Tuesday, 10 November 2015

TEX...TEX...டெக்ஸ் வில்லர்...! - தடம் ஒன்று..!

நண்பர்கள் அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழத்துகள்..!

தீபாவளி என்றாலே இனிப்பு,புத்தாடை, பட்டாசு, குண்டாய் ஒரு டெக்ஸ் புக்..! என்பதே தமிழ் காமிக்ஸ் காதலர்களின் இலக்கணமாகிவிட்டாலும், இந்த வருடம் அது வலுவாகி விஸ்வரூபமாகிவிட்டது..! காரணம்...
* the லயன் 250 யில் 680 பக்க கலர் டெக்ஸ் கலக்கல் என துவங்கி...
* வரும் வருடம் பெல்ஜியம் சைஸில் 'TEX' வண்ணபதிப்பு ஒன்று...
* மறுபதிப்பில் குண்டு டெக்ஸ் கதை வண்ணத்தில்  ஒன்று என அறிவிப்புக்களாக பயணித்து...
* இந்த தீபாவளிக்கு 560 பக்கங்களில் 'டெக்ஸ்' புஷ்டியாய் வருகையும்...
* டெக்ஸ் வில்லரின் முக்கியத்துவம் டாப் கியரில் பயணித்து...
* கடைசியாக 'TEX தனி சந்தா..!' என்னும் விஸ்வருப நெடுங்சாலையை  தொட்டிருக்கிறது..!இந்த 'TEX' மோகம் இங்கேயே இப்படி என்றால்..? பூர்விக இத்தாலியில் எப்படி இருக்கும்...? அறுபத்தி ஐந்து கதைகளை படித்த நம் பயணமே இப்படி என்றால், ஆறுனுத்தி முப்பது கதைகள் கடந்து வந்த டெக்ஸ் வில்லரின் இத்தாலி பயணம் எப்படியிருக்கும்..? நம்பவே முடியாத, உங்களை 'ஜில்' ஆக்கும் தகவல்களை, கால எந்திரத்தில் பின்னோக்கி பயணித்து பார்ப்போமா..!!!

முப்பதாண்டுகள் கடந்தும், நம்மிடையே 'டெக்ஸ்' என்னும்  தனிஒருவர் நம் மனதில், கொஞ்சம்கூட சலிப்பு தட்டாமல், அதே உற்சாகத்துடன், கம்பீரமாக வளம் வருகிறாரென்றால்... அவரை ரசிக்க தனி தடம் கேட்டு போராடி வென்று,  இன்று நிற்கிறோமென்றால்...நம்மை அறியாமலேயே  நம் மனதில் மையம் கொண்டுள்ள, அந்த டெக்ஸ் என்னும் சிங்கத்தின் வழித்தடத்தை கொஞ்சமேனும் தெரிந்து கொள்ளவேண்டாமா..!

யாராலும் அழைத்து செல்லவே முடியாத [ இந்த வரி கொஞ்சம் ஓவர்..] ஒரு ஆச்சரியமுட்டும் ஆரம்ப உலகிற்கு உங்களை அழைத்து செல்கிறேன்..வாருங்கள்..! அந்த சிங்கத்தின் உருவாக்கங்கள் பார்த்து சொக்கபோகிறிர்கள்..! ஒரு முன்அறிவிப்பு..உங்கள் டெக்ஸ் புத்தகங்களை பத்திரபடுத்திவைத்துவிட்டு பயணத்திற்கு தயாராகுங்கள்..! காரணம் இந்த பதிவின் முடிவில் உங்கள் 'டெக்ஸ்' பொக்கிசங்கள் களவு போகலாம்..உஷார்..! ஏனெனில் 'டெக்ஸ் வில்லரின் உண்மையான விஸ்வரூபத்தை தெரிந்து கொள்ளும் நண்பர்கள், அவரை வெறியாய் வேட்டையாட கிளம்புவிடுவார்கள்..! அதில் சிக்காமல் தப்பிப்பது உங்கள் சாமார்த்தியம்..கிளம்புவோமா..!

1948-ம் வருடம் துவங்கப்பட்ட போனோல்லி  'டெக்ஸ் வில்லரை எப்படி அறிமுகப்படுத்தினார்கள்..?

ஆரம்பத்தில் டெக்ஸ் காமிக்ஸ் இத்தாலியில்,எந்த வடிவத்தில் வந்தது...? எந்த வரிசையில் வந்தது..?

புத்தகவடிவங்கள் எந்த வருடங்கள்..எப்படி உருமாறின..? பழைய இதழ்களின் இன்றைய நிலை என்ன..?

டெக்ஸ் காமிக்ஸ் சேகரிப்புகளை இத்தாலி ரசிகர்கள் எப்படி செய்கிறார்கள்..?

போனோல்லி வெளியிட்ட வரிசைபடி, தமிழில் லயன் காமிக்ஸில் எந்த பெயரில் எப்போது வந்தது..?

66 வருட டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் பயணத்தில் நாம் எங்கு நிற்கிறோம்..? நம் ரசனை எங்கு நிற்கிறது..?

எந்ததெந்த தலைப்பின்கீழ் டெக்ஸ் கதைகள் தரம் பிரிக்கப்படுள்ளன..?

இன்னும்..இன்னும் பல கேள்விகளுக்கு ஆச்சரியமுட்டும் பதில்கள் அணிவகுப்பை தெரிந்துகொள்ளும்போது..நம் மனதில் 'டெக்ஸ் வில்லர்' ஏன் அசைக்கமுடியாத சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்ற உண்மை உங்களுக்கு புரியவரும்..!  இப்படி ஒரு நாயகன் அறியும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து உங்கள் மனதில், பெருமிதம் புயலாய் கிளம்பும்..!

