யிங்க சித்திரகுப்தன் [எடி] அவர்களே..!// இதை படித்துவிட்டு முடிந்தால் அந்த தேதியில் நேரமிருப்பின் லயன் ப்ளாகை பாருங்க...! ரெண்டு மூன்று ஆழமான கருத்துகள் இருக்கு அதை எப்படி சொல்வதுன்னு யோசிட்டு வர்றேனே..!
@ மாயாவி சிவா
ReplyDeleteதொடர்ந்து லயன் பிளாகை எப்போதும் படித்தே வருகிறேன்... சில சமயங்களில் முதல் நபராகவே பார்வையிட்டிருக்கிறேன். (ஹை... பர்ஸ்ட் என்பன போன்றவற்றில் ஈடுபாடில்லை). ஆகவே மேலே குறிப்பிட்ட உங்கள் பதிவை அப்போதே படித்து விட்டேன். (250 க்கு தோசை, 60க்கு தோசை என இந்த தே◌ாசை சமாச்சாரத்தை விட மாட்டேன்கிறீர்களே பாஸ்...)
ஆகவே, ---- ரெண்டு மூன்று ஆழமான கருத்துகள் இருக்கு அதை எப்படி சொல்வதுன்னு யோசிட்டு வர்றேனே..! ---- காத்திருக்கிறேன் சார்...
@ SVV
Delete'கஸ்டமைஸ்டு பிரிண்ட்' என்பது என்னைபொறுத்தவரையில் பிரம்மாஸ்த்திரம் மாதிரி..! குறிப்பிட்ட வாசகர்கள் மட்டும் படிக்க தாகத்துடன் காத்திருக்கும் போது...அதை புரிந்துகொண்டு...உள்ளமெல்லாம் காமிக்ஸ் உணர்வு நிறைந்த, ஒரு பதிப்பகத்தார் customized imprint முறையில் தருவது பெரிய வரம்..! அந்த அளவுக்கு தீவிரமான சின்ன வட்டத்தினர் மட்டும் ரசிக்கும்படியான சிக்கல் எதுவும் 'கமான்சே' தொடருக்கு நிச்சயம் இல்லை. அடையாளம் தெரியாத பல தொடர்கள், ரசிக்கவே சிரமப்படும்,முடிவேயில்லாதவைகள் தன்னிச்சையாக அவரே முடிவெடுத்து போடுகிறார்..!
உதாரணமாக...முடிவேயில்லாத மேஜிக் விண்ட்,போனோல்லி படைப்பு என்பதற்காகவே டைலான் டாக்[விதி விலக்கு: வராதோ ஓர் விடியலே],அவருக்கு விமானகதை பிடிக்கும் என்பதற்காக விண்ணில் ஒரு வேங்கை, என்றோ வாங்கிபோட்ட பழைய மாடஸ்டி [நிழலோடு நிஜ யுத்தம்], ஓவியத்திற்காக தோர்கால், சுமார் ரக CID ராபின் என இவ்வளவு விளிம்புநிலை கதைகள் வந்துகொண்டிருக்க... 'கமான்சே'விற்கு என்ன குறை..??? எனவே எக்காரணம் கொண்டும் customized imprint வார்த்தையே உபயோகிக்க கூடாது என்பது...ஆழமான என் தனி கருத்து...!
customized imprint முறையை எதிர்பவர்களுக்காக கொண்டுவர போகும் b&w வழிக்கு பின்னால்எவ்வளவு வில்லங்கம் ஒழிந்திருக்கிறது என, விவரிக்க சாதுவான வார்த்தைகள் கிடைக்கததால் அமைதிகாக்கவேண்டியுள்ளது...!
@ Satishkumar
ReplyDeleteசதீஷ், ஆசிரியருக்கு நிதர்சனம் தெரியாது என்பதெல்லாம் சும்மா... அவர் நிதர்சனம் மட்டுமல்ல, யதார்த்தத்தையும் உணர்ந்தே இருக்கிறார். எனக்கு எனது பதின்ம வயதில் காமிக்ஸகள் வழியே அறிமுகமானவர் அல்ல இப்போதைய நமது எடிட்டர் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.
