வணக்கங்கள் நண்பர்களே..!
கோகுலம் சிறுவர் இதழில் வாண்டுமாமாவின் கூட்டணியில், ஓவியர் செல்லம் வரைந்த சித்திர தொடர் அன்றைக்கு மெகா ஹிட் அடித்தது..! இந்த கூட்டணி வெற்றியை இரும்புக்கை மாயாவியின் அதிதீவிரமான ரசிகர் ஒருவர் கவனித்து கொண்டிருந்தார்..! சிறுவர் இலக்கியங்கள் பிரசுரம் செய்வதில் ரொம்பவே ஆர்வம் கொண்டவர் அவர்..! இரும்புக்கை மாயாவியை தமிழகத்தில் லட்சம் பேருக்கு அன்று தெரியுமென்றால்...இரும்புக்கை மாயாவிகென்று ஒரு ரசிகர் மன்றம் துவங்கினால், அதன் தலைவராக அவரை போடலாம்..! அவ்வளவு தீவிர ரசிகராக அவர் இருந்திருக்கவேண்டும்..! நான் இப்படி சொல்ல காராணம்...
பிரிட்டிஷார் இரும்புக்கை மாயாவி போலவே மின்சாரம் தாக்கினால் மறையும், மின்னல் மாயாவி என்ற சூப்பர் பவர் கொண்ட ஒருவரை உருவாக்கி, அவர் தமிழகத்தில் ஸாகசம் செய்யும் தரமான காமிக்ஸ்களை தமிழகத்திலேயே உருவாக்கினார் என்பதே..!
டெக்ஸ் வில்லர் ரசிகர்களுக்கு, "டெக்ஸ் அமெரிக்க மண்ணில் தான் ஸாகசம் செய்வாராக..? நம் மண்ணில் ஸாகசம் செய்யமாட்டாரா..!!! " என்ற ஏக்கம் ஒவ்வொரு ரசிகருக்கும் இருக்கத்தானே செய்யும்..! அப்படித்தான் இரும்புக்கை மாயாவியின் புத்தகங்களை வெளியிட்டு வந்த பதிப்பாசிரியர் 'முல்லைதங்கராசன்' இரும்புக்கை மாயாவியை தமிழகத்தில் ஸாகசம் செய்ய வேண்டும் என்ற, கனவு கண்டார் என தோன்றுகிறது..!
அவர் கனவுக்கு உருவம் கொடுக்க சரியான ஓவியரை தேர்ந்தெடுத்து, மாயாவியின் மேல் கொண்ட தீராத காதலில், அவரே கதை எழுதி, மறையும் இரும்புக்கை உள்ள மின்னல் மாயாவியை உருவாக்கி காமிக்ஸ் ஆக வெளியிட்டார்..! ஆகஸ்ட்,1976 வருடம், அவர் துவங்கிய மாயாவி காமிக்ஸ் மூலமாக மின்னல் மாயாவிக்கு அட்டகாசமாக உருவம் கொடுக்க, அவர் தேர்ந்தெடுத்த அந்த ஓவியர் திரு செல்லம் அவர்களே தான்..!
உடல் சிலிர்க்கும் சாகசங்கள் ! உயிரோட்டம் நிறைந்த சித்திரங்கள் !
என விளம்பர வாசகங்களுக்கு ஏற்பவே கதையும், ஓவியங்களுக்கும் போட்டிபோட்டன. பின்னாளில் அவை மதி காமிக்ஸாக வந்த அட்டைபடங்களிலும், காமிக்ஸ் படங்களிலும், திரு செல்லம் கைவண்ணம் உங்கள் பார்வைக்கு..! முத்துகாமிக்ஸ் இரும்புக்கை மாயாவியை மறுபதிப்பிலாவது இப்போது பார்க்கிறோம், ஆனால் இது போன்ற ஆர்வலர்களின் படைப்புகள் காலவெள்ளத்தில் புதைந்தே போய்விட்டன...!
திரு.முல்லை தங்கராசன் மின்னல் மாயாவியை தொடங்குவதற்கு முன்பு, மே,1976-ம் வருடம் 'மணிப்பாப்பா' என்ற 30 காசு விலையில் மாயாஜால கதைகளுக்கும், சிரிப்புகதைகளுக்கும் கொண்ட குட்டி மாத இதழை, அட்டகாசமான மாத இதழ் துவங்க வெள்ளோட்டம் பார்த்தார்..! அதேசமயத்தில் 60 காசு விலையில் வண்ணசித்திரகதைகளுக்கும் அட்டகாசமான ஓவியங்களை வரைந்து கொடுத்தார், தொடர் சித்திர சக்கரவர்த்தி..!
ஜம் ஜாம் ஜாக் கதையின் உள்பக்கங்கள்...
சித்திரங்கள் பார்த்தாலே கதைகளை படிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் வசீகரம்படைத்தவைகள் திரு செல்லத்தின் ஓவியங்கள் என்பதை நீங்களும் படங்களை பார்த்ததும் உணர்ந்திருப்பிர்கள்..!
மணிப்பாப்பா சிறுவர் இதழில் வந்த சில சிரிப்புகள்...
1976-ம் ஆண்டுமுதல் 1978 வரையில் முல்லை தங்கராசன் அவர்களும் ஓவியர் செல்லம் அவர்களும் இணைந்து, விதவிதமான முயற்சியில் சிறுவர் இதழ்ககளை வெளியிட்டார்கள்..!
1979-ம் வருடம் ஒரு முக்கியமான வருடம்..! காரணம் அடுத்தபடத்தை படியுங்கள்...
1979-ம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் வருடமாக அறிவிக்கப்பட்டதை, அதற்கென்று சில சலுகைகள் அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து, திரு முல்லை தங்கராசன் மிக சரியாக அந்த ஆண்டை பயன்படுத்திக்கொண்டார்..! சிறுவர்களுக்கான ஒரு அட்டகாசமான வண்ண மாத இதழை ஒன்றை துவங்கினார். அந்த இதழுக்கு ஆஸ்தான ஓவியர் திரு செல்லம் அவர்களே..!
எனக்கும் அந்த ஆண்டு முக்கியமானதே..! காரணம், சர்வதேச குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எல்லா பள்ளிகளிலும் கதை கட்டுரைகள் எழுதும்,ஓவியங்கள் வரையும் போட்டிகள் நடத்த அரசு அறிவிப்புகள் வந்தன..! அப்படி பள்ளியில் நடந்த ஓவிய போட்டியில் கலந்து கொள்ளவைக்கவேண்டியே என் தந்தை பள்ளிக்கு அழைத்து ஓவிய பொருட்கள் வாங்கிதர சொன்னார்கள்..! வாட்டர் கலரிங்' வாங்கித்தர சொல்லியும், அதை பயன்படுத்த சொல்லிதரவும் சொன்னார்கள்..! அதை வாங்கித்தரவே என்னை 'சாமுண்டி சூப்பர் மார்கெட்டிற்கு என் தந்தை அழைத்து சென்றார்..! அங்கு சென்றதால் தான் அந்த லைப்ரரியில் tin tin பார்க்கமுடிந்தது. அந்த தாக்கம் 'பலேபாலுவின் அறிமுகம்...அதை தொடர்ந்து காமிக்ஸ் உலகில் என் பிரவேசம்..!