இனி நான் இங்கு கூறும் தகவல்களை திரட்ட மிக கடுமையாக உழைத்திருக்கிறேன், கவனத்துடன் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து பதிவிட்டுள்ளேன். இந்த தகவல்களை இத்தாலிக்கே சென்று ரூம் போட்டு தேடினாலும் கிடைக்குமா என்பது சந்தேகமே..! இதை சாத்தியமாக்கியது ஒன்றேஒன்று தான்..! அது நம் அனைவரிடமும் உள்ள அதே ஆர்வம்...எனக்குள்ளும் இருப்பதை தாண்டி வேறொன்றும் இல்லை..! தவறுகள் இருப்பின் சுட்டிகாட்டினால் தகவல்களை மேலும் மேம்படுத்துகிறேன்..!

ஜியோவானி லுயிஜி பனொலி என்ற இத்தாலி எழுத்தாளரால் 1948 ம் வருடம் நம் 'தல' டெக்ஸ் வில்லரை காமிக்ஸ் உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார்..! அவர் அப்படி டெக்ஸ் வில்லருக்கென்று தனி காமிக்ஸ் துவங்கும்போது, அவருக்கு வயது சரியாக முப்பது..! நம் கௌபாய் சிங்கத்தை உருவாக்கிய பிரம்மா இதோ...செப்டம்பர்-30, 1948 ம் வருடம் டெக்ஸ் வில்லர் கதைகள், எப்படிபட்ட காமிக்ஸ் புத்தகமாக வெளிவந்தது என தெரிந்ததும் உங்கள் புருவங்கள் ஆச்சரியத்தில் நிச்சயம் உயரும்..! பேங்க் செக் புக் சைஸில் தான் முதல் முதலில் 32 பக்கத்துடன்...மங்கையர் மலர், ஆனந்தவிகடன் பத்திரிக்கையோட ஒரு சமையல் குறிப்பு, வீட்டு குறிப்பு என சின்ன இலவசஇணைப்பு வருமே, அதுபோலவேதான் டெக்ஸ் காமிக்ஸ் ஆரம்பத்தில் வந்தது என்றால் நம்பமுடியவில்லைதானே..! ஆனால் அதுதான் உண்மை..!

தகவலுடன் படங்கள் இதோ...66 வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட டெக்ஸ்வில்லர் காமிக்ஸ், குட்டி செக்புக் சைஸ்  என்பது ஆச்சரியமாக இருக்கில்லையா..!! சரி அட்டைபடம் மட்டும் பார்த்தால் போதுமா..? அந்த குட்டி தொடர்காமிக்ஸ் புக்கின் முதல் பக்கம், முதல் டெக்ஸ் படம் பார்க்க யாருக்கு தான் ஆர்வமிருக்காது..? இதோ..அந்த வரலாற்று சிறப்புமிக்க துவக்கம்..! முதலில் b&w ல் வந்தாலும் பின்னர் வண்ணத்தில் வந்ததால், இப்போது கலர் மோகம் கன்னாபின்னாவென்று நம் காமிக்ஸ் காதலர்களிடையே வளர்த்திருப்பதால்...வண்ணத்தில் அந்த முதல் பக்கம் இதோ...


வரலாற்று சிறப்புமிக்க வாரஇதழாக டெக்ஸ்தொடர் காமிக்ஸ் வெளிவரத்துவங்கி, 100 இதழ்கள் கடந்தவுடன்...தொடராக இல்லாமல், முழுகதை  கொண்ட 260 பக்கங்களுடன் மாத இதழாக, ஒரு தனி டிராக் போட்டப்பட்டது..!

அப்படி துவங்கப்பட்ட விவரங்கள் இதோ...


இந்த டெயிலி ஸ்ட்ரிப் 'ஸ்டைல்' காமிக்ஸ் புத்தகத்தின் சில படங்கள் இதோ...


இந்த குட்டி குண்டு புக் அட்டையில் நீங்கள் மஞ்சள் சட்டை மாவீரனை தானே தேடுகிறீர்கள்..? அதென்ன சிகப்புசட்டையில் ஒரு கௌபாய்..? இவர் வேறுயாரேனுமா..? என்ற சந்தேகம் ஒரு கணம் எனக்கும் வந்தது..! ஆனால் ஆரம்பத்தில் டெக்ஸ் வில்லர் சிகப்புசட்டையில், பச்சை கை க்ளவுஸ், கழுத்தில் கறுப்பு கர்சீப்பை கட்டிக்கொண்டுதான் வந்தார்..!
முதல் 12 இதழ்கள் வரையில் சிகப்புசட்டையிலும், 13 இதழில் முதல் முறையாக மஞ்சள் சட்டையில் மாவீரன் வளம் வந்தார்..! பின் சிகப்பு,மஞ்சள் என மாறி மாறி கிட்டதட்ட 1948 to 1971 வரை 23 வருடங்கள் அட்டைபடங்களில் இரண்டு கலர் சட்டையிலும் கலந்துகட்டினார்..!

டெக்ஸ் வில்லர் முதல் முதலில் மஞ்சள் சட்டையில் வந்த புத்தகமும், கடைசியாக சிகப்புசட்டையில் வந்த புத்தகமும் இதோ...சரி விடாம வெளிநாட்டு விஷயமே பேசிட்டு போனா கொஞ்சம் போரடிக்கும்..நம் நாட்டு விஷயத்துக்கு வர்றேன்..! டெக்ஸ் தமிழ பேசின முதல் கதை எதுங்கிற அலசலை  ஈஸியா செய்துவிடலாம். டெக்ஸ்வில்லரின் இத்தாலி வரிசைபடி எந்த கதை தமிழில் வந்ததுன்னு வரிசைபடுத்துவது ரொம்பவே கஷ்டமானது மட்டுமல்ல, ரொம்பவே பலன்களை தரக்கூடியது என்பதை மாத்தியோசியில் பளிச்சிட்டது..! அது என்னன்னா... 1970 களின் வந்த இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட், ஸ்பைடர், ஆர்ச்சி கதைகளை இன்று எடுத்து படித்தால்...பலருக்கும் சிரிப்பும்,கொட்டாவியும் வரும் என்பதை சொல்லவேண்டியதேயில்லை..!

* இந்த பட்டியலில் அறுபது ஆண்டுகள் கடந்தும், டெக்ஸ் வில்லர் ஏன் சேரவில்லை..?

