Thursday 18 June 2015

விடுதலையே உன் விலை என்ன..? பகுதி-2

வணக்கங்கள் நண்பர்களே..!

கொஞ்சம் சுருக்கமாவே முடிக்க நினைத்தேன்..! ஆனால் நண்பர்களின் கேள்விகளும், என் தேடல்களும்,கையிருப்பு தகவல்களும் சுவையாக இருப்பதால் பகிர்வை இரண்டாக்கிவிட்டேன்..!

எதிர்பார்த்தது போலவே நண்பர்களிடமிருந்து வந்த கேள்விகள்,விவாதங்கள் சுறுசுறுப்பாக இருந்தன. செல்வம் அபிராமி,கார்த்திக்,மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்  மற்றும் பிற நண்பர்கள் கேட்ட சில கேள்வியும் என்னால் முடிந்த பதில்களும் முதலில்...

சில விளக்கங்கள்.

1.முதல் என்ன ....பக்கம் 15 -ல் வரும் ஹைதர் காலத்து பழசு என்ற சொல்லாட்சியை ஒரு ரஷ்ய காவலாளி சொல்வது இந்த கதையை பொறுத்தவரை நெருடல்தான் ....

பதில்: ஹைதர் பழசு என சொல்வது..ரஷ்ய காவலாளி அல்ல..! பெட்டி
நிறையதங்கம் கொண்டுவரும் 'பாரோன் கோர்ப்'..! "ரஷ்யாவின் நவீனஇராணுவ ஆயுதங்களுக்கு முன்... போக்கிரிகளிடம் இருக்கும் ஹைதர் பழசான துருப்பித்த ஆயுதங்கள், வெறும் குப்பை" என்பதாக தான் அவர் கூறுகிறார்..!

2.கதையில் சொல்லபடுவது போல் இந்த மாபெரும் கப்பலை 6,7மாதங்களில் கட்டி முடிப்பது சாத்தியமா "என்ன "?.....
பதில்: SS Baikal - ice-breaking train ferry பற்றிய விவரங்கள் கொட்டியிருக்கிறேன்...பார்த்துக்கொள்ளுங்கள்..!








3.இத்தகைய ரயிலில் தேடப்படும் ஒரு குற்றவாளி பாதிரியார் வேஷத்தில் வருவதும் ரகசிய ஆயுதங்கள் ஏந்திய ஒரு கும்பலே பயணிப்பதும் சாத்தியமா என்ன ????
பதில்: ஜனாதிபதி பயணிக்கும் விமானத்திலேயே தீவிவாதிகள் ஊடுருவி

விளையாடும் இந்த நவீன காலத்தில் நடக்கும்போது... ஒரு இரயிலில் பாதிரியார் வேஷத்தில் வருவதும் ரகசிய ஆயுதங்கள் ஏந்திய ஒரு கும்பலே
பயணிப்பதும் அந்த காலத்தில் சாத்தியமில்லையா என்ன..!


4.சுரங்க பாதையில் சுரங்க பாதையையே சிதைக்குமளவு அதில் நீர்கசிவு ஏற்படும் என்பதுதானே அடிப்படை ஜ்யாலஜி விதி ......அதை மீறி தோண்டுவதுஎன்பது சாத்தியமா என்ன ???
பதில்: நான் வசிக்கும் ஏற்காடு ஏரியில் இருந்து 100iஅடி துரத்தில் 50iஅடி ஆழகிணற்றிலும், 500i அடி போர்வெல்லிலும் சொட்டு தண்ணீர் இல்லைஎன்பதே நிஜம்..!சிறையில் இருந்து சுரங்கம் தோண்டி தப்பித்த கதைகள் எவ்வளவோ உள்ளன. இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கணக்கில் கொள்ளவேண்டும். அவர்கள் சுரங்கம் வெட்டி தப்பிப்பது பலமான சிறைசாலையில் இருந்து அல்ல. பாதுகாப்பு வளையம் போட்ட துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஒரு 'கேம்பஸ்'..!


5.இதில் ரயில் என்ஜினை டஸ்ட் கிளப்புவதையாவது ஒருவாறாக ஒப்பு கொள்ளலாம்...ஆனால் ஒரு கப்பலை கிளப்ப எவ்வளவு நேரமாகும் ...???
பதில்: மூன்று வருடங்கள் கப்பலை கட்டிய தொழிலார்களால்.(வெள்ளோட்டம் பார்த்தவர்கள் அவர்களே என்னும்போது) அதை ஓட்டுவது சாத்தியமில்லையா என்ன..!

6. இரயில் கப்பலில் ஏற தயார் நிலையில் தான் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன...
சீதோசண நிலை சரியாகும் பொருட்டு காத்திருந்தனர்.

7.யூஜின் ,வோர்ஸ்லோ மற்றும் அந்த இளவரசி முக்கோணம் சொல்லும் கதைதான் என்ன...?
பதில்: யூஜின் ,வோர்ஸ்லோ மற்றும் அந்த இளவரசி முக்கோணம் சொல்லும் கதை விரிவாக படங்களுடன் தந்துள்ளேன்..!