சரி ஓவியர் ப்ளாஸ்பேக்கிற்கு வருவோம், திரு முல்லை தங்கராசன் துவங்கிய அந்த சிறுவர் இதழ் 'ரத்னபாலா'..! அந்த இதழ் வருகையை விளம்பரபடுத்த ஓவியர் செல்லம் அவர்கள் கைவண்ணத்தில், ஒரு கோலாகலமான வண்ண விளம்பர போஸ்டர் சுவரொட்டியில் அழங்கரித்தது..! அது இன்றும்கூட பசுமை, காரணம்..தெரு முனையில் இருக்கும் கோவில் சுவரில் சினிமா போஸ்டர்கள் ஓட்டப்படுவது வழக்கம். கோவில் மணி 'டங்..டங்' என ஒலிக்கத்துவங்கியதும், அரைடவுசரில் ஒரு பட்டாளம் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் வரிசையில் நின்று வாங்க போட்டி போடும்..! அப்போது தவறாமல் சுவரொட்டியை பார்ப்பேன். வித்தியாசமாக நான் ஒருநாள் பார்த்த சுவரொட்டி என்னை மயக்கியது..! அந்த விளம்பரம்...
'ரத்னபாலா' இதழ் விளம்பரத்தை தொடர்ந்து, எனக்கும் சீனியர்கள் அந்த வண்ணஇதழில் வந்த கதையை சிலாகித்து சொல்லகேட்டிருக்கிறேன். அன்று பார்த்த செல்லம் ஓவியங்கள் என் ஓவிய ஆர்வத்தையும், காமிக்ஸ் மோகத்தையும் சமமாக வளர்த்தன. பள்ளியில் என் ஓவியம் ஏன் பாராட்டப்பட்டது...??? சகல வசதியுடன் தனியாக அமரவைத்து, அதுவும் தரை பலகையில் அமரும் என்னை, முதல்முறையாக ஆசிரியர் அமரும் மேஜை நாற்காலியில் அமரவைத்து, ஏன் வரைய செய்தார்கள்...? என அப்போது புரியவில்லை. பின்னாளில் பரிசாக 'பஞ்சதந்திரகதைகள்' புத்தகம் ஒன்று கொடுத்து மேடையில் பாராட்டியபோது...உணர்ந்த பாராட்டு தந்த சுவை, அந்த வயதில் திரும்ப திரும்ப மனசு கேட்டும் சுவை..! அந்த சுவைக்காக செய்த, நேர்த்தியான உழைப்பு பின்னாளில் பழக்கமாகவே ஊறிவிட்டது..!
நேர்மையான, நேர்த்தியான உழைப்பு ஏற்படுத்தும் தாக்கம், மனிதர்களின் மனதில், தனி சிம்மாசனத்தில் அமரவைக்கும் என்பதற்கு தொடர் சித்திர சக்கரவர்த்தி திரு செல்லம் ஒரு கம்பீரமான உதாரணம்..!
பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால், ஓவியரின் நாலுகால் பாய்ச்சல் படைப்புகள் பற்றி அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்..!
நட்புடன்,
மாயாவி. சிவா
கடந்த பதிவில் சித்திரதொடர் சக்கரவர்த்தி திரு செல்லம் அவர்களின் பெயர் இல்லாவிட்டாலும் கூட, அவரின் ஓவிய ஸ்டைல் தெளிவாக அடையாளம் காட்டும் சித்திரதொடர் பற்றிய குறிப்புகளுடன் பதிவை தொடங்கினேன்..! இந்த பதிவில் அவர் பெயர் போட்டாலும்கூட, ஓவியங்கள் அவரை அடையாளம் காட்டாத ஆரம்ப கால ஓவியங்களுடன் துவங்குகிறேன்.
வலைதளத்தில் தேடிய போது...செல்லம் [செல்லப்பன்] என்ற தன் பெயர் போடும் முன்பு, தன் மனைவி பெயரான 'விமலா' என்ற பெயரில் ஆரம்ப காலத்தில் வரைந்தார் என்ற சின்ன குறிப்பு மட்டும் சிக்கியது..! விமலா என்ற பெயரில் வரைந்த ஓவியங்கள் எதுவும் வலைதளத்தில் சிக்கவில்லை, மீண்டும் என் சேகரிப்பில் ஏதும் இருக்கா என மீண்டும் தேடிபார்த்ததில்...அபூர்வமான ஒரு சித்திரகதை கிடைத்தது.
குமுதம் வாரபத்திரிக்கையில், 1963-ம் வருடம் வெளிவந்த, ஓவியர் செல்லப்பன் அவர்களின் மனைவி பெயரில் வரைந்த சித்திரக்கதை உங்கள் பார்வைக்கு...
அதே போல் அவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் அமையும் முன்பு, கல்கியில் 1964 ல் வரைந்த சித்திரதொடர் ஒன்றை பற்றிய விவரம் நெட்டில் கிடைத்தது. அதை நீரோட்டம் பிளாக்கில் பார்க்கலாம், ராஜயோகம் என்ற கதைக்கு, ஓவியர்செல்லம் என்ற பெயரில் வந்த சித்திரதொடரின் முதல் பக்கம் இதோ...
கோகுலம் சிறுவர் இதழில் வாண்டுமாமாவின் கூட்டணியில், ஓவியர் செல்லம் வரைந்த சித்திர தொடர் அன்றைக்கு மெகா ஹிட் அடித்தது..! இந்த கூட்டணி வெற்றியை இரும்புக்கை மாயாவியின் அதிதீவிரமான ரசிகர் ஒருவர் கவனித்து கொண்டிருந்தார்..! சிறுவர் இலக்கியங்கள் பிரசுரம் செய்வதில் ரொம்பவே ஆர்வம் கொண்டவர் அவர்..! இரும்புக்கை மாயாவியை தமிழகத்தில் லட்சம் பேருக்கு அன்று தெரியுமென்றால்...இரும்புக்கை மாயாவிகென்று ஒரு ரசிகர் மன்றம் துவங்கினால், அதன் தலைவராக அவரை போடலாம்..! அவ்வளவு தீவிர ரசிகராக அவர் இருந்திருக்கவேண்டும்..! நான் இப்படி சொல்ல காராணம்...
பிரிட்டிஷார் இரும்புக்கை மாயாவி போலவே மின்சாரம் தாக்கினால் மறையும், மின்னல் மாயாவி என்ற சூப்பர் பவர் கொண்ட ஒருவரை உருவாக்கி, அவர் தமிழகத்தில் ஸாகசம் செய்யும் தரமான காமிக்ஸ்களை தமிழகத்திலேயே உருவாக்கினார் என்பதே..!
டெக்ஸ் வில்லர் ரசிகர்களுக்கு, "டெக்ஸ் அமெரிக்க மண்ணில் தான் ஸாகசம் செய்வாராக..? நம் மண்ணில் ஸாகசம் செய்யமாட்டாரா..!!! " என்ற ஏக்கம் ஒவ்வொரு ரசிகருக்கும் இருக்கத்தானே செய்யும்..! அப்படித்தான் இரும்புக்கை மாயாவியின் புத்தகங்களை வெளியிட்டு வந்த பதிப்பாசிரியர் 'முல்லைதங்கராசன்' இரும்புக்கை மாயாவியை தமிழகத்தில் ஸாகசம் செய்ய வேண்டும் என்ற, கனவு கண்டார் என தோன்றுகிறது..!
அவர் கனவுக்கு உருவம் கொடுக்க சரியான ஓவியரை தேர்ந்தெடுத்து, மாயாவியின் மேல் கொண்ட தீராத காதலில், அவரே கதை எழுதி, மறையும் இரும்புக்கை உள்ள மின்னல் மாயாவியை உருவாக்கி காமிக்ஸ் ஆக வெளியிட்டார்..! ஆகஸ்ட்,1976 வருடம், அவர் துவங்கிய மாயாவி காமிக்ஸ் மூலமாக மின்னல் மாயாவிக்கு அட்டகாசமாக உருவம் கொடுக்க, அவர் தேர்ந்தெடுத்த அந்த ஓவியர் திரு செல்லம் அவர்களே தான்..!
உடல் சிலிர்க்கும் சாகசங்கள் ! உயிரோட்டம் நிறைந்த சித்திரங்கள் !