* இந்த கொட்டாவி பட்டியலில் 'டெக்ஸ் வில்லரும் சேருவாரா..?

* இல்லை சேருவதில் கொஞ்சம் காலதாமதம் ஆகுமா..?

* இல்லை காலத்தை கடந்து ரசிக்கும் இடத்தை பிடிக்க போகிறாரா...?

* அல்லது குறிப்பிட்ட காலகட்டத்தில் வந்தவை மட்டும் ரசிக்கும்படி இருக்குமா..?

உண்மையில் டெக்ஸ் வில்லர் என்பவர் யார்..? அவர் காமிக்ஸ் ரசிகர்கள் மனதில் எப்படி இந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றியுள்ளார்..??? இந்த டெக்ஸ் மோகம் நம்மை மயக்கும் மாயம்தான் என்ன..??? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு, நாமே விடையை தேடிக்கொள்வதைவிட வேறென்ன சிறப்பு இருக்கமுடியும்..! அந்த விடையை தேட நான் கொஞ்சம் மாத்தியோசித்தில்...

இத்தாலியில், ஆண்டு வாரியாக வந்த  டெக்ஸ் கதை வரிசைகள்படி...நமது லயன் காமிக்ஸில் எந்த கதை,எப்போது,எந்த வெளியீடாக வந்தது என இத்தாலி வரிசைபடி அலசுவதன் மூலமா...
டெக்ஸ் வில்லர் காலத்தை கடந்து நம்மால் எவ்வளவு காலம் ரசிக்கமுடியும்..? டெக்ஸ் பொக்கிஷமாக,ஒரு காலத்தில் போற்றப்பட்ட நாயகனாக, நினைவுகளாக மட்டும் மாறிவிடாமல்... எவ்வளவு காலங்கள் வரையில், படித்து சுவைகுறையாமல், ரசிக்கமுடியும் என்ற நுட்பமான அளவுகோலை தெரிந்து கொள்ளமுடியும்... என எனக்குள் ஒரு சிந்தனை மின்னல் வெட்டியதால்...

இத்தாலியர்கள் வரிசைபடி அலசலை துவக்குகிறேன்..!

இத்தாலியில் நவம்பர் 16,1957ம் வருடம் 32 பக்க, தொடர் வார இதழில் வந்த கதைதான், லயன் காமிக்ஸில் வந்த டெக்ஸ் வில்லரின் கதைகளிலேயே மிக பழைய கதை..!

அந்த ஆரம்பகால செக்புக் காமிக்ஸ் முகப்புகள் சில இதோ...


லயன் காமிக்ஸில் வந்த டெக்ஸ்கதைகளில், மிக பழைய கதை என நான் குறிப்பிடும், 1957-ம் வருட கதை எது என யூகிக்கமுடிகிறதா..! yes...அந்த கதையின் பெயர் பாலைவன பரலோகம்..! 58 வருடங்களுக்கு முன் இத்தாலியில்,மொத்தம் மூன்று மாதங்கள்,12 வார தொடராக செக்புக் சைஸில் வந்தன. அந்த கதை லயன் TOP 10 ஸ்பெஷலில், 1995ம் வருடம்  வெளிவந்தது. அன்றை  உங்கள் நினைவுகள் துள்ளி எழுந்து கிளம்ப,

கோடையில் வந்த லயன் TOP 10 அட்டைபடம் இதோ...


பின்னால்...1958 முதல், முறைபடுத்தபட்ட இத்தாலி TEX புத்தகங்கள் வரிசைபடி, A3சைஸில் 112 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது..! அப்படி வெளிவந்த வரிசையில், நான்குறிப்பிடும் 'பாலைவன பரலோகம்' கதை இரண்டு புத்தகங்களாக வந்தது. இத்தாலியில் டிசம்பர்,1966-ம் வருடம் 34 வது இதழில் முதல் பகுதி துவங்கியது..!

அந்த புத்தகம்,பக்கங்கள் இதோ...


35-வது வெளியீடாக ஜனவரி,1967-ம் வருடம் வந்த புத்தகத்தில் மீதி பாதிகதை இரண்டாம் பாகமாக வந்தது. அந்த புத்தகம் உங்கள் பார்வைக்கு இதோ...

428 பக்க நம்ம லயன் top 10 புக் ஒரு கிளிக் இதோ...


சமீபத்தில் அதே கதை கலரில், ஹாட்போர்டு அட்டையுடன் வெளியிடப்பட்டது, அந்த புத்தகத்தின் முகப்பு இதோ... 


இந்த கலர்புத்தகத்தின் முகப்பு படங்கள் வரை இங்கே போட்டுவிட்டு, ஒரு வண்ண பக்கத்தை கூட போடவில்லை என்றால் எப்படி..? 

நமது லயன் காமிக்ஸின் முதல் பக்கமும், இத்தாலி வண்ணபக்கமும் இதோ...

 12 வார தொடராக வந்த இந்த கதையின் சுருக்கம் இதோ...
இது 12 வார தொடரில் முதல் பகுதி கதை மட்டுமே...! அடுத்து வரும் பகுதிகள் கொஞ்சம் கூட தொய்வேயில்லாமல்...இன்று படித்தாலும் பரபரப்புடன் பக்கங்கள் நகர்கின்றன..!1957ல் எழுதபட்ட இந்தகதை... அடுத்தடுத்து வரும் சம்பவங்களை, நபர்களை கோர்வையாக இணைக்கும் கதாசிரியர் நுட்பமான சாமர்த்தியமும், ஓவியமும் போட்டி போட்டுக்கொண்டு இரசிக்க வைக்கின்றன. இன்றும்கூட படித்து பார்த்தேன்...அவ்வளவு அருமையாக இருக்கிறது, உங்களிடம் இருந்தால் படித்துபாருங்கள் நண்பர்களே...டெக்ஸ் வில்லர் காலத்தை வென்று படித்து ரசிப்பதில் தேறுவாரா..??? என்ற விடை எளிதாக கிடைக்கும்..! 


