நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்..!
ஈரோட்டில் கடந்த சனிகிழமை [6-8-2016] அன்று நடந்த ஈரோட்டில் இத்தாலி புத்தக வெளியிட்டு விழா என்பதைவிட... காமிக்ஸ் குடும்ப விழா என்று சொல்வதே சரியாக இருக்கும்...!
இந்த விழா பற்றிய எனது பார்வையில் முற்றிலும் வேறுவிதத்தில் பார்க்கிறேன். இந்த விழா வெளிபடுத்திய விஷயங்களாக நான் கருதுவது... ஒரு மையபுள்ளியை, ஒரு முக்கியஆணிவேரை மண்ணில் இருந்து வெளிகாட்டியதுதான்..! அவற்றை இரண்டே இரண்டு சின்ன டயலாக்கில் முடித்துவிடலாம்.! அவ்வளவு யதார்த்தமான உண்மை.!!
உயர்திரு.சௌந்திரபாண்டியன்:என்னருமை காமிக்ஸ் வாசகர்களே..உங்களுக்காக...இந்த காமிக்ஸ் உலகிற்காக.... நான் கொடுத்த படைப்பிலேயே சிறந்த படைப்பு எது தெரியுமா..?
திருமதி.சௌந்திரபாண்டியன்: "ஏதோ எம்புள்ளை பிரிண்டிங் பிரஸ் வெச்சிருக்கான்...என்னோட வீட்டுக்காரர் மாதிரியே பிரிண்டிங் மிஷின்விஷயமா வெளிநாட்டுக்கு அடிக்கடி போயிட்டு வருவான்; அங்கிருந்து வாங்கிட்டு வர்ற புக்ஸை அவன் தமிழ்ல அவனோட அப்பா மாதிரியே ஆர்வமாபிரிண்ட் போடுறான்னு தெரியும்...அதுக்காக ஓயாம நெட்டில் எழுதறதும் புக்ஸை அனுப்பறதும் பிரிண்ட் பண்றதும்ன்னு இந்த ரெண்டு மூணு வருஷமாவே சதா வேலையாவே இருக்குறதும், உடம்பையும் தூக்கத்தையும் கெடுத்துட்டு வேலைபாக்குறதும் ஏன்னே புரியாம இருந்தது ! மெயின் பிஸ்னசை விட ஏன் இந்த புக்ஸ் மேல இவ்வளவு ஈடுபாடுன்னு புரியாமயே இருந்தது.!
ஆனா...ஆனா...இங்க வந்ததுக்கப்புறம்தான் தெரியுது என்னோட மகன் விஜயன் போடுற புக்ஸை படிக்க இத்தனை பேரா... இவ்வளவு அன்பா...எவ்வளவு ஆர்வம்,ஆரவாரம்...உங்க அன்புக்கு தான் அவன் மெனக்கெட்டு வேலை பாக்கிறான்னு இங்க வந்து பாத்ததுக்கு அப்புறம்தான் புரியுது.!
உங்கிட்ட ஒன்னே ஒன்னை கேட்டுகிறேம்ப்பா..."
என அவர் வைத்த வேண்டுகோள் என்ன தெரியுமா..?
(சேலம்டெக்ஸ் சொல்லவிட்டுட்ட அந்த ஒற்றை டயலாக்..)
இரண்டிற்க்குமான பதிலை படத்தில் பாருங்கள்...
இதை தாண்டி இந்த விழாவை பற்றி சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை நண்பர்களே...உங்களுக்கு எப்போதெல்லாம் திரு விஜயன் மீது கோபமும் ஆத்திரமும் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த தாய் தந்தையரின் சொற்களை நினைத்து கொள்ளுங்களேன்.! கட்டாயம் உங்களுக்குள் ஒரு ஒரு பூ மலரரும்..! இப்படி காமிக்ஸ் நண்பராக ஒரு ஆசிரியர் கிடைத்தது நம் பாக்கியம்..!
கைவசம் உள்ள மொத்தபுகைபடத்தையும் இங்கு பதிவேற்றியுள்ளேன்...மீதிகதைகளை அது பேசும்..! வீடியோக்கள் தனி பதிவாக இடுகிறேன்...இன்னும் கைக்கு வரவில்லை..!
நட்புடன்
மாயாவி.சிவா
மீ பர்ஸ்ட்டு!!
ReplyDelete@ கோடையிடி கண்ணன்
Delete:))))
அட்டகாசம் மாயாஜி.. நினைவுகளை மீட்டெடுக்கும் பதிவு ..
