Monday, 22 June 2015

விடுதலையே உன் விலை என்ன..? பகுதி-3

நீளும் இந்த பதிவின் மூன்றாவது வணக்கங்கள்..!

முதலில் உறுதிமொழி : இந்த தொடர் சத்தியமாக இத்துடன் நிறைவுற்றது.

பிரச்சனைகளை கையால்வதும், அதை எதிர்கொள்வதும், முடியவில்லையேனில் அதில் இருந்து தப்பிப்பதும் ஒரு பெரிய கலை..! தப்பித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை பெற...பிறர் தப்பித்த அனுபவங்கள் படிக்கும்போது நம்பிக்கை பல மடங்கு கூடுகிறது. தப்பிக்க வாய்ப்பேஇல்லாத இடமாக மனிதர்களால் அமைக்கப்பட்ட ஒரு பெரிய அமைப்பு சிறைசாலைகள்..! அங்கிருந்தும் தப்பிக்க முயன்று...வென்ற மனோபலத்தை சொல்லும் கதைகள் படிக்கும்போது...நம்முன்னே உள்ள பிரச்சினையின் (நம் கற்பனையின்) வீரியம் கரைத்து, ஒன்றுமேயில்லை என்ற எண்ணம் புன்னகைகிறது என்ற... இந்த எனது சிந்தனையை விதைத்த முதல் கதை...ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மொழிபெயர்த்த 'பட்டம்பூச்சி' என்ற, குமுதத்தில் நூறு வாரங்கள் தொடராக வந்த உண்மை கதைதான்..!

"விடுதலையே உன் விலை என்ன ?" என்ற கைதிகள் escape தலைப்பை படித்த மாத்திரத்தில்,என் மனதில் விதையாக விழுந்து நொடியில் முளைத்த மரத்தில்கிளைகளை... என் mind map ன் வரைபடத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..! மனதில் முதலில் தோன்றிய காமிக்ஸ்....இரத்தபடலம் மூன்றாம் பாகம் தான்..! சிறையில் XIII சந்திக்கும் பிரச்சினைகளும், அவரின் மனோதிடமும் அபாரமானவை...

 

நான் படித்து அசந்த தொடர்கதைகள்...குமுதத்தில் 1972-ம் வருடம், தமிழ்புத்தாண்டில் துவங்கிய  'பட்டம்பூச்சி' தொடர்... ரா.கி.ரங்கராஜன் மீண்டும் 'இன்னொரு பட்டம்பூச்சி' என 1983 ல் நாற்பது வாரங்கள் எழுதிய தொடர்...

பாக்யா வார இதழில்...சௌதாமினி எழுதிய 'சின்ன பெண்ணும் ஜென்மகைதிகளும்' என்ற அட்டகாசமான தொடர்...

அதை அடுத்து பாக்யா வார இதழில்...சௌதாமினி எழுதிய 'போர்களத்து பூ' என்னும் ஹிட்லரின் கொடூரத்தை பின்னணியாக எழுதப்பட்ட பதிப்பில் வாராத அறுபது வார தொடர்...

அதை அடுத்து பாக்யா வார இதழில்...சித்தார்த் எழுதிய 'ப்ளிஸ்..அனுஷ்யா நான் பணய கைதி..!' என்ற இந்திய சுதந்திர காலகட்டத்து தொடர்...

இதே போல் 'மர்மகதை மன்னன் தமிழ்வாணன்'...சுபா.பட்டுகோட்டை பிரபாகர் எழுதிய பல மர்ம கதைகள் சொல்லாம்..! சமீபத்தில் தி தமிழ் இந்துவில் என் கருத்திற்கு வலுசேர்க்கும் ஒரு கட்டுரை வந்தன, அதுவும் உங்கள் பார்வைக்கு...

இந்த கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் பல இங்கிலிஷ் படங்கள் வந்துள்ளன, அதில் சமீபத்தில் உலகில் சிறந்த ஜெயில்களில் போய் அங்கிருந்து தப்பித்து காட்டும் சவால்களை, வாழ்க்கையாக கொண்ட ஒரு அட்டகாசமான படம்...

தமிழில் இதே சாயலில் பல படங்கள் வந்திருந்தாலும் அந்தமான் சிறையில் இருந்து தப்பிக்கும் கதையாக பிரபு,மோகன்லால் நடித்த 'சிறைசாலை' எனக்கு பிடித்த ஒன்று...


சமீபத்தில் வந்த 'புறம்போக்கு' என்னும் பொதுயுடைமை...படம் கூட தப்பித்தாலும், பிடிபடுதலும், மீண்டும் தப்பித்தல் என சுறுசுறுப்பாகவே சென்று யதார்த்தத்தை முகத்தில் அறைந்து சொல்லும் படம்... 

 national geographic channel தொடராக வந்த great escape  ஒரு மணிநேர தொடர் கூட குறிப்பிட வேண்டும்..