நம் நாட்டில் வந்த முத்துகாமிக்ஸ், லயன் காமிக்ஸ் பழைய இதழ்களின் நிலை, அதை காமிக்ஸ் ஆர்வலர்கள் தேடி ஆடும் வேட்டை நமக்குதெரியும். இத்தாலியில் காமிக்ஸ் ரசிகர்கள் பழைய டெக்ஸ் இதழ்களை என்னதான் செய்கிறார்கள்...??? அங்கும் வேட்டைகள் உண்டா...? மறுபதிப்புகள் உண்டா..? என்ற தகவல்களை கொஞ்சம் பத்தவைக்கிறேனே..!

இன்று நமது சிவகாசி குடோனில் அரை கோடி ரூபாய் மதிப்புள்ள காமிக்ஸ் புத்தகங்கள் பண்டல் பண்டலாக தடத்தை நிரப்பிக்கொண்டுள்ளது எல்லோருக்கும் தெரிந்த தகவலே, அந்த குடோன் மதிப்புக்கு ஈடாக எத்தனை பழைய டெக்ஸ் வில்லர் இத்தாலி புத்தகங்கள் கொடுத்தால் ஈடாகும் என ஒரு கணக்கு சொல்கிறேன்...மீதியை நீங்கள் கணக்கு போட்டுக்கொளுங்கள்..!

1958 ம் வருடம் ரெகுலர் சைசில் வந்த முதல் 30 புத்தகங்களை இத்தாலியர்களுக்கு விற்றால் போதும், மொத்த சிவகாசி காமிக்ஸ் குடோனை வாங்கிவிடலாம். அல்லது செக்புக் சைஸ் 260 பக்கங்களில் வந்த டெக்ஸ்கதைகளின், முதல் பத்து புத்தகங்கள் விற்றால் போதும், மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து குடோனை காலிசெய்து விடலாம். அதுகூட வேண்டாம்...32 பக்கங்களில் வந்த முதல் செக்புக் சைஸ் காமிக்ஸ் புத்தகங்களை...ஹாஹா..வேண்டாம் நிறுத்திவிடுகிறேன், தலைசுற்றும்..அவ்வளவு விலை கொடுத்து வாங்க இத்தாலி டெக்ஸ் இரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்..! இதற்கென்று காமிக்ஸ் ஏலம் நடக்கிறது, அதிக ஆர்வமுள்ளவர்கள் நெட்டில் தேடிபார்த்துக்கொள்ளுங்கள்...அதை பகிர்ந்து இந்த தீபாவளி திருநாளில் உங்களை பதறவைக்காமல்...புத்தகங்களை பத்திரமாக பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டி, இந்த பதிவை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்..! மீண்டும் அனைத்து நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழத்துகள்..!

நட்புடன்,
மாயாவி.சிவா
சில வாழ்த்துக்கள்...


விளம்பரம்
அடுத்தடுத்து வரவிருக்கும் பதிவுகள்...அடுத்து...
வேறென்னா பதிவு பற்றிய உங்கள் கருத்துக்கள்தான்..!

90 comments:

 1. Replies
  1. @ செந்தில் குமார்

   உங்கள் முதல் கமெண்டிற்கு நன்றிகள் ஸார்..! உங்களுக்காக ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 2. மிக்க நன்றி. தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. @ PV ராஜசேகர்

   உங்கள் குடும்பத்தாருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்..! உங்களுக்காக ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 3. உங்கள் தேடல்களும் பதிவுகளும் இன்னும் தொடரட்டுமிங்கே....தீபாவளி நல்வாழ்த்துக்களும் கூட..!

  ReplyDelete
  Replies
  1. @ கவிந்த் ஜீவா

   படிப்பும், தேர்வும் உங்களின் பொழுதுபோக்கு விஷயங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையிலும்...பதிவை பார்வையிட்டு பதில் தந்தமைக்கு ஒரு...இங்கே'கிளிக்'
   [உங்கள் தாயாருடன் எடுத்த செல்பி B&W போட்டோ ரொம்பவே அழகு]

   Delete
 4. அருமையான பதிவு இதுவரை கண்டிராத புகைப்படங்கள்..

  ReplyDelete
  Replies
  1. @ திருப்பூர் குமார்

   காமிக்ஸ் சேகரிப்புக்கு ஆர்வமிருந்தால் போதும்...எதுவும் சாத்தியம் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்..! 20 வருடங்களாக தேடும் காமிக்ஸ்சேகரிப்பாளர்களுக்கும் கிடைக்காத பொக்கிசங்களை நீங்கள் கைபற்றி, சாதனை விருதை தட்டிசென்றதற்க்காக ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 5. படித்த முடித்த பிறகு வெகு நேரம் வரை ஒரே பிரமிப்பு தான். இவ்வளவு தகவல்களை சிரமப்பட்டு சேகரித்து பதிவிட்ட மாயாவிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. @ ஸ்ரீதர் சொக்கப்பா

   கடவுளையும், காமிக்ஸ் மேல் உள்ள காதலையும் நண்பர்களையும் சமமாய் பார்க்கும் உங்கள் தெளிந்த சிந்தனைக்காக ஒரு... இங்கே'கிளிக்'

   Delete
 6. படித்த முடித்த பிறகு வெகு நேரம் வரை ஒரே பிரமிப்பு தான். இவ்வளவு தகவல்களை சிரமப்பட்டு சேகரித்து பதிவிட்ட மாயாவிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. படித்தது விட்டு வருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. படித்து விட்டு வாருங்கள் இளமாறன்...இங்கே'கிளிக்'

   Delete
 8. அருமை அபார உழைப்பு. தகவல் பொக்கிஷங்கள்.
  இந்த வருட டெக்ஸ் அவார்டு உங்களுக்கு தான்.
  தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. @ திரு சுரேஷ் சந்த்

   உங்கள் முதல் வருகைக்கு நன்றிகள்..! இந்த தீபாவளியை பாட்டாசு வெடித்து கொண்டாட வழியில்லாமல் கடும் மழையால்ல வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கவேண்டிய சூழல்..! கரண்ட கூட கண்சிமிட்டுகிறது..! கொண்டாட்டத்திற்கு துணையாக இருக்கும் ஒரே துணை இன்டர்நெட் மாத்திரமே..! பதிவுக்கு கருத்துகள் தெரிவிக்கும் நண்பர்களுக்கு நன்றி என எழுத்தால் சொல்வதை தாண்டி, அவர்களை கட்டம் கட்டி 'கிளிக்' போட்டால் என்ன...?!?!?..பளிச் என ஒரு யோசனை தோன்றியது...!!!