என விளம்பர வாசகங்களுக்கு ஏற்பவே கதையும், ஓவியங்களுக்கும் போட்டிபோட்டன. பின்னாளில் அவை மதி காமிக்ஸாக வந்த அட்டைபடங்களிலும், காமிக்ஸ் படங்களிலும், திரு செல்லம் கைவண்ணம் உங்கள் பார்வைக்கு..! முத்துகாமிக்ஸ் இரும்புக்கை மாயாவியை மறுபதிப்பிலாவது இப்போது பார்க்கிறோம், ஆனால் இது போன்ற ஆர்வலர்களின் படைப்புகள் காலவெள்ளத்தில் புதைந்தே போய்விட்டன...!
இரும்புக்கை மாயாவி போலவே, இரும்புக்கை உள்ள மின்னல் மாயாவியும் மின்னல், கதிர் வீச்சு தாக்கினால் மறைந்துவிடுவார். அவருக்கு சக்தி தேவைபட்டால் இரும்பு விரலில் உள்ள ஆண்டெனா மூலமாக செய்தியனுப்புவார். அந்த செய்தி பால்வெளியில் சுற்றும் மின்னல் கிரகவிண்கலனுக்கு போய் சேரும், அடுத்தநொடி விண்கலனில் இருந்து செயற்கையான ஒரு மின்னல் அவரை தாக்கும்...உடனே அவர் மாயமாய் மறைந்துவிடுவார்..என அட்டகாசமான கற்பனை அம்சத்தை உணர சித்திர சக்ரவர்த்தியின் சிலபடங்கள் இங்கே போட்டுள்ளேன், படித்தால் உடனே புரிந்து கொள்வீர்கள்..!
இது ஓவியபதிவு என்பதால் சின்ன அறிமுகத்துடன் நிறுத்திவிடுகிறேன், மேல் விவரங்களுக்கு கீழ்கண்ட ப்ளாக்கில் நண்பர்கள் மின்னல் மாயாவி பற்றி விரிவாக எழுதியுள்ளார்கள்..!
ரசிக்க சில மின்னல்கள்....
திரு.முல்லை தங்கராசன் மின்னல் மாயாவியை தொடங்குவதற்கு முன்பு, மே,1976-ம் வருடம் 'மணிப்பாப்பா' என்ற 30 காசு விலையில் மாயாஜால கதைகளுக்கும், சிரிப்புகதைகளுக்கும் கொண்ட குட்டி மாத இதழை, அட்டகாசமான மாத இதழ் துவங்க வெள்ளோட்டம் பார்த்தார்..! அதேசமயத்தில் 60 காசு விலையில் வண்ணசித்திரகதைகளுக்கும் அட்டகாசமான ஓவியங்களை வரைந்து கொடுத்தார், தொடர் சித்திர சக்கரவர்த்தி..!
ஜம் ஜாம் ஜாக் கதையின் உள்பக்கங்கள்...
சித்திரங்கள் பார்த்தாலே கதைகளை படிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் வசீகரம்படைத்தவைகள் திரு செல்லத்தின் ஓவியங்கள் என்பதை நீங்களும் படங்களை பார்த்ததும் உணர்ந்திருப்பிர்கள்..!
மணிப்பாப்பா சிறுவர் இதழில் வந்த சில சிரிப்புகள்...
1979-ம் வருடம் ஒரு முக்கியமான வருடம்..! காரணம் அடுத்தபடத்தை படியுங்கள்...
1979-ம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் வருடமாக அறிவிக்கப்பட்டதை, அதற்கென்று சில சலுகைகள் அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து, திரு முல்லை தங்கராசன் மிக சரியாக அந்த ஆண்டை பயன்படுத்திக்கொண்டார்..! சிறுவர்களுக்கான ஒரு அட்டகாசமான வண்ண மாத இதழை ஒன்றை துவங்கினார். அந்த இதழுக்கு ஆஸ்தான ஓவியர் திரு செல்லம் அவர்களே..!
எனக்கும் அந்த ஆண்டு முக்கியமானதே..! காரணம், சர்வதேச குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எல்லா பள்ளிகளிலும் கதை கட்டுரைகள் எழுதும்,ஓவியங்கள் வரையும் போட்டிகள் நடத்த அரசு அறிவிப்புகள் வந்தன..! அப்படி பள்ளியில் நடந்த ஓவிய போட்டியில் கலந்து கொள்ளவைக்கவேண்டியே என் தந்தை பள்ளிக்கு அழைத்து ஓவிய பொருட்கள் வாங்கிதர சொன்னார்கள்..! வாட்டர் கலரிங்' வாங்கித்தர சொல்லியும், அதை பயன்படுத்த சொல்லிதரவும் சொன்னார்கள்..! அதை வாங்கித்தரவே என்னை 'சாமுண்டி சூப்பர் மார்கெட்டிற்கு என் தந்தை அழைத்து சென்றார்..! அங்கு சென்றதால் தான் அந்த லைப்ரரியில் tin tin பார்க்கமுடிந்தது. அந்த தாக்கம் 'பலேபாலுவின் அறிமுகம்...அதை தொடர்ந்து காமிக்ஸ் உலகில் என் பிரவேசம்..!
நன்றி: டெக்ஸ் விஜயராகவன்
சரி ஓவியர் ப்ளாஸ்பேக்கிற்கு வருவோம், திரு முல்லை தங்கராசன் துவங்கிய அந்த சிறுவர் இதழ் 'ரத்னபாலா'..! அந்த இதழ் வருகையை விளம்பரபடுத்த ஓவியர் செல்லம் அவர்கள் கைவண்ணத்தில், ஒரு கோலாகலமான வண்ண விளம்பர போஸ்டர் சுவரொட்டியில் அழங்கரித்தது..! அது இன்றும்கூட பசுமை, காரணம்..தெரு முனையில் இருக்கும் கோவில் சுவரில் சினிமா போஸ்டர்கள் ஓட்டப்படுவது வழக்கம். கோவில் மணி 'டங்..டங்' என ஒலிக்கத்துவங்கியதும், அரைடவுசரில் ஒரு பட்டாளம் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் வரிசையில் நின்று வாங்க போட்டி போடும்..! அப்போது தவறாமல் சுவரொட்டியை பார்ப்பேன். வித்தியாசமாக நான் ஒருநாள் பார்த்த சுவரொட்டி என்னை மயக்கியது..! அந்த விளம்பரம்...
'ரத்னபாலா' இதழ் விளம்பரத்தை தொடர்ந்து, எனக்கும் சீனியர்கள் அந்த வண்ணஇதழில் வந்த கதையை சிலாகித்து சொல்லகேட்டிருக்கிறேன். அன்று பார்த்த செல்லம் ஓவியங்கள் என் ஓவிய ஆர்வத்தையும், காமிக்ஸ் மோகத்தையும் சமமாக வளர்த்தன. பள்ளியில் என் ஓவியம் ஏன் பாராட்டப்பட்டது...??? சகல வசதியுடன் தனியாக அமரவைத்து, அதுவும் தரை பலகையில் அமரும் என்னை, முதல்முறையாக ஆசிரியர் அமரும் மேஜை நாற்காலியில் அமரவைத்து, ஏன் வரைய செய்தார்கள்...? என அப்போது புரியவில்லை. பின்னாளில் பரிசாக 'பஞ்சதந்திரகதைகள்' புத்தகம் ஒன்று கொடுத்து மேடையில் பாராட்டியபோது...உணர்ந்த பாராட்டு தந்த சுவை, அந்த வயதில் திரும்ப திரும்ப மனசு கேட்டும் சுவை..! அந்த சுவைக்காக செய்த, நேர்த்தியான உழைப்பு பின்னாளில் பழக்கமாகவே ஊறிவிட்டது..!