அன்றைக்கும், இன்றைக்குமான வித்தியாசத்திற்குக் காரணம் பல. எதைச் சொல்வதும் நாகரீகத்தில் சேர்த்தியில்லை. மேலும் நமக்கு காமிக்ஸ் விற்பவர் இவர் ஒருவர் மட்டுமே. வெளியீடுகளில் முடிவெடுப்பது அவரது தனிஉரிமை. உரிமை மீறல் அழகுமல்ல. நமக்கும், அவருக்கும் இடையே நிலவி வரும் வாங்குபவர் - விற்பவர் என்ற உறவை தாண்டாமல் இருப்பதே நன்மை - இரு தரப்புக்கும்.
இது மாயாவி சிவாவின் தளம்... இங்கு வெளியிடும் கருத்துக்கள் நட்பு முறையில்தான் - அதுவும் சப்ஜெக்ட் ஒட்டியே - பதிவிடுகிறேன்.
//எனக்கு எனது பதின்ம வயதில் காமிக்ஸகள் வழியே அறிமுகமானவர் அல்ல இப்போதைய நமது எடிட்டர் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.
Deleteஅன்றைக்கும், இன்றைக்குமான வித்தியாசத்திற்குக் காரணம் பல. எதைச் சொல்வதும் நாகரீகத்தில் சேர்த்தியில்லை. //
இது புரியவில்லை SVV sir, உங்களை சங்கடபடுதுவது போல விளக்கம் கேட்க போவதில்லை நண்பரே.
//நமக்கும், அவருக்கும் இடையே நிலவி வரும் வாங்குபவர் - விற்பவர் என்ற உறவை தாண்டாமல் இருப்பதே நன்மை - இரு தரப்புக்கும்.//
புரிகிறது நண்பரே !
சதீஷ் குமார் @ //நிதர்சனத்தை ஆசிரியர் உணர்தால் 2016இல் ஆவது ஓநாய் கணவாய் அனைத்து வாசகர்களுக்கும் ிடைக்கும்.////---
Deleteஆசிரியர் நிதர்சனத்தை உணர்ந்து இருப்பதாலேயே இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும் சர்வைவல் என்பதில் லயன் வெற்றி கண்டுள்ளது. நிச்சயமாக பெருவாரியான நண்பர்களுக்கு என்ன தேவையோ அதை நாடி பிடிப்பதில் ஆசிரியர் எப்போதும் ஒரு படி மேலேயே உள்ளார் . நீங்கள் சொன்ன விதம் காரணமாகவே S.V.V. சார் அப்படி விளக்கம் தந்து உள்ளார் ... ......2012கம்பேக் க்கு பிறகும் கூட ...2015ல் காமிக்ஸ் வருவது நின்று விடும்"-- என கொக்கரித்த நண்பர்கள் எத்தனை யோ பேர் உண்டு தெரியுமா உங்களுக்கு ??....இன்று அவர்கள் வெட்கி தலை குனியும் வண்ணம் ஆசிரியர் வெற்றிகரமாக கொண்டு செல்கிறார் ....சோ உங்களுக்கு அந்த பயம் வேணாம் ...கண்டிப்பாக கமான்சே வரும் ....நான் சொல்வதானால் ஒன்றும் ஆகிவிடாது நண்பரே......
சேலம் விஜயராகவன் sir,
Delete//சோ உங்களுக்கு அந்த பயம் வேணாம் ...கண்டிப்பாக கமான்சே வரும் ....நான் சொல்வதானால் ஒன்றும் ஆகிவிடாது நண்பரே...... //
நீங்கள் வேண்டாம் என்று கூறுவது உங்கள் உரிமை நண்பரே, அவ்வாறு கூறுவதில் தவறில்லை அது உங்கள் கருத்து அதில் என் எதிர்ப்பு என்றும் இல்லை. அனைவரின் கருத்தும் சமமாக பகிரப்படும் இடம் தான் அது.