   இதோ நான் மதிக்கும் உங்களிடமிருந்து துவங்கிறேன் ஸார்...உங்கள் முதல் வருகையும், பாராட்டும்...உங்களுக்கு முதல்மரியாதை செய்ய தோன்றியது...இங்கே'கிளிக்'

   Delete
 9. அருமையான பதிவு சார்...!

  ReplyDelete
  Replies
  1. @ அகமத் பாஷா TK

   காமிக்ஸ் புத்தகங்களை, சொத்து பாத்திரங்களை விட உயர்வாக பாதுக்காத்தும், நுணுக்கவாக படித்துவரும் காமிக்ஸ் காதலரே உங்களுக்காக ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 10. அருமையான பதிவு சார்...!

  ReplyDelete
 11. என்னுடைய மிக நீஈஈஈஈண்ட நாள் கோரிக்கையை ஏற்று உங்கள் ஸ்டைலில் தல" டெக்ஸ் பற்றிய சரவெடி பதிவு , தீபாவளி அன்று பதிவேற்றம் செய்த உங்களுக்கு ஆயிரம் நன்றுகளும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களும் மாயாவி சார்.....படித்து விட்டு வருகிறேன் .....

  ReplyDelete
  Replies
  1. @ சேலம் டெக்ஸ்

   படித்துவிட்டு வாருங்கள் சேலம்டெக்ஸ்வில்லர் ரசிகர் மன்ற தலைவரே...இங்கே'கிளிக்'

   Delete
 12. சிவாஜி...!!!!!! எவ்வளவு உழைப்பு.... தகவல்கள் திரட்டவே பெரும் பிரயத்தனம் தேவைப்பட்டு இருக்கும்.......அற்புதம்..... இந்த அளவு பிரமிக்க வைக்க பெரும் முயற்சி தேவை என்பதை நன்கு உணர முடிகிறது...

  வாழ்த்துக்கள்..... தொடருங்கள்....

  ReplyDelete
  Replies
  1. @ செல்வம் அபிராமி

   ஒரு மனித நலனில் காதல் கொண்டு, மருத்துவம் பயில [உங்களை போன்றவர்கள்] காட்டும் உழைப்புக்கும், தியாகத்திற்கும் முன் நான் சின்ன துரும்பு தானே..! அவ்வளவு பணிநெருக்கத்திலும் பதிலிட்டமைக்காக ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 13. சிறந்த ஆய்வு. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. @ மணிகண்டன் N

   உங்களை ஒரு இளம் அரசியல் சேவகராக உணர்கிறேன் நண்பரே...! உங்களுக்காக ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 14. ஒரு மிக சிறப்பான பதிவுக்கு நன்றிகள் பல

  இனிய தீபதிருநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. @ ஹரி சாய்

   உங்களுக்கும் எனது வாழ்த்துகள்..நண்பரே..! உங்கள் முகம்தான் தெரியவில்லை...முடித்தால் விவரங்கள் ப்ளிஸ்..!

   Delete
 15. எப்படி உங்களால் மட்டும் முடிகிறது மாயாவி சிவா சார் கண்டிப்பாக உங்கள் மிரட்டல் உழைப்புக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. @ நரேஷ் குமார்

   அதே கேள்விதான் உங்களிடமும் கேட்கணும் நரேஷ்.."உங்களால் மட்டும் எப்படி சில அறிய காமிக்ஸுகளை நாலு செட்,ஐந்து செட் என சேகரிக்க முடிகிறது...?!?!" உங்கள் தேடலுக்காக ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 16. எப்படி உங்களால் மட்டும் முடிகிறது மாயாவி சிவா சார் கண்டிப்பாக உங்கள் மிரட்டல் உழைப்புக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. தலை வணங்குகிறேன் தல!
  _/|\_/|\_/|\_

  ReplyDelete
  Replies
  1. @ கிட் ஆர்ட்டின் கண்ணன்

   ஸ்டைல் மன்னா...ஹாஹா...இங்கே'கிளிக்'

   Delete
 18. சூப்பர் மாயாவிஜீ.!அட்டகாசமான தேடல்.!அப்படியே டெக்ஸ் ஒரு வில் வித்தை வீரனுக்கு அசிஸ்டெண்டாக அறிமுகம் ஆனதையும்,இப்போதைய கார்சன் போல,அவரது பதின்ம வயது குடும்பத்தையும்,சாகஸத்தையும் போட்டிருந்தால் பதிவு முழுமை அடைந்திருக்கும்.!அடுத்த பதிவில் இதை போடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.!

  ReplyDelete
  Replies
  1. @ கார்த்திக்

   எனக்கு தெரிந்தவரையில், டெக்ஸ் ஒரு வில் வித்தை வீரனுக்கு அசிஸ்டெண்டாக அறிமுகம் ஆனதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை...! டெக்ஸ் வில்லர் ஒரு கௌபாய் வீரர்...! துப்பாக்கி சுடுவதில் வல்லவனாகவே அவர் ஸாகசம் துவங்குகிறது..மேலும் அவருக்கான காலகட்டம் 1875 க்கு முன்பும் பின்புமானவை என்பதால்..அந்த காலகட்டம் துப்பாக்கிகள் பேசும் மொழியே உச்சத்தில் இருந்தன.வில்லுக்கு வேலையிருந்ததாக தெரியவையே..!
   உங்கள் வருகைக்காக...இங்கே'கிளிக்'

   Delete
 19. அருமை.!சூப்பர்.!வில்வித்தை வீரனுக்கு அசிஸ்டெண்டாக டெக்ஸ் அறிமுகமானதையும்,பதின்மவயது குடும்பத்தையும்,சாகஸத்தையும் அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறேன்.!

