வணக்கங்கள் நண்பர்களே..!
மாயாஜால ஹீரோக்கள் எல்லோர் மனசுலயும் பச்சுன்னு ஓட்டிக்க ஒரு அருமையான பார்முலா இருக்கு..! அந்த பார்முலா படிவந்த சமீபத்திய மெகா வெற்றி ஹாரிபார்ட்டர் கதை..! அந்த பார்முலா என்ன தெரியுமா...???
உலகமே அவனை தெரிந்துவைத்துக்கொண்டிருக்கும், எங்குபோனாலும் அடையாளம் தெரிஞ்சிட்டு மதிப்பும் மரியாதையும் அள்ளிவிசுவாங்க..! எதிரிங்க அவன் பேரை கேட்டாலே அடிவயிறு கலக்கும், பின்னாடி ஒருகால்வைப்பாங்க..! கொசு மாதிரி இருக்குற ஹீரோவை ஒழிக்க அணுகுண்டு சைஸ் பீரங்கி பத்தாதுன்னு எதிரிங்க புலம்புவங்க..! ஆனா இதை எல்லாமே துளி கூட கண்டுக்காம நம்ம ஹீரோ நம்ம ரேஞ்சுக்கு சாதாரணமா நடந்து போவார். எதிர்ல வர்றநோஞ்சான் கிட்ட செமத்தியா அடிவாங்குவான்..! ஆனாலும்கூட பெரிய பெரிய ஆளுங்க அவனுக்கு பயந்து சாவாங்க, அவனோட பிறப்பு வரலாற்றின் ஒரு ஆச்சரியகுறியீடுன்னு விடாம பேசுவாங்க, அவனை தீத்துகட்ட பயங்கரமா பிளான் போடுவாங்க..! ஆனா நம்ம ஹீரோவுக்கு அதுபத்தி ஒண்ணுமே தெரியாது, பலரும் அவனோட கூட்டு வெச்சிக்க வருவாங்க, இருந்தும்கூட எனக்கு எதுவும் வேணாம், என்னைய விட்டுடுங்கோன்னு ஒதுங்கி ஒதுங்கி போவான்..!
இதுதாங்க அந்த ஸுப்பர் பார்முலா..! இந்த பார்முலாபடிதான் வான்ஹாமே எழுதின அசத்தலான 'தோர்கல்' மாயாஜால கற்பனையை இன்ச் பை இன்ச் ஆச்சரியபடற அளவுக்கு செதுக்கியிருக்கார்..! பக்கத்துக்கு பக்கம் கொட்டிகிடக்குற விதையை பல ஹாலிவுட் படங்கள் எடுத்து சைலண்டா மரமாக்கி காசக்கியிருக்காங்க..! பேர்வாங்கியிருக்காங்க..!அதுல ஒன்னு ஹாரிபார்ட்டர்ன்னு சொல்லலாம்..!
ஒவ்வொரு பகுதி முடிவிலும் ரெண்டுபேரோட தோர்கல் ஸாகசம் செய்ய கிளம்பறதா முடியும், ஆனா அடுத்த பகுதியில தோர்கல் வேறேங்கியோ தனியா போய்ட்டிருப்பார்...ஹேய்..நடுவில சிலபக்கத்தை காணமா..? ன்னு குழம்ப தேவையில்லை. நாம நியாபகம் வெச்சிக்கவேண்டியது ஒன்னேஒண்ணுதான். அது....
தோர்கல் உண்மையா யார் கூடயும் போறது கிடையாது,அவர் பாட்டுக்கு போய்ட்டேயிருப்பார்.அவர் கூட சிலர் ஓட்டிகிறாங்க.தோர்கல் வெட்டிட்டு கழண்டுகிறார் அவ்வளவுதான். நண்பர் கிட் ஆர்ட்டின் கண்ணன் கேட்டது எனக்கு தெரிஞ்ச சின்ன பாயிண்ட் இது..!