சரி எனது 'மன வரைபடம்' பற்றிய புராணத்தை முடித்து கொண்டு 'வி.உ.எ..?' கதை பற்றிய அலசலுக்கு செல்கிறேன்...அதற்குமுன்...அது என்ன மன வரைபடம்(mind map) என்பவருக்கு, இந்த புத்தகம் உதவும்...
  

இந்த பதிவிற்கு முக்கிய காரணம்...எனக்குள் கீழ்க்கண்ட கேள்விகள் விதைத்த தேடுதலே..!

karthik karthik அவர்களின் கேள்விகள்...

* 1900ல் ஜாரின் சிறையிலிருந்து டில்மான் ரஸ்ஸல் என்னும் ஹீரோவாக நடித்து வெளியேறும் யூஜிக்கு இருபது வயதென்று வைத்துக்கொள்வோம்.அவன் ரயில் மூலம் தப்பித்து சீனாசென்றானா,மங்கோலியா சென்றானா.?

* மறுபடியும்1942ல் ஜெர்மன் ஆளுகைக்குட்பட்ட ஸ்டாலின் கிரேட் சிறைக்கு எப்படி வந்தான்.?அப்போது வயது 62அல்லவா ஆகியிருக்கும்.அவன் ஏன் சம்பந்தமில்லாமல் அமெரிக்கா போக ஆசைப்படுகிறான்.?

* ரயிலோடு சேர்ந்து அவன் தப்பிக்கவே இல்லையா.?சைபீரியாவின் புகழ் டில்மான் ரஸ்ஸல் ஸ்டாலின் கிரேடிலிருந்து தப்புவதாக காட்டுவது லாஜிக்படி சரியா.?

*உண்மையாகவே டில்மான் ரஸ்ஸல்கிற பேர்ல எதாவது சாகஸம் பண்ணியிருந்தால் மட்டுமே கற்பனை கதாபாத்திரம் நம்பதகுந்ததாக மாறும்.ரஸ்ஸல் எழுதும் மிரட்டல் கடிதத்தை எழுதியது யார்...?

செல்வம் அபிராமி & இத்தாலி விஜய் அவர்களின் சில கேள்விகள்...

* ஒரு கப்பலை கிளப்ப எவ்வளவு நேரமாகும் ...???அதற்குள் பணி மையத்தில் இருந்து காவலர்கள் உருண்டு வந்தாலும் இவர்களை பிடித்து விடலாமே ??

* அருகில் இருந்து ஆதிவாசிகளை துணைக்கு அழைத்த கைதிகள் ஏன் இந்த தூரத்தை நடந்து கடக்க முயலவில்லை ?

* ஒன்றும் இல்லாத ரயிலை ஏன் இருப்புப்பாதை அமைத்து அதை இழுத்து (?????சாத்தியமா?????)செல்ல வேண்டும் ?

பதில்கள்: 290 அடி நீளமுள்ள இந்த  icebreaking steamer...300 பயணிகள் உள்ள 27 ரயில் பெட்டிகளை சுமந்துகொண்டு, குளிரில் உறைந்த ஏரியின் பனிப்பாளங்களை உடைத்து கொண்டு செல்லும் இந்த பிரம்மாண்டமான 'ஸ்டீமரை இயக்குவது டீசல் அல்ல, நீராவி..! அவ்வளவு பெரிய இஞ்சினை இயக்க...தண்ணீர் கொதித்து நீராவியாக மாறிவது என்பது மிக நீண்ட வேலை..! உடனே முடியும் விஷயமல்ல..!

15 கிலோமிட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த 'ஸ்டீமர்' மறுகரை அடைய நான்கு மணிநேரம் ஆகும்...பைகால் ஏரி ஒரு துறைமுகம் என்பதால்...வேறு  icebreaking சரக்கு, இராணுவ கப்பல் மூலமாக இரண்டு மணிநேரத்தில், மொத்த இராணுவபடையே எதிர்கரைக்கு சென்று ராஜ மரியாதையுடன் கைதிகளை வரவேற்கலாம்..!

இவ்வளவு பெரிய 'லாஜிக்' ஓட்டை எப்படி எழுத்தாளரோ, ஓவியரோ, பப்ளிசரோ கவனிக்காமல் விட்டார்கள்..? இது பெரிய பூ சுத்தல் இல்லையா..?என்றகேள்வி ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது...கொஞ்சம் நுட்பமாக யோசித்ததில்...அந்த கேள்விக்கான விடை விளங்கியது..!