  ReplyDelete
 20. .................
  ................


  ...................  .....................


  ......................

  என்னடா எந்த எழுத்தும் இல்லையே என பார்க்கிறீர்களா மாயாஜீ ...சாரி ....


  உங்கள் உழைப்பிற்கு எந்த வார்த்தையை போட்டாலும் அது ஈடாகாது ...எனவே எனது மெளன பாராட்டலை மட்டுமே தெரிவித்து கொள்கிறேன் ...

  ReplyDelete
  Replies
  1. @ பரணிதரன் K

   ....................


   .............

   ..............

   ............
   அதேதான்...ஹாஹா....இங்கே'கிளிக்'

   Delete
 21. மிக அருமையான, ஆழமான பதிவு.. டெக்ஸ் கதைகளின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டுள்ளது... நன்றி மாயாவிஜி...

  ReplyDelete
  Replies
  1. @ கரூர் சரவணன்

   உங்கள் ஆர்வத்தை கொஞ்சம் நகர்த்தியதில் மகிழ்ச்சி...இங்கே'கிளிக்'

   Delete
 22. மிக அருமையான, ஆழமான பதிவு.. டெக்ஸ் கதைகளின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டுள்ளது... நன்றி மாயாவிஜி...

  ReplyDelete
 23. பிரமிக்க வைக்கும் தகவல்கள்! பாராட்டுகள் மாயாவி!😀

  ReplyDelete
  Replies
  1. @ செந்தில் குமார்

   நன்றிகள் ..! உங்களுக்காக ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 24. பிரமிக்க வைக்கும் தகவல்கள்! பாராட்டுகள் மாயாவி!😀

  ReplyDelete
 25. From Murugan,
  Fantastic post Mayavisiva keep it up.hats off to u.stunning collection of statistical data.

  ReplyDelete
  Replies
  1. @ முருகன்

   வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள்...உங்கள் முகம் தெரியவில்லையே என்பது தான் வருத்தமாக உள்ளது.முடித்தால் எனக்கு உங்கள் புகைபடத்தை அனுப்பப முடியுமா..?
   எனது மெயில் id : mayavisivakumar@gmail.com

   Delete
 26. வாவ் சூப்பர்

  ஆச்சர்யமூட்டும்
  அதிசய தகவல்கள்
  அருமை அருமை மாயாவி ஜி

  உண்மையாகவே மாத்தியோசிச்சிருக்கீங்க
  ஆனா பாருங்க கொஞ்சமாத்தான்
  சொல்லியிருக்கீங்க

  இன்னும் நிறைய நிறைய உங்களிடமிருந்து
  எதிர்பார்க்கிறோம் மாயாவி ஜி

  தொடர்ந்து கலக்குங்கள்

  தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
  இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
  நன்றி _/|\_

  ReplyDelete
  Replies
  1. @ சிபி சக்கரவர்த்தி

   உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் ஒரு....இங்கே'கிளிக்'

   Delete
 27. வியக்க வைத்திடும் தகவல்கள்!! செக் புக் சைஸ், சிவப்புச் சொக்காய், பழைய புத்தகங்களுக்கான இத்தாலியர்களின் மோகம் போன்ற பல தகவல்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன!! மெனக்கெட்டு தேடிப் பிடித்து கண்ணுக்கும் கருத்துக்கும் தீபாவளி விருந்தளித்த உங்களை என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை மாயாவி அவர்களே! ( நம் தலீவரைப் போல நானும் வாயடைத்துப் போயிருக்கிறேன்)

  'தல'யின் பதிவுன்னா சாதாரணமாவே அதிரும். மாயாவி சிவாவின் ட்ரேட் மார்க்குடன் ஒரு 'தல' பதிவுன்னா கேட்கணுமா! அட்டகாசம்!!!

  சீக்கிரமே அடுத்த பதிவைப் போடுங்க மாயாவி அவர்களே! தல'யைப் பற்றி இன்னும் நிறையத் தெரிஞ்சுக்கணும்!

  ReplyDelete
  Replies
  1. @ இத்தாலி விஜய்

   நீங்கள் வாயடைத்து போய் நிற்கும் ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 28. 1957 ல் வெளிவந்த பாலைவனப் பரலோகம்(
  பலிகேட்ட புலிகள் என முதலில் விளம்பரம் வந்த்தாக ஞாபகம்) கதையே பல முறை படிக்க தூண்டும் அக்மார்க் டெக்ஸ் சாகசம்....
  அரிய தகவல்களை அசால்டாக திரட்டி தந்துள்ளீர்கள் மாயாவி சார்....துவக்கமே 1000வாலா வெடிபோல் சும்மா கொளுத்தி விட்டீர்கள்.... இன்னும் என்னென்ன வெடிகள் வெடிக்க காத்துள்ளதோ??? வாரம் ஒன்றாக கொளுத்தி போடுங்கள்....
  1999 ல் லயன் 150ஆக வெளிவந்த மரண மண்டலத்தில் ஹூவால்பைகள் கார்சனையும், கிட்டையும் கூண்டுகளில் கட்டி தொங்க விட்டுவிடுவார்கள்.... 1986 லயன 2ம் ஆண்டு மலராக வந்த பவளச் சிலை மர்மத்தில்"- அந்த செயலுக்கு இம்முறை அவர்களை பழிவாங்க வேணும் என கார்சன் சொல்வார்--- இப்படி லயனில் முன்னே பின்னே வந்த கதைகள் வந்து இருக்கும்..... இவற்றை வரிசைப்படுத்தி பதிவாக இடும் சவாலான பணியை உற்சாகமாக தொடங்கி உள்ளீர்கள்....தொடருங்கள் தொடர்கிறோம்.....

  ReplyDelete
 29. ஹா
  மொட்டசிவா கெட்டசிவா ஆனதைப்போல்
  மாயாவி சிவா இப்போது டெக்ஸ் சிவா !!