ReplyDelete2வது....அருமை.. அட்டகாசாசம்...தூள் பண்ணிட்டீங்க மாயாசார்...
ReplyDeleteஇதில் ஸ்டாலின் எங்கே இந்த போட்டோகலில் கனோம்
ReplyDeleteயெஸ்..வொய்??? உடல் நலத்துடன்தானே இருக்கிறார்....???
Deleteஸ்டாலின் சார் அவர்கள் முன்கூட்டிய திட்டமிட்ட பயணத்தால் அவர் நிகழ்வில் கலத்து கொள்ளவில்லை நண்பர்களே ..அவர் பூரண நலம் ...;-)
Delete@ ரஞ்சித்
Delete//உங்களுக்கு எப்போதெல்லாம் திரு விஜயன் மீது கோபமும் ஆத்திரமும் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த தாய் தந்தையரின் சொற்களை நினைத்து கொள்ளுங்களேன்.! கட்டாயம் உங்களுக்குள் ஒரு ஒரு பூ மலரரும்..! இப்படி காமிக்ஸ் நண்பராக ஒரு ஆசிரியர் கிடைத்தது நம் பாக்கியம்..! //
இந்த வரிகள் அவருக்கும் பொருந்தும்..!
அட்டகாசமா சொன்னீங்க மாயாசார்....ஆயிரம் கைதட்டல் படங்கள்...
Deleteகோபம் கொள்பவர்களுக்குத்தான் இழப்பே ---
"யாகாவாராயினும் நா காக்க"....
திரு விஜயன் ஈரோடு ஸ்டாலினுக்கு நன்றி சொல்லிட்டுதானே விழாவையே ஆரம்பித்தார்..! நன்றி மறப்பது நன்றன்று...நன்றி வேண்டுவது நன்றன்று..!
Deleteதூள்....!!!!! பல நண்பர்கள் யாரென தெரியாமல் போவதால் அதற்கு வழி செய்யவும்....
ReplyDelete@ செல்வம் அபிராமி
Deleteபெயர் சொல்லி அறிமுகம் செய்துகொள்ளும் வீடியோ கைக்கு கிடைத்தும்தான் எனக்கே நண்பர்களின் பெயர் என்னவென்று எனக்கே தெரியும் செல்வம்..! நாளை அந்த வீடியோகள் கைக்கு கிடைத்துவிடும் என காத்திருக்கிறேன்..! பெயர் தெரிய ஒரு திட்டம் வைத்துள்ளேன்..! கொஞ்சம் வெய்ட் ப்ளிஸ்...
மாயாஜி... பெருசா பிளான் செய்யறப்ப எனக்கும் ஏதாவது ரோல் குடுங்க.. 10% இருந்தா போதும்...
Delete@ கரூர்கார்
Deleteமாயாவி.சிவா மைண்டுவாய்ஸ்: ஒரு மீன் சிக்கிடிச்சி..ஹீ..ஹீ...
சிவா அருமை அட்டகாசம் உங்க ஸ்டைல்ல சொல்லணும்னா மகிழ்ச்சி!!!!!!
ReplyDeleteசிவா அருமை அட்டகாசம் உங்க ஸ்டைல்ல சொல்லணும்னா மகிழ்ச்சி!!!!!!
ReplyDeleteஉங்களின் எழுத்துக்களை ரசித்து விட்டேன் மாயாஜீ ...சுருக்கமாக ....அழகாக சொல்லி உள்ளீர்கள் ...வாழ்த்துக்கள் ..
ReplyDeleteபுகைப்படங்கள் 3ஜீ ஆக இருந்தாலும் ஓப்பன் ஆக வில்லை ...(ஆசிரியரின் பதிவிலும் )...அலுவலகம் சென்றால் தான் வொய்பை மூலம் படங்களை ரசிக்க முடியும் காத்திருக்கிறேன் ...
எனது அலைபேசி நெட் 3ஜீ ஆக இருந்தாலும் என வாசிக்கவும் ...மாயாஜீ ..புகைப்படம் 3ஜீ அல்ல ...:-)
Deleteஅருமையான உழைப்பு மாயாவி ஜி,இந்த உழைப்பை வெறும் வார்த்தைகளில் பாராட்டுவதே சாதாரணம்தான்.
ReplyDeleteகை தட்டும் படங்கள் நூறு.