நேர்மையான, நேர்த்தியான உழைப்பு ஏற்படுத்தும் தாக்கம், மனிதர்களின் மனதில், தனி சிம்மாசனத்தில் அமரவைக்கும் என்பதற்கு தொடர் சித்திர சக்கரவர்த்தி திரு செல்லம் ஒரு கம்பீரமான உதாரணம்..!
பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால், ஓவியரின் நாலுகால் பாய்ச்சல் படைப்புகள் பற்றி அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்..!
நட்புடன்,
மாயாவி. சிவா
வெளிநாட்டு காமிக்ஸ் மட்டுமே காமிக்ஸ் என்று நினைப்பவர்கள் அந்த நினைப்பால் எத்தனை மண்ணிண் மைந்தர்களை ஆதரிக்காமல் கை விட்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.சிறுவர் இலக்கியத்தில் விஜயனுக்கு என்றுமே இடம் கிடையாது.சண்டை,துப்பாக்கி இவற்றுக்கு சிறுவர் இலக்கியத்தில் இடமே கிடையாது.ரத்னாபாலா,பாலமித்ரா பொன்னி காமிக்ஸ் என்று பல இதழ்களில் இந்த கூட்டணி வெற்றிகரமாக இருந்தது.அருமையான பதிவு மாயாவி.பாராட்டுகள்.!87களில் ஆறு காமிக்ஸ்களை நடத்திய சிரிகாந்த்,ஐஸ்வர்யா பற்றி ஒரு தேடலை தொடங்கலாமே மாயாவி.!
ReplyDeleteஐயா,
Delete//ரத்னாபாலா,பாலமித்ரா பொன்னி காமிக்ஸ் என்று பல இதழ்களில் இந்த கூட்டணி வெற்றிகரமாக இருந்தது.// ரத்னபாலாவில் முல்லை தங்கராசன் இருந்தது ஒரு வருடம் மட்டுமே. அதன் பிறகு தொடர்ந்தவர் தினமணியின் எடிட்டர் வாசுதேவன் ஐயா அவர்கள் (மைத்ரேயன் சாரின் தந்தை).
பாலமித்ராவுக்கும், பொன்னி காமிக்சுக்கும் இந்த இருவருக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் விளக்கினால், நல்லது.
ஓவிய ஆசிரியராக பணி ஓய்வு பெற்ற ஸ்ரீகாந்த் எந்த காமிக்சையும் நடத்தியது கிடையாது.
நீங்கள் பொன்னி காமிக்சை சொல்கிறீர்கள் என்றால், அது துவக்கப்பட்டது 1973, April மாதத்தில். ஓவியர் கிருஷ்ணாவின் அட்டைப்படத்துடன் வந்த அந்த காமிக்சை நடத்தியவர் குருசாமி ஐயா அவர்கள். அவரது மரணம் தான் 1992ல் அந்த காமிக்சின் 19 வருட தொடர் வெளியீட்டிற்கு முடிவு கட்டியது.
முதல் 80+ இதழ்களுக்கு ஓவியம் தீட்டியது கிருஷ்ணாவும், ச். ராஜா மற்றும் விந்தன் ஐயா அவர்களுமே. பொன்னி காமிக்சில் ஸ்ரீகாந்த வருகை தந்தது பாலமோஹன் அவர்கள் கதையெழுத ஆரம்பிக்கும் போது தான்.
No offence.
@கார்த்திக்
Deleteவழக்கமான உங்கள் முதல் வருகைக்கும், திரு கிங் விஸ்வாவை பதிலிடவைத்தமைக்கும் நன்றி..!
நக்கீரன்,ஜூ.வி, குமுதம் ரிபோர்ட்டர்...போன்ற அரசியல் பத்திரிக்கையில் சுய முன்னேற்ற கட்டுரைகள், சமையல் குறிப்புகள் வருவதில்லை என்றும், கோகுலம், சமபக், அம்புலிமாமா, பாலமித்திரா இவற்றில் ஏன் சமூக அக்கிரமங்கள், அரசியல் அராஜகங்கள் வருவதில்லை என கேட்க முடியுமா..? அர்த்தம் தான் உள்ளதா...?? அதுபோலதான் திரு விஜயனிடம் நீங்கள் எதிர்பார்ப்பதும்..! 43 வருடங்களாக அவர்கள் குழுமம் வகுத்துக்கொண்ட எல்லையில் அடித்து விளையாடுகிறார்கள். கிரிக்கெட் கிரவுண்டில், போஸ்கட் பால் விளையாடமாட்டேன் என்கிறார்கள் என எங்கோ உள்ள ஆதங்கத்தை, இதில் காட்டினால் எப்படி..!
@ கிங் விஸ்வா
Deleteதவறான முடிச்சியை சரியான முறையில் அவிழ்த்தமைக்கு நன்றிகள்..!
ஜாம் ஜிம் ஜாக் மொத்தம் எத்தனை கதைகள் வந்தது மாயாவியாரே
ReplyDeleteஒவ்வொரு கதைகள் பற்றிக்குறிப்பிடும்போது அதன் மொத்தக்ககதைகள் எத்தனை என்று குறிப்பிட்டால் வசதியாக இருக்கும்
நன்றி
முடிந்தால் கதைகளின் எண் ம வருடங்களை வரிசை வாரியாக குறிப்பிட்டால் நன்று
Deleteமுடிந்தால் கதைகளின் எண் ம வருடங்களை வரிசை வாரியாக குறிப்பிட்டால் நன்று
Deleteஜாம் ஜிம் ஜாக் மொத்தம் எத்தனை கதைகள் வந்தது மாயாவியாரே
ReplyDeleteஒவ்வொரு கதைகள் பற்றிக்குறிப்பிடும்போது அதன் மொத்தக்ககதைகள் எத்தனை என்று குறிப்பிட்டால் வசதியாக இருக்கும்
நன்றி
ஜாம் ஜிம் ஜாக் மொத்தம் எத்தனை கதைகள் வந்தது மாயாவியாரே
ReplyDeleteஒவ்வொரு கதைகள் பற்றிக்குறிப்பிடும்போது அதன் மொத்தக்ககதைகள் எத்தனை என்று குறிப்பிட்டால் வசதியாக இருக்கும்
நன்றி
@டெக்ஸ் சம்பத்
Deleteஜாம் ஜிம் ஜாக் சொற்ப்ப இதழ்களே 60 காசு விலையில் தனியாக வந்தன. பின்னர் ரத்னா பாலா மாதஇதழ்களில் இலவசஇணைப்பாக சில வந்தன. எனக்கு தெரிந்தவை அவ்வளவே..!
kalakki irukkireergal thozhare!
ReplyDeleteசைமன் சார்.!உங்கள் நூலகம் எங்கு உள்ளது.? நாங்களும் வரலாமா.?
Deleteமாயாவி சிவா.!அருமையான பதிவு .!ஆர்ச்சியின் கால எந்திரத்தில் ஏறி என் இளமை பருவத்தை மீண்டும் பார்த்தது போன்ற ஒரு சந்தோசம்.! இதில் பாக்கெட் சைஸ் புத்தகமான வௌவால் மனிதர்கள் கதை மட்டும் என்னிடம் உள்ளது.!(அதில் ட்வின்ஸ் சிங்கக்குட்டிகள் கதைகூட இருக்கும்.!) சூப்பர்..இந்த கதைகளையும் மறுபதிப்பு செய்ய வாய்ப்புகள் உள்ளதா.? ராயல்டி கஷ்டமெல்லாம் கிடையாதல்லவா.?
ReplyDeleteமாயாவி சிவா சார்.! எடிட்டர் பிளாக்கிற்கு வாருங்கள்.!உங்களை விரைவில் எதிர்பார்க்கின்றோம.!