  கடுமையான உழைப்பின் பயன்
  அருமையாக உங்கள் வார்த்தை விவரிப்பினில் மிளிர்கிறது

  ஆச்சர்யங்கள் ஆயிரம்
  10000 வாலா பட்டாசு வெடித்தும் கூட மகிழ்ச்சி யில்லை
  உங்கள் பதிவை படித்து மிக்க மகிழ்ச்சி கொண்டேன்

  இன்னமும் எதிர்பார்க்கிறேன் டெக்ஸ் சிவாஜி

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  (காலை முதல் பிரயாணத்தில் இருந்ததால் உங்கள் பதிவை படிக்க நேரமாகிவிட்டது மன்னிக்க)

  ReplyDelete
  Replies
  1. @ டெக்ஸ் சம்பத்

   மொட்ட சிவா...கெட்ட சிவா...டெக்ஸ் சிவா...நல்லவேளை...ஹாஹா...சொட்ட சிவா என சொல்லாமல் விட்டதற்காக ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 30. This comment has been removed by the author.

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. பிரமிக்க வைக்கும் முயற்சி மாயாவி பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. @ ஸ்பைடர் ஸ்ரீதர்

   நீங்க சொன்னா சரிதான்...இங்கே'கிளிக்'

   Delete
 33. பிரியமான மாயாவிஜி. வெறும் வார்த்தை பாராட்டுகள் எவ்விதமான ஈடு செய்ய இயலாத இமாலய முயற்சி . என் தலைவர் டெக்ஸ் குறித்து பலர் எழுதி இருப்பினும் எங்கள் காமிக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் என்சைக்ளோபீடியா மாயாவிஜி கையால் உருவாகும் இந்த முயற்சி காமிக்ஸ் உலக தமிழ் ரசிகர்கள் அனைவரையும் தடம் புரட்டபோகிறது . வரலாற்று ஆய்வுகள் போல செய்த இந்த புது முயற்சியும் வழக்கம் போல சிறக்க வேண்டுகிறேன் . எழுத ஆயிரம் தோன்றினாலும் திறம்பட எழுதும் திறன் இல்லாத காரணமாக. வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. @ மயிலாடுதுறை ராஜா

   திறந்த மனதுடன் எழுதும்வதற்கு திறன் எல்லாம் வேண்டியதில்லை என்பதற்கு, உங்கள் கமெண்ட்ஸ் ஒரு உதாரணம்..! அதற்காக ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 34. Replies
  1. @ பெங்களூர் பரணி

   இரத்தின சுருக்கமாக சொன்னதற்காக ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 35. migavum arumaiyana pathivu...
  Atata seekkiram mudinthu vittathe, innum konjam periya pathivaga irunthirunthaal... Innum Arumaiyga irunthirukkume entru enna thontrukirthu...!
  thankyou siva sir :)

  ReplyDelete
 36. மாயாத்மா.,
  டெக்ஸ் வில்லர்., முதலில் ஒரு வாள்வீரனுக்கு துணைப் பாத்திரமாகவே படைக்கப்பட்டார். அதன் பின்னரே தனிப்பாத்திரமாக கொண்டு வரப்பட்டார்.
  இது நம்முடைய எடிட்டர் ஹாட்லைனில் எழுதிய ஞாபகம் இருக்கிறது.!!!

  ReplyDelete
  Replies
  1. @ கிட் ஆர்ட்டின் கண்ணன்

   எந்த கதைவந்த புத்தக ஹாட்லைனில் அப்படி சொன்னார் என நியாபகபடுத்தி சொல்லுங்களேன்..!அதையும் ஆராய்ந்துவிடலாம்..!

   Delete


  2. @மாயாவி.,

   அதைத்தான் சார்வாள் ரெண்டு நாளா தேடின்டிருக்கேன் . :-)

   Delete
 37. கடின உழப்பு +காமிக்ஸ் காதல்+ஆர்வம்+பதிவையே காமிக்ஸாக மாற்றும் திறன்+தகவல் பொக்கிஷம் = "சிவா"ஜி

  ReplyDelete
  Replies
  1. @ M.ஸ்டாலின்

   பதிவையே காமிக்ஸ் ஆக்கும் ஒரு இருக்கில்லை ஸார்...வித்தியாசமான கண்ணோட்டம் சொன்னதற்க்காக ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 38. பிரமிக்க வைக்கும் முயற்சி மாயாவி பாராட்டுகள்

  ReplyDelete
 39. நண்பர் மாயாவி சிவா,

  எப்படித்தான் இந்த தகவல்களையெல்லாம் உங்களால் சேகரிக்க முடிந்ததோ உங்களின் கடின உழைப்பு எனக்கு பிரமிப்பை தருகிறது.
  அதற்க்கு என் வந்தனங்கள்.

  இரண்டு வாரம் முன்பு இத்தாலியை சேர்ந்த ஒரு தீவிற்கு (Sardaigne) சுற்றுலா சென்றபோது அங்குள்ள விதவிதமான நமது டெக்ஸ் கதைகளை பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனேன். லேட்டஸ்டாக நமது தளபதி ஸ்டைலில் ஒரு டெக்ஸ் ஆல்பம் வெளியிட்டுள்ளனர். மொழி தெரியாவிட்டாலும் எனது சேகரிப்புக்காக வங்கி வந்த எனக்கு, அந்த ஆல்பம் உங்களிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அடுத்த ஆகஸ்டில் வரும்போது எடுத்துவருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் உழைப்பிற்கு ஒரு பெரிய சல்யூட். டெக்ஸ் கதைகள் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைக்கும் தகவல்கள்.

   Delete
  2. @ ராட்ஜா

   ஆஆஹா...கேட்கவே சுற்றுலாபயணம் அருமையாக உள்ளது. அங்கும் 'தல' விதவிதமாக...போட்டோகள் இருந்தால் அனுப்புங்களேன்...! பார்க்க ஆசையாக உள்ளது..! அனுப்பபோகும் போட்டோகளுக்காக ஒரு... இங்கே'கிளிக்'

   Delete
  3. @ சிவா

   நீங்கள் பதிவிட்டு கிட்டதட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன..! உங்கள் சித்திரக்கதைதளத்தில் விரைவில் ஒரு பதிவை எதிர்பார்த்து...இங்கே'கிளிக்'

   Delete
 40. அபார உழைப்பு. தகவல் பொக்கிஷங்கள். பிரமிக்க வைக்கும் முயற்சி ... பாராட்டுகள் நண்பரே ...