@ மல்லூர் ரவி
Deleteஉண்மையில் இந்த பதிவுதான் உழைக்காமல் போட்டுள்ள எளிய பதிவு...அதே சமயம் எனக்கு பிடித்தபதிவும் கூட...ஹீ..ஹீ... உங்கள் கேமரா போட்டோக்களும் கொடுத்தால் அப்டேட்ஸ் பண்ணிடலாம்..!
மாயாவி சார்...சூப்பர்....அட்டகாசம்...பின்னிட்டீங்க.....கலக்கிட்டீங்க....இந்த அருமையான விழாவிற்கு வர முடியாமல் போனவர்களுக்கு உங்களுடைய(இந்த) பதிவு மிகவும் சந்தோசத்தை கொடுக்கும் சார்.."LIVE"ஆக பார்த்த மாதிரி அப்படி ஒரு உணர்வு...இப்படி ஒரு பதிவு போட்டதற்க்கு மிக்க நன்றி சார்.....
ReplyDelete@ இளம்புயல் யுவா
Deleteஎன்னோட நோக்கத்தை கரெக்டா நாடிபிடிச்சிட்டிங்க...தாங்க்ஸ்ப்பா..!
///"LIVE"ஆக பார்த்த மாதிரி அப்படி ஒரு உணர்வு...இப்படி ஒரு பதிவு போட்டதற்க்கு மிக்க நன்றி சார்.///...+1000...
Deleteமீண்டும் மனசுக்குள் லைவ் ஆக ஓட வைத்து விட்டீர்கள் மாயாசார். நன்றி சொன்னா சரிவராது, உங்கள் நெஞ்சோடு ஒரு ஸ்பெசல் மானசீக தழுவல்.....
மாயாவி சார்...சூப்பர்....அட்டகாசம்...பின்னிட்டீங்க.....கலக்கிட்டீங்க....இந்த அருமையான விழாவிற்கு வர முடியாமல் போனவர்களுக்கு உங்களுடைய(இந்த) பதிவு மிகவும் சந்தோசத்தை கொடுக்கும் சார்.."LIVE"ஆக பார்த்த மாதிரி அப்படி ஒரு உணர்வு...இப்படி ஒரு பதிவு போட்டதற்க்கு மிக்க நன்றி சார்.....
ReplyDeleteஅருமை சிவா ன்னா
ReplyDeleteவார்த்தைகளும் , படங்களை தொகுத்த விதமும்
உங்களைப் பாராட்ட வார்த்தைகளில்லை
:) :)
திருமதி . சௌந்திரபாண்டியன் அம்மா அனைவரையும் தன் மகன்போல் பாவித்து பேசியதையும் கண்டு என் கண்ணே லேசா வேர்த்துடுச்சி ன்னா
இந்த ஈரோட்டுத்திருவிழா வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக கலந்து விட்டது
அருமை சிவா ன்னா
ReplyDeleteவார்த்தைகளும் , படங்களை தொகுத்த விதமும்
உங்களைப் பாராட்ட வார்த்தைகளில்லை
:) :)
திருமதி . சௌந்திரபாண்டியன் அம்மா அனைவரையும் தன் மகன்போல் பாவித்து பேசியதையும் கண்டு என் கண்ணே லேசா வேர்த்துடுச்சி ன்னா
இந்த ஈரோட்டுத்திருவிழா வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக கலந்து விட்டது
"இவனைப் பார்த்துக்கோங்கப்பா" என்று எடிட்டரின் அம்மா நம்மிடம் சொன்னதை கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தால் "இரவு பகலா தூக்கமின்றி உங்களுக்காக, உங்களை சந்தோசப் படுத்த உழைக்கிறான்... முன்னைவிடவும் இப்போ ரொம்ப மெலிஞ்சுட்டான்... உங்களையெல்லாம் சந்தோசமா பாத்துக்கிற இவனை நீங்களும் நல்லாப் பார்த்துக்கோங்கப்பா"
ReplyDeleteஅசத்தலான முயற்சி மாயாவி அவர்களே! காலத்துக்கும் மனசில் நிற்கும் போங்க!
@ இத்தாலி விஜய்
Deleteஅந்த ஒற்றைவரி ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும் விஜய்...இதை சேலம் டெக்ஸ் நம்மிடம் பகிரும் போது இரவு மணி ஒன்று இருக்கும்...எல்லோர் கண்களும் அந்த ஒற்றைவரியின் தாக்கம் கலங்கசெய்தது..!
அந்த ஒற்றை வரியே நம் காலத்திற்கும் போதும்..!