இந்த சாதனைசரித்திர கதையை 'யூஜுன்' சிறையில் சொல்வது...பெரும் வரலாற்று மேதைகள் கூடிய சபையில் அல்ல...மாடாய் உழைக்கும், சாதாரண, கைது செய்யப்பட்ட, கூலிக்கு வேலைபார்க்கும் தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்தவர்களிடம்..! தொழிலாளர் வர்க்கத்தினரிடம் நம்பிக்கையை, ஒரு அந்தஸ்தை, அவர்களின் பக்கபலத்தை பெறவேண்டுமென்றால்...சின்னவிஷயத்தைகூட, நிறைய தங்கமுலாம் பூசித்தான் சொல்லவேண்டும் என்ற அரசியல் நான் சொல்லவே வேண்டியதில்லை..!

'டில்மான் ராசைன்' என்ற கற்பனை வீரனுக்கு பின்னால்...ஒரு தப்பிக்கும் திட்டம்உருவாக்கியது வரை சரி..! ஆனால் அந்த குழு தப்பிக்கும் போது மாட்டிக்கொண்டதான் விளைவே 'ஸ்டாலின்கிராட்' சிறைசாலையில் 'யூஜுன்' (கதையில்) இருப்பதற்கான காரணம்..! சுமார் நாற்பது வருடங்களாக சிறையில் இருக்கும், வயதான நம் நாயகன் மீண்டும் தப்பிக்கும் திட்டத்திற்கு ஆள் பலம் சேர்க்க வேண்டியே...கதையை மிகைபடுத்தி...லாஜிக்கை தாண்டி...---சாதாரண முரட்டு குறுநிலமன்னரான கட்டபொம்மனை...சினிமா வீரபாண்டியகட்டபொம்மனாக சித்தரித்தது போல---...'நாங்கள் திட்டப்படியே தப்பித்தோம்' என மிகையாக உணர்ச்சி பொங்க கூறுகிறார்...! இதை புரிந்துகொண்டால்...ஆயா நிலவில் வடை சுட்டால் ஓகே...ஆனால் நிலவுக்கு எப்படி போனால்..? என்பது போன்ற ஆராய்ச்சிகள் கரைந்துவிடும்..!


கால்தடங்களை எண்ணிக்கொண்டே "தினமும் மாலைப்பொழுதில் 5௦ தப்படிகள் நடந்து வருகிறேன்.இதையே நான் தொடர்ந்தால்அமெரிக்க கடற்கரையைத் தொட்டிவிட்டிருப்பது உறுதி." என வயதான 'யூஜுன்' கூற காரணம்...திட்டமிடுவதில், கணக்கு போடுவதில் தான் ஒரு கெட்டிக்காரர் என சக கைதிகளுக்கு மறைமுகமாக உணர்த்தி...தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்தவர்களை தனது கட்டுபாட்டில் கொண்டுவரும் மனோவசிய செய்கையே..! 

இதே போல சில விஷயங்களின் விளக்கங்கள் படங்களில்...'டில்மான் ராசைன்' பல்வேறு முகங்களில் பேசிய வலைதளங்கள் பட்டியல்...

நல்ல பிசாசு!
http://nallapisaasu.blogspot.com/

baraniwithcomics
http://baraniwithcomics.blogspot.com/

BLADEPEDIA
http://www.bladepedia.com/

BLUEBERRY @ TIGER COMICS
http://blueberry-soundarss.blogspot.com/

Comicology
http://www.comicology.in/

Comics
http://modestynwillie.blogspot.com/

comics
http://worldcomicraj.blogspot.com/

COMICS ARAKKAN
http://phantomtheking.blogspot.com/

COMICS GALATTA
http://comicsgalaata.blogspot.com/

Dark Knight
http://picturesanimated.blogspot.com/

Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்
http://mokkaicomics.blogspot.com/

ILLUMINATI
http://illuminati8.blogspot.com/

jsc johny
http://johny-johnsimon.blogspot.com/

Lion-Muthu Comics
http://lion-muthucomics.blogspot.com/

Lucky Limat
http://luckylimat.blogspot.com/

PHANTOM THE LEGEND - SoundarSS
http://vethalar-mayavi.blogspot.com/

Tamil comics பள்ளிக்கூடம்..!
http://maramandaii.blogspot.com/

Tamil Comics - SoundarSS
http://tamilcomics-soundarss.blogspot.com/

Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்
http://tamilcomicsulagam.blogspot.com/

அ.கொ.தீ.க.
http://akotheeka.blogspot.com/

இரவுக்கழுகு
http://www.kittz.info/

க.கொ.க.கூ = கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு
http://kakokaku.blogspot.