8. பிரிட்ஷ்கார கிழவனை போய் அலீனா எப்படி திருமணம் செய்ய சம்மதிப்பாள் ?
இளவரசி 'அலீனா' வயதான இன்ஜினியரை திருமணம் செய்து கொள்ள காரணம் தன் காதலன் 'யூஜினை' சிறையில் இருந்து மீட்கவே, விவரங்கள் படத்தில்...






இன்னும் ஒரு வரலாற்று குறிப்பை மட்டும் சொல்லிவிட்டு கதைக்குள் போய்விடுகிறேன்...



இந்த பிரமாண்டமான பயணத்தில் பங்கு கொண்ட ரயில் இன்ஞ்சின் 'பைகால் துறைமுகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்ல அந்த துறைமுகத்தில் ஒரு ரயில்வே மியூசியம் உள்ளது, அதில் இந்த பிரம்மாண்டமான ஏரியை கடக்கும் ரயில் கப்பலில் எப்படி கடக்கிறது என்ற மினியேச்சர் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த மியூசியத்தில் பார்வையாளர்கள் எடுத்த புகைபடங்கள் உங்கள் பார்வைக்கு... 


















இவ்வளவு பிரமாண்டமான சரித்திர புகழ்பெற்ற வரலாற்று சாதனைகளை பின்னணியாக கொண்டு எழுதுதப்பட்ட 65 பக்க ஒரு குட்டி காமிக்ஸுக்கு முன்னால் ஓடும் சின்னஞ்சிறு ஆழமானகருத்து பற்றி மூன்றாவது பகுதியில் பகிர்கிறேனே..!

87 comments:

  1. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் .....அந்த டெக்ஸின் வல்லவர்கள் வீழ்வதில்லை பாக்கி உள்ளது ....அதைக்கொஞ்சம் கவனியுங்கள் சார் ...

    ReplyDelete
    Replies
    1. தல ஸ்பெஷல் வருதில்லையா..அப்போ நிச்சயம் தூள் கிளப்பிடலாம்..tex..!

      Delete
  2. Replies
    1. @மகேந்திரன் பரமசிவம்

      இப்படி ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போனால் எப்படி...உங்கள் எண்ணம் ப்ளிஸ்..!

      Delete
  3. பிரம்மிக்க வைக்கிறீர்கள் மாயாவி! ஃபோட்டோ ஆதாரங்கள் ஆச்சர்யம்!!

    'என்ன'க்கு நீங்கள் சொன்ன பதில்களில் அவ்வளவு திருப்தியில்லை எனக்கு! எனினும், உங்களது இந்த உழைப்புக்கு எழுந்து நின்று கைதட்டுகிறேன் ( இப்ப வீட்டிலிருக்குமபோது திடீர்னு எழுந்து நின்று கைதட்டினால் வீட்டிலிருப்பவர்கள் ஒருமாதிரி பார்க்க வாய்ப்பிருப்பதால், நேரில் பார்க்கும்போது தட்டுகிறேனே? ;) )

    ReplyDelete
    Replies
    1. @இத்தாலி விஜய்
      நீங்கள் எழுந்து நின்றது போலத்தான் நானும் icebreaking steamer பற்றிய தகவல்களை படித்ததும் எழுந்து நின்று 'வாவ்' என கத்தினேன்...கட்டாயம் வீட்டில் ஒரு மாதிரி பார்த்திருப்பார்கள்..ஆனால் நான் கவனிக்கவில்லை..ஹீ..ஹீ..!

      Delete
  4. மாயாவி உங்கள் காமிக்ஸ் ஈடுபாட்ற்கு நான் தலை வணங்குகிறேன் மற்றவை நேரில்

    ReplyDelete
    Replies
    1. @ஸ்பைடர் ஸ்ரீதர்
      உங்கள் வருகைக்கு நன்றிகள்..!

      tex..அது என்ன இவருக்கு +1 அவருக்கு +2

      Delete
    2. கேள்வி யிலேயே விடை உள்ளது சார்

      Delete
    3. அதாவது... அவர் ஒரு சுற்றும், நான் ரெண்டு சுற்றும் ஏறிட்டோமாம்! :)

      Delete
  5. மாயாவி சார்.!அட்டகாசம்.!எவ்வளவு உழைப்பு.உங்கள் தன்நலம் இல்லாத உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.கி.நா.மீது உள்ள வெறுப்பைகுறைக்க நிச்சயம் உதவும்.!!!

    ReplyDelete
    Replies
    1. MV..வெறுப்பை குறைப்பது மட்டும் என் உழைப்பு பலன் கண்டுவிடாது...அதை ரசிக்கும் ஆர்வம் உங்களுக்குள் முளைத்தாலே போதும்...இந்த பதிவை நீக்கிவிடலாம்..!