ஒவ்வொரு பகுதி முடிவிலும் ரெண்டுபேரோட தோர்கல் ஸாகசம் செய்ய கிளம்பறதா முடியும், ஆனா அடுத்த பகுதியில தோர்கல் வேறேங்கியோ தனியா போய்ட்டிருப்பார்...ஹேய்..நடுவில சிலபக்கத்தை காணமா..? ன்னு குழம்ப தேவையில்லை. நாம நியாபகம் வெச்சிக்கவேண்டியது ஒன்னேஒண்ணுதான். அது....
தோர்கல் உண்மையா யார் கூடயும் போறது கிடையாது,அவர் பாட்டுக்கு போய்ட்டேயிருப்பார்.அவர் கூட சிலர் ஓட்டிகிறாங்க.தோர்கல் வெட்டிட்டு கழண்டுகிறார் அவ்வளவுதான். நண்பர் கிட் ஆர்ட்டின் கண்ணன் கேட்டது எனக்கு தெரிஞ்ச சின்ன பாயிண்ட் இது..!
கிட்டத்தட்ட 1980 ம் வருஷம் துவங்கிய இந்த தொடர் 2013 வரை விடாம வருஷம் ஒன்னுகிற கோட்பாடுல வந்தவை. 46 பக்கங்கள் உள்ள ஒரு கதையை தயாரிக்க ஒரு வருஷம் விலை..! 34 இதழ்கள் வந்த இந்த தொடர் நமக்கு அருமையான மொழிபெயர்ப்பில், இதுவரையில் 6 பகுதிகள் கிடைச்சிருக்கு..!
இந்த டிஜிட்டல் உலகத்தின் மூலமா, மாயஉலக ஆர்வத்தை தூண்டும் சின்ன முயற்சியா 34 இதழ்களின் அட்டைய அழகுபாக்க உங்க பார்வைக்கு..!அதுமட்டுமில்லாம அடுத்து என்ன வரவேண்டியிருக்கு,எது வந்திருக்குன்னு எப்பவாச்சி பாக்க உவுதவுமே..!அதுக்காக தோர்கல் அணிவகுப்பு தொடர்கிறது..!
நட்புடன்
மாயாவி.சிவா
இந்த டிஜிட்டல் உலகத்தின் மூலமா, மாயஉலக ஆர்வத்தை தூண்டும் சின்ன முயற்சியா 34 இதழ்களின் அட்டைய அழகுபாக்க உங்க பார்வைக்கு..!அதுமட்டுமில்லாம அடுத்து என்ன வரவேண்டியிருக்கு,எது வந்திருக்குன்னு எப்பவாச்சி பாக்க உவுதவுமே..!அதுக்காக தோர்கல் அணிவகுப்பு தொடர்கிறது..!
நட்புடன்
மாயாவி.சிவா
தோர்கல் வம்சாவளி அட்டவணை இது. இதுபோல் பின்னால் ஆசிரியரிடம் கேட்டு பெறவேண்டும்..!
ஆஹா!
ReplyDelete@ கிட் ஆர்ட்டின் கண்ணன்
Deleteமுதல் வருகைக்கு முதல் மரியாதைகள்..![வணங்கும் படம் 34]
தொகுப்புகள் அருமை!!
ReplyDeleteஎங்கிருந்துதான் பிடிக்கிறாரோ :)
@ டெக்ஸ் சம்பத்
Deleteஉங்களை மாதிரி புக்கை பிடிக்கிறது தான் கஷ்டம், இது ஒரு கஷ்டமும் இல்லை..!
பாகம் 17
ReplyDeleteபாகம் 28
ரெண்டும் எப்போது வருமென இப்போதே ஏங்கத் தொடங்கிவிட்டேன் .!
கிட்... நமக்கு அதுகுள்ளே வயசாகிடாம இருந்தா நல்லது... அதுக்கு ஏதாவது வயக்ரா மாத்திரை இருக்கா கிட்..