ReplyDeleteமாயாவி சிவா சார்.!உங்களிடம் இப்பதிவில் மற்றும் இங்கு வெளியிடப்பட்ட சில பக்கங்கள், ,,ஸ்கேன் செய்யப்பட்ட புத்தகங்கள் உங்களிடம் அனைத்தும் உள்ளதா.?
ReplyDeleteவாட்ஸ்அப் மூலம் எனக்கு இந்தபதிவை தெரியப்படுத்தியதற்கு நன்றி சார்.!_________/\_______________.!
ReplyDelete@ திரு MV
Deleteமடிபாக்கம் வெங்கடேஸ்வரன் அவர்கள் வந்தாலே தளம் களைகட்டி, கமெண்ட்ஸ் மழையாக கொட்டும்... அவரும் டூர் அடிக்க போயாச்சோ...என திரு விஜயன் அவர்களே கேட்டும் கமெண்ட்ஸ் மழையில் லயன் பிளாக்கை நனையவைக்கும் நீங்க, என்னையும் நனையவைத்தமைக்கு நன்றிகள்..!
*அந்த மின்னல் மாயாவி கதைக்கு யார் இன்று உரிமையார் போன்ற விவரங்கள் தெரியவில்லை.
* பதிவிட்டவைகளில் ஏதோ சில இருக்கின்றன..!
*இந்த பழைய நினைவலைகளை ஒரு வழி பண்ணும்வரையில், வெளியே தலைகாட்டாமல் செய்து முடித்துவிட்டு வந்துவிடுகிறேனே..!
வாட்ஸ்அப் மூலம் இந்த பதிவை தெரியப்படுத்தியதற்கு நன்றி சார்.!
ReplyDeleteஃபென்டாஸ்ட்டிகோ.
ReplyDeleteஅருமையான பதிவு.
அடடே..!
Deleteஅட்டகாஸ்..!
செம..!
பாராட்டுசொல் வரிசையில்...'ஃபென்டாஸ்ட்டிகோ' என்ற புதிய பாராட்டுசொல்..! ஹாஹா..தாங்ஸ்கோ..!
அட்டகாசமான பதிவு... உண்மையில் இதை ஆவணப்படுத்தும் முயற்சியாக கொள்ளலாம்.
ReplyDelete@ ரமேஷ்
Deleteஆவணபடுத்தும் முயற்சி என்றால் அடக்கமா இருக்கணுமே..! பதிவு அப்படியா இருக்கு..!?!?!
[ கண்ணடிக்கும் ஜாம் படங்கள் நான்கு..]
அழகான அருமையான மலரும் நினைவுகளை மனதில் கிளப்பிய பதிவு ..அருமை மாயாஜீ ....தொடருங்கள் ..:-)
ReplyDelete@ பரணிதரன்.K
Deleteமெய்யாலுமே தொடரவா தலீவரே..!?!?! [ப்ளாக் வால்போஸ்டரில் உள்ள எமப்புரட்டன் வருகையை பார்த்து தலைதெறிக்க ஓடும் படம் ஒன்று.]
நல்ல முயற்சி
ReplyDelete@ கி.கி
Delete:-)))
மாயாவி சிவா!
ReplyDeleteவார்த்தைகளில்லை நண்பரே!
(நேரில் பேசுவோம்)
@ கிட் ஆர்ட்டின் கண்ணன்
Deleteகாமிக்ஸ் கலைவாணரே அப்போ...உங்களிடம் நிறைய தகவல்களை எதிர்பாக்கலாம்..! பேப்பர், பேனாஉடன் குறிப்பெடுக்க காத்திருக்கிறேன்..! மீட்டருக்கு மேல கொஞ்சம் பாத்துபோட்டுகொடுங்கோ..ஹீ..ஹீ..! :P
நல்ல பதிவு மாயாவி சார்...
ReplyDeleteசிறுவர் இலக்கியத்தில் உங்களுக்கு இவ்வளவு ஈடுபாடா?.... அசத்தல் படங்கள்.... நீங்கள் வரைந்த ஓவியங்கள் இணையுங்களேன்.......
விஜயன் சார் நடத்தும் காமிக்ஸ் மட்டுமே படித்து வந்ததால் இதுபோன்ற உள்நாட்டு தயாரிப்பகள் ஏனோ என்னை வசீகரிக்கல....
ஓவிய தரமும் சற்றே பின்னங்கால் பிடரியில் பட ஓட வைப்பது இவற்றின் முக்கியமான குறைப்பாடு.....
@ சேலம் இரவுகழுகார்
Delete* சொல்லபோனால் இன்றளவும், சிறுவர்மலரில் வரும் குட்டிகதைகள் படித்து ரசிக்கும்படியான வாண்டு உள்ளே வட்டமிட்டுக்கொண்டுதான் இருக்கிறான்..!
* ஏற்கனவே நான் செய்யும் ரகளையால...நற..நற..நறவென பற்கள் போடும்சத்தம் நெருங்கிட்டே வருது..! இதில் வரைஞ்சத்தை போட்ட கிழிச்சுடுவாங்க..அடுத்த பதிவில் போட பார்க்கிறேன்..!
//இதில் வரைஞ்சத்தை போட்ட கிழிச்சுடுவாங்க.//
Deleteசும்மா போடுங்க மாயாவி...
ReplyDeleteஓவியர் செல்லம் மற்றும் முல்லைத் தங்கராசன் அவர்களின் கூட்டணியில் அபாரமான பல காமிக்ஸ் புத்தகங்கள் அன்றைய நாட்களிலேயே வெளிவந்திருப்பது நிறையவே ஆச்சர்யப்படுத்துகிறது! இவைகளில் ஏதோ ஒன்றிரண்டை சிறுவயதில் நான் படித்திருப்பதாக ஞாபகம்!
உங்களுடைய தீவிரமா சேகரிப்புகளுக்கும், சேகரித்தவைகளைப் பாதுகாத்ததற்கும், இந்த மெகா உழைப்புக்கும் நிச்சயமாய் எழுந்து நின்று கைதட்டலாம், மாயாவி அவர்களே!
உங்களோடு ஒப்பிட்டால் என்னுடைய காமிக்ஸ் காதல் எவ்வளவு 'மேம்போக்கானது' என்பதை உணர முடிகிறது!
@ இத்தாலி விஜய்
Deleteஇந்த எறும்பின் எடைஅளவு தாண்டி செய்யும் சேட்டையை, பாராட்டும் உங்கள் அன்பு ஆழம் நல்லவே உணர்கிறேன், ஆனா அந்த ஒப்பிடல் மட்டும் நெருடலாக இருக்கு..! இவ்வளோ பெரிய பாறங்கல்லை வழியில வெச்ச..சுற்றி போவதா..??? அதில் ஏறி போவதா...ன்னு இந்த எறும்புக்கு செம கன்பியூஸ்..!
வாவ்! எங்கிருந்து கிடைக்கிறது இவ்வளவு தகவல்கள் உங்களுக்கு மட்டும்? வாயடைத்துப்போய் நிற்கிறேன்!
ReplyDelete@ பிருந்தாபன்
Deleteஆர்வம் என்னும் சின்ன ஊசி தான் பெரும்பாலும், வாயை சிறிது நேரம் தைத்து வியக்கவைக்கிறது..! அடுத்து வரும் பதிவுகள் இன்னும்..இன்னும்...இன்னும்..ஹாஹா..!
அன்பின் சிவா,
ReplyDeleteசெல்லமின் கைவண்ணத்தில் இத்தனை கிளாசிக் அட்டைகளை ஒரு சேர இன்றே பார்க்க முடிந்தது. கருப்பு வெள்ளை, இரு வண்ணம், முழு வண்ணம் என்று ஒவ்வொன்றிலும் கலக்கியிருககிறார். முக்கியமாக வண்ண கலவைகள் அன்றைய காலத்தின் ரசிப்புக்கு ஏற்ப பளிச்சென மின்னுவது Nostalgia :)
மதி காமிக்ஸ் நான் பழைய கடைகளில் பார்க்கும்போது, பாக்கெட் சைஸ்களில் பரிணாமம் அடைந்திருந்தது, எனவே இவைகள் அனைத்தும் என்னுடைய காலகட்டத்திற்கு ரொம்ப முந்தி என்று தெரிய வருகிறது.