      Delete
  6. //மாயாவி உங்கள் காமிக்ஸ் ஈடுபாட்ற்கு நான் தலை வணங்குகிறேன் மற்றவை நேரில்// ஈரோடு புத்தக திருவிழாவில் கெடா விருந்து சாப்பாடு உடன் என் செலவில். . .

    ReplyDelete
    Replies
    1. ///ஈரோடு புத்தக திருவிழாவில் கெடா விருந்து சாப்பாடு உடன் என் செலவில். . .///

      ஹம்... நானும் ஒரு Blog ஆரம்பிச்சிருந்திருக்கலாம்... ;)

      Delete
    2. டோக்கன் நெ 1 என்னோடது சரவணன் சார் ..

      Delete
    3. டோக்கன் நெ 2 என்னோடது சரவணன் சார் ..

      Delete
  7. மாயாவி சார்.!கிட்டத்தட்ட 1மணி நேரமாக படிக்க முடியாமல் அவஸ்தை பட்டேன்.தற்போது உள்ள கலர் தெளிவாக சூப்பர் ஆக உள்ளது.இதே தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.!!!

    ReplyDelete
    Replies
    1. //கிட்டத்தட்ட 1மணி நேரமாக படிக்க முடியாமல் அவஸ்தை பட்டேன் ///

      கி.நா பற்றிய பதிவுனாலே அப்படித்தான் இருக்கும்! :D

      Delete
    2. ஈரோடு விஜய்.!கி.நா.அப்படித்தான் போலும்.ஹஹஹஹஹஹஹஹ.............!!!

      Delete

    3. மா.வெ சார்., அடுத்த வருடம் மாடஸ்டியையும் கி / நா பட்டியலில் சேர்க்கப்போவதாக நம்பகமான தகவல் கிடைத்திருக்கிறது.
      இப்போது சொல்லுங்கள் நீங்க கி /நா எதிர்ப்பாளரா.??? :-)

      Delete
    4. ஹிஹிஹி இதென்ன கேள்வி?கி.நா.பக்கம்தான்.!மாடஸ்டி கதைகளில் சில தரமான சித்திரங்கள் கொண்ட கதைகளில் எடிட்டரின் மொழிபெயர்ப்பு மற்றும் ஒவ்வொரு பிரேமிலும் ஓவியங்கள் பேசாமல் பேசும்.!சான்சே இல்லை.மாடஸ்டி கதையான பழிவாங்கும் புயல் கதையில்.,படுபயங்கர வில்லனுடன் பேச்சு வார்த்தை நடத்த கிளம்புவார்கள்.!கார்வின் கத்தியை தன் உறையில் போடப்போவார்.மாடஸ்டி ஆயுதங்கள் வேண்டாம் என்பார்.!உடனே கத்தியை மறுபேச்சின்றி கீழே வைத்து விடுவார்.உடனே அவரது தோழி கேட்பாள்.,"போடு தோப்பு கரணம் என்றால் எண்ணிக்கொள் என்பாயோ "என்று கூறுவார்.கார்வின் மட்டும் அல்ல நானும் அப்படித்தான்.!

      Delete
    5. கார்வின் மட்டும் அல்ல நானும் அப்படித்தான்.!

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கரூர் சரவணன்.!!அப்போ.! கிடா விருந்து சும்மா உலலலலலலாவா.?

      Delete
    2. Browser mistake..அதனால் இரு முறை போஸ்ட் ஆகி விட்டது. . . Erode புத்தக திருவிழாவில் spl வெளியீடு எதுவும் இல்லை போல் தெரிகிறது. எனவே ஒரு மதிய விருந்து என் செலவில் கண்டிப்பாக உண்டு. .

      Delete
  10. இது தான் தேவைப்பட்டது, study செய்து எழுதியிருகிறீர்கள் மாயாவி சார்!, மிக அருமை!

    +1

    மற்ற 7 LA GRANDE EVASION மீதும் ஒரு சிந்தனை ஓட்டம்?

    ReplyDelete
    Replies
    1. @சதிஷ்குமார்.S
      இந்த பதிவு முடிவில் ஒரு அறிவிப்பு வரும் என்றேனில்லையா...அப்போது செமத்தியா வாங்க போறேன் என்பது என் கணிப்பு..! அதுக்கப்புறமா நானே ஒரு கைதியாலாகலாம்...அங்கிருந்து தப்பித்தால் 9 LA GRANDE EVASION பற்றி தான் முதலில் எழுதுவேன்..ஹீ..ஹீ..(இது ஜோக் இல்லைங்க..)

      Delete
    2. //இந்த பதிவு முடிவில் ஒரு அறிவிப்பு வரும் என்றேனில்லையா...//

      waiting for Saturday Mayavi sir!

