Wednesday 10 August 2016

காமிக்ஸ் குடும்ப விழா - 2016

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்..!

ஈரோட்டில் கடந்த சனிகிழமை [6-8-2016] அன்று நடந்த ஈரோட்டில் இத்தாலி புத்தக வெளியிட்டு விழா என்பதைவிட...  காமிக்ஸ்  குடும்ப விழா என்று சொல்வதே சரியாக இருக்கும்...!

இந்த விழா பற்றிய எனது பார்வையில் முற்றிலும்  வேறுவிதத்தில்  பார்க்கிறேன். இந்த விழா வெளிபடுத்திய விஷயங்களாக நான் கருதுவது... ஒரு மையபுள்ளியை, ஒரு முக்கியஆணிவேரை மண்ணில் இருந்து வெளிகாட்டியதுதான்..! அவற்றை இரண்டே இரண்டு சின்ன டயலாக்கில் முடித்துவிடலாம்.! அவ்வளவு யதார்த்தமான உண்மை.!!


உயர்திரு.சௌந்திரபாண்டியன்:என்னருமை காமிக்ஸ் வாசகர்களே..உங்களுக்காக...இந்த காமிக்ஸ் உலகிற்காக.... நான் கொடுத்த படைப்பிலேயே சிறந்த படைப்பு எது தெரியுமா..? 

திருமதி.சௌந்திரபாண்டியன்: "ஏதோ எம்புள்ளை பிரிண்டிங் பிரஸ் வெச்சிருக்கான்...என்னோட வீட்டுக்காரர் மாதிரியே  பிரிண்டிங் மிஷின்விஷயமா வெளிநாட்டுக்கு அடிக்கடி போயிட்டு வருவான்; அங்கிருந்து வாங்கிட்டு வர்ற புக்ஸை அவன் தமிழ்ல அவனோட அப்பா மாதிரியே ஆர்வமாபிரிண்ட் போடுறான்னு தெரியும்...அதுக்காக ஓயாம நெட்டில்  எழுதறதும் புக்ஸை அனுப்பறதும் பிரிண்ட் பண்றதும்ன்னு இந்த ரெண்டு மூணு வருஷமாவே சதா வேலையாவே இருக்குறதும், உடம்பையும் தூக்கத்தையும் கெடுத்துட்டு வேலைபாக்குறதும் ஏன்னே புரியாம இருந்தது ! மெயின் பிஸ்னசை விட ஏன் இந்த புக்ஸ் மேல இவ்வளவு ஈடுபாடுன்னு புரியாமயே இருந்தது.!

ஆனா...ஆனா...இங்க வந்ததுக்கப்புறம்தான் தெரியுது என்னோட மகன் விஜயன் போடுற புக்ஸை படிக்க இத்தனை பேரா... இவ்வளவு அன்பா...எவ்வளவு ஆர்வம்,ஆரவாரம்...உங்க அன்புக்கு தான் அவன் மெனக்கெட்டு வேலை பாக்கிறான்னு இங்க வந்து பாத்ததுக்கு அப்புறம்தான் புரியுது.!

உங்கிட்ட ஒன்னே ஒன்னை கேட்டுகிறேம்ப்பா..."

என அவர் வைத்த வேண்டுகோள் என்ன தெரியுமா..? 
(சேலம்டெக்ஸ் சொல்லவிட்டுட்ட அந்த ஒற்றை டயலாக்..) 

இரண்டிற்க்குமான பதிலை படத்தில் பாருங்கள்...



இதை தாண்டி இந்த விழாவை பற்றி சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை நண்பர்களே...உங்களுக்கு எப்போதெல்லாம் திரு விஜயன் மீது கோபமும் ஆத்திரமும் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த தாய் தந்தையரின் சொற்களை நினைத்து கொள்ளுங்களேன்.! கட்டாயம் உங்களுக்குள் ஒரு ஒரு பூ மலரரும்..! இப்படி காமிக்ஸ் நண்பராக ஒரு ஆசிரியர் கிடைத்தது நம் பாக்கியம்..! 

கைவசம் உள்ள மொத்தபுகைபடத்தையும் இங்கு பதிவேற்றியுள்ளேன்...மீதிகதைகளை அது பேசும்..! வீடியோக்கள் தனி பதிவாக இடுகிறேன்...இன்னும் கைக்கு வரவில்லை..!

நட்புடன்
மாயாவி.சிவா