இந்த தளத்தின் வழியாக அனைவருக்கும் கொஞ்சம் தாமதமான ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே...!
இந்த முறையும் மீண்டும் ஒரு வரலாற்று பதிவு. ஆனால் காமிக்ஸ் கதை பற்றிய வரலாறு அல்ல. தமிழ் காமிக்ஸ் பற்றிய வரலாறு...ஆஹா...
இந்த தளத்திற்கு எழுத்துக்கள் அழகல்லவே...கிராபிக்ஸ் படங்களை தானே எதிபார்பீர்கள்! படங்களில் தொடர்கிறேன்...
முதலில் வாழ்த்துக்கள்....
அடுத்து பதிவை தொடருங்கள்......
விடை நாளை...நாளை சொல்கிறேனே...ஹீ...ஹீ..
மாடஸ்டியின் ... நிஜத்தின் நிழலும் சத்தமின்றி சேதப்படுத்தப்பட்டு விட்டதால், மேற்கொண்டு சேகரித்த தகவல்கள் பதிவிட்டு, ரசிக்கும் சுழலில் நானே இல்லாததால்... நாளை அந்த மாவீரர் யார் என்ற விடையுடன் பதிவின் தடம் மாறுகிறது நண்பர்களே....
அறிய சில அட்டைபடங்களை அப்-டேட் செய்தTamil Comics Times க்கு நன்றிகள் பல !
உங்களது நாளைய பதிவிற்கு காத்திருக்கிறேன் .விறுவிறுப்பான எழுத்து நடைக்கு எனது பாராட்டுக்கள்
ReplyDelete@ MadavanEN
Deleteமாதவன் ! விறுவிறுப்பான எழுத்து நடையா..? அட ஆண்டவா...இது தெரியாம...நான் வள வள...கொலாகொலா ன்னு இருக்கற நடைய மறைக்கனம்ன்னு பிரம்மாண்டமா கிராபிக்ஸ் மேக்கப் இல்ல போட்டுடு இருக்கேனே...!
விறுவிறுப்பாக்கும் தொடர்போல !!
ReplyDeleteகாத்திருப்பதிலும் சுகங்கான வைக்கிறார்
காத்திருப்போமே
@ Jaya Sekhar
Delete//காத்திருப்பதிலும் சுகங்கான வைக்கிறார் //
ஒரு வகையில் நீங்கள் சொல்வதும் சரிதான்...மறுபக்கம் மனதையும் கண்ணையும் கவரும்படி செதுக்க வேலை நாள் கணக்கில் நீள்கிறது...!
அடுத்த தொடர் டெக்ஸ் வில்லர் பற்றி . அதைப்பற்றி தகவல்கள் சேகரித்து வருகிறேன் என்றீர்கள் . இப்போது அதை விட்டு மீண்டும் வேறு . ஏன் நண்பரே?. காமிக்ஸ் வரலாற்று சம்மந்தமான ஒன்று என்பதால் மட்டும் அல்ல , உங்கள் தனிப்பட்ட ஈடுபாடு மூலம் இதுவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .
ReplyDelete@ சேலம் Tex விஜயராகவன்
Deleteடெக்ஸ் பற்றி நிறையவே தகல்களை சேகரித்தேன். ஆனால் 'வல்லவர்கள் வீழ்வதில்லை' கிங் ஸ்பெஷல் கதையை அநியாயத்திற்கு, எல்லோருக்கும் முகம் தெரிந்த போ.கு.தலைவர் தொடங்கி,யாரென்றே முகம் தெரியாத மிஸ்டர்.மரமண்டை வரை காய்ச்சி ஊற்றியதால், ஆர்வம் புஸ்...!
மேலும் நான் இன்னும் கிங் ஸ்பெஷல் படிக்கவில்லை...எனக்கு பிடித்துவிட்டால்,நிச்சயம் ஒரு புரட்சி பதிவு வெடிக்கும் விஜயராகவன்...!
நல்லாவே இருக்கு மாயாத்மா!
ReplyDeleteதொடருங்கள். தொடரர்கிறேன்.