      Delete
  11. நான் இன்னும் கதையை படிக்கவில்லை. எனக்கு வந்து சேர சில மாதங்கள் ஆகும். அதனால் கேள்விகள் சரியா பதில்கள் சரியாய் என்று தெரியவில்லை. பல வேலைப் பளுவிற்கு இடையிலும் விடைகளை தேடி ஆராய்ச்சி செய்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி. உங்களுடைய உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. @மகேந்திரன் பரமசிவம்

      நீங்க வெளிநாட்டில் இருக்கிறது தெரியும்...எந்த நாடுன்னு தெரிஞ்சிகிலாமா..?

      Delete
    2. Dallas, Texas மாகாணம், USA

      Delete
    3. Texas பாலைவனத்தில் பயணம் செய்த அனுபவத்தை எழுதுங்கள் நண்பரே

      Delete
  12. பிரமிக்க வைக்கும் தகவல்கள். நாளுக்குநாள் மெருகேரும் எழுத்துநடை.
    தங்களின் தீராக்காதல் தெளிவாக தெரிகிறது வேதாளரே.!!!
    (ஆயிரம் கைதட்டல் படங்கள்.)

    ReplyDelete
    Replies
    1. ஆயிரமா...(ஆஆஆ வென வாயை பிளக்கும் படங்கள் நான்கு) அதாவது 'சிக்ஸர்' அடிக்கறப்போ ஆடியன்ஸ் கைதட்டுறதை எனக்கு டெடிகேட் பன்னுரீங்க...சரிதானே..காமிக்ஸ் கலைவாணரே..!

      Delete
  13. பிரமிக்க வைக்கும் தகவல்கள். நாளுக்குநாள் மெருகேரும் எழுத்துநடை.
    தங்களின் தீராக்காதல் தெளிவாக தெரிகிறது வேதாளரே.!!!
    (ஆயிரம் கைதட்டல் படங்கள்.)

    ReplyDelete
  14. மாயாவிஜி ...முதலில் பாராட்டுகள் ....

    7,8.பதில்கள் விளக்கம் அற்புதம் ...

    ReplyDelete
    Replies
    1. இந்த காதலர்கள் விடை தேட மட்டும் ஒரு டஜனுக்கு மேல் கதையை புரட்டியிருப்பேன்..ஆரம்பத்தில் அவளும் ஒரு மாறுவேடம் பூண்ட சராசரி பெண்..இன்ஜினியரின் மனைவி என பொய் சொல்கிறாள்...
      அவளை புரட்சி கும்பலின் கைப்பாவை...என நினைத்தேன்..! இந்த முக்கோண காதல் பற்றிய விடையை கண்டுபிடிப்பது ரொம்பவே (என்னை பொறுத்தவரையில்) சவால்..! :-))))

      Delete
    2. உண்மையில் மிகவும் அற்புதமான விளக்கம் ...மாயாவிஜி ...சூப்பர் !!!

      Delete
  15. 5.கைதிகளின் கப்பலோட்டும் திறமை ஒருபுறம் இருந்தாலும் (கார் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்யும் அனைவருக்கும் கார் ஓட்ட தெரியுமா என்ன ) ஸ்டீம் என்ஜின் செயல் பட நீராவி அழுத்தம் கணிசமாக உயர வேண்டும் ...

    பிரமாண்டமான இந்த கப்பலின் கொதி அழுத்த கலன்கள் அந்த உயர் அழுத்தத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதே கேள்வி ...:-)

    ReplyDelete
    Replies

    1. அறிவை வளர்த்துக்கொள்ள எளிய வழி. அறிவாளிகள் பேசுவதை கேட்பது. நான் அதைத்தான் கடைபிடிக்கிறேன்.
      சூப்பரப்பூ.!! தொடருங்கள். தொடர்கிறேன். ..,

      Delete
    2. 6.இதே சிரமம் சிறிய அளவில் டஸ்ட்க்கும் உண்டு ..
      அதைவிட பர்னரை செயல் படுத்த டஸ்ட் எடுக்கும் முயற்சிகளில் எவ்வளவு சப்தம் ஏற்படும் ?

      இடையிடையே ஸ்டீம் எக்ஸ்ஹாஸ்ட் ஏற்படுத்தும் சப்தம் பைக்கால் ஏரியில் துயிலும் துருவ மீன்களை கூட எழுப்பி விடலாமே :-)

      Delete
    3. உண்மை உண்மை! பைக்கை ஸ்டார்ட் செய்வதுபோல அவ்வளவு எளிதில் ஸ்டீம் எஞ்சின் வகையறாக்களை எளிதில் நகர்த்திவிட முடியாது!

      Delete
    4. //பிரமாண்டமான இந்த கப்பலின் கொதி அழுத்த கலன்கள் அந்த உயர் அழுத்தத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதே கேள்வி //

      நிச்சயம் சில மணிநேரத்தில் முடியுமா என்பதே கேள்விதான்...இதற்கு நான் நொண்டி சாக்குகள் தான் சொல்லமுடியும்...அது வாதத்திற்கு நன்றாக இருக்கும்..ஆனால் எனக்கே அது விடையாகாது என்பது யதார்த்தம்..!
      ஒரு விஷயம் உறுதி..! இந்த கதையின் மூலமாக எழுத்தாளர் சொல்லவந்த கருத்துக்கு..இந்த சின்ன கற்பனை..லாஜிக்...மீறல் அவசிய படுகிறது..! அதை வரும் நாட்களில் விவரிக்கிறேன்..செல்வம் அபிராமி அவர்களே..!