  தொடரட்டும் உங்கள் முயற்சி ....

  ReplyDelete
  Replies
  1. @ நாகராஜன்

   வருகைக்கும்,வாழத்துக்கும் ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
 41. மாயாவி சார்,

  Superb..

  ஒரு கோரிக்கை! (ஆசை யாரை விட்டது?)

  இதுவரை லயன் - முத்து வில் வந்த அனைத்து டெக்ஸ் கதைகளின் தமிழ் - இத்தாலிய பெயர் பட்டியல் அளிக்க முடியுமா? நான் புது வாசகன்.. இத்தகவலை திரட்ட முயன்றும் முடியவில்லை. இதை தாங்கள் ஒரு பதிவாக இட முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. @ சங்கர்

   நீங்கள் கேட்கும் பட்டியல் புது வாசகரான நீங்கள் தெரிந்து கொள்ளவிரும்புபவை மட்டுமல்ல...பதிப்பித்த எடிட்டராலேயே தர கடினமானவை..!அந்த இத்தாலிய பட்டியல் படி வரிசையாக முழுவதும் பதிவிடுவதே என் எண்ணம்..! 600 கதைகளில் முதல் 100 கதைகளை மட்டுமே ஒர்ஜினல் வெர்ஷனை புரட்டியுள்ளேன்..! இந்த தேடல் முடிய பல மாதங்கள் ஆகலாம். பட்டியல் முழுதும் கிடைக்க பெற்றவுடன் நிச்சயம் பகிர்கிறேன்..சங்கர்..! எதற்கும் இமெயில் id கொடுங்களேன்..!!!

   Delete
  2. பதிலுக்கு நன்றி மாயாவி சார்...

   :)

   u.sankaralingam@gmail.com

   Delete
 42. மிக அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. @ திலகர்

   கருத்துக்கு நன்றிகள்..!

   Delete
 43. மிக முக்கியமான பதிவு சகோ! சங்கர் அவர்களின் வேண்டுகோளை என்னுடையதாகவும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பின்னாளில் தமிழ் காமிக்ஸ் வரலாறு எழுதப்பட்டால் (எழுதப்படும்) அது டெக்ஸ் வில்லர் இல்லாமல் நிறைவு பெறாது. மேலும் அதிக தகவல்களை தங்களால் இயன்ற மட்டிலும் பகிரவும்.. ஆர்வத்தை தூண்டிவிட்டு விட்டீர்கள்... நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. @ பிரசாந்த் K

   எனது வேண்டுகோளும் அதுவே...காலம் தான் மனதுவைக்கவேண்டும்..! உங்கள் வருகைக்காக...இங்கே'கிளிக்'

   Delete
 44. நூறு கை தட்டல் படங்கள் மாயாவி ஜி,அரிய, அற்புதமான உழைப்பு.டெக்ஸ் வில்லரை பற்றிய மிகச் சிறந்த தகவல்களை அளித்துள்ளீர்கள்.
  உங்கள் உழைப்புக்கு என் பாராட்டுக்களும்,வணக்கங்களும்.

  ReplyDelete
  Replies
  1. @ ரவி

   இது தேவையான உழைப்பா..? வீண் உழைப்பா..? இது சரியான ஆர்வமா..? ஆர்வக்கோளாறா..? என்ற மனதில் எழும் கருத்துமோதல்களை தள்ளிவைக்கும் கமெண்ட்..! உங்களுக்காக...இங்கே'கிளிக்'

   Delete
 45. நூறு கை தட்டல் படங்கள் மாயாவி ஜி,அரிய, அற்புதமான உழைப்பு.டெக்ஸ் வில்லரை பற்றிய மிகச் சிறந்த தகவல்களை அளித்துள்ளீர்கள்.
  உங்கள் உழைப்புக்கு என் பாராட்டுக்களும்,வணக்கங்களும்.

  ReplyDelete
 46. வித்தியாசமான முறையில் அனைவருக்கும் தனித்தனியே 'இங்கே கிளிக்' போட்டு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்த மாயாவி சிவாவின் மெனக்கெடல்களுக்கு நன்றிகள் பல!

  ReplyDelete
 47. 'தல' பற்றிய அடுத்த பதிவுக்காக ஆவலுடன் வெயிட்டிங், மாயாவி அவர்களே!

  ReplyDelete
  Replies
  1. @ இத்தாலி விஜய்

   ஏற்காடு மலைபாதை தொடர் மழையால் கடும் மண்சரிவுகள்...கிட்டதட்ட நாற்பது இடங்களில் பதிப்பு..! முக்கியமாக சாலைபாறை முனியப்பன் உள்ள 13 வது [?] வளைவில் மிக பெரிய மண்,பாறைகள், 50 அடி உயரமரங்கள் என கடும் சரிவு..! இன்றும்கூட பாதை மூடப்பட்டுவிட்டது. முடங்கிக்கிடக்கும் நேரத்தை நண்பர்களுக்கு 'கிளிக்' போட்டு நன்றிகள் கூறினேன்..! அடுத்தபதிவு ஓவியர் செல்லம் அவர்களுடையது, ஒரு உள்நாட்டு பதிவு...ஒரு வெளிநாட்டு பதிவு என சமன்பாடு வகுத்து தொடர்கிறேனே..!

   Delete
  2. நோ...இல்லை...நஹி...கூடாது...ஒத்து...வேண்டாம்...நொக்கோ....
   டெக்ஸ் பதிவே முதலில்.....
   தல சீரியசை முடித்து விட்டு அடுத்து.....மாயா சார்.....
   அதுவே என் கட்டளை...
   என் கட்டளையே சாசனம்.....

   Delete
 48. மாயாவி சிவா என்பதற்கு பதிலாக 'தல'சிவா என்பதுதான் பொருத்தமாக இருக்கும்!

  ReplyDelete