Deleteஹா....ஹா.....கண்ணன்-சரவணன் இருவரது கமெண்டுகளையும் யாராவது யூடியூப்பில் ரிலீஸ் செய்ய மேச்சேரி கரூர் மகளிர் அமைப்பு கள் உங்களை எதிர்த்துப் போராட போகின்றன. இப்ப இதுதான் ட்ரெண்ட்.......;-)
Delete@ கோடையிடி கண்ணன்
Deleteஅந்த நீளமுடி சிகப்பு கன்னி ஒரு சூனியகாரி..அதுமேல கண்ணுவெக்காதிங்க..! அப்புறம் தடவி தான் கதை படிக்கமுடியும், காமிக்ஸ் படிக்கமுடியாது...ஹா..ஹா..!
கண்ணன் ஜி
Deleteகழுகு கண்ணுங்க உங்களுக்கு
எதுக்கு இவரு அந்த ரெண்டு புத்தகங்களையும் கேக்குறாருன்னு மறுபடி பாத்தா :)))))
எனக்கென்னமோ விஜயன் சார் அந்த அட்டைப்படத்த போடமாட்டாருன்னுதான் தோணுது ;-)
.
கிட் ஆர்ட்டின் கண்ணன்.!
Deleteஅண்ணா! வணக்கமுங்கண்ணா.!
ஹிஹிஹி!!!
Deleteகோடையிடி கண்ணன்
Deleteசொன்னா கேளுங்க சிகப்புகாரி ஒரு சூனியகாரி...நீங்க தோர்கல் இல்ல, மாட்டினா முடிஞ்சுடும். ஆதாரம்...
இங்கே'கிளிக்'
[சேலம் டெக்ஸ் நீங்க கேட்டது இங்க வருது..டொண்டய்]
உவ்வே...இவ சூனியக்காரி...
Deleteசாவிகாப்பாளினி அழகின் சொரூபம்..தங்க தாரகை.....
என் உள்ளம் கவர் நங்கை.....
சூப்பர் சார்.....இதை பார்த்தவுடன் தோர்கல் தொடர் அனைத்தையும் உடனே படிக்க வேண்டும்போல் ஆசையாக உள்ளது...
ReplyDelete@ யுவா கண்ணன்
Deleteஅடடே..யுவா தம்பி..! எதிர்பாராத வரவு, ரொம்பவே சந்தோஷம்..!
சூப்பர் சார்.....இதை பார்த்தவுடன் தோர்கல் தொடர் அனைத்தையும் உடனே படிக்க வேண்டும்போல் ஆசையாக உள்ளது...
ReplyDeleteகலக்கல் ஜி! பல்ஸை எகிற வைத்து விட்டீர்கள்!
ReplyDelete@ குணா
Deleteஇது நான் என்ன கலக்கினேன்..? அவங்க 34 வருஷ கனவின் உழைப்பை, சின்னதா தொகுப்பா உங்களுக்கு கைமாத்தியிருக்கேன் அவ்வளவுதானே..!
அட்டைப்படங்கள் அப்படியே அள்ளுது மாயாவி அவர்களே! நீங்கள் கொடுத்த வியாக்யானம் ரசிக்கவைக்கிறது.
ReplyDelete'இரத்தப்படலம்', 'இரத்தக்கோட்டை' போராட்டத்தைக் கொஞ்சம் தள்ளிவச்சுட்டு இதுக்காகப் போராட்டம் நடத்த ஆசை வருது! தலீவர்ட்ட கேட்டுட்டு முடிவுபண்ணிக்கிடலாம்.
ன்னான்னீங்க?
@ இத்தாலி விஜய்
Delete//ன்னான்னீங்க?//
நான் கொடிபிடிச்சி நின்னு 3 மணிநேரம் ஆகுது, வேகமா போய் முன்னாடி நின்னதுல தகவல் சொல்ல மறந்துட்டேன்..ஹீ..ஹீ..! அந்தவியாக்யானம் நம்ம கோடையிடி கண்ணனுக்கு சொல்ல டைப்பியது, இந்தபக்கம் அட்டைங்க பட்டைய கிளப்பி மாயாஜாலம் பண்ணிட்டு இருந்தது..ரெண்டையும் கனெக்சன் கொடுத்துட்டேன்..அவுக்..அவுக்..!