      Delete
    5. கடமை அழைப்பதால் பிறகு வருகிறேன்


      :-)

      Delete
    6. //கடமை அழைப்பதால் பிறகு வருகிறேன் ///

      சமையலைக் கவனிக்கச் சொல்லி வீட்டம்மா 'பாசத்தோட' அழைச்சிருக்காங்க போல! :D

      Delete
    7. கடமை அழைப்பதால் பிறகு வருகிறேன்


      :-)

      Delete
    8. ஹஹஹா..பாசத்தோட அழைச்சா போய்தானே ஆகணும்..உங்க கேள்வி..48,49 பக்கத்துல தெளிவா வருது...அதுக்கு சொல்ற பதில் "வெளியே இருக்கும் நம் நண்பர்களையும் ஆயத்தமாக இருகும்மாறு எச்சரிப்போம்" இந்த ஒற்றை வரிக்கு எல்லா யூகத்துக்கும் சாவி..!

      (துணிய ஊற போட்டு எங்கபோனிங்க..) என்னை கூட 'பாசத்தோட' அழைக்கிறாங்க..ஹீ..ஹீ..போய்ட்டு வந்துடறேன்...!(மூன்று கையசைத்து டாடா காட்டும் படங்கள்)

      Delete
    9. விஜய் ,மாயாவிஜி ..
      :-)

      பப்ளிக் !!.....பப்ளிக் !!!...:-))

      Delete
    10. வெளியே இருக்கும் நம் நண்பர்களையும் //ஆயத்தமாக இருகும்மாறு எச்சரிப்போம்" இந்த ஒற்றை வரிக்கு எல்லா யூகத்துக்கும் சாவி..!//

      வாவ் ! மறுபடியும் யதார்த்தம் நிரம்பிய பதில் ...

      ரயிலுக்கு காவல் நின்ற வீரர்களை "அமைதி "படுத்துவது

      மறுகரைக்கு பிறிதொரு படைப்பிரிவு வாராத வண்ணம் தந்தி கம்பிகளை சேதம் செய்வது

      இந்த பணி மையத்தில் இருந்து வீரர்கள் தொடராவண்ணம் பனியில் செல்ல கூடிய வாகனங்களை sabotage செய்வது

      போன்றவற்றை இந்த" வெளி நண்பர்கள் " செய்து இருக்கலாம்தான் ...

      :-)

      ஓரளவு லாஜிக் இருக்கிறது ....

      Delete
    11. //ஓரளவு லாஜிக் இருக்கிறது ....//

      :)

      Delete
  16. வாசக நண்பரின் என்ன என்ற வினாவிற்கே இவ்வளவு உழைப்பா ..பிரமிக்காமல் இருக்க முடிய வில்லை சார் ...உங்கள் காமிக்ஸ் பற்று உண்மையிலேயே ஆச்சர்ய படுத்துகிறது ...


    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  17. தலீவா..என்னை ரொம்ப கூச்சபடவெக்கதிங்க..! காமிக்ஸ் மேல் உள்ள பற்றில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல..! அதை வெளிப்படுத்தும் விதம் மட்டும் கொஞ்சம் வித்தியாசபடுது...அவ்வளவுதான் தலீவா..(டான்ஸ் ஆடும் ஐந்து நெட்டை பாவாடை பெண் படங்கள்)

    ReplyDelete
    Replies
    1. (டான்ஸ் ஆடும் ஐந்து நெட்டை பாவாடை பெண் படங்கள்)

      :-))))))

      Delete
  18. உங்களுக்கும் சில விசwம் புரியவில்லை என ஒப்புக் கொண்ட பெரு ந்தன்மைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. என்னை மதித்து..சில விளக்கங்கள் கேட்ட உங்களின் பெருந்தன்மை தான் பாரட்டபடவேண்டியவை கார்த்திக்..! உண்மையில் சொல்லவேண்டுமென்றால்...லயன் ப்ளாக்கில் நீங்கள் கேட்ட பல கேள்விகளே இந்த பதிவை போடும் என் எண்ணத்திற்கு விதை..!

      Delete
    2. உங்களுக்காக பதிலுடன் தான் இந்த பதிவின் நிறைவு பகுதி என்பது குறிப்பிடமறந்துவிட்டேன்..!

      Delete
  19. மிக அபாரமான உழைப்பு மாயாவி அவர்களே...

    கி.நா-க்களை படிக்காமல் இருப்பதும், அவற்றை பரிகசிப்பதும் மிகவும் தவறான ஒன்று என்ற குற்றஉணர்ச்சி ஏற்படுகிறது.