மற்றவர்கள் கூறியபடி, ஒவ்வொரு கிளாசிக் புத்தகத்தை பற்றி பதிவிடும் போது, கூடவே அந்த வரிசையில் எத்தனை புத்தகங்கள், மற்றும் வருட விவரங்களையும் தெரிவித்தால் சிறப்பாக இருக்கும். தகவல் களஞ்சியமான உங்களிடம் இல்லாததா ? :)
@ அருமை ரபீக் ராஜா
Deleteஅந்த வண்ண கலவையை ரசிப்பதில் நானும் உங்களுடன் கைகோர்கிறேன்..! மற்றபடி கிளாசிக் புத்தகங்கள் ஒரு திட்டப்படி மாதவரிசைபடி வந்ததாக தெரியவில்லை. பார்க்கவே அறியதை பதிவிட்டலே போதும் என நினைத்தேன். வருடவிவரங்கள் முடிந்தளவுக்கு அப் டேட் செய்கிறேன்..! ஏதோ தானாக அமைந்த ஒறிரண்டு விசயத்தை வைத்து, தகவல் களஞ்சியம்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவர்..! இப்படி ஏதும் பட்டம் கட்டி ஓரகட்டி விடாதீர்கள் ரபீக்..!
மாயாவி சிவா.!
ReplyDeleteஉங்கள் பதிவை படித்தபின் ஒருஏக்கம் மற்றும் மனமும் பாரமாகிறது .நீங்கள் இங்கே குறிப்பிட்ட புத்தகங்கள் பெரும்பாலும் படித்துள்ளேன்.! ஆனால் சேகரிக்கவில்லை.! அன்று சுதேசி காமிக்ஸின் அருமை புரியவில்லை.!
விஷ்வா சார்.!உங்கள் விளக்கம் அருமை.!
@ MV அவர்களே..!
Deleteநம்மை இளமையாக வைத்திருக்க உதவும் நல்ல பஸ்பம் சிறுவயது நினைவுகளை பாதுகாப்பதுதான்..! அதை நீண்ட இடைவெளி விட்டு நினைவுகூறும் போது...இப்படி மனம் கணமாவது இயல்பே..! எனக்கும் பல சமயங்களில் அப்படியே..!
விரல் மனிதர்கள் படித்துள்ளேன். மின்னல் மாயாவியின் சில கதைகள் படித்த ஞாபகமுள்ளது. மின்னல் மாயாவியின் கதாபாத்திரம் ; இரும்புக்கை மாயாவியின் அப்பட்டமான காப்பி என்பதாக தோன்றியதால் அதன் மீது பெரிதாக ஈர்ப்பு ஏற்படவில்லை என்பதே உண்மை.
ReplyDeleteமீரான்,
Deleteஒருவேளை நீங்கள் பெண்டுலம் ப்ரெஸ் வெளியீட்டில் வந்த H G Wellன் த இன்விசிபில் மேன் காமிக்சை படித்திருந்தால், உங்களுக்கு இரும்புக்கை மாயாவியே பிடித்திருக்காதோ?
நலமா ஜி ! என்னை ஞாபகம் வைத்திருபீர்கள் என நம்புகிறேன்.
Delete//ஒருவேளை நீங்கள் பெண்டுலம் ப்ரெஸ் வெளியீட்டில் வந்த H G Wellன் த இன்விசிபில் மேன் காமிக்சை படித்திருந்தால், உங்களுக்கு இரும்புக்கை மாயாவியே பிடித்திருக்காதோ? //
இப்படி ஒரு சந்தேகத்திற்கே வழி இல்லை. ஏனெனில் தமிழை தவிற வேறு மொழிகளில் கதைகள் வாசித்து எனக்குப் பழக்கம் இல்லை..
நீங்கள் கூறுவதிலிருந்து இரும்புக்கை மாயாவியும் இன்னொன்றின் காப்பி என்று புரிகிறது.
நலமே ஐயா.
Deleteஇந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால், நீங்கள் தி இந்து நாளிதழில் இரும்புக் கை மாயாவி குறித்தான எனது ப்ரொபைல் கட்டுரையை படிக்கவில்லை என்றே தெரிகிறது. அதன் முதல் பத்தியிலேயே இரும்புக் கை மாயாவி என்ற கதாபாத்திரம் எவ்விதம் வடிவமைக்கப்பட்டது? என்பதை எழுதியிருக்கிறேன்.
//நீங்கள் கூறுவதிலிருந்து இரும்புக்கை மாயாவியும் இன்னொன்றின் காப்பி என்று புரிகிறது./
ஒரு க்ளூ: அது ஒரு திரைப்படமும் கூட.
மற்றபடி அது காப்பி அல்ல, இன்ஸ்பிரேஷனே.
தினத்தந்தியை மட்டுமே அவசரகதியில் தினம் புரட்டி விட்டு செல்வதால் உங்களுடையை கட்டுரையை வாசிக்கும் வாய்பில்லாமல் போனது,.
Deleteஅந்த கட்டுரையில் ஆர்வம் ஊட்டும் விஷயம் இருப்பதாக தோன்றுவதால் வாசிக்க விரும்புகிறேன். அதற்கான இணைய இணைப்பு ஏதாவது இருந்தால் தந்து உதவலாமே !
@ நண்பர் மீரான் அவர்களே..!
Deleteநீங்கள் கேட்ட விஸ்வா கட்டுரை பார்க்க..இங்கே'கிளிக்'
எல்லா கற்பனைக்கும் பின்னால் ஒரு படைப்பின் பாதிப்புகள் இருக்கத்தான் செய்கிறது..! நம் இந்திய மண்ணில் எழுத்தப்பட்ட எவ்வளவோ மாயாஜால கதைகள், ராஜாகாலத்து கதைகளின் பதிப்பை, தாக்கத்தை தி லார்ட் ஆப் தி ரிங், ஹாரி பார்ட்டர், போன்ற மெகாஹிட் படங்களில் இழையோடுவதை உணரலாம். லயன் காமிக்ஸில் இப்போது வந்த 'தோர்கால்' கதையிலும் அதை உணரலாம்..!
நம் மண்ணின் தேசிய வியாதி மறதி..! அதை சரியாக பயன்படுத்தி, நம்மை நமக்கே அறிமுகபடுத்தி ஆச்சரியபடவைப்பது தான் ஆங்கிலேயர்களின் சாமார்த்தியம்..!
This comment has been removed by the author.
ReplyDelete@மாயவி சிவா, சிறந்த ஓவியர்களின் ஆரம்பகாலப் படைப்புகளைக் காண்பது ஒரு பொக்கிஷத்தைத் திறப்பதுபோன்ற உணர்வைத் தரும்! தங்களுடைய பதிவு அந்த உணர்வைத் தருகிறது! முயற்சிகளுக்கும் உழைப்புக்கும் நன்றி!
ReplyDelete1990கள் வரை செல்லம் முதலான உள்ளூர் ஓவியர்களின் சித்திரங்கள் அக்காலச் சிறுவர்களின் வரையும் ஆர்வத்திற்கு மறைமுகமான, ஆனால் ஆழமான அடிதத்தளமாக இருந்துவந்ததை பள்ளியில் சக மாணவர்களிடம் கண்டிருக்கிறேன்! :)
@ ரமேஷ் குமார்
Deleteஇப்படி பழைய பத்திரிக்கை ஓவியங்களை சேகரிப்பதும், அதை காலஇடைவெளிகொரு முறை எடுத்து பார்த்து ரசிப்பதும் ஒரு தவறான பழக்கமோ..வீண் வேலையோ என 2005 பின் கைவிட்டு விட்டேன்..! ஓவியங்கள் கூட முன்பு வந்த அளவிற்கு நுணுக்கமானதாக வருவதுமில்லை..!