@ கிட் ஆர்ட்டின் KANNAN
Deleteஎதையாவது போடவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள பதிப்பாளரல்லவே நான் ! எதை காமிக்ஸ் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற, நாடியை சுத்தமாக பிடிக்க தெரிந்த,உங்களை போன்ற சராசரி ரசிகன் ஆயிற்றே நான்...!
அப்புறம்,அதென்ன பிரிந்தாபன் மாதிர ரெண்டு 'ரர'... :)
டிக்கெட் செலவோ, பயண முஸ்தீபுகளோ தேவையே இல்லாமல் எங்களையும் காலயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு பல்வேறு காலகட்டங்களுக்கு அழைத்துச்சென்று கதைசொல்லப்போகும் மாயாவி சிவாவின் இப்பயணம் வெற்றிப்பயணமாகட்டும்! விர்ர்ர்ரூரூஊஊம்...
ReplyDelete@ Erode VIJAY
Deleteஉங்க கமெண்டை பாத்துட்டு...
" உங்க கிட்ட டைம் மிஷின் இருக்கமே...விஜய் சொன்னப்பல...கொஞ்ச ரிவைஸ்கியர் போட்டு முன்னால வந்து, பழைய வாசகர்கள் யாராவது மொத்தமா காமிக்ஸ மூட்டகட்டி, எடைக்கு போட ரெடியா வெச்சிருக்கங்கலான்னு கொஞ்ச பாத்து சொல்லுங்க மாயாத்மா...ஜோசியகார,மை போட்டு சொல்றவங்களுக்கு பல வருசமும்,பல ஆயிர செலவு பன்னது வேஸ்ட போச்சி..ப்ளிஸ்..ஹெல்ப் மீ "
-ன்னு 'வாய்ஸ் மெயில்' இன்பாக்ஸ் மெசேஜ் வந்துகிட்டே இருக்கு விஜய்...!
ஆரம்பிச்சுட்டாருப்பா மறுபடியும் ஆராய்ச்சிய.?தலையில முடியில்லாதவங்க மூளக்காரங்கன்னு இப்ப நம்புறேம்பா.!
ReplyDelete@ karthik karthik
Deleteதலையில முடியில்லாதவங்க மூளக்காரங்கன்னு நீங்க சொல்றது ஓகே...எனக்கு முடிஇல்லைன்னு யார் சொன்னது..! ஒரு வேலை எனக்கு முடியிருக்கறதாலே...எனக்கு மூளை இல்லைன்னு மறைமுகமா சொல்றிங்களா...( நீங்க எதையும் விவகாரமா ...பொடிவெச்சி தானே பாயிண்ட சொல்லுவீங்க...கார்த்திக்..ஹீ...ஹீ..)
அடடே!!!
ReplyDeleteஅட்டகாஷ்!!!
@ King Viswa
Delete'தி இந்து' வில் மாயாபஜார்-ல் ஒரு கட்டுரை,இளமை புதுமையில் ஒரு கட்டுரை...அப்புறம் தின இதழில் தினசரி புதிய தொடர்,புத்தக பதிப்புகள் என பிஸியான நேரத்திலும்...என் தளத்தை பார்வையிட்டு பாராட்டிய உங்களுக்கு நன்றிகள் விஸ்வா...!
இதுதான்யா பதிவு என்கிற மாதிரி மிக அட்டகாசமாக அமைந்துள்ளது நண்பரே! ஆர்ச்சியின் கோட்டை கால இயந்திரம் தங்களுக்குக் கிடைத்து விட்டதா என்ன? எங்களையும் தூக்கிக்கிட்டு போறீங்களே! மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து பட்டையைக் கிளப்பிட வாழ்த்துக்கள்!
ReplyDelete@ John Simon C
Deleteசின்ன விபத்தினால் விரல்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சிரமப்பட்டு உற்சாகமான எழுத்துக்களை பதிவிட்ட உங்கள் அன்பும்,நட்பும்,போனில் விசாரிப்பும் புத்துனர்ச்சியானவை ஜான்..!
விரைவில் குணமடைந்து, ஓரிரு நாளில் நலம் பெற்று ஜோராக புத்தக திருவிழாவில் வந்து நிற்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
( உங்கள ஒழுங்கு பண்ண சொல்லி, கறுப்பு கிழவி ஆயா கிட்டேயும் சொல்லியிருக்கேன்...ஹீ...ஹீ..)
எனக்கு கல்கியில் வெளியான மாடஸ்தி தொடர் ஒன்று கிடைத்தது . அநேகமாக கழுகு மலை கோட்டையாக இருக்கலாம் .அது தற்போது காவல் கழுகாரிடம் பத்திரமாக இருக்கும் என்று நம்புகிறேன் .
Deleteஉங்க அட்டகாசத்தை ஆரம்பிங்க ஆரம்பமே அருமை ஒரு நாள் காத்திருக்க தான் பொறுமை இல்லை
ReplyDeleteஇப்படி ரெண்டு ரெண்டாப் போட்டு என்னிக்கு முடிக்கறது? இன்னும் ரெண்டு சேர்த்துப் போடுங்க மாயாவி அவர்களே... மர்மநாவல் கணக்கா போகுதில்ல?
ReplyDelete@ Erode VIJAY
Deleteஉண்மைதான் ! வரலாறை தொடர்ச்சியாக சொன்னால் கொட்டாவி வந்துவிடுமே ...மேலும் ஒரு நாளைக்கு 2 & 3 படங்களுக்கு மேல் செய்யவும் முடியவில்லை...! தொடர்ச்சியாக செய்ய கொஞ்சம் சோர்வாகவும் உள்ளது...!
மொத்தமாக செய்து போடவும் முடியாது,காரணம் ரசிப்பவர்களின் எண்ணிக்கை + கமெண்ட் தான் வரலாறை தேடும் காலயந்திரத்திக்கு பொட்ரோல் என்பதே நிதர்சனம்...!
கொஞ்சம் கைகொடுத்தால் காமிக்ஸ் பற்றிய சின்ன கல்வெட்டில் ஒரு குறிப்பையேனும் எழுதிவிடலாம் விஜய்...நாம் தொடர்வண்டியில் அமரும் போது பதிவின் பாதையும் மாறிவிடும்...ஓகே !
நாயகன் நஹீ. . . .
ReplyDeleteநாயகி போலோ. (அஞ்சான் ஸ்டைலில் படிக்கவும்).
@ king viswa
Deleteவிஸ்வா...தி இந்து-வின் பொங்கல் மலரில் வேறு 20 பக்கத்திற்கு மேல் சுடசுட,
ஒரு கலக்கல் கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதா தகவல் கசிகிறது...!
மூன்று பத்திரிகையில் எழுதிக்கொண்டு, நான்காவதா இங்கும் கமெண்ட் போடுறிங்களே...உண்மையில் உங்களுக்கு எத்தனை கைகள் நண்பரே...!
சிவா சார்,
Deleteஇதெல்லாம் ரொம்ப ஓவர். உங்களை மாதிரி ஆர்வமும், செயல்திறனும் என்னிடம் இருந்தால். . .
ஹும், அதான் இல்லையே. விட்டுடுவோம்.
ஆண்டவா...விஸ்வா இதை விட பெரிய குழியை எனக்கு பறிக்கமுடியாது...!
Deleteஉங்கள் கூர்மைக்கும்,சுறுசுறுப்புக்கும் முன் நான் பெரிய சோம்பேறி...!!
மாயவி நண்பரே, அதிகம் ராஜேஷ் குமார் க்ரைம் நாவல்கள் படிப்பீரோ?. தினமும் முக்கியமான இடத்தில் தொடரும் போட்டு விடுகிறீர்களே!. அப்பாடி காமிக்ஸ் காதல் ஒரு மனிதனை எந்த அளவு ஆட்கொள்கிறது என்பதற்கு இலக்கணம் அய்யா நீவீர் . ஆழமான ஆராய்ச்சி சூப்பர் . நாளை எதிர் பார்ப்பும் கூடி விட்டது !
ReplyDelete@ சேலம் Tex விஜயராகவன்
ReplyDeleteராஜேஷ்குமார்,பி.கே.பி,சுபா இவர்களுக்கெல்லாம் குரு மர்ம கதை மன்னன் 'தமிழ்வாணன்'...! நான் படித்த முதல் கதை அவருடைய ' பிடி 22 ' என்ற தமிழ்வாணனே துப்பறியும் தொடர். (தமிழ்வாணனின் முதல் துப்பறியும் தொடரும் கூட). படித்தயுடனேயே மர்மத்தின் சுவையில் மயங்கி விழுந்துவிட்டேன். சின்ன வயதில் திகைக்க வைத்ததை,நினைத்து பார்த்து சின்னபுளத்தனமான இது முயற்சி tex. மற்றபடிக்கு ஒன்றுமில்லை...!
எனக்கு தெரிந்தவரையிலும் நண்பர்கள் திரு ராஜேஷ்குமாரும், சுபாவும் தமிழ்வாணனை ஆதர்ஷ எழுத்தாளராக கொண்டவர்கள். இதை பலமுறை சொல்லியும் இருக்கிறார்கள். ஆக, தமிழ்வாணனின் எழுத்தும் வீச்சும்தான் இந்த க்ரைம் கதை மும்மூர்த்திகளை தூண்டியது.
Delete@ King Viswa
Deleteஅப்பாடா...! நா சரியாத சொல்லிட்டேன் போல...தப்பிச்சேன்டா சாமி ! அப்பறம் விஸ்வா... தி இதழ்ல அடிச்சி பின்றிங்க...ஒரு பெர்ர்ர்ரிய கமெண்ட் உங்க சைட்ல வந்து அடிக்கணும்..தா வர்றேன்...!
அடுத்த ஆபரேஷனை ஆரம்பிச்சாச்சா ???? கலக்குங்க மாயாவி ...
ReplyDelete@ Rummi XIII
Deleteஇந்த ஆபரேசன் பண்ணி ஸ்பேர் பாட்சை தனித்தனியா பிரிக்கிறதெல்லாம் விஸ்வநாதன் தேவராஜ் என்பவரோட வேலை ரமேஷ்...!
நாம ஒரு விஷயத்தை, ஊதி ஊதி பெரிசாக்கி, கொஞ்ச சஸ்பென்ஸ் வெச்சி,
பலூன் ஒடைக்கறது மட்டும் தான் நம்ம வேலை...ஹீ...ஹீ..!
மாவீரர்?
ReplyDeleteமொத்தம் ஆறு கதையில் வந்தாரே அவரா? அட்டகாஷ்!
உஸ்ஸ்ஸ்....உங்களுக்கு தெரியாமலா...அவரே தான் விஸ்வா...!
Deleteபதிவு - ச்சும்மா அதிருதுல்ல? :)
ReplyDeleteமாயாவிடமிருந்து ஒரு அனல் தெறிக்கும் பதிவு!!
@ Erode VIJAY
Deleteஎன்ன செய்ய விஜய் எவ்வளவுதான் புரண்டு புரண்டு படுத்தாலும், அழகான அந்த இளவரசி முகம் நியாபகம் வரமாட்டேங்குது...எடிட்டர் கொத்துகறி போட்ட முகம் தான் கனவுல வந்து பயமுறுத்துது...அதான் பரிகாரம் தேடிக்கிட்டேன்.ராத்திரி நிம்மதியா தூங்கலாம் பாருங்க...!
//எடிட்டர் கொத்துகறி போட்ட முகம்//
ReplyDeleteவாட் கொடுமை இஸ் திஸ்?
சித்திரத்தின் ஒரிஜினல் ஜெராக்சை... ஜெராக்ஸ் எடுத்து,ஜெராக்ஸ் எடுத்து,ஜெராக்ஸ் எடுத்து,ஜெராக்ஸ் எடுத்து,ஜெராக்ஸ் எடுத்து,ஜெராக்ஸ் எடுத்து,ஜெராக்ஸ் எடுத்து எத்தனை கைமாறினால்...files -ன் தரம் இப்படி சிதையும் என்பது பற்றி உங்களுக்கு தெரியாத விஸ்வா...?
Deleteமதியம் 'காமிக்ஸ் மீட்' நடந்தது...நண்பர்கள் கிழி கிழி என்று கிழித்து நி.நி.யு-வை தொங்க போட்டுவிட்டார்கள் !
முடிவில் ஒரு தீர்மானத்திற்கு வந்தோம்.
அது: முத்து காமிக்ஸ் பட்டியலில் 334 என்ற வெளியிட்டு எண்னை நீக்கிவிடுவது என்பதே மானம் காக்க எடுக்கப்பட்ட தீர்மானம் !
சாரே,
Deleteநாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள். ஒவ்வொரு நாணயத்துக்கும் மூன்று பக்கங்கள் உண்டு. நினைவில் கொள்ளவும்.
நாம் என்ன வாழ்வில் அனைத்து விஷயங்களிலுமே 100% பர்பெக்ஷனை அடிப்படையாக கொண்டா வாழ்கிறோம்? ஒரிரு முறை சறுக்குவதில்லை?
நினைவில் கொள்க: நான் எந்த வகையிலும் விஜயன் அவர்களை Defend செய்யவில்லை.
நம்மில் பலர் நமக்கு என்று ஒரு விஷயம் நடக்கும்போதெல்லாம் அதற்காக வழக்கறிஞர்களாகவும், அதே விஷயம் அடுத்தவருக்கு நடக்கும்போது நீதிபதிகளாகவும் மாறுவது எனக்கு புரியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது.
ஒரே ஒரு வாய்ப்பு அடுத்தவர்களுக்கும் கொடுத்துதான் பார்ப்போமே?
என்ன குறைந்துவிடப்போகிறது?
//எடிட்டர் கொத்துகறி போட்ட முகம்//
Deleteவாட் கொடுமை இஸ் திஸ்?////- எது கொடுமை ? கொத்து கறி போட்டதா ? இல்லை அதே தான் மறுபடியும் வேண்டும் என கேட்பதா ?. கலாச்சார கொடுமை தடுப்பவர்களுக்கு ,சித்திர கொடுமை செய்ய எப்படி மனம் வந்தது ?
@ King Viswa
Deleteஎனக்கு கோபம் கூட வில்லை விஸ்வா...வருத்தம்தான் கூடுகிறது. உலக நாயகர்கள் வரிசையுடன் உலகத்தரத்தில்...என்ற வரிகளை நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது !
பிரிண்ட் செய்யும் முன் ஒரு சேம்பிள் காபி பார்த்திருக்க வாய்ப்பில்லையா என்ன...?
அம்மையார் வருகிறார்,அதிதிதிக ராயல்டி,தையல் வகுப்பு,மறுபிரவேசம்,அதிக செலவு,மலையப்பன்,அட்டைபடம் என எவ்வளவு கனவுகளை வளர்த்தார்...!
நண்பர்கள் மாடஸ்டிக்கு சங்கம் ஆரம்பிக்காத குறையாக காத்திருந்தார்கள் !
அழகாக விருந்தில், பந்திபறிமாருவது நடந்து கொண்டிருக்கும்போது,-------என தெரிந்தும் அதை பரிமாறுவது விருந்தோம்பலுக்கு அல்லவே !
இதே ஆக்ரோஷத்தையும், கோபத்தையும் வாழ்வில் 100% குறைவான நிலையில் பொருட்களும், சர்வீசும் கிடைக்காத அனைத்து இடங்களிலும் வெளிப்படுத்தினால். . . சந்தோஷப்படுவேன்.
Deleteஆனால்.....
நம்முடைய வீரத்தையும், கோபத்தையும் யாரால் பதிலளிக்க முடியாதோ, யார் ஏமாளி என்று தோன்றுகிறதோ அவர்களிடம் மட்டுமே காட்டுவது என்ன வகை?
காமிக்ஸ் மேல் இருக்கும் அதீத அன்பு, அதனால் ஏற்பட்ட அக்கறை என்பது சப்பைகட்டான பதில்.