    செல்வம் அபிராமி மற்றும் மாயாவி சிவா உங்களிருவருக்கும் இடையே நடைபெற்ற இந்த 'என்ன' சமாச்சாரம் என்னைப் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.ஜி.ஆரும் பாடும் ஒரு பழைய விடுகதைப் பாடலையும் என்னால் நினைவு படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை... மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சார்....

    ReplyDelete
    Replies
    1. //கி.நா-க்களை படிக்காமல் இருப்பதும், அவற்றை பரிகசிப்பதும் மிகவும் தவறான ஒன்று என்ற குற்றஉணர்ச்சி ஏற்படுகிறது.///

      சக்ஸஸ்! சக்ஸஸ்! சக்ஸஸ்!

      இந்தப் பதிவின் நோக்கம் நிறைவேறிவிட்டது. இதன் ஆத்மா சாந்தி அடைவதாக! :)

      Delete
    2. //என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.ஜி.ஆரும் பாடும் ஒரு பழைய விடுகதைப் பாடலையும் என்னால் நினைவு படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை //

      படம் :- சக்கரவர்த்தி திருமகள்.

      நடித்தவர்கள் :- என் எஸ் கே & எம் ஜி ஆர்.
      பாடியவர்கள் :- என் எஸ் கே & சீர்காழி கோவிந்தராஜன்.
      பாடலாசிரியர் :- மருதகாசி (தவறாகவும் இருக்கலாம்)

      பாடல் :- சீர்மேவும் குருபதம் சிந்தையொடு வாக்கினும் சிரம்மீது வைத்து போற்றி
      ஜெகமெல்லாம் மெச்ச ஜெயக்கொடி பறக்க வரும் வீரப்ராதபன் நானே. ……………………

      இந்த பாடல்தான் தங்கள் நினைவுக்கு வந்ததா எஸ் வி வெங்கடேஷ் சார்.!!!!!!

      Delete
    3. ஹா... ஈரோடு விஜய்.... நீங்கள் ஒரு குழப்பவாதி ஐயா....
      லயன் பிளாக்கில் படிக்கும் போது து◌ாக்கம் வந்தா கி.நா. என்று கூறி விட்டு இங்கே பிஎஸ்வீரப்பா ஸ்டைலில் சக்சஸ்?

      Delete
    4. இதே பாடல்.... இந்தப் பாடல்தான் கிட்ஆர்டின்... எப்போதும் நான் மிகவும் ரசிக்கும் பாடல்... பாடலாசிரியர் பட்டுக்கோட்டையார் என்று ஞாபகம்...

      Delete
    5. //கி.நா-க்களை படிக்காமல் இருப்பதும், அவற்றை பரிகசிப்பதும் மிகவும் தவறான ஒன்று என்ற குற்றஉணர்ச்சி ஏற்படுகிறது.///

      சக்ஸஸ்! சக்ஸஸ்! சக்ஸஸ்!

      இந்தப் பதிவின் நோக்கம் நிறைவேறிவிட்டது. இதன் ஆத்மா சாந்தி அடைவதாக! :)

      * காமிக்ஸ் கலைவாணரே...அருமை..அருமை..!

      Delete
  20. //நான் வசிக்கும் ஏற்காடு ஏரியில் இருந்து 100iஅடி துரத்தில் 50iஅடி ஆழகிணற்றிலும், 500i அடி போர்வெல்லிலும் சொட்டு தண்ணீர் இல்லைஎன்பதே நிஜம்.//

    நான் உங்கள் ஏரியா கவுன்சிலர் அல்லவே !!!

    ;-)

    ப்ராக்டிக்கலான பதில் ஏற்காடு பாறைகளால் ஆன பிரதேசம் ..மலைதானே ...

    பொதுவாக நன்னீர் நிலைகளில் ஆறு ,ஏரி எதுவாயினும் அவற்றில் வாழும் microplanktons எனப்படும் நுண்ணுயிர்கள் காரணமாக மண் பல மாற்றங்கள் அடைந்து நீரின் உட்புகுதிறன் அதிகரிக்கும் ...

    இது சமவெளி பிரதேசங்களுக்கு பொருந்தும்

    பைக்கால் ஒரு நன்னீர் ஏரி ...பனி பொழிவு சமவெளி என்பதால் நீர் அதிகம் கசியும் என நினைத்தேன் ...:-)