// நீங்கள் சொன்ன விதம் காரணமாகவே S.V.V. சார் அப்படி விளக்கம் தந்து உள்ளார் //
SVV சார்இன் கருத்தை("SVV: வரிசைக்கிரமமாக இதையும் கலரில் வெளியிட்டு இருக்கலாம் என்பதே") ஆசிரியர் அறியும்படி செய்தால் அவரும் ஓநாய் கணவாய்இக்கு உள்ள demand ஐ புரிந்துகொள்ள முடியும் என்ற சிந்தனையில் "நிதர்சனத்தை ஆசிரியர் உணர்தால்..." என பதிவிட்டேன் உள் அர்த்தம் எதுவும் அதில் இல்லை சேலம் விஜயராகவன் sir.
//2015ல் காமிக்ஸ் வருவது நின்று விடும்"-- என கொக்கரித்த நண்பர்கள் எத்தனை யோ பேர் உண்டு தெரியுமா உங்களுக்கு ??//
நான் இந்த history அறியேன் நண்பரே நான் அந்த அளவிருக்கு நமது காமிக்ஸ் உடன் தொடர்பில் இல்லை. நான் காமிக்ஸ் பக்கம் மீண்டும் வந்தது ஒரு தற்செயலான nostalgia search மூலம்தான் விஜயராகவன் sir.
//ஆசிரியர் வெற்றிகரமாக கொண்டு செல்கிறார்//
நமது காமிக்ஸ்ன் இந்த வெற்றி பயணம் தொடரவே நாமும் முடிந்த கருத்தை பகிர்கின்றோம்/மற்றவர்கள் பகிர கோரிக்கை விடுகின்றோம் நண்பரே.
கருப்பு வெள்ளையில் வில்லங்கமா? என்னதது மாயாவி சார்?
ReplyDeleteMayavi mail கிடைத்தது, சார் சங்கட படும்படி எதுவும் எழுதவில்லை நண்பரே வெளிபடைஆகா கூறுவது பூடகமாய் கூறுவதை காட்டிலும் நல்லது என நான் கருதுகிறேன்.நீங்க காரணம் இல்லாம வருதபடுறீங்க Siva.
ReplyDelete//கருப்பு வெள்ளையில் வில்லங்கமா? என்னதது மாயாவி சார்?//
Deleteஅது என்ன வில்லங்கம் மாயாவி சார் ?
அருமையான பதிவு...
ReplyDeleteதூக்கம் வரவழைக்கும் தற்போதைய டைகர் கதைகளுக்கு இடையே, நான் ஆர்வமுடன் படிக்கும் தொடர்களில் ஒன்று கமென்சே...
அதேபோன்று... பிரின்ஸ் கதைகளில் நான் ரசிப்பது.. அவர்களின் life style ஐ...
நானும் கூட போரடிக்கும் டெக்ஸ் கதைகளுக்கு இடையே, நான் ஆர்வமுடன் படிக்கும் தொடர்களில் ஒன்று கமென்சே... SIV
Delete//அதேபோன்று... பிரின்ஸ் கதைகளில் நான் ரசிப்பது.. அவர்களின் life style ஐ...//
+1
மாயாவி ஜி
ReplyDeleteஅருமை இதற்கு எவ்வளவு உழைப்பு தேவை
மேலும் எவ்வளவு காதலிருந்தால் இவ்வளவு ஆதங்கப்படுவீர்கள்
உங்கள் எடுத்துக்காட்டலில் உண்மையுள்ளது
வாழ்க விஜயன் சார்
அவர் அப்படி கேட்டதால்தானே
இப்படியொரு விஷூவல் ட்ரீட் கிடைத்திருக்கிறது
மிக்க நன்றி மாயாவி ஜி _/\_
.