ஈரோடு விஜய் .! சூப்பர் ஐடியா.!
Deleteசென்னையில் எந்த ஏரியாவில் இருக்கின்றீர்கள் சார்.?ஒய்வு இடைவெளி சந்திக்க வாய்ப்பு உள்ளதா.?
அருமை மாயாவிஜி...
ReplyDeleteபாராட்டுக்கள். தங்களது ஈடுபாடு மிகவும்
ReplyDeleteஅருமை.
மாயாவிஜி....செம......அட்டை படங்கள் மாதிரி உள்ளடக்கமும் இருக்குமென்று நம்புகிறேன் ..
ReplyDelete@ செல்வம் அபிராமி
Deleteஅட்டையெல்லாம் ஒன்றுமில்லை.. :( வான் ஹாமே பக்கத்துக்கு பக்கம் செதுக்கியிருக்கிறார். பதிவுல சொன்னமாதிரி இந்த வருஷம் வந்த சாகவரவத்தின் சாவி+மூன்றாம் உலகம் இந்த ரெண்டு புக்ஸ், நாலு பகுதியை எழுத மட்டும் அவர் எடுத்துக்கொண்ட நாட்கள் 1400, 210 வாரங்கள். நான்கு வருடங்கள்.
அடுத்து வரும் இரண்டு பகுதி தோர்கல் பிறப்பின் ரகசியமும், எட்டு வயதில் அவன் சந்திக்கும் பல மாயாஜால உலகமும் வைகிங் வீரர்களிடம் கற்றுக்கொண்ட வித்தை பயன்படுத்தும் சாகசமும் 'யப்பா' ஹாரிபாட்டர் எல்லாம் ஒண்ணுமேயில்ல..! கூடவே ஆரிசியாவுடன் மலரும் அன்பும் பிணைந்து பின்னிஎடுத்துள்ளர்.
29-பகுதிவரையில் வான்ஹாமே+ரோசின்ஸ்கி கூட்டணியில் [1980-2006 வரையில்] 26 வருடங்கள் பட்டையை கிளப்பியிருகிறார்கள்.
அம்மாடி, மலைக்க வைக்கும் பெரிய மாத்திரை...( சேந்தம்பட்டி பாசையில் பெரிய்ய்ய்ய்ய் பதிவுஉஉஉஉஉஉஉஉஉ)...
ReplyDeleteஉங்கள் உழைப்பும் , நேரமும் எங்களுக்காக இப்படி செலவு செய்வதற்கு பெரிய மனது வேணும் சார்...
நீங்கள் இந்த காமிக்ஸ் உலகில் குதித்தது உங்களுக்கு எப்படி பெருமகிழ்ச்சியோ, எங்களுக்கும் அப்படியே......கண்ணில் நீர் வழிய கைதட்டும் படங்கள் பலப்பல...
அப்புறம் அந்த சாவிகாப்பாளினி எந்த எந்த பாகங்களில் வர்ரா என முடிந்தால் சொல்லுங்கள் சார்...இவன் சாவிகாப்பாளினி பாசறை, தமிழகம்...
ReplyDeleteஹா.....ஹா......ஹா...
Delete@சேலம் டெக்ஸ்
Deleteதங்க கோமணம் கட்டிடிட்டு வர்ற அந்தம்மா திரும்ப வரவே போறதில்லை. மூன்றாம் உலக சாவியை வாங்கிட்டு போனதோட சாவிகாப்பாளினி சேப்டர் ஓவர்..ஹா..ஹா..!
ஆண்டவனே...இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டுட்டீங்களே மாயா சார்....கண்ணீர் விட்டு கதறி அழும் படங்கள் பலப்பல..
Deleteசாவிகாப்பாளினி இல்லாத தோர்கல் கதையை நினைக்கவே இயலவில்லை....ஹூம்..
இப்பவே தோர்கல் ரசிகர்மன்றத்தில் இருந்து ரிசைன் பண்றேன்....
அந்த வான்ஆமே ஒழிக, ஒழிக, ஒழிக....
சாவிகாப்பாளினி யை வைத்து கிட் மாமா கதை பண்ணி தருவார்....
Super sir...
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteபேசாமல் நம்ம எடிக்கு போட்டியா கூட நிங்க ஒரு காமிக்ஸ் பதிபப்பகம் ஆரம்பிக்கலாம்
ஹாஹாஹா............!மாயாவி மீது என்ன கோபமோ.?
Delete@ சுரேஷ் அவர்களே...
Deleteஇதுஎன்ன கொடுமை..[தலை கிறுகிறுக்கும் படங்கள் இஷ்டத்துக்கு] நல்லாதானே போய்ட்டிருக்கு, நாமெல்லாம் TVS-50 க்கு ரோடு சைடு அசிஸ்டன் மெக்கானிக்..! நம்மளை போய் போட்டியா கம்பெனி போடச்சொல்றிங்களே, என்னோட அழுக்கு அரைடிராயர் கிழிஞ்சிடும்..முருகா..!
ஹா!ஹா!ஹா...!!!
Deletesuper ji...
ReplyDeleteமாயாவி ஜி
ReplyDeleteசூப்பரு வழக்கம் போல அசத்துறீங்க
இன்னாது 34 புக்கு வந்திருக்கா
இதெல்லாம் வர எத்தனை வருடமாகுமோ தெரியலியே :(
.
அருமையான பதிவு
ReplyDeleteமாயாஜால கதையின் ஹீரோக்களின் கம்பெனி ரகசியத்தை போட்டு நகைச்சுவையும் போட்டு உடைத்த விதம் அருமை.!
ReplyDeleteமாயாவிக்கு நக்கலாக நகைச்சுவையாகவும் எழதவும் தெரியுமா.?
அடேயப்பா !.இத்தனை அழகான அட்டை படங்களை எங்கு தேடிபிடித்தீர்களோ.? உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகிறேன்.!
அப்புறம் ,ராஜ்குமார் முன்பு சொன்னமாதிரி மூன்றுமுறை எல்.ஐ.சி.கட்டி இடிந்துபோய்விட்டது.!இதுவும் பப்ளிஷ் ஆகுமா தெரியலையே.?
@ MV அவர்களே..
Deleteஅது இத்தாலி விஜய் கிட்ட சொன்னபடி..கிட் ஆர்ட்டின் கண்ணனுக்கு அவர் ஸ்டைலில் எழுதி பார்த்தது..எடி ப்ளாக்கில் போடவேண்டியது, சேலம் இரவுகழுகார் "ப்ளாக்கில் லோடு மோர் போச்சி ஸார்...இப்பபோடதிங்க ஒரு பதிவா போடுங்களேன்"னார். ராவோட ராவா அடிச்ச பதிவு, அப்படியே கை மாத்திவிட்டேன்..!
மாயாவி ஜி அப்படியே நம்ம மாடஸ்டி & வில்லி பற்றிய தேடல் ஏதாவது?? எனக்காக இல்லை M.V க்காக
Deleteஐ பப்ளிஷ் ஆகிவிட்டது.!
ReplyDeleteஅருமையான பதிவு மாயாவிஜி . நன்றி . அசத்தல் தொடரட்டும் . இத்தனை புத்தகங்கள் தமிழில் வரும் வரை நான் இருக்கனும் ஆண்டவா .
ReplyDelete@ ராஜா
Delete[சூதுகவ்வும் சேதுபதி ஸ்டைலில் படிக்கவும்]
என்னைய பாருங்க...என் கண்ணை பாருங்க...உங்களை யாரோ தப்பா பெரிய வயசாளியா கற்பனை பண்ண வெச்சிருங்க, நம்பாதிங்க..! நீங்க ஒரு பொடியன் ஒகே, நீங்க இன்னும் பள்ளிகூடமே முடிக்கலை. முக்கிய நீங்க ஒரு பீனிக்ஸ்..என்ன சொன்னேன் திரும்ப சொல்லுங்க பீனிக்ஸ் பீனிக்ஸ். நமக்கெல்லாம் அது ரொம்பவே தூரம் ஒகே..!
வருடம் 6பாகங்கள் என்றால், இன்னமும் 5வருடத்தில் எல்லாம் வந்து விடும் பீனிக்ஸ் மாப்பு...... ஒய் டென்சன் பீ கூல்....
Deleteமாயாவி சார்.! தோர்கல் தனி சந்தா கோரிக்கையை தூண்டிவிடுவது போல் தோன்றுகிறதே.? ஒரே வருடத்தில் டபுள் கதைகள் வெளியிட்டால் பிரச்சனை சால்வ்.? எப்பூடி ???
ReplyDelete@ MV
Deleteகி.நா பட்டியலில் தோர்கல் சேர்த்து எனக்கு வருத்தமே.. :( ஏன் தெரியுமா..?? ஏப்ரலில் அந்த அறிவிப்பு வருமா என்பது சந்தேகமாக உள்ளது. காரணம் நண்பர்களிடையே வாங்கும் சக்தியும்,ஆர்வமும் குறைந்து கொண்டே வருகிறது. சந்தா 3௦௦ தொடுவதற்குள் தினறிவிடும் பாருங்கள் :((((
[என்கணிப்பில், உருத்தெரியாமல் போகும் அளவிற்கு இடி விழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்]
பிரமாதம் மாயாவி!
ReplyDeleteஉங்களை நிங்களே அப்டேட் செய்து கெள்கிறிர்கள் அதை முழுமை படுத்துகிறார்கள் அபாரம் ஜி
ReplyDelete@ நரேஷ்
Deleteஉண்மையில் இந்த பாராட்டு, வசீகரமான சொல்.நன்றிகள்..!
உங்களை நிங்களே அப்டேட் செய்து கெள்கிறிர்கள் அதை முழுமை படுத்துகிறார்கள் அபாரம் ஜி
ReplyDeleteஉங்களை நிங்களே அப்டேட் செய்து கெள்கிறிர்கள் அதை முழுமை படுத்துகிறார்கள் அபாரம் ஜி
ReplyDeleteஅருமை மாயாஜீ.....அட்டைபடங்களை பொறுத்தவரை ஆசிரியர் ஒரிஜினல் அட்டை படங்களை தான் உபயோக படுத்துகிறார் ..பல அருமை ...ஆனால் ஒரு சில அட்டை படங்கள் நமது கை வண்ணத்தில் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம் ....;-)
ReplyDelete@ தலீவா
Delete//சில அட்டை படங்கள் நமது கை வண்ணத்தில் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
//
தல நீங்க கைவச்சா சிறப்புக்கு குறையிருக்குமா என்ன..!!!
மாயாவி ஜி அருமையான தொகுப்பு. உங்கள் காமிக்ஸ் ஆர்வம் & தேடல் மேலும் அதிகமாக ஆவலுடன் நாங்கள்.
ReplyDeleteஅருமை.!அட்டகாசம்.!இன்னும் எதிர்பார்க்கிறேன்.!
ReplyDelete@ கார்த்திக்
Deleteஇது உழைப்பில்லா வெறும் கைமாத்தல். உழைப்புடன் விரைவில்...
மாயாவி ஜி..
ReplyDeleteஅருமை .... உடம்பு..ரத்தம்...சதை...எல்லாத்துலேயும் காமிக்ஸ் வெறி கலந்த ஒருத்தர்ரலதான் இதெல்லாம் பண்ண முடியும் (பாட்சா ஸ்டைல்) ... கலக்குறீங்க போங்க ...
@ திருப்பூர் புளுபெர்ரி
Deleteநீங்க சொல்றாப்பல மெய்யாலுமே அதே நெனப்பா வீட்ல,வெளிய,கடையிலன்னு இருந்து செமத்தியா உறவுக்காரங்ககிட்டே மாட்டி...இப்ப நம்மளை தவிக்க விட்டுட்டு, 'டாட்டா' சொல்லிட்டு போய்ட்டார்..! :(
பயங்கரம் போங்க ஜி அப்றோம் கொஞ்சம் xiii ன பாருங்க
ReplyDelete@ பழனிவேல்
Deleteஒரு ஓசியில கிடைச்ச அட்டைபடத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையா..!!!
அருமை..
ReplyDeleteஒரு காலத்தில் "பொன்னி மாயாஜால கதைகளை" வெறி கொண்டு படித்துக்கொண்டு திரிந்தேன். அன்றைய வயதில் அவை ரொம்ப பிடித்து இருந்தது.. இன்று பிடிக்குமா எனத்தெரியவில்லை..தோர்கல் கதைகளில் சாகாவரத்தின் சாவிகள் வரைதான் படித்துள்ளேன். என் பார்வையில் just ok ரகமாகத்தான் தெரிகிறது. போக போக இன்னும் ஈர்க்கும் என கூறுகிறார்கள்.. பார்ப்போம்..
அப்புறம்.. தோர் என்று ஒரு காமிக்ஸ், படம் எல்லாம் வருகிறதே.. அந்த காமிக்ஸும் இதே மாதிரி மாயஜால கதை தானா?
@ SIV
Deleteசிவா நீங்களா தோர் பற்றி கேட்கிறிர்கள்..? ஆச்சரியமாக உள்ளது,தோர் 'மார்வல் காமிக்ஸ்'படைப்பு. அவர்கள் ஏலியன் & எதிர்காலம்,வேற்றுகிரகம்,விஞ்ஞானம் சம்மந்தப்பட்ட அதீத கற்பனை கதைகள் என படைப்பு பார்முலா வைத்துள்ளார்கள்.
ஆனால் தோர்கல் பின்னோக்கிய காலகட்டமாட்டம் சம்மந்தப்பட்ட கதை. THOR 1&2 படம் பாருங்கள்,அட்டகாசம்..!
வணக்கம் மாயாஜி,
ReplyDeleteஅருமையான தொகுப்பு.
பின்னாலில் தோர்கல் காமிக்ஸ் தொடருக்கு ஒரு ரெபரன்ஸ்சாக வச்சிக்க உதவும்.
இருந்தாலும்...
உங்கள் தேடுதலை இதுபோல் உள்ள மற்ற கதைவரிசைகளை (தமிழில் வராத) அறிமுகம் செய்ய/அறிந்து கொள்ள பயன்படுத்தினால், இன்னும் நல்லாயிருக்கும். சே.ப.கா கழகமும் விஜயன் சார்கிட்ட அந்த கதைகளை தமிழில் கேட்கலாம். நம்ம குழந்தைகளுக்கும் பயன்படும்.
நன்றி.
வணக்கம் மாயாஜி,
ReplyDeleteஅருமையான தொகுப்பு.
பின்னாலில் தோர்கல் காமிக்ஸ் தொடருக்கு ஒரு ரெபரன்ஸ்சாக வச்சிக்க உதவும்.
இருந்தாலும்...
உங்கள் தேடுதலை இதுபோல் உள்ள மற்ற கதைவரிசைகளை (தமிழில் வராத) அறிமுகம் செய்ய/அறிந்து கொள்ள பயன்படுத்தினால், இன்னும் நல்லாயிருக்கும். சே.ப.கா கழகமும் விஜயன் சார்கிட்ட அந்த கதைகளை தமிழில் கேட்கலாம். நம்ம குழந்தைகளுக்கும் பயன்படும்.
நன்றி.