    ReplyDelete
    Replies
    1. @செல்வம் அபிராமி

      இந்த 'பைகால்' ஏரி சமவெளியில் உள்ளதல்ல...நீண்ட மலை தொடரின் அடிவாரத்தில் உள்ள ஏரி. பொதுவாகவே பெரும் மலைகளுக்கு இடையில் உள்ள பள்ளத்தாக்கில், நீர் கசிவு இல்லாத, பெரும் பாறை அல்லது கெட்டியான சட்டுமண் உள்ள இயற்கையான பகுதியில் ஏரிகள் தான் அமைகிறது என்பது எனக்கு தெரிந்த புவியியல்...மலைகளில் உண்டாகும் பனிபொழிவு இறுகி..பின் உருகி..இறுகி..உருகி...பல ஆயிரம் வருடங்களாக தொடர்ந்து மலைகளில் உள்ள மண் அரிப்பு ஏற்பட்டு பெரும்பாலான உயிர்சத்து மண் இருப்பதில்லை...பாறைகள் மட்டுமே எஞ்சியிருக்கும்..இதை இமயமலை தொடரில், சமீபத்தில் பார்த்தேன்...இது எதிர் வாதம் அல்ல...ஒரு அறிவுபூர்வமான பரிமாற்றம்...வரைபடம் பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
  21. மற்றும் ஒரு விளங்க முடியாத விஷயம் இதுதான் மாயாவிஜி ...


    பைக்கால் ஏரியின் நீளம் சுமார் 663கிமீ

    அகலம் ஒரேயொரு இடத்தில் மட்டுமே 73கிமீ .


    கப்பல் பாதி தூரம் சென்றதாக வைத்து கொண்டாலும் மீதி இருப்பது சுமார் 40கிமீ ..

    அருகில் இருந்து ஆதிவாசிகளை துணைக்கு அழைத்த கைதிகள் ஏன் இந்த தூரத்தை நடந்து கடக்க முயலவில்லை ?

    ஒன்றும் இல்லாத ரயிலை ஏன் இருப்புப்பாதை அமைத்து அதை இழுத்து (?????சாத்தியமா?????)செல்ல வேண்டும் ?

    ரயிலில் பொக்கிஷம் இருப்பதாக நினைத்து என சொன்னால் ....

    உயிருக்கு பயந்து ஓடும் நிலையில் அவ்வாறு பொக்கிஷம் இல்லை என்ற உண்மையை தெரிந்தவர்கள் சொல்லி இருப்பதுதானே பொருந்தும் ....

    எப்படியும் மறுகரைக்கு போனால் தெரியத்தானே போகிறது ...?

    பனி கொட்டும் சூழலில் இது முடிகிற காரியமா ??

    ஒவ்வொரு 10 கிமீ பிறகும் தளவாடங்களை கொண்டு செல்வது எவ்வளவு சிரமமாக இருக்கும் ???

    அவ்ளோதான் ...:-)

    ReplyDelete
    Replies
    1. //அருகில் இருந்து ஆதிவாசிகளை துணைக்கு அழைத்த கைதிகள் ஏன் இந்த தூரத்தை நடந்து கடக்க முயலவில்லை ? ///

      அதானே?!!!
      ஒருவேளை, சைபீரியாவை விட்டே தப்பி ஓடுவதற்கு அவர்களுக்கு அந்த ரயில் தேவைப்பட்டதோ என்னமோ!
      மேற்கூறியது காரணம் இல்லையெனில், லாஜிக்கில் மிகப்பெரிய ஓட்டை!

      மாயாவி அவர்களே... விளக்கம் ப்ளீஸ்!

      Delete
    2. சைபீரியா சிறையில் இருந்து தப்பிப்பதால் மட்டும் உயிர் வாழ்ந்துவிட முடியாது.சைபீரியாவே ஒரு பெரிய சிறைசாலை போன்றது என்பதே பயங்கரம். அவ்வளவு மோசமான பகுதிகள் அவை..! உங்கள் சந்தேகங்களுக்கு ஒரு மாறுபட்ட பதிலை கண்டுபிடித்து விட்டேன். இத்தாலி விஜய் சொன்னது 100 க்கு 200 சரி, ஒவ்வொருமுறை படிக்கும்போதும் ஒவ்வொரு புது புது விசயங்கள் தரக்கூடியவை கி.நா என்பதை இந்த விடை தேடலில் உணர்ந்தேன். கொஞ்சம் பெறுங்கள்..இந்த விடையை பதிவில் போட்டால் பலன் கூடுமே...விடையையும் நன்கு சரிபார்த்தும் விடுகிறேன்..!

      Delete
  22. மாயாவி சார்.!உங்கள் தளத்திற்கு ஒரு வாரமாகத்தான் வருகிறேன்.இவ்வளவு நாட்களாக கி.நா.லை சின்ன தம்பியில் வரும் கவுண்டமணி மாலைக்கண் நோயுடன் செகண்ட் ஷோ படம் பார்த்த மாதிரிதான் குத்துமதிப்புடன்தான் படித்து வந்தேன்.இனிமேல் உங்கள் உதவியுடன் கரை சேர்ந்து விடலாம் என்று நம்பிக்கை வந்துவிட்டது.(நோகாமல் நோம்பி கும்பிட கசக்கவா செய்யும்.)

    ReplyDelete
    Replies
    1. MV... துணை தலீவர் பதவியை உங்களுக்கு கொடுத்து விடாலாம் போல இருக்கு...ஹஹஹா..!