கிராபிக்ஸ் நாவல்.டெக்ஸ்,வேதாளார் போன்ற அந்நிய படைப்புகளின் போது வந்த பார்வையாளர்களின் வருகையில், பாதி கூட இந்த சூப்பர் ஓவியரின் படைப்பு பற்றிய பதிவை பார்வையிட வரவில்லையே என்ற ஆதங்கம்இருந்தது..! சேகரித்து காலத்தை வீண்செய்தோம்... இப்போது அதை பதிவிட்டு காலத்தை வீண் செய்கிறோமோ...என்ற சோர்வும், குழப்பமும் வாட்டிய நேரத்தில்..ரபீக், மீரான், விஸ்வா, மற்றும் உங்கள் வருகை கொஞ்சம் தெம்பாக உள்ளது..! நன்றிகள்..!
பல தகவல்கள் உள்ள சிறப்பான பதிவு மாயாவி சார். பலே பாலுவும் பாட்டில் பூதமும் கதை காமிக்ஸ்கள் எனக்கு அறிமுகமான காலத்தில் படித்திட்ட ஒரு கதை. ஒவ்வொரு கட்டத்தையும் பல நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருப்பேன். இதன் சித்திரஙகள் அவ்வளவு அழகு மட்டுமல்ல அவ்வளவு நுணுக்கமானவையும் கூட. இன்றைய குழந்தைகள் இதழ்களில் இந்த நுணுக்கம் சுத்தமாக இல்லை.
ReplyDeleteசெல்லம் அவர்கள் தனது இறுதி காலங்களில் வரைந்த ஓவியங்கள் பற்றி ஏதேனும் குறிப்பு உள்ளதா?
@ சித்திரக்கதை சிவ்..!
Deleteகிட்டதட்ட 18 பதினெட்டு வருடங்களாக பக்கவாதத்தால் பாதிப்படைந்து, ஒரு நேர்கோடு கூட போடமுடியாமல் ஆண்டவர் அவர் கைகளை கட்டிவிட்டதுதான் சோகம்..! இந்த தகவல் குங்குமம் வார இதழில் படித்தேன்..! கட்டுரை நண்பர் விஸ்வா எழுதியது..!
// கிட்டதட்ட 18 பதினெட்டு வருடங்களாக பக்கவாதத்தால் பாதிப்படைந்து, ஒரு நேர்கோடு கூட போடமுடியாமல் ஆண்டவர் அவர் கைகளை கட்டிவிட்டதுதான் சோகம்..! //
Deleteசோகமான விஷயம்தான். 18 ஆண்டுகளென்றால் கிட்டதட்ட 1997 முதல் என்றாகிறது.
//செல்லம் அவர்கள் தனது இறுதி காலங்களில் வரைந்த ஓவியங்கள் பற்றி ஏதேனும் குறிப்பு உள்ளதா?//
@SIV,
1992-93 களில் 'பிக்கிக்கா' என்ற சிறார்களுக்கான வாரப் பத்திரிகையில் செல்லம் அவர்களின் இரண்டு தொடர் படக்கதைகளை வாசித்திருக்கிறேன். "மிரட்டோ" என்ற சிம்பன்ஸி குரங்கு மற்றும் "சிண்டுஜி" (பெயர் சரியாக ஞாபகமில்லை) என்கிற சாமியார் மற்றும் சீடர்களின் காமெடி சித்திரக்கதைகள் அந்த வயதில் அற்புதமாகத் தோன்றியது.
அதன் பின்னரும் செல்லம் நிறைய வரைந்திருக்கக் கூடும் என்றாலும் இந்தப் படக்கதைகள் அளவுக்கு சிறப்பாக எதுவும் என் கண்ணில் அகப்படவில்லை.
இதனுடன் "பிக்கிக்கா" இதழ் பற்றியும் ஒரு விஷயத்தைப் பகிர்வது முக்கியம். சிறார் இதழ்கள் கிட்டதட்ட அனைத்தும் பின்தங்க ஆரம்பித்த காலக்கட்டத்தில் 'செல்லக்குட்டிகளின் வார இதழ்' என்ற கேப்ஷனுடன் குதூகலமாக, வாராவாரம் கன்ஸிஸ்டன்ட்டாக உள்ளூர் படைப்பு கதைகளுடன் ஆச்சரியப்படுத்திய இதழ் பிக்கிக்கா. இணையத்தில் இந்த இதழ் பற்றிய தகவல்களைக் காண இயலாதது வருத்தமாக உள்ளது. பிக்கிக்காவின் எல்லா இதழ்களையும் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு இப்போது பகிர்வதற்கு ஒன்றும் இல்லாத நிலையில் வருத்தமாக உணர்கிறேன்.
@ ரமேஷ் குமார்
Deleteநீங்கள் குறிப்பிடும் தொடர் பெயர் 'குறும்புகாரன் சிட்டான்'..! அந்த தொடரில் வரும் சாமியார் பெயர்கள் 'கொடுக்கா புளி' 'இடுக்காத புளி' 'உறங்காப் புலி' என வரும், நியாபம் வருகிறதா..!!! பரமார்த்த குரு கதைகள் போலவே இருக்கும்..!
@mayavi. siva, ஞாபகப்படுத்தியதற்கு நன்றி! குறும்புகாரன் சிண்டான், கதைக்குள் சிண்டுஜி என அவ்வப்போது வரும்!
Deleteஐயா,,
ReplyDeleteமேலே இருக்கும் கமெண்ட்டுகளை படிக்கும்போது, நீங்கள் யாருமே சென்ற மாதத்திய சுட்டி விகடனை படிக்கவில்லை என்பது தெரிகிறது.
சென்ற மாதத்திய சுட்டி விகடனில் அவரைப்பற்றிய Tribute கட்டுரையில் அவர் கடைசியாக சித்திரக் கதை வரைந்தது சுட்டி விகடனில் தான் என்று சொல்லி இருந்தேனே? வேண்டுகோளுக்கிணங்கி 2003ல் வந்த அந்தக் கதையை, விகடன் நிறுவனம் அதே இதழில் மறு பிரசுரமும் செய்ததே?
வாவ் நன்றி!
Delete@கிங் விஸ்வா
Deleteஆமாம்..இல்ல..! இதுகுறித்து பேசியதை மறந்து விட்டேன்..! அந்த குங்குமம் கட்டுரையின் வரிகளான...
//1997ம் ஆண்டு பக்கவாதத்தால் தாக்குண்ட செல்லம், அதன்பின்னர் முழுநேர ஓவியப்பணியில் இருந்து ஓய்வு பெற்றார். // என நீங்கள் எழுதியது அப்படியே மனதில் ஒட்டிக்கொண்டது..!
காமிக்ஸ் பற்றிய உங்கள் தேடல் அலாதியாகவுள்ளது...
ReplyDeleteஇப்பதிவைப் படிக்கும் போது நானும் "அந்த காலத்திலேயே" பிறந்து இருக்கலாமோ என்ற ஏக்கமும் தோன்றுகிறது..!