///அந்த ஒற்றை வரியே நம் காலத்திற்கும் போதும்..!////....ஃபெண்டாஸ்டிக் மாயாசார்...
Deleteசனிக்கிழமை தூக்க கலக்கத்திலும் , அந்த பின்னரவு டயர்டையும் பொருட்படுத்தாது நான் விவரித்ததை உள்வாங்கி, அற்புதமாக வார்த்தைகளில் வடித்து விட்டீர்கள்...செம்ம, சார்...
@ சேலம் டெக்ஸ்
Deleteமறக்காமல் நீங்கள் எனக்கு விவரித்த விதம்தான் செம்ம..!இதைநான் போனில் விவரித்த ஒவ்வொரு நண்பர்களும் கேட்டதும் மௌனம்தான் நிடித்தது..!
நம் சகோதரர் விஜயன் சார் அவர்களை பத்திரமாகப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம் என இந்த குடும்பத்தில் ஒருவனாக நம் தாயாருக்கு உறுதி கூறுகிறேன்.குளித்தலை மணிகண்டன்.
ReplyDeleteஹை நானும் இருக்கேன்.25வது.
ReplyDeleteமாயாவிசிவா சார் உங்களை முதன்முதலில் அங்கே தான் பார்த்தேன் ஆனால் வெகுநாள் பழகியது போன்ற உணர்வு.
என்னை முதலில் வரவேற்று கை குலுக்கியது நீங்கள் தான்.நன்றி
ஹை நானும் இருக்கேன்.25வது.
ReplyDeleteமாயாவிசிவா சார் உங்களை முதன்முதலில் அங்கே தான் பார்த்தேன் ஆனால் வெகுநாள் பழகியது போன்ற உணர்வு.
என்னை முதலில் வரவேற்று கை குலுக்கியது நீங்கள் தான்.நன்றி
Nice work sir, just simply super.... missed all...
ReplyDeleteNice work sir, just simply super.... missed all...
ReplyDeleteமாயாவியாரே!,
ReplyDeleteநானும் மைக்கைப் பிடிச்சிட்டு அரைமணி நேரம் பேசினதா ஞாபகம். அதை யாருமே போட்டோ எடுக்கலையா?
இது அநீதி!!
இந்த அநீதியை நான் மென்மையாக கண்ணடிக்கிறேன்
Deleteஅருமையான பதிவு மாயாவி அண்ணே. மிக்க நன்றி உங்களுக்கு. அடுத்த குடும்ப விழாவில் கலந்துகொள்ளும் ஆவலைத்தூண்டும் பதிவு.மீண்டும் ஒருமுறை நன்றி அண்ணா.
ReplyDeleteஅட்டகாசம் மாயாவி ஜி ... அப்படியே ஒவ்வொரு போடோவுக்கும் ஒரு கமெண்ட் போட்டு இருந்தீங்கன்னா :)
ReplyDeleteசூப்பர்! செம!
ReplyDeleteதி இந்து (தமிழ்)-ல் உங்களின் என் பெயர் டைகர் புத்தக அறிமுகம் பார்த்தேன்.... பாராட்டுக்கள் மாயாவி சிவாஜி
ReplyDeleteஅருமை, சூப்பர், excellent!!!
ReplyDeleteஆனால் இந்த வார்த்தைகளுக்கும் மேல் ஏதாவது,ஏதாவது இருந்தால் அதை ோட்டுொள்ளவும். ஏன்னா நம் குடும்ப நிகழ்வை வார்த்தையால் வருணிக்க முடியாது.
நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் உழைத்த ோடு நில்லாமல், அதை ஆவணப்படுத்தி, அடுத்த வருடங்களுக்கு இன்னும் பலரையும் வரவழைக்க தூண்டும் பதிவு.
சிறிதளவு கூட நிகரில்லா வழக்கமான மாயாவிஜி தரமான உழைப்பு . ஒவ்வொரு ஆண்டும் ஈரோட்டில் நண்பர்கள் சந்திப்பில் அன்பும் மகிழ்ச்சியும் நண்பர்கள் இடையில் ஆன நெருக்கமான நட்புறவு வலுப்பெற்று வருகிறது . அதை ஆவணப்படுத்தல் ஒரு மிகச்சிறந்த பணி . அதில் எங்கள் அன்பு நண்பர் மாயாவிஜி தலை சிறந்தவர் . அவர் என் நண்பர் என்பதில் பெருமை கொள்கிறேன் . நன்றி ஆயிரம் .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete