Monday 21 August 2017

கர்னல் ஆமோஸ்... ஒரு புலனாய்வு.!


வணக்கங்கள் நண்பர்களே.!

மங்குஸ் பற்றிய விரியனின் விரோதி.! 
XIII பற்றிய காலனின் கைகூலி.!  
கதைகள் வரிசையை போலவே... பல மர்மங்களுக்கு விடை சொல்லும் என ரொம்பவே எதிர்ப்பார்க்கப்பட்ட இன்னுமொரு முக்கிய கதை கர்னல் ஆமோஸ் spinoff ஆல்பம்.! எப்பதான் இது வருமோ..??? என்ற கேள்விகள் ஓயாமல் ஒலித்து அடங்கிவிட்ட நேரத்தில் சர்ப்ரைஸ் இதழாக BOOK FAIR ஸ்பெஷல்! என கிடைத்தது உண்மையில் சொல்ல முடியாத  மகிழ்ச்சி.!


புத்தகத்தின் பின் அட்டையில் உள்ள...

யாரிந்த முதியவர் ஆமோஸ்..?

XIII - ன் கதையோடு இவருக்கென்ன தொடர்பு..?

காமிக்ஸ் உலகின் ஒரு மைல்கல் படைப்பின், இந்த spinoff ஆல்பம் விடை சொல்லும்.!

இப்படி கதையின் உள்அடக்கிய விஷயங்களை பற்றி சொல்லும் அந்த வரிகளுக்கு எதிராகவே ஒவ்வொரு வாசக நண்பரின் விமர்சனமும் இருந்தது. XIII கதைகளுக்கும் இந்த கர்னல் ஆமோஸ் கதைக்கும் துளியும் தொடர்பில்லை என்றே ஒட்டுமொத்த கருத்துகளாக இருந்தது.!

ஆனால் ஏனோ எனக்கு அப்படி ஒரு வரிகள் ஆசிரியர் போட காரணமில்லாமல் இருக்காது என்றே தோன்றியது. கொஞ்சமே ஜம்போ ஸ்பெஷல் கதையை நினைவில் கொண்டுவந்து கதைக்குள் பயணித்தில்...

கதையில் வந்த கதாபாத்திரமும்,பெயர்களும் ரொம்பவே பரிச்சியமானதாகவே தோன்றியது.அந்த பெயர் வரிசைகள்...

வில்லியம்
ப்ராங்க் ஜியார்டினோ
ஹெய்டேஜ்ர்
இரினா
ஜெஸ்ஸிகா

இந்த பெயர்கள் பின்னால் உள்ள கதாபாத்திரங்கள் பற்றிய நினைவுகள் ஆழமாக இருந்தாலும்கூட...அதை அகலமாக்க மீண்டும் ஜம்போ இதழை புரட்டினேன் கவனமாக..!

விடைகள் மெல்ல புலப்பட்டன.மறைந்திருக்கும் மர்மம முடிச்சிகள் வெளிப்பட்டன. என் சின்ன அறிவுக்கு எட்டிய சில உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.!

அதற்கும் முன்னால் எனக்கு ரொம்பவே ஆச்சரியமும் அதிர்ச்சியும் தந்த விஷயம்... கர்னல் ஆமோஸிக்கு ஒரு கை இல்லை என்பதுதான்.! என்னால் இந்த விஷயத்தை நம்பவே முடியவில்லை. ஒருவேளை பௌன்சர் ஓவியர் வரைந்தால், அவருக்கு கையில்லாமல் வரைய ரொம்பவே ஆசைபோலும் என நினைத்துவிட்டேன்.பின் கலெக்டர்ஸ் ஸ்பெஷல் எடுத்து புரட்டியபோதுதான் மண்டையில் பொளிர்ன்னு உறைத்து...

ஆமோஸ்க்கு ஒரு கை இல்லாமல்தான் இருக்கிறார். நான் அவர் கை இல்லாமல் இருப்பதை ஒரு துளி அளவு கூட கவனித்தே இல்லை.ஓவிய அழகும்,நேர்த்தியும் இப்படி கவனிக்காமல் கடந்த போக செய்தது எனக்கு மட்டும்தானா.!?!?


இந்த ஓவிய நுணுக்கத்தை மட்டும் நீங்கள் இரண்டாம் பாகத்தில் கண்டுபிடித்திருந்தால்...நீங்கள் கிரேட்.!

 * பல இடங்களில் பெயர் பிரித்து போட்டிருந்தாலும் கூட, அந்த பெயரும் பின்னணியும் நமக்கு சொல்வது...

XIII கதையில் மையப்புள்ளியே அமெரிக்க ஜனாதிபதி கொலைதான்.!சாட்ஷாத் அப்படி கொல்லப்படப்போகும் வில்லியம் ஷெரிடன் தான் இங்கு ப்ராங்க் ஜியார்டினோ உடனும், ஆமோஸ் பேசிக்கொண்டிருப்பவர்..!


* யார் இந்த ப்ராங்க் ஜியார்டினோ..? XIII கதையில் எங்குதான் அவர் வருகிறார்..? என தேடிய போது முதல் அறிமுகம் சிக்கியது..


 * சரி இந்த ஜியார்டினோ என்னதான் செய்திருக்கிறார்..? இந்த மெயின்கதையில் இவருக்கு என்னதான் ரோல்...? பதில்...


* ஜியார்டினோ தன் சொந்ததங்கையையே கொலை செய்தவர் என்ற உண்மையை FBI டைரக்டர் சொல்கிறார். அவரின் தங்கை பெயர் கார்லா. அவளின் கணவர் பெயர் சான் மால்வே. தங்கையில் காதலை பொறுக்காமல் போட்டுத்தள்ளியது மட்டும்தானா..? இதுக்கு FBI எதுக்கு..? ஆமோஸ் ஒரு இடத்தில் ஜியார்டினோ-மாபியாக்கு உள்ள உறவு பற்றிய கேள்வி வருதே ..?  
                         

* ஜியார்டினோ ஏன் மாபியாவை தொடர்பு கொள்ளவேண்டும்..? அவருக்கும் மாபியாக்களுக்கும் உள்ள உறவுதான் என்ன..? பதில்...



* அரசியல் கொலைகள் செய்யத்தான் மாபியாவுடன் தொடர்பா..? அந்த தொழில்முறை கொலை செய்யும் இரினா ஆமோஸ் கதையில் வந்த மாதிரி இருக்கே..? அது எங்கே.? பதில்....


ஜியார்டினோ தன் உதவியாளன் மைல்கேலை ஆமோஸுன் ரகசியம் காக்க,தொழில்முறை கொலையாளியான இரினா வைத்து காரியத்தை முடிக்கிறார் ரைட். யாரிந்த இரினா..? இரத்தபடலத்தில் அடிக்கடி வரும் பெயராச்சே..? அவள் எங்கு அறிமுகம் ஆகிறாள்..? பதில்...


அட கடவுளே..இரினா மங்கூஸின் புது அசிஸ்டெண்டா..? இவள்தானே நர்ஸ் வேடத்தில் XIII - ஐ கொலை செய்ய வருபவள்.! கண்ணில் கத்திகுத்து வாங்கி ஓடும் இவள் அவ்வளவு தானா..? இவள் பின்னணிதான் ..? பதில்...


* இந்த இரினா தொழிலில்முறை கொலை செய்யும் மாபியா கேங் லிடர் என்பது ஒருபுறம் இருக்கட்டும்...நாம் ஜியார்டினோ தங்கையின் கணவரான ஸான் மால்வே யார்..? அவருக்கும் XIII க்கும் என்ன தொடர்பு..? பதில்....



* ஸான் மால்வேவுக்கும் கார்லாவுக்கும் பிறந்தவன் நாம் ஜேசன் ப்ளை என்னும் XIII எனில்....ப்ராங்க் ஜியார்டினோவுக்கும் XIII என்ன உறவு என புரிகிறதா..? எஸ்...சாட்சாத் சொந்த தாய்மாமனே தான்..! சரி இந்த தாய்மாமன் எப்படிதான் அமெரிக்காவின் புலனாய்வு தடுப்புதுறைக்கே தலைவரானார்..? அது எப்படி சாத்தியம்..? பதில்....


* அட மாபியா கும்பலின் வாரிசான ஜியார்டினோ ஒரு வக்கீலாவது வேண்டுமானால் சாத்தியமாகலாம்.ஆனால் அந்த NSA தலைவராவது என்பது எப்படிங்க..?  பதில்....




* மேற்கண்ட இரண்டு படத்தின் வசனங்களுமே உங்களுக்கு ஜியார்டினோ எப்படி அவ்வளவு உயரத்திற்கு போனார். வில்லியம் என ஜனாதிபதியையே பெயர் சொல்லி அழைக்கும் படியான செல்வாக்கு பெற்றார் என்பது புரிந்திருக்கும். அவரின் குடும்பம் எவ்வளவு பெரிய மாபியா குடும்பம் என்பதும் புரிந்திருக்கும். 

இந்த பலத்தை வைத்துகொண்டு ப்ராங்க் ஜியார்டினோ என்ன செய்தார்..? XIII கதையில் அவர் பங்குதான் என்ன..? பதில்...




ஜியார்டினோவின் கேவலாமா சூழ்ச்சியில் பலியானது அமெரிக்க ஜனாதிபதி வாலி செரிடன் உயிர். மீண்டும் ஒரு ஜனாதிபதி கொலை.! அந்த பழியை தான் தூக்கிபோட இருக்கவே இருக்கிறார் நம்ம XIII. முதல் பாதியில் மங்குஸ் விரட்டல் என்றால் பின்பாதியில் ப்ராங்க் ஜியார்டினோவின் விரட்டல் என மிக முக்கிய பங்கு அவருக்குதான்.!

* அதுசரி ஆமோஸ் கதை முடிவில் ஒரு இளம்பெண் ஜெஸ்ஸிகா என வருகிறாளே... அவளுக்கும் XIII இரத்தபடலம்கதைக்கும் ஏதும் சம்மந்தம் இருக்கா..? 


அந்த இளம் பெண்ணுக்கும் இரத்தபடலம் கதைக்கும் சம்மந்தம் இருக்கா..? என்ற பதிலை பார்க்கும்முன் உங்களிடம் இரத்தப்படலம் கலெக்டர் ஸ்பெஷல் புக் இருந்தால் அதன் பின் அட்டையை கொஞ்சம் எடுத்து பாருங்கள். அந்த பின்னட்டையில் இருக்கும் அந்த இளம்பெண் வேறுயாருமல்ல...அது ஜெஸ்சிகாவே தான்.!


நமது லயன் காமிக்ஸில் மட்டுமல்ல...பெல்ஜியம் படைப்பிலும் 14 & 15 இரண்டு பாகத்தின் அட்டைபடத்திலும் பிரதானமாக இதே ஜெஸ்ஸிகா இடம்பெற்றுள்ளாள்.!




* அட்டைபடத்தில் இடம்பெறும் அளவிற்கு முக்கிய கதாபாத்திரமான ஜெஸ்ஸிகா ஆமோஸ் கதையில் ஒரு டைபிஸ்ட் ஆக அல்லவா ஜியார்டினோவிடம் பணிக்கு சேர்ந்தாள். அவள் எப்படி இவ்வளவு பெரிய கொலைகாரி ஆனால்..? பதில்...


18 வயது பெண்ணை தன் அரசியல் கொலைக்கும்,உளவுக்கும் கைப்பொம்மையாக பயன்படுத்திக்கொண்டதை மட்டுமல்ல....அவளை வேறுவிதமாகவும் பிரம்மச்சாரியான ஜியார்டினோ பயன்படுத்திக்கொண்டார் என்பதை இரத்தப்படலத்தை மறுவாசிப்பின்போது புரிந்துகொள்வீர்கள்.!

* ஒரு டெலாஸ்கோப் வசதி கொண்ட ஸ்னைப்பர் ஷாட் துப்பாக்கியில் குறிவைத்து கச்சிதமான கொலையில் துவங்கும் கதை...முடிவில் அதே போலவே ஒரு குறிவைத்த கொலையில் முடித்து, வட்டத்தை நிறைவு செய்துள்ளார் கதாசிரியர்.

அப்படி குறிவைத்து கொல்லப்படுவது யார்..? பதில்...



ஆமோஸ் கதையில் மட்டுமல்ல...இரத்தபடலம் 18 பாகத்தில் ரொம்பவே நீட்டமாக ஆடுபுலி ஆட்டம் ஆடும் ப்ராங்க் ஜியார்டினோ தான் அந்த குறியின் பலி ஆடு. அவ்வளவு முக்கியத்துவம்வாய்ந்த அந்த குள்ளநரியை குறிவைப்பது யார்..? 

*ஜியார்டினோவை கொன்றது யார்..?  பதில்....


கர்னல் ஆமோஸ் கதை முடிவில் யாரை அறிமுகப்படுத்தி கதை முடிக்கப்பட்டதோ...அதே ஜெஸ்ஸிகா மார்ட்டின் தான் ஜியார்டினோவை கொல்கிறாள். இங்கு ஒரு சிறப்பையும்,திரு விஜயன் அவர்களின் சிந்தனைபின்னணியையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.

குறிபார்த்து கொலை செய்வதில் துவங்கும் கதை...அந்த கொலையை செய்வது XIII என்பதால், அவரின் படம் முன்அட்டையிலும்,
அதே குறிபார்த்த கொலையில் முடியும் கதை....அந்த கொலையை செய்வது ஜெஸ்ஸிகா என்பதால் அவளின் படம் பின் அட்டையிலும் போட்ட நுட்பத்தை இங்கு பாரட்டத்தான் வேண்டும்.

ஜெஸ்ஸிகா இரத்தபடலம் கதையை  முடித்து வைப்பதில் என்ன பங்கு..? எனதெரிந்து விட்டது. இரினா என்னவானாள்..?  பதில்....


எஸ் மீண்டும்மீண்டும் அதே ஜெஸ்ஸிகா என்பதுதான் பதில்.!

"இரத்தபடலம் பற்றியே பதிவு சுத்திவருதே..கர்னல் ஆமோஸ் கதையை பற்றி எதையும் காணேமே..? சில இடங்கள் குழப்பமா இருக்கே.." என்ற உங்கள் கேள்வி நியாயமே. 

இந்த ஸ்பின்ஆப் கதை அரசியலின் நுட்பமான பின்னணியும்,உளவும் ஒற்றர்களின் குள்ளநரிதனமும் அடிப்படையாக கொண்டகதை என்பதால் சட்டென்று புரிந்துகொள்வது கடினம். அதுவும் முக்கியமான ஒரு இடம் புரிந்து கொள்வது நிறைய குழப்பத்தை ஏற்படுத்தும்,அந்த ஒரு சிக்கலை மட்டும் இங்கு விளக்குவது உங்கள் பார்வையை முற்றிலும் மாற்றும் என நம்புகிறேன்.!

வசனமே இல்லாத இந்த பக்கத்தில் சொல்லப்படும் செய்தி என்ன..? அந்த இளவயது நினைவுகள் மூலமாக ஆமோஸ் நமக்கு சொல்லும் செய்தி என்ன..? 


அமெரிக்காவிற்கு சாதகமாக பேசியதற்காக இஸ்ரேல் துவேஷி என இஸ்ரேலின் இராணுவ மேஜரால்   முத்திரை குத்தப்பட்டு விரட்டியக்கப்படும் ஆமோஸ்...வெறுப்படைந்து,மொஸாட்டில் இருந்து விலகி,இஸ்ரேலை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்கு பயணமாவதும்,அங்கு சென்று அமெரிக்காவின் உளவுத்துறையில் நம்பிக்கையை பெற்று ஊடுருவதும் என்பதெல்லாமே...

மொஸாட்டின் தந்திரமான திட்டமே..!

"இனி வாழ்நாளில் இஸ்ரேலுக்கு என்றுமே திரும்ப போவதில்லை, ஆனால் விசுவாசம் மட்டும் இரசியமாக மொஸ்ஸாட் மூலம் தன் தேசத்திற்காக அர்பணிக்கப்படும்."

இப்படி ஒரு தீர்க்கமான முடிவுக்கு திடமாக போகும் பொருட்டுதான் ஆமோஸ் அந்த இளவயதில்,அந்த மலை முகட்டில் நின்று தன்னை நாட்டுக்கு அற்பணிக்கும் விதமாக...இஸ்ரேல் துவேஷ் என்ற துரோகிபட்டத்தை சுமந்து அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்.

அப்படி அவரை அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்கும் சூத்திரதாரி வேருயாமல்ல...அவரை துரோகி என குற்றம் சாட்டிய [ஒரு கண்ணை இழந்த இராணுவ ஜெனரல்] மேஜர் மோசே டயான் தான் அவரை "நாடு இவரை செய்த சேவையை கௌரவிக்கும்...இனி வாழ்நாள் முழுவதும் செய்யப்போகும் சேவையை மண்ணோடு மண்ணாக புதைத்துவிடும்.." என நாசூக்காக அறிவுறுத்துகிறார்.

அதை உறுதிபடுத்தும் இடம்....


தன் மகளுக்கு அவர் எழுதும் கடைசி கடிதத்தில்...நான் ஒரு மொஸாட்டின் ஒற்றன்.! என தன் உண்மைமுகத்தை ஒப்புக்கொள்வதன் மூலமாக, சுமார் 30 வருடங்களாக அமெரிக்காவில் குடியேறி அங்கு அரசுக்கு வேலைபார்த்தாலும்கூட...அமெரிக்காவிற்கு வந்த நோக்கம் ஒற்றனாக வேவுபார்க்கும் பொருட்டே என்பதே நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தி.!

இஸ்ரேல் துவேஷ் என முத்திரை குத்தப்படும் காட்சிக்கும்,அவர் இஸ்ரேலை விட்டு வெளியேறும் விமான காட்சிக்கும் இடைபட்ட நிகழ்வுதான் அந்த மலைபாதையில் நின்று தீர்க்கமாக பார்க்கும் 53 & 54 பக்கங்களில் உள்ளவை.


இங்கு அந்த ஓவியம் பற்றிய ஒரு நுட்பமான விஷயத்தை விவரிக்க ஆசை. அந்த மலை உச்சியும்,பறந்து விரிந்த இஸ்ரேல் மலைபகுதியும் சரித்திரத்தில் ஒரு முக்கியமான இடம். இஸ்ரேலிய யூதரான அவதாரபுருஷனான இயேசு அந்த மலைமுகட்டில் தான் சாத்தனுடன் விவாதிக்கிறார்.அதன் முடிவில் சாத்தான் அவரை விட்டு அங்குதான் விலகுகிறது.




தன் மனதில் உள்ள சாத்தானை ஒரு மன போராட்டத்திற்கு பின், அங்கு சுயநலம் என்னும்  சாத்தானை தூக்கி எறிந்துவிட்டு,மானசீகமாக நாட்டுக்கு தன்னை அற்பணிக்கிறேன்...என ஆமோஸ் தீர்மானிக்கும் அந்த காட்சியை ஓவியர் காட்சிபடுத்தியுள்ள விதம் யாருமே கவனிக்க தவறிய...கவனிக்க வேண்டிய ஒன்று.!

* அடுத்து...இன்னுமொரு புரிதலில் சின்னதாக குழப்பம் ஏற்படும் இடம்...



ஆமோஸுக்கும் மைக்கேலுக்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்வதுதான். ஆமோஸின் ஒரே அசிஸ்டெண்ட் கேட்டி மட்டும்தான்.! மைக்கேல் ஜியார்டினோவின் அசிஸ்டெண்ட். காரியம் முடிந்ததும் ஆமோஸ் தன் அசிஸ்டெண்டை வெளிநாட்டுக்கு  புது வாழ்க்கை தொடங்க அனுப்பிவைத்து விடுகிறார்.

ஆனால் ஜியார்டினோ தன்னுடைய அசிஸ்டெண்டை இரினா மூலமாக பரலோகத்திற்கு புது வாழ்க்கை தொடங்க அனுப்பிவைக்கிறார்.இதுதான் இந்த இரண்டு கட்டுவிரியான்களுக்கும் உள்ள வித்தியாசம்.!

அடுத்து... 

* அட்மிரல் ஹைடேஜர் இந்த கதையில் ஏதும் பங்கு உண்டா..?

* ஆமோஸ் வீட்டு டிவி மேல் உள்ள ஜெஸ்ஸிகா&கிரா போட்டோவை பார்த்து ஜியார்டினோ ஏதும் புரிந்துகொண்டாரா..?

* இரண்டு கடும்தாக்குதலுக்கும் பின்னால் ஆமோஸ் தப்பிபிழைத்தாரா..?

* தன் மறைவுக்கு பின்னால் ஜெஸ்ஸிகாவிற்கு செய்தி எழுதியது ஏன்..?

* காலி துப்பாக்கியுடன் குறிபார்க்கும், கேட்டி சுட்டுத்தள்ளும் அந்த பயர்மேன் யார்..?

பதில்....



என்னது..? இவ்வளவு கேள்விக்கும் ஒரு பதிலையும் மேற்கண்ட படத்தில் காணமேன்னு தானே யோசிக்கிறிங்க...!?! அதற்கு பதிலை நான் சொல்வதை விட கர்னல் ஆமோஸ் சொல்றார் பாருங்களேன்....


என்ன நண்பர்களே...பதிவு பார்ப்பதற்கு நீட்டமா இருந்தாலும்கூட,பெரிசா ஒன்னுமில்லை இல்லையா.! இந்த பதிவின் சாராம்சம் ஆமோஸ் கதையில் வந்த ஒற்றை பெயருக்கு பின்னால் என்ன மாதிரியான கதாபாத்திரமும்,செய்கையும் [இரத்தப்படலம் 18 பாகத்தில்] உள்ளன என்பதை பற்றிய ஒரு  சின்னஞ்சிறு தொடர்பை மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லியுள்ளேன்.

படங்கள் உள்ள பக்கத்தை கூட சொல்லாமல்,வரிசைபடி இல்லாமல், ஒரு பேனல் மாத்திரமே சொல்ல காரணம்... அதை 858 பக்கத்தில்  தேடிப்படிக்கும் சுவைக்காக மட்டுமல்ல,உங்கள் நினைவுகளை கிளரும் தூண்டிலும் கூட.! மற்றபடிக்கு இந்த மறதிக்காரரின் மெகா காவியத்தில் நான் சொல்ல தவற விட்டவை கணக்கில்லாமலும்,சொன்னவை சொற்பமுமே. உங்களை சொல்ல தூண்டுவது மட்டுமே இந்த பதிவின் நோக்கம்.!!

தூண்டுகோள் லயன் ப்ளாக்கில் நண்பர் பெங்களூர் பரணி கேட்ட கேள்விகள் தான்...



மொஸ்ஸாட் பற்றிய அவருடைய வரலாற்றுபதிவும் அருமை...



அதே போல செல்வம் அபிராமியின் வருடப்பட்டியல்...


அவருடைய சில விளக்கங்களும்...


நண்பர் மிதுன் சக்ரவர்த்தியின் யூதர்கள் பற்றிய விளக்கம் அபாரம்...


நண்பர்களின் மேற்கண்ட விளக்கங்கள் உங்களுக்கு கர்னல் ஆமோஸ் படிக்கும்போது மிக உதவியாக இருக்கும்.மேலும் இந்த BOOK FAIR  ஸ்பெஷல் இன்னுமும் கடைகளில் விற்பனைக்கோ,சந்தா நண்பர்களின் அனைவரின் கைகளுக்கோ வரும் மாதத்தில் தான் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் இந்த ஸ்பெஷலை ஆன்லைனில் வாங்கிடவே வாய்ப்புள்ளதால்...தேவையானோர் வாங்கிட...இங்கே'கிளிக்'

இந்த ஆமோஸ் கதையை படித்ததில் அதன் கதாசிரியர் வேறு என்றாலும்கூட, மூலக்கதையை பாதிக்காதளவிற்கு இந்த பின்னணி கதையில் ஆமோஸின் மகள் ஜெஸ்ஸிகா என்ற இடைசொறுகளும்,ஆமோஸ் ஒரு மொஸாட் ஒற்றனாகவும் சித்தரித்தும்...முடிவில் அவர் அமெரிக்காவின் பாதுகாப்பின் ஜீவநாடி வரையில் உட்புகுந்து சாத்தியத்தை தாண்டி...பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை.! என்றளவில் சில ஒற்றர்களின் மறுபக்கத்தை அழகாக காட்டியுள்ளார்.

இந்த பதிவை அலச உங்களுக்கு 18 பாக இரத்தபடலம் அவசியம் தேவை.இதை உடனே செய்ய சாத்தியமில்லா விட்டாலும் அந்த மறதிக்காரரின் மேல் உள்ள அலாதியான ஈர்ப்பு...ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் ஒரு அலசலுக்கு கட்டாயம் கொண்டுவரும் என்றே நம்புகிறேன்.!

அடுத்து ஒரு பதிவு தோர்கல் பற்றியது.தொடர்ந்து இப்படி பதிவின் மூலமாக விரிவாக அலச உங்கள் உற்சாக வரிகள் அவசியம் தேவைப்படுகிறது நண்பர்களே.! எனவே...

ஒரு வருட இடைவெளிக்கு பின் உங்கள் கருத்துகளை....ஆச்சரியமுட்டும் விளக்கங்களை  தெரிந்து கொள்ள வரவேற்பறையில் காத்திருக்கும்...அதே...

நட்புடன்
மாயாவி.சிவா    

88 comments:

  1. Replies
    1. மாயாசார்@ படித்து விட்டு வருகிறேன்,

      Delete
    2. @ சேலம் இரவுகழுகார்

      முதல் வருகைக்கு என் வணக்கங்கள் நண்பரே.!

      Delete
  2. நானும் வந்துட்டேன்.

    ReplyDelete
  3. செம்மயான ய்ச்சி வாத்தியாரே

    ReplyDelete
    Replies
    1. @ ஈரோடு கார்த்திக்

      செமத்தியான கருத்து எழுத்தாளரே..! :D

      Delete
  4. //ஆமோஸ்க்கு ஒரு கை இல்லாமல்தான் இருக்கிறார். நான் அவர் கை இல்லாமல் இருப்பதை ஒரு துளி அளவு கூட கவனித்தே இல்லை.ஓவிய அழகும்,நேர்த்தியும் இப்படி கவனிக்காமல் கடந்த போக செய்தது எனக்கு மட்டும்தானா.!?!?//
    நானும் இந்த Spinoff படித்த பிறகு தான் கவனித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. @ Dasu Bala

      இதே கருத்தை நிறைய பேர்கள் சொன்னார்கள்.குறையே இல்லாத நேர்த்தியான ஓவியத்தில் குறையுள்ள மனிதனை அடையாளம் காண்பது....வாய்ப்பேயில்லாத ஒன்றாகத்தான் உணர்கிறேன்.! அவ்வளவு நேர்த்தியான கை வில்லியம்வான்சினுடையது.!!

      Delete
  5. பட்டைக் கிளப்பப்போகுது பதிவுன்றது பார்க்கும்போதே புரியுது!
    இப்படிப்பட்ட அலசல் பதிவுகளோடு மாயாவியைக் காணும்போது ஏதோவொரு இனம்புரியா சந்தோசம் எனக்குள்!!

    நிதானமா பதிவைப் படிச்சுட்டு - அப்பால வரேன்!

    ReplyDelete
    Replies
    1. @ இத்தாலிகாரு

      நிதானமா படிச்சி-நிறைய நோட் பண்ணிஇருப்பிங்கபோல.! :)))

      Delete
  6. XIII Complete special என்னிடம் இல்லை, அனால் தங்களின் விளக்க புகைப்படங்கள் அழகாக புரிய வைத்துவிட்டது XIII vs Amos கதையின் இடையே உள்ள தொடர்பை..

    ReplyDelete
  7. Sir இந்த பதிவின் அடுத்த பாகங்கள் எப்போது வெளியாகும் :D

    ReplyDelete
    Replies
    1. @ ரஞ்சித்

      உண்மையில் இந்த பதிவின் முடிவில் இன்னுமும் கேள்விகள் பாக்கியுள்ளதை பார்த்தால்...இன்னொரு பாகம் போடணும் போல..! ஆனா பாருங்க கடந்த பத்துநாளா அந்த தலையானை புக்கை தூக்கிட்டு புரட்டினதை பாத்து வீட்டுல எல்லோரும் பாத்தபார்வையும்,செஞ்ச பூஜையும் நினைச்சா...

      எண்ட குருவாயூர் அப்பா...நியான் ஒரு ஆணியும் புடுங்கலை..! [விழுந்து கும்பிடும் ஆண்படங்கள் இரண்டு ]

      Delete
  8. Siva @ as usual you are rocking. Detailed analysis. Good work.

    ReplyDelete
    Replies
    1. @ பெங்களூர் பரணி

      உங்களின் அந்த கேள்வி பட்டியலும்,மொஸ்ஸாட் பற்றிய விரிவுரையும் தான் இந்த பதிவின் ஊற்றுகண்.!

      Delete
  9. மாயாவி ஜி,அருமையான,ஆழமான அலசல்,இதையே நீங்கள் மேலோட்டமான என்று கூறுவதை வைத்து கணித்தால்,XIII இரத்தப் படலம் ஒரு கடல் என்று தோன்றுகிறது,மேலும் ஒன்று தெளிவாக புரிகிறது இரத்தப் படலத்தை நான் மீண்டும் மறுவாசிப்புக்கு மிக கவனமாக உட்படுத்த வேண்டும்.
    உங்கள் உழைப்பு பதிவில் தெரிகிறது,வாழ்த்துக்கள் ஜி.
    😀😀😁😁👏👏👏

    ReplyDelete
    Replies
    1. மேலும் ஒன்று தெளிவாக புரிகிறது இரத்தப் படலத்தை நான் மீண்டும் மறுவாசிப்புக்கு மிக கவனமாக உட்படுத்த வேண்டும்.


      #######


      உண்மை..ரவி.....அதான் வண்ணத்தில் வேறு வருகிறதே....கண்டிப்பாக அலசி விடலாம் ...:-)

      Delete
    2. @ மல்லூர் ரவி

      //மேலும் ஒன்று தெளிவாக புரிகிறது இரத்தப் படலத்தை நான் மீண்டும் மறுவாசிப்புக்கு மிக கவனமாக உட்படுத்த வேண்டும்.//

      உண்மை..ரவி அவர்களே.....அதான் வண்ணத்தில் வேறு வருகிறதே....கண்டிப்பாக அலசி விடலாம் ...:-)

      Delete
  10. அதற்கும் முன்னால் எனக்கு ரொம்பவே ஆச்சரியமும் அதிர்ச்சியும் தந்த விஷயம்... கர்னல் ஆமோஸிக்கு ஒரு கை இல்லை என்பதுதான்.! என்னால் இந்த விஷயத்தை நம்பவே முடியவில்லை


    ########


    உண்மை.....உண்மை.......




    &&&&&&&&


    மாயாஜீ ..,உங்களின் இந்த பதிவை படித்தவுடன் உண்மையிலேயே என்ன சொல்றது ,என்ன பதில் பதிவிடுவது என சொல்ல தெரியாமல் திகைக்கிறேன் .

    நாடி ,நரம்பு,புத்தி ,ரத்தம் எல்லாவற்றிலும் காமிக்ஸ் சுவை அறிந்தவர் மட்டுமே இப்படி உழைக்க முடியும் .


    பலமான ....பலநூறு ....கைதட்டல் படங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. @ தாரை பரணிதரன்.K

      உண்மையில் பிசிறில்லாமல்...அச்சார சுத்தமாக முடிச்சிகளை அவிழ்க்க...ரொம்பவே மெனக்கெட்டேன்.! இங்கு பதிவிட்ட பேனலை நீங்கள் ஜம்போ ஸ்பெஷலில் தேடிக்கண்டு பிடிப்பதே அரைநாள் தேடும் படலமாகிவிடும்.!

      Delete
  11. நேர்த்தியான நடையில் ஆதாரத்துடன் ஒ௫ அலசல்.பாராட்ட வார்த்தைகளே இல்லை மாயாவி சார்.இம்மாதிரியான அலசல்கள் காமிக்ஸ் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. @ சரவணன்

      //இம்மாதிரியான அலசல்கள் காமிக்ஸ் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டுகின்றன.//

      இனி இந்த தூண்டுதலே இலக்கு..! :))))

      Delete
  12. மாயாஜிசார், பதிவை படிச்ச உடன், அந்த புக்க உடனே படிக்கணும் தோணுது... மிக அருமையான, விளக்கமான பதிவு.. HATS OFF மாயாஜிசார்....

    ReplyDelete
    Replies
    1. @ கரூர் சரவணன்

      ஜியார்டினோ அறிமுகம் ஆகும் எட்டாவது பாகம்-339 வது பக்கத்தில் துவங்கி 18 வது பாகம் 843 பக்கம் வரையில் புரட்டினால் ஜியார்டினோவின் பின்னணியை தெரிந்து கொள்ளலாம்.! :))))

      Delete
  13. மாயா சார், அருமையான அலசல் + விளக்கங்கள். அதிலும் அந்த மலைக்குன்று+இயேசு+சாத்தான் = Awesome!!!
    Congrats....
    Keep continue...
    Awaiting for next post...

    ReplyDelete
    Replies
    1. @ ஹசன்

      நான் ரொம்பவே ரசிச்ச இடத்தை குறிப்பிட்டு பாராட்டிய உங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.! உங்களுக்கு தான் பிரான்ஸில் இந்த புத்தகம் கிடைக்க எத்தனை நாட்கள் பிடிக்குமோ..! :(

      Delete
  14. உளவாளிகளுக்கும் மாஃபியா கும்பலுக்கும் உள்ள தாெடர்பு பற்றி ரிப்பாேர்ட்டர் ஐானி கதையில் கூட வரும் ஐானி கூட ஆச்சரியபட்டு பாேவாா் ஒரு நேர்மையான முன்னாள் பாேலீஸ் அதிகாாி மாஃபியா கும்பலுடன் இன்னமும் தாெடர்பில் உள்ளாரா என்று..

    ReplyDelete
    Replies
    1. @ சிவக்குமார் சிவா

      இந்த மாபியாக்கள் பற்றி இரத்தபடலத்தில் ஒரு முழு அத்தியாமே உள்ளன.நீங்கள் குறிப்பிடும் அந்த ஜானி கதைசட்டென்று ஞாபகம் வரலை....பெயர் ப்ளிஸ்..!

      Delete
  15. நல்லாதான் நான் உண்டு என்வேலை உண்டுனு இருந்தேன் ஆனால் உங்கள் பதிவை படித்த பிறகு மீண்டும் 18 பாகத்தையும் படிக்க தூண்டிவிட்டது.
    என்னை யோசிக்க வைத்தவை.
    1. இரத்தபடலம் 5 ல் நடைபெற்ற ஜீயாடினோ பற்றிய காட்சி இவ்வளவு நாள் இதை யோசிக்க வில்லை.
    2. ஜெசிக்கா ஜீயார்டினோவை கொலை செய்த விதம் ஆரம்ப புள்ளியையும்,முடிவு புள்ளியும் முடிவதை இந்த பதிவு உணர வைத்தது.
    3. அமோசுக்கு அந்த 1-18 பாகத்தில் கை இருக்கா என தேட வைத்து விட்டீர்கள்.
    4. அந்த பயர்மேன் பற்றிய விளக்கம் தந்திருந்தீர்கள் என்றால் நன்றி உடையவனாக இருந்திருப்பேன்.( இப்படி புலம்ப விட்டு விட்டீர்களே சார்)

    ReplyDelete
    Replies
    1. @ சரவணன் சரண்

      // 4. அந்த பயர்மேன் பற்றிய விளக்கம் தந்திருந்தீர்கள் என்றால் நன்றி உடையவனாக இருந்திருப்பேன்.//

      உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது.அமெரிக்க அரசு தேடும் அந்த மொஸாட் ஒற்றன் ஆமோஸ் தான்.அந்த ஒற்றனை நான் பிடித்துதருகிறேன் என அரசாங்கத்தை நம்பவைத்து,அந்த ஒற்றனை பிடிப்பதாக நாடுவிட்டு நாடுவந்து கடைசியில் "இவன் தான் அந்த ஒற்றன்..!" என பொறியில் மாட்டி விடப்பட்ட எலி, அப்பாவியான ஒரு பயர்மேன்.! அம்புட்டுதாங்க.! :))))))))))))

      Delete
  16. திரும்பவும் படிப்போமடா மாதவா...

    ReplyDelete
  17. வழக்கம்போல கடுமையான உழைப்புக்கு... பூச்செண்டும்+எழுந்து நின்று கைதட்டும் போட்டாக்கள்.

    ReplyDelete
  18. ஒவ்வொரு வரிக்கும் பின்னுள்ள சூட்சமங்களை அசாத்திய உழைப்பின் மூலம் வெளிச்சமாக்கி விட்டீர்கள்.இந்தப் பதிவானது காமிக்ஸ் படிப்பவர்களின் பார்வையினையே மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
    Replies
    1. @ கோவிந்தராஜ் பெருமாள்

      உங்களிடம் பாராட்டை தாண்டி...சில அசத்தல் தகவல்களை எதிர்ப்பார்க்கிறேன்.! காரணம் பார்வை மாற்றம் உங்களிடம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.!

      Delete
  19. நிச்சயமாக இந்த அளவிற்கு பொம்மைப் புக்கினை ஆராயும் நண்பர்கள் இருப்பார்கள் என்று எதிர் பார்க்கவில்லை. மிக்க அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. Dear மாயாத்மா..!

    தெளிவா குழப்பிவிட்டும் குழம்பாம தெளிவா எழுதிட்டீங்களே!! 😜😜😜

    ///வசனமே இல்லாத இந்த பக்கத்தில் சொல்லப்படும் செய்தி என்ன..? அந்த இளவயது நினைவுகள் மூலமாக ஆமோஸ் நமக்கு சொல்லும் செய்தி என்ன..? ///

    ஹிஹிஹி 😂😂😂

    ReplyDelete
    Replies
    1. @ கோடையிடியாரே

      நீங்க குழப்பின பின்னாடிதான் நான் தெளிவே ஆனேன்.அப்புறம் ஆமோஸ் நமக்கு சொல்லும் செய்தி சரிங்கிறீங்களா..??? தப்புகிறீங்களா...? இந்த டியூப்லைட்டுக்கு 'சோக்' ப்ளிஸ்... :))))

      Delete
  21. Good review sir.. ஆமோசின் கதையை ஈரோட்டில் கிளம்பும்போது பஸ்சில் படிக்க ஆரம்பித்து சேலம் வருவதற்குள் படித்து முடித்தேன். மிக வேகமாக நகர்ந்தது.. ஒரு ஆச்சர்யமான விஷயம், கதையில் வரும் உளவுத்துறை மொசாட்ஐ பற்றி நமது எழுத்தாளர் சொக்கன் எழுதி கிழக்கு பதிப்பகத்தில் வந்த புத்தகத்தை ஈரோட்டில் அன்றுதான் வாங்கினேன்.!

    ReplyDelete
    Replies
    1. @ பிரசன்னா

      நேற்று மொஸாட் பற்றி நீங்கள் போனில் கூறிய தகவல்கள் அருமை..! என். சொக்கனின் மொஸாட் படித்துபார்கிறேன்.அந்த ஜெர்மனி படம் பெயர் ப்ளிஸ்...

      Delete
    2. மாயாஜி அந்த படம் என் யூகம் மியூனிக்
      ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கியது.
      பின் குறிப்பு அவரும் ஒரு யூதர்.
      1972 மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக்
      போட்டியின்போது பாலஸ்தீனியர்களால்
      கொல்லப்பட்ட இஸ்ரேலிய கால்பந்து
      வீரர்களுக்காக மொசாட் பழிவாங்கும்
      உண்மைச்சம்பவம்.

      Delete
    3. @ கணேஷ் KV

      நீங்கள் சொன்னது மிகசரி.! நீங்கள் குறிப்பிடும் MUNICH திரைபடம்...

      1972-ல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக்ல விளையாட போன இஸ்ரேல் வீரர்கள் 11 பேரை...பாலஸ்தீன தீவிரவாதிகள் கேம்பசுக்கு உள்ள பிணையகைதியா பிடிச்சி சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்த உண்மை சம்பவத்தை வெச்சி எடுக்கப்பட்டதுதான் MUNICH.

      இஸ்ரேல் அரசு ஆறு வருடங்கள் வேட்டையாடி அந்த ஒன்பது தீவிரவாதிகளையும் ஒரு தனி டீம் அமைச்சி கொன்றது.அந்த டீம் மொஸாட் அமைப்பை சேர்ந்தவங்க கிடையாது. ஆனால் அந்த டீமை அமைப்பவர்கள் மொஸாட் உயர்அதிகாரிகள்.அந்த தீவிரவாதிகளை எப்படியேனும் கொன்றே ஆகவேண்டும்...அவர்களை வேட்டையாடும் பொறுப்பை இஸ்ரேல் அரசு மொஸாட் அமைப்பிடம் பொறுப்பை ஒப்படைகிறது. மொஸாட் ஐந்து திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கூலிக்கு அமர்த்துகிறது.அவர்களின் வேட்டைதான் படம்.!

      ஆனால் ப்ரசன்னா சொல்லும் படம்...the people vs frits bauer

      Delete
  22. வேதாளரே உங்களுக்கு மட்டுல்ல எனக்கும் கர்னல் அமோஸ் படித்தவுடன் தான் அவருக்கு ஒரு கை யில்லாதது உரைத்தது அருமையான அலசல் வேதாளரே

    ReplyDelete
    Replies
    1. @ செந்தில் சத்யா

      நன்றிகள்பல..!

      Delete
  23. நிறைய பேருக்கு தெரியாத இரண்டு முக்கிய விஷயங்களை கரனல் ஆமோஸ் கதை மூலமாக சொல்லியுள்ளார் இதன் கதாசிரியர் பாராட்டப்பட வேண்டிய விஷயம். படிக்கும் போது நானே வியந்து போனேன். அதையும் தாங்கள் இன்னும் நுனுக்கமாக கூறியது இன்னும் வியப்பாக உள்ளது. அடேங்கப்பா எந்தளவுக்கு யோசித்துள்ளீர்கள் சூப்பர் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. @ கலீல்

      ஆர்வம் தாண்டி வேறென்னா நண்பரே.!

      Delete
  24. அம்மாடியோவ்!!!!

    பின்னிப் பெடலெடுத்திட்டீங்க மாயாவிகாரு!!!

    ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் அதே பழைய மாயாவிகாருவை; ஆனால் இன்னும் பல மடங்கு வீரியத்தோடு காணும்போது உற்சாகம் மடைதிறந்த வெள்ளமாகிறது எனக்கு!

    கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்டு 'அதற்கான பதில்..' என்று படம்போட்டு விளக்கியிருப்பது - அக்மார்க் மாயாவி ஸ்டைல்!! செம்ம செம்ம!!!

    'கர்னல் ஆமோஸ்' ஸ்பின்-ஆஃபை படிப்பதற்கு முன்பு ஒருமுறையும், படித்தபிறகு ஒருமுறையும் உங்களுடைய இந்தப் புலனாய்வு பதிவை படிக்க நேரிட்டால் - யாருக்கும் - கதை பற்றிய புரிதல் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்பது உறுதி!!

    உங்களுடைய எழுத்துத் திறனும் பல மடங்கு மேம்பட்டிருப்பது கண்கூடு!! 'கிடைத்த ஓய்வு நேரத்தில் தன் கோடாரியைக் கூர்தீட்டிய ஒரு மரம்வெட்டியின் கதை' எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது!

    அந்த மலைஉச்சியையும், இயேசுபிரான் சாத்தானை சந்தித்த இடத்தையும் தொடர்பு படுத்திய விதம் - அது உண்மையோ, பொய்யோ - பிரம்மிக்கச் செய்கிறது!

    அதுபோலவே, இரத்தப்படலம் - ஜம்போ ஸ்பெஷலின் முன்-பின் அட்டைகளுக்கான தொடர்பை விளக்கியிருப்பதும் - வித்தியாசமான - ஆச்சர்யமான - மலைக்கவைத்திடும் சிந்தனையே!! எடிட்டர் இப்படிப்பட்ட சிந்தனையின் அடிப்படையில்தான் அம்மாதிரியான அட்டைப்படங்களை இடம்பெறச் செய்தாரா என்பதை அவரே சொன்னால்தான் உண்டு!!

    எழுந்து நின்று கைகளை வலிக்க வலிக்கத் தட்டிக்கொண்டே இருக்கும் படங்கள் பல நூறு!

    ReplyDelete
    Replies
    1. @இத்தாலிகாரு

      * XIII பல மொழிகளில் பலவிதமான அட்டைபடங்கள் வந்திருக்க...அவர் கதையின் துவக்கத்தையும் முடிவையும் உண்டாக்கிய கதாபாத்திரத்தை மனதில் வைத்துதான் அட்டையை டிசைன் செய்துள்ளர் என்பதை...

      மறுவாசிப்பின் போது நிச்சயமாக உணர்வீர்கள்.

      * இனி தொடரும் நாட்களில் ஒரு வீரியமான இப்படி சில விமர்சன பதிவுகளின் மூலமாக காமிக்ஸ் உலகை வலுபடுத்தலாம் என நம்புகிறேன்.

      என்ன ஒரே வருத்தம்....இவ்வளவு விஷயத்தை லயன் ப்ளாகில் செய்ய முடியாது என்பது மட்டுமல்ல...

      நல்லபடைப்புகள் வலைதளத்தின் மூலமாக அறிமுகப்படுத்த....

      லயன் ப்ளாகை தாண்டி ஒரு தனி அவசியம் தேவை என கணிக்கிறேன்.

      இன்று ஒரு பத்திரிக்கை விமர்சனத்தை தாண்டி fb,வாட்ஸ்ஆப் விமர்சகர்களின் கையில் தான் ஒரு சினிமாவின் வெற்றியே உள்ளது என்ற நிலையில்....

      வெளி விமர்சகர்கள் புதிய வாசகர்களின் பிரவேசத்திற்கு அவசியமாவதாக நினைக்கிறேன்.!

      Delete
  25. வாழ்த்துக்கள் டாக்டர் மாயாஜி.
    Xiii ஆராய்ச்சி கட்டுரைக்காக காமுக
    சார்பாக நான் வழங்கும் டாக்டர் பட்டமிது.

    ReplyDelete
    Replies
    1. @ கணேஷ்KV

      என்னாது....!?!?!

      டாக்டர்.... (தலைதெறிக்க கால்தடுக்கி விழுந்த எழுந்து ஓடும் படங்கள் 13)

      Delete
  26. மாயாவி சார் பின்னீட்டீங்க போங்க. இவ்வளவு நாள் ஆமோஸ் கோட் பாக்கெட் ல் கை விட்டு கொண்டிருந்தார் என நினைத்து கொண்டிருந்தேன்.
    பில் ஸ்டாண்டாட்ன் நினைவு இருக்கிறதா யாருக்கும் அவனுக்கும் ஒரு spin off irukirathu.

    ReplyDelete
    Replies
    1. @ கும்பகோணம் ஸ்ரீதர்

      //பில் ஸ்டாண்டாட்ன் நினைவு இருக்கிறதா யாருக்கும் அவனுக்கும் ஒரு spin off irukirathu.//

      அதை பற்றி சொல்லுங்களேன்...உங்கள் நடையில் படிக்கிறோம்.

      Delete
  27. லிங்க் கொடுத்த ஈ.வி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  28. நன்றி மாயாவி சார். என் பெயர் ஸ்ரீதர். கும்பகோணம்.

    ReplyDelete
  29. இவருக்கு எப்படித்தான்நேரம் கிடைத்து அலசினாரோ என மகிழ வைத்து விட்டீர் மாயாவியாரே! நன்றாக இருக்கிறது. ஆர்வத்தைத் தூண்டியது. வாழ்த்துக்கள். தொடர்க தோர்கலில்..

    ReplyDelete
    Replies
    1. @ ஜான் சைமன்

      நான் குடும்பம், தொழில், நண்பர்கள்&உறவினர் சந்திப்பு...

      இதுக்கான நேரத்தை திருடுற விஷயத்தை உங்ககிட்ட ஒத்துகிறேன் போலிஸ்கார்.கொஞ்சமே கண்டுகாத விட்டுபிடிங்கோ.!!

      Delete
  30. இரத்த படலம்:-

    எப்போதுமே ஆச்சர்யங்களை அள்ளித் தரும் தங்கச்சுரங்கம். தங்கள் பதிவு இரத்த படலம் பற்றிய என் பழைய நினைவுகளை கிளறிவிட்டது மாயாசார். உங்கள் அனுமதியோடு என் சிறிய நினைவுகூறல்.

    இதில் நான் முதலில் படித்தது பாகம்4தான். பிறகே முதல் 3பாகங்களையும் தேட ஆரம்பித்தேன். இரண்டு ஆண்டு கடும் தேடலுக்கு பின் 4பாகங்களும் என் கையில் (பாகம் 1நண்பர் கலீலீன் அன்பு பரிசு20 ஆண்டுகளுக்கு முன்பு;பாகம் 2இடம்பெற்ற லயன் சூப்பர் ஸ்பெசல்க்கு ஈடாக மின்ட் கன்டிசன்ல இருந்த சைபரின் ச்சே ஸ்பைடரின் கொலைப்படையை எக்சேன்ஜ் செய்து பெற்றேன்);

    பிறகு எடிட்டரின் முன்கதை சுருக்கத்தோடு பாகம்5 வரவும் இரத்த படலத்தின் மேல் தனிப்பிரியமே வந்தது. பலமுறை இந்த 5பாகங்கள் அடங்கிய தொடரை வாசித்து மகிழ்ந்துள்ளேன்.

    1997டூ2000களில் சேலத்தில் என்னுடைய முதல் காமிக்ஸ் குருநாதர் திரு A.சிவா, ஓரு இரத்த படல வெறியர். எப்போதும் காமிக்ஸ் பற்றிய தகவல்களை அள்ளி அள்ளி தருவார். இதைப் படியுங்கள் அதை படியுங்கள் என வாஞ்சையோடு அவரின் கலக்சன் முழுதும் படிக்க தந்தார். இரத்த படலம் பற்றி மனுசர் சலிக்காது பேசுவார். ஞாயிறு பழைய புத்தக கடையில் மணிக்கனக்கில் அவர் பேசுவது சலிக்கவே சலிக்காது. இன்று ஓரளவு காமிக்ஸ் பற்றி இன்ட்ரஸ்டாக நான் பேசுவது எல்லாம் அவரிடம் இருந்து கற்றவையே.

    இரத்த படலத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் பற்றி அவர் ஒரு ஆராய்ச்சியே செய்துள்ளார். கர்னல் ஆமோஸ்க்கு ஒற்றை கை என்பதும் எனக்கு முதன் முதலில் சொன்னது அவரே. அதைப்பற்றி பிறகு நான் மற்ற கலந்துரையாடல்களில் சொல்லும்போதும் நண்பர்கள் அட அப்படியா என ஆச்சர்யம் அடைவர். காரிங்டன், ஜோன்ஸ், பெட்டி, ஜேசன் பிளை, மார்த்தா, ஆபோலிம் தம்பதியினர், மாக்கால், ஹெய்டஜர், கால்ப்ரெய்ன்...என ஒவ்வொரு கேரக்டரையும் அலசி ஆராய்ந்து எங்களுக்கு(அப்போது ஓரு நாலைஞ்சி பேர் இருந்தோம்) ஆர்வமுடன் விவரிப்பார்.

    மீண்டும் உங்கள் கடும் உழைப்பின் பயனில் விளைந்த இந்த பதிவின் மூலம் அந்த சிவாவை ஞாபகப் படுத்தி விட்டீர்கள் மாயாவி சிவா சார். உங்கள் இந்த பதிவிற்கு அரை மணிநேரம் விசிலடித்துக் கொண்டே கைதட்டும் படங்கள் சார்.

    இந்த பதிவு பற்றியும், ஆமோஸ் பற்றியும்,
    ஆமோஸ்க்கு இரத்த படலத்தில் உள்ள பங்கு பற்றியும் என் கோணத்தில் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @ சேலம் இரவுகழுகார்

      உங்கள் பால்ய நினைவுகளை ரொம்பவே சுவையாக உள்ளது. பதிவு பற்றியும்,ஆமோஸ் பற்றியும் உங்கள் கண்ணோட்டத்திற்கு காத்திருக்கிறேன்.!

      Delete
  31. திகைப்பாக இருக்கிறது..! நானும்தான் காமிக்ஸ் படிக்கிறேன் ஒவ்வொரு வசனத்தையும், சித்திரங்களையும் கூர்ந்து கவனித்து, வாசித்து, மகிழ்கிறேன்.ஆனாலும் உங்களுடைய ஆராய்ச்சியும், அலசலும் அபாரம் வேதாளரே...!

    ReplyDelete
    Replies
    1. @ ஜே.சரவணகுமார்

      நீங்கள் இப்படி சொல்வதுதான் திகைப்பாக இருக்கிறது...அவுக்..!

      Delete
  32. மாஜி...அருமை. இதைப் போல பல பதிவுகளை எதிர்பார்ககிறோம். இது நீங்கள் அடித்து ஆடிய களம். நீண்ட நாள் இடைவெளியை சமன் செய்து விட்டீரகள். கர்னல் ஆமோஸ்ரத்தப்படலம் முக்கியமான கிளைக்கதைகளில் ஒன்று. இது வராமலே போய் விடும் என்று நான் நினைத்ததுண்டு. நல்லவேளையாக உண்மையிலே ஆசிரியர் ஆச்சரியப்படுத்தி விட்டார்.

    ரத்தப்படலம் மெகா ரிலீசின் முன்பதிவுகளை ஊக்குவிக்க இது மாதிரியான கட்டுரைகள் உறுதுணையாக இருக்கும். நீங்களும் உங்களை போன்ற எழுத்து வன்மை மிக்க நணபர்கள் தலீவர், சேலம் தல, ஈவி, செனா ஆனா மற்றும் பலர் தொடர்நது ரத்தப்படலம் பற்றி பல பதிவுகளை எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //ரத்தப்படலம் மெகா ரிலீசின் முன்பதிவுகளை ஊக்குவிக்க இது மாதிரியான கட்டுரைகள் உறுதுணையாக இருக்கும்//-உண்மை மஹிஜி. இரத்த படலம் பொறுத்து எடிட்டர் சொன்னது,"இது ஊர்கூடி தேர் இழுக்கும் முயற்சி; நீங்கள் அனைவரும் கை கொடுத்து இழுத்தால் தான் தேர் ஊர் வந்து சேரும்;உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் அத்தியாவசியமான ஒன்று". அந்த முயற்சியை மாயாசார் முன்னின்று தொடங்கி விட்டார். நாமும் பக்க பலமாக பின்செல்வதில் மகிழ்ச்சி.

      Delete
    2. @ மகேந்திரன்

      இரத்தபடலம் பற்றிய பதிவுகள் தொடர.... நிச்சயம் முயல்கிறேன்.!

      Delete
  33. இந்தப்பதிவு ஜம்போ ஸ்பெஷலை மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

    ReplyDelete
  34. அருமை மாஜி ... உண்மையாகவே புத்தகத்தை கீழே வைக்காமல் முழுவதையும் ஒரே மூச்சில் படித்த லிஸ்டில் இதற்கும் ஒரு இடமுண்டு ...

    பதிவு முழுவதையும் படிக்கவே எனக்கு மூச்சு வாங்குகிறது ... எப்படித்தான் இதை தயார் செய்தீர்களோ ? உங்களது முயற்சிக்கு ஒரு ராயல் சல்யூட் ...

    //ஆமோஸ்க்கு ஒரு கை இல்லாமல்தான் இருக்கிறார். நான் அவர் கை இல்லாமல் இருப்பதை ஒரு துளி அளவு கூட கவனித்தே இல்லை.ஓவிய அழகும்,நேர்த்தியும் இப்படி கவனிக்காமல் கடந்த போக செய்தது எனக்கு மட்டும்தானா.!?!? //

    நானும் உங்களது துணைக்கு இருக்கிறேன் ... :)

    ReplyDelete
    Replies
    1. @ திருப்பூர் புளுபெர்ரி

      உண்மையில் இதை ஒழுங்க முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது....ஒவ்வொருமுறையும் யோசித்து யோசித்து பதிவை முடிப்பதற்குள் அடுத்த மாசமே வந்துடுது.! இப்படி பாதியில் நின்ற பதிவுகள் பல..! :)))

      Delete
  35. மிகவும் அருமையான பதிவு உங்களின் ஆர்வம் மிக நன்றாகப் புரிகின்றது . எப்படி உங்களால் மட்டும் சிறப்பாக எழுத முடிகிறது

    ReplyDelete
    Replies
    1. @ ஈரோடு ஸ்டாலின்

      நன்றிகள்பல ஸார்.!

      Delete
  36. அருமையான பதிவு.மிகவும் மெனக்கிட்டிருக்கிறீர்கள்.ஆமோஸ்க்கு ஒரு கை இல்லாமல்தான் இருக்கிறார். நான் அவர் கை இல்லாமல் இருப்பதை ஒரு துளி அளவு கூட கவனித்தே இல்லை.ஓவிய அழகும்,நேர்த்தியும் இப்படி கவனிக்காமல் கடந்த போக செய்தது என்று குறிப்பிட்டது முற்றிலும் உண்மை.ஆங்கிலத்தில் இக்கதை பார்க்கும்வரை ஆமோஸுக்கு ஒரு கையில்லை என்று கவனித்ததேயில்லை.இதைப்போல் இன்னும் எத்தனை ரகசியங்கள் ஒளிந்திருக்கிறதோ தெரியவில்லை.இனிவரும் கதைகளையும் இவ்வாறு பிரித்து மேய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. அருமையான பதிவு , உடனே அலசிப்பார்க்க ஜம்போ ஸ்பெசல் கையில் இல்லை இரத்தப்படலம் 18 பாகமும் வெளிவந்த உடன் மீண்டும் ஒரு முறை இதை பார்க்க வேண்டும்

    ReplyDelete
  38. டியர் சிவா,இரத்தபடலம் பற்றிய பதிவென்றால், அதனை போன்றே பெரிதாக இருக்க வேண்டுமா என்ன!!! இருப்பினும் சற்றும் போரடிக்கவில்லை. அருமை! !! இந்த பதிவிற்கான தங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

    கர்னலை பற்றி பதிவு போட்ட நீங்கள் பெட்டியை பற்றி பதிவு போடாதது சற்றே வருத்தத்திற்குரிய விசயம்.

    ReplyDelete
    Replies
    1. @ டாக்டர் சுந்தர்

      பதிவிட்டு ஒரு வருடங்கள் ஆகிறது, ஏற்கனவே ஒரு இந்த கலர் விஷயத்தில் குளறுபடி செய்து வாங்கிகட்டிகிட்டேன். நண்பர்களிடம் கலந்துபேச சரியானபடிக்கு மாற்றிஅமைகிறேன்.! அதுவரையில் மன்னிச்சூ.!!

      Delete
  39. பேக்ரவுண்ட் கலர் ப்ளாக், ஒரு மாதிரி உள்ளது. தயவு செஞ்சு கலரை மாற்றுங்கள். வயசான காலத்துல உத்து படிக்க கஷ்டமா இருக்கு :-)

    ReplyDelete
  40. அட்டகாசமான பதிவு, தங்கள் ஆர்வம் மற்றும் சேவை தமிழ் காமிக்ஸ் உலகிற்கு மிகவும் வலுவான மற்றும் தேவையான ஒன்று மாயாவி.

    ReplyDelete
    Replies
    1. @ இளமாறன்

      கருத்துக்கு நன்றிகள்பல.!

      Delete
  41. ஆஹா! சிலபல அலுவல் காரணமாக கா்னல் ஆமோஸ் இன்னும் படிக்கவில்லை! உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிகிறது மாயாவிஜீ உங்களது பதிவு!

    ReplyDelete
    Replies
    1. @ மிதுன் சக்கரவர்த்தி

      இதெல்லாம் நியாயமே இல்லை.நம்பும்படியும் இல்லை.ஏத்துகிறபடியும் இல்லை. முதல்ல படிங்க மிதுன்.!

      Delete
  42. பில் ஸ்டாண்டன் ஒரு ஸ்பின் ஆஃப் உள்ளது.யாரும் ஆங்கிலத்தில் படித்து இருந்தால் பதிவிடவும்.

    ReplyDelete
    Replies
    1. @ ஸ்ரீதர்

      நீங்கள் குறிப்பிடும் பில்லி ஸ்டாண்டன் மூன்றாம் பாகத்தில் மனநலம் குன்றிய குற்றவாளிகள் உள்ள சிறையில் வரும் 19 வயது பையன். உங்கள் ஆர்வம் பார்த்தால் கதை செமையாக இருக்கும் போல. அதை பற்றி நீங்களே சொல்லிவிடுங்களேன்.!

      Delete
  43. வாவ் சூப்பரு மாயா சார் _/|\_

    அசத்துறீங்க

    உங்களுடைய தேடல் உழைப்பு அர்ப்பணிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது

    மொத்தத்துல கலக்குறீங்க

    ( பலமாக கைதட்டும் படங்கள் நிறைய நிறைய போட்டுக்கோங்கோ )
    .

    ReplyDelete
    Replies
    1. @ சிபி

      எல்லாருமே இப்படி பாரட்டுறது....லைட்டா வயித்தை கலக்குறது.! அவுக்...அவுக்...

      Delete
  44. மனதை மலைக்க வைக்கும் ,விழிகளை வியப்பால் விரிய வைக்கும் உழைப்பு நிறைந்த பதிவு ...மனமார்ந்த பாராட்டுகள் மாயாவிஜி !
    கர்னல் அமோஸ் இதழில் அமோஸ் ஒரு இஸ்ரேலிய ஒற்றன் என்பதாக சொல்லப்பட்டு இருப்பது எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை ..
    மூலக்கதையில் அமோஸ் ஒரு அமெரிக்க அனுதாபி என்ற வகையில் சித்தரிக்கப்பட்டு இருந்தது மிகவும் பொருத்தமானது என்பது என் எண்ணம் .....
    .

    ReplyDelete
    Replies
    1. @ செல்வம் அபிராமி

      உங்கள் பாராட்டை மட்டுமல்ல...கருத்தையும் ஏற்கிறேன்.ஆமோஸ் ஒரு வயதான அமெரிக்க அரசின் விசுவாசி என்ற பிம்பத்தை கொஞ்சமே அசைத்துப்பார்ப்பதாகவே அவரை பற்றிய கிளை கதை உள்ளது. உலகின் புகழ்பெற்ற ஏஜண்ட் பட்டியலில் மொஸாட்டும் உள்ளதால்...

      அதை பற்றி இரத்தபடலத்தில் ஒரு துளிஅளவும் இல்லாத நிலையில்...

      இந்த ஸ்பின்ஆப் கதையின் சுவைக்காக,கூடுதல் தகவல்கள் சொல்லப்படவேண்டும் என்பதற்காக...

      -கர்னல் ஆமோஸ் ஒரு யூதர்
      -அவர் மொஸாட் ஒற்றன்.
      -அவரின் ரத்த உறவு ஜெஸ்ஸிகா

      போன்ற புதிய இடைச்செருகல் இரத்தபடலத்தில் நாம் பார்த்த ஆமோஸின் கம்பீரத்திற்கு ஈடாக இல்லை என்பது நிதர்சனமே.!

      Delete
  45. சார் புதிய பதிவு உண்டா?

    ReplyDelete
  46. செம்ம! 👍🏼👍🏼👍🏼

    ReplyDelete