@ கவிந்த்
Deleteஉங்கள் ஏக்கம் போலவே எனக்கும் பலமுறை தோன்றியதுண்டு...அதில் நான் கண்ட ஒரு சின்ன யதார்த்தம் சொல்லவா..! அன்று நீங்கள் நான் பிறந்திருந்தாலும் கூட, அதற்கு முந்தய படைப்புகளின் மேல் இதே ஏக்கம் தோன்றும்..! இன்றைய படைப்புகளை இன்று படித்து ரசித்து அனுபவிப்பதும், அன்றைய படைப்புகளை இன்று நினைத்து வியந்து சிலாகிப்பதும் தான் சரியாக இருக்கும்..! இந்த விஷயத்தில் தடம்புரண்டால், அன்றைய விசயங்களை இன்று ரசிக்க முடியாத ஜீரண கோளாறும், இன்றைய விஷயங்களை அனுபவிக்க முடியாத குமட்டலுமாக ரசிப்புத்தன்மை சிதைந்து விடும்..!
மாயாவி சார்,
ReplyDeleteஅருமை அருமை!!!!
எங்களுக்கு சித்திரகதை என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் பழைய காமிக்ஸ் ஸ்கேன்+விபரம் என்றால்,
"கரும்பு தின்ன கூலி" போல் உள்ளது.
நிச்சயம் உங்கள் உழைப்பு வீணாகது.
ஆவணமாக பயன்படும்.
தொடர்ச்சிக்காக காத்திருக்கும்...
- ஹசன் (பிரான்ஸ்)
@ ஹசன்
Deleteநன்றிகள் ஹசன்..! பிரான்ஸ் சென்றுவிட்டிர்களா..? இன்னும் காரைக்காலில் உள்ளீர்களா..?
@ நண்பர்களே..!
ReplyDeleteமணிப்பாப்பா & மாயாவி காமிக்ஸ் துவங்கிய வருடம், மாதம் குறிப்பை பதிவில் சேர்த்துள்ளேன்..!
...ரத்னபாலா... டைம்மெஷினில் அந்த வயதிற்கே கூட்டிச்சென்று விட்டீர்கள்... அந்தப்புத்தகத்தின் வாசனை கூட நாசியில் நிரடுகிறது இப்போது... மிக்க நன்றிகள் மாயாவி சிவா...
ReplyDelete@SVV
Deleteவணக்கங்கள் வெங்கடேசன்..! அடுத்த பதிவில் ரத்னபாலா உள்பக்கங்கள் பார்த்து, இன்னும் நிறையவே நினைவலைகள் உங்கள் மனதில் நிரம்பி வழியும்..! கொஞ்சம் காத்திருங்கள்..!
வழக்கம் போல நேர்த்தியான அதே தெளிவான தகவல் களஞ்சியம் போன்ற பதிவு மாயாவிஜி . உங்களுக்கு காமிக்ஸ் குறித்து பதிவிட நேரம் எப்படி ஒதுக்கீடு செய்ய முடிகிறது என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு . இந்த பதிவிற்கும் தொடரும் தேடலுக்கும் எனது நன்றி ஆயிரம் . மேலும் காமிக்ஸ் என்சைக்ளோபீடியா நண்பர் திரு கிங் விஸ்வா இங்கு களம் இறங்கி இருப்பது மகிழ்ச்சி தருகிறது .
ReplyDelete@ POSTAL PHOENIX
Deleteஉங்கள் சந்தேகங்கள் நியாயமே..! ஆனால் கூட்டு முயற்சியிலோ, ஆள்வைத்தோ இதை செய்யவில்லை..! காமிக்ஸ் எனக்கு செய்த பல உதவிகளுக்கு ஈடாக, பல வெளியுலக சந்தோசங்களை தியாகம் செய்து கடமையாக உழைக்கிறேன்..! முக்கியமாக உங்களை போன்ற நண்பர்கள் கொடுத்ததற்காக..!
மற்றபடி இன்றே பார்க்கவேண்டிய அவசர பதிவுகள் அல்ல இவை...என்றேனும் ஒருநாள் தேடும்போது பார்த்து பயன்பெறும் நோக்கில்தான் பதிவிடுகிறேன்..! வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் ராஜா..!
அலுவலக பணிச்சுமை காரணமாக உடன் பதிவிட இயலவில்லை . மன்னிக்கவும் .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னொரு பதிவு சீக்கிரம் பதிவிடுங்கள் சார்.!
ReplyDeleteதாமதத்திற்கு மன்னிச்சூ மாயாவி ஜி,திரு.செல்லம் அவர்களை பற்றியும்,சிறுவர் இலக்கியம் பற்றியும் அரிய தகவல்களை தங்கள் மூலம் தெரிந்து கொண்டது மகிழ்ச்சி,கடும் உழைப்பை கொட்டியிருப்பது பதிவை பார்த்தாலே தெரிகிறது.இரண்டு பாகப் பதிவுகளும் அருமை.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் நல்முயற்சி,அறிந்தவர்கள் சொல்ல,அதை அறியாதவர்கள் கேட்பது நல்ல தகவல்கள் அழியாமல் பாதுகாக்கப்படட்டும்.
தாமதத்திற்கு மன்னிச்சூ மாயாவி ஜி,திரு.செல்லம் அவர்களை பற்றியும்,சிறுவர் இலக்கியம் பற்றியும் அரிய தகவல்களை தங்கள் மூலம் தெரிந்து கொண்டது மகிழ்ச்சி,கடும் உழைப்பை கொட்டியிருப்பது பதிவை பார்த்தாலே தெரிகிறது.இரண்டு பாகப் பதிவுகளும் அருமை.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் நல்முயற்சி,அறிந்தவர்கள் சொல்ல,அதை அறியாதவர்கள் கேட்பது நல்ல தகவல்கள் அழியாமல் பாதுகாக்கப்படட்டும்.
@ ரவி
Deleteஅடுத்தபதிவு ஏதும் போடும்வரையில்...இந்த பதிவு காலாவதி ஆகாததால்...லைவ்வாதானே இருக்கு..சோ..தாமதம் என சொல்வது எப்படி ஒத்துக்கமுடியும்..??? அப்புறம் இது ஆவணபடுத்தும் முயற்சி... நான் இதுமாதிரியான வேறு சிலரின் எட்டு வருடங்களுக்கு முன் போட்ட பதிவுக்கு சந்தேகம் கேட்டு கமெண்ட்ஸ் போட்டிருக்கேன்...! ஆகையால இந்த பதிவுகள் கவர்ச்சி தாண்டி விஷயம் ஏதும் இருந்தால்...என்னைக்கு வேண்டுமானாலும் கமெண்ட்ஸ் வரும்..! அந்த மாதிரியான அங்கீகாரம் தான் எனக்கு ராயல்டி..ஹீ..ஹீ..! வருகைக்கு நன்றி ரவி..!
test
ReplyDeleteவந்துட்டேன் குரு ஜி!
ReplyDelete@ கரூர் குணா சேகரன்
Deleteஒரு வழியா வலைப்பூவின் உலகிற்கு வந்துட்டிங்களா..!!! ரொம்பவே சந்தோஷம்..! இந்த கமெண்ட்ஸ் பகுதியை பலர் பார்த்துட்டு இருக்காங்க, நீங்க குரு ஜி ன்னு எல்லாம் கூப்பிட்டா அப்புறம் இது மாயாவி சிவா கிடையாது போல...சாமியார் சிவா ன்னு நெனச்சிக்கிடுவாங்க..! நாம ஒன்றாம் வகுப்பு தோழனுங்க..அதுகேத்தமாதிரி கூப்பிருங்க சரியா நண்பரே..!!
உள்ளேன் ஐயா!
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
ReplyDeleteஅப்படியே ஆகட்டுங்க...! ஜாமன்ட்ரி பாக்ஸ்ல வச்சிருக்கிற எலந்த பழத்துல பாதிய எனக்கு வெட்டுங்க..!
ReplyDeleteஅப்படியே ஆகட்டுங்க...! ஜாமன்ட்ரி பாக்ஸ்ல வச்சிருக்கிற எலந்த பழத்துல பாதிய எனக்கு வெட்டுங்க..!
ReplyDelete