      Delete
    2. மாயாவி, நிச்சயமாக துணைத்தலீவர் MV தான்.... நான் வழிமொழிகிறேன்....

      Delete
    3. துணைத் தலீவர் பதவிக்குப் போட்டியின்றித் தேர்வாகியுள்ள M.V அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்!

      Delete
    4. ஈரோடு புத்தக திருவிழாவில் சங்க செயற்குழு & பொதுகுழு கூட்டம் கூட்ட வேண்டும். . அக்காங். . .

      Delete
    5. ஈரோடு புத்தக திருவிழாவில் சங்க செயற்குழு & பொதுகுழு கூட்டம் கூட்ட வேண்டும். . அக்காங். . .

      Delete
  23. Madipakkam Venkateswaran // கி.நா.லை சின்ன தம்பியில் வரும் கவுண்டமணி மாலைக்கண் நோயுடன் செகண்ட் ஷோ படம் பார்த்த மாதிரி... //

    ஹா ஹாஹ்ஹா.... சிரிப்பை அடக்கமுடியவில்லை MV சார்....

    ReplyDelete
  24. மாயாவி சார்,
    அசத்திட்டீங்க.

    அருமையான வரலாற்று உண்மைகள், ஆச்சிரியபடக்கூடிய கண்டுபிடிப்புகள் என மிக கடுமையான உழைப்பு.

    மிக்க நன்றி&வாழ்த்துக்கள்.
    தொடரவும் உங்கள் சேவையை.

    கி நா க்கு மட்டுமின்றி வேறு காமிக்ஸ்களுக்கும் இதுபோல் வரலாற்று செய்திகள் ஒளிந்திருந்தால், அதையும் இதுபோல் சுவராஸ்யமாக வெளிகொனர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. மாயாவி சார்,
    அசத்திட்டீங்க.

    அருமையான வரலாற்று உண்மைகள், ஆச்சிரியபடக்கூடிய கண்டுபிடிப்புகள் என மிக கடுமையான உழைப்பு.

    மிக்க நன்றி&வாழ்த்துக்கள்.
    தொடரவும் உங்கள் சேவையை.

    கி நா க்கு மட்டுமின்றி வேறு காமிக்ஸ்களுக்கும் இதுபோல் வரலாற்று செய்திகள் ஒளிந்திருந்தால், அதையும் இதுபோல் சுவராஸ்யமாக வெளிகொனர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. மாயாவி சார்,
    அசத்திட்டீங்க.

    அருமையான வரலாற்று உண்மைகள், ஆச்சிரியபடக்கூடிய கண்டுபிடிப்புகள் என மிக கடுமையான உழைப்பு.

    மிக்க நன்றி&வாழ்த்துக்கள்.
    தொடரவும் உங்கள் சேவையை.

    கி நா க்கு மட்டுமின்றி வேறு காமிக்ஸ்களுக்கும் இதுபோல் வரலாற்று செய்திகள் ஒளிந்திருந்தால், அதையும் இதுபோல் சுவராஸ்யமாக வெளிகொனர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு நன்றிகள் ஹசன்..! இப்படி வரலாற்றை அலசுவது உங்களுக்கு மட்டுமல்ல..எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பே..! வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தொடர்வேன். இறுதி பதிவு இன்று மாலையில் வெளிவரும்...அதையும் படித்து விட்டு சொல்லுங்கள்..! என் வருத்தம்..உங்களுக்கு வி.உ.எ..? புத்தகம் கிடைக்க எத்தனை மாதங்கள் ஆகும் என்பதே..!

      Delete
  27. நல்லதொரு ஆராய்ச்சி கட்டுரை படித்ததுபோல் உள்ளது. பாராட்டுகள் மாயாவி சிவா !

    ReplyDelete
  28. சமீபத்தில் National Geographic Channelல் World's worst roads என்றோதொரு நிகழ்ச்சி பார்த்தேன் அதில் Siberiaவில் உள்ள ஒரு மோசமான சாலை காட்டினார்கள் அப்பப்பா! நீங்கள் குறிப்பிட்டது போல Siberiaவே ஒரு பயங்கர சிறைச்சாலை!

    ReplyDelete
    Replies
    1. இந்த சைபீரியா சிறையில் இருந்து ஒருவன் தப்பித்து நடந்தே வீட்டிற்கு வந்து சேர்ந்தான்...அவன் நடந்த தூரம் எவ்வளவு தெரியுமா,,,செந்தில்..? 8000 கிலோமீட்டர்கள்..! நடந்தது சம தரைவழி அல்ல..!எல்லாம் கடுமையான மலைபிரதேசம்..! நாட்கள் எவ்வளவு தெரியுமா... இங்கே'கிளிக்' பாருங்கள்..தலைசுற்றும்..!

      Delete
  29. சத்தியமா மெர்சல்லாயிட்டேன் அய்யா!

    ReplyDelete