அந்த காலத்திலேயே கலர் படம் அழகா வரைந்திருக்கீங்க
ReplyDeleteஅருமை அருமை
கலக்குங்க மாயாவி ஜி :-)
.
அற்புதமான உழைப்பு மாயாவி ஜி,கமான்சே,பிரின்ஸ் பற்றிய அரிய தகவல்களை உங்கள் மூலமாக காண கிடைத்தது மகிழ்ச்சி,இந்த இரண்டு தொடர்களும் மனதை கொள்ளை கொள்பவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை,ஓநாய் கணவாய் மூன்றாவது வெளியீடு வரிசையில் உள்ளது,ஆனால் நம் ஆசிரியர் அதை முன்பே வெளியிட்டதாக நினைவு,அதன் காரணம் என்ன,மொத்த வெளியீடுகள் 15ஆக இருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தனி கதை நிகழ்வுகளாகத்தானே இருக்கும்.
ReplyDeleteபடிப்பது ஒரு கலை,அதைபோல் அவற்றை நினைவுகளில் பொத்தி வைத்து அதன் மூலங்களை திரட்டி எடுத்து அரிய தகவல்களாக தொகுத்து அளிப்பதுவும் ஒரு கலை,இக்கலை நன்றாகவே உங்களுக்கு கை கொடுக்கிறது.
உங்களுக்கு எனது வாழ்த்துக்களும்,நன்றிகளும் மாயாவி ஜி.
அற்புதமான உழைப்பு மாயாவி ஜி,கமான்சே,பிரின்ஸ் பற்றிய அரிய தகவல்களை உங்கள் மூலமாக காண கிடைத்தது மகிழ்ச்சி,இந்த இரண்டு தொடர்களும் மனதை கொள்ளை கொள்பவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை,ஓநாய் கணவாய் மூன்றாவது வெளியீடு வரிசையில் உள்ளது,ஆனால் நம் ஆசிரியர் அதை முன்பே வெளியிட்டதாக நினைவு,அதன் காரணம் என்ன,மொத்த வெளியீடுகள் 15ஆக இருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தனி கதை நிகழ்வுகளாகத்தானே இருக்கும்.
ReplyDeleteபடிப்பது ஒரு கலை,அதைபோல் அவற்றை நினைவுகளில் பொத்தி வைத்து அதன் மூலங்களை திரட்டி எடுத்து அரிய தகவல்களாக தொகுத்து அளிப்பதுவும் ஒரு கலை,இக்கலை நன்றாகவே உங்களுக்கு கை கொடுக்கிறது.
உங்களுக்கு எனது வாழ்த்துக்களும்,நன்றிகளும் மாயாவி ஜி.
அற்புதமான உழைப்பு மாயாவி ஜி,கமான்சே,பிரின்ஸ் பற்றிய அரிய தகவல்களை உங்கள் மூலமாக காண கிடைத்தது மகிழ்ச்சி,இந்த இரண்டு தொடர்களும் மனதை கொள்ளை கொள்பவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை,ஓநாய் கணவாய் மூன்றாவது வெளியீடு வரிசையில் உள்ளது,ஆனால் நம் ஆசிரியர் அதை முன்பே வெளியிட்டதாக நினைவு,அதன் காரணம் என்ன,மொத்த வெளியீடுகள் 15ஆக இருப்பினும் ஒவ்வொன்றும் தனித்தனி கதை நிகழ்வுகளாகத்தானே இருக்கும்.
ReplyDeleteபடிப்பது ஒரு கலை,அதைபோல் அவற்றை நினைவுகளில் பொத்தி வைத்து அதன் மூலங்களை திரட்டி எடுத்து அரிய தகவல்களாக தொகுத்து அளிப்பதுவும் ஒரு கலை,இக்கலை நன்றாகவே உங்களுக்கு கை கொடுக்கிறது.
உங்களுக்கு எனது வாழ்த்துக்களும்,நன்றிகளும் மாயாவி ஜி.