//கலாச்சார கொடுமை தடுப்பவர்களுக்கு ,சித்திர கொடுமை செய்ய எப்படி மனம் வந்தது ?//
சத்தியமா இதெல்லாம் ஓவரா தெரியலை? கலாச்சார கொடுமைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
இதை அப்படியே கொஞ்சம் மாற்றி கேட்கிறேன்..கோபித்துக்கொள்ள கூடாது விஸ்வா...
Deleteபோட்டிக்கு நான்கு காமிக்ஸ் வந்து கொண்டிருக்கும் சுழலில், இப்படியொரு தவறை செய்ய தைரியம் வருமா...சொல்லுங்கள், 'அடி நிச்சயம்' என பண்டல் கட்டும் பொடியன் கூட தெளிவாக 'எக்கனாமி' கிளாஸ் எடுப்பான்..!
"காமிக்ஸ் என எதை போட்டாலும் வாங்கிகுவிக்கும் ஏமாளி கூட்டம் இருக்க, நமக்கென்ன கவலை" என அவர் நினைப்பதாகவும் நாம் எண்ணலாம் இல்லையா !
வீரத்தையும்,கோபத்தையும் சின்னபின்னமாகிய files கொடுத்த நிறுவனத்திடம் காட்டி முறையாக பெற்று,பொறுத்து போட்டிருக்கலாம் இல்லையா !
கடும் பாலைவனத்தில், காமிக்ஸ் தாகத்துடன் தவிப்பவர்களும்,இதோ 'கோக்' வருகிறது என செல்லிவிட்டு,------ஐ கொடுத்து, நான் கொடுப்பது தான் 'தாக சாந்தி' என சொல்வது வீரமா என்ன...?
நண்பரே சுடு அதிகமாகிவிட்டது... மன்னிக்க ! நிறுத்திவிடுவோம் !!
//"காமிக்ஸ் என எதை போட்டாலும் வாங்கிகுவிக்கும் ஏமாளி கூட்டம் இருக்க, நமக்கென்ன கவலை" என அவர் நினைப்பதாகவும் ///
Delete:( :( :(
நிதானத்தை இழக்கவேண்டாம் நண்பர்களே, ப்ளீஸ்!!!
மாயாவி சாரே,
Deleteஒரே ஒரு விஷயம்:
இங்கே உங்கள் பதிவில்
அவர் நினைப்பதாக நீங்கள் தான் எண்ணம் கொள்கிறீர்கள். அவர் அப்படி சொல்லவே இல்லையே? மேலும் இந்த தாக சாந்தி விஷயமும் நம்முடைய கற்பனைதானே? அவர் சொல்லவில்லையே?
நீங்கள் சாலையில் பயணித்துகொண்டு இருக்கும்போது பின்னால் இருந்து ஒருவர் வந்து உங்களை இடித்துவிடுகிறார். கடுங்கோபத்துடன் நீங்கள் திரும்ப, அங்கே முன் பின் அறிமுகம் இல்லாதவர் ஒருவர் நிற்க, என்ன செய்வீர்கள்? வலியின் தாக்கத்ததில் “ஏன்யா, அறிவில்லை? பார்த்து வரக்கூடாதா?” என்றுதானே நம்மில் பெரும்பாலோனோர் ஆரம்பிப்போம்.
அதே சமயம், திரும்பி பார்க்கும்போது இடித்தவர் நம்ம ஈரோடு விஜய் என்றால், நாம் என்ன செய்வோம்? வலியை பொருத்துக்கொண்டு “என்ன விஜய்? பார்த்து வரக்கூடாதா?” என்றுதானே கேட்போம். இதுதானே மனித இயல்பாக இருக்கிறது.
அப்படி ஒரு 42 வருடமாக அறிமுகம் ஆன நபரிடம் நாம் இப்படியா நடந்துகொள்வோம்?
தர்க்கரீதியாக என்ன செய்யலாம்? செய்து இருக்கலாம்?
1. எடிட்டரிடம் நேரிடையாக பேசியோ, கடிதம் எழுதியோ இதற்கு என்ன காரணம் என்று கேட்டு இருக்கலாம்? அல்லது இந்த வார பதிவில் இதற்கு ஏதாவது சொல்கிறாரா? என்பதை கவனித்து பின்னர் பேசலாம்.
2. பதிவில் இதைப்பற்றுகூறவில்லையா? பதில் ஒன்றுமே சொல்லவில்லையா? சரி, இந்த இதழ் எங்களுக்கு பிடிக்கவில்லை. சந்தா கட்டியவன் என்ற முறையில் நஷ்ட ஈடாக எனக்கு வேறு ஒரு புதிய கதைகொண்ட புத்தகம் தாருங்கள் என்றுகூட கேட்கலாமே?
எப்போதுமே எய்யப்பட்ட வில்லும், டைப்படிக்கப்பட்ட வார்த்தைகளும் திரும்ப வராத ஒன்று என்பதை குருவான நீங்கள் அறியாத ஒன்றா என்ன?
தேவை இல்லாத விஷயம்: பின்னால் இருந்து இடித்தது ஈரோடு விஜய் என்றால், நானும் அவரை பதிலுக்கு முன்னால் இருந்து இடித்துவிடுவேன் என்ற பதிலை சொன்னால் . . . உங்களுக்கு நண்பர் பவர் ஸ்டாரை அறிமுகப்படுத்திவிடுவேன். ஜாக்கிரதை.
மாயாத்மா.!,
Deleteஉணர்ச்சி பெருக்கை கட்டுப்படுத்துங்கள் ப்ளீஸ்.
பதில் வருவதில்லை என்பதற்காக தொடர்ந்து தாக்குதல் நடத்துவது தவறு. இதை உங்களிடமே சொல்லலாம் என்றால் வாட்ஸ் அப்.,fb மெஸன்ஜர், அலைபேசி எதன் மூலமும் உங்களை தொடர்புகொள்ள முடியவில்லை. உங்கள் நலனில் அக்கறையுள்ள நண்பனின் ஆலோசனை இது. போதும் மாடஸ்டி துவேசம்.
இதுபற்றி எடிட்டரின் பதிலையும் நேரடியாக வாங்கியாயிற்று.!!
@ கிங் விஸ்வா
Deleteஅக்கறையான பதில்,ஆழமான வேண்டுகோள், அழகான எச்சரிக்கை ! நன்றிகள் விஸ்வா...!!
தெரியாமல் செய்வதற்கு பெயர் தவறு, நடப்பதற்கு பெயர்தான் விபத்து...தெரிந்தே செய்வதற்கு பெயர் வேறு....என விவாதத்தை நீட்டிப்பது இனியும் அழகல்ல. முக்கியமாக நாம் இருவரும் அதை செய்யவே கூடாது.
திருப்பதி வெங்கடாஜலபதியை அழங்கரிக்கும் பணி உங்களுக்கு காத்திருக்கிறது என்றால்,அடியேனுக்கு தெரு பிள்ளையாரை அழங்கரிக்கும் பாக்கியம் காத்திருக்கிறது. நாத்திகம் பேசி, கைங்கரியத்தை (நான்) கைவிட்டுவிடாமல், கைகோர்த்து (எனக்கு நீங்கள் கைகொடுத்து) காமிக்ஸ் வளர்ப்போம் நண்பரே...!
வார்த்தைகள் காயப்படுத்தியிருந்தால் பூரண மனதுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...!
//எப்போதுமே எய்யப்பட்ட (அம்பும்)வில்லும், டைப்படிக்கப்பட்ட வார்த்தைகளும் திரும்ப வராத ஒன்று என்பதை குருவான நீங்கள் அறியாத ஒன்றா என்ன?//
இப்படி ஒரு வரிகளை எதிராளிக்காக பதிவிட வேண்டுமென்றால், எதிராளி மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்க வேண்டும் என்று நன்கு உணர்கிறேன். உண்மையில் உங்கள் நட்பு எனக்கு ஒரு வரம்..!
@ ஈரோடு விஜய் @ கண்ணன் ரவி
உங்கள் அக்கறையான அறிவுறுத்தல், தேவையான ஒன்றே ! தடம் மாறாமல் என்னை பார்த்துக்கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளுக்கேற்ப்ப...சரியான நேரத்தில், லகானை இழுத்து பிடித்து விட்டீர்கள்.
(நல்லவேளை பவர் ஸ்டாரும்,கொத்தாள தேவரும் மோதாமல் பார்த்துக்கொண்டிர்கள்...!)
நண்பர்களே,
Deleteஇது N கருத்து ...
ஒரு நுகர் பொருள் சரியில்லை என்றால் கடையிலோ ஏஜென்சி இடத்திலோ மாற்றலாம். சாப்பிடும் இடத்தில் உணவு சரி இல்லை என்றால் வேறு உணவு தரச்சொல்லலாம். தொடர்ந்து மட்டமாக வந்தால் வேறு உணவகம் செல்லலாம். ஒரு படம் சரி இல்லை என்றால் - அந்த இயக்குனர், ஹீரோ நடித்த சில படங்கள் சொதப்பினால் இனி பார்க்காமல் தவிர்க்கலாம். லயன் காமிக்ஸ் மறுவரவு முதல் அடிக்கடி அச்சுப் பிழை, எழுத்துப் பிழை, முழு முத்தகமும் அச்சுப்பிழை என்று இப்படி அமைவது முதன் முறை அல்ல. இவற்றை மீண்டும் மீண்டும் கண்டு கொள்ளாமல் விடுவது எடி மற்றும் அவரது டீமின் பொருப்பின்மையே. இதை நாளை (sunday) புக் பேரில் அவரைப் பார்த்து தெரிவிக்கவிருக்கிறேன்.
காமிக் லவர்
டியர். மயரத்ம்ர சர்ர் ,
ReplyDeleteஇளவரசியின் மீள்வருகை சற்றே சறுக்கினரலும் ஏதோ உங்கள் புண்ணியத்தில் நரமும் கரல எந்திரத்தில் ஏறித்தரன் பர்ர்க்க வரய்ப்பு கிட்டி இருக்கிறது. மிகவும் பிரயோசமரன தொடர். நிற்கரமல் தொடரவும் சர்ர்.
தங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
@ திருச்செல்வம் பிருந்தாபன்
Deleteகால பயணம் இருக்கட்டும் நண்பரே..உங்கள் கால்கள் நலம் எந்த அளவில் முன்னேற்றம் பெற்றுள்ளது ?
அந்த மாவீரர் டார்ஜான்?
ReplyDeleteதப்பு !
Deleteஅதான் ஏற்கனவே ஹிண்ட் கொடுத்து இருக்கேனே? சரி, இந்தாருங்கள். இன்னொன்று: இயக்குனர் மிஷ்கினின் ஐந்தாவது படம்.
Deleteநீங்க புதிர் போட்டிவைப்பதில் கில்லாடி என தெரியும், அட்டகாசமான 'குளு' கொடுப்பதில் பலே கில்லாடி விஸ்வா...ஹா...ஹா...!
Deleteஒண்ணுமே புரியல ஒலகத்துல
ReplyDeleteஎன்னமோ நடக்குது
மர்மமா இருக்குது.!
This comment has been removed by the author.
ReplyDeleteஅற்புதமான ..பதிவு..மேத்தா காமிக்ஸின் விசித்திர பந்தயம் அட்டைப்படம் பார்த்தவுடன்
ReplyDeleteமிகுந்த சந்தோசம்..தினம் ஒரு பதிவாக பதினைந்து பதிவுகள்....காத்திருக்கிறோம் ..குமுதத்தில்
முகமூடி முதலில் மோதியது செந்தாடியோடு தானே .ஆகா.. அதை அப்படியே மறுபடி கிடைத்தால்..
நன்றிகள் மாயாவி
கரும்புத்திங்க கசக்குமா?, காமிக்ஸ் படிக்க தயக்கமா?. சும்மா போட்டுத் தாக்குங்கள் மாயவி சார் . நாங்களும் பின்னாடியே ஓடி வர்ரம்.
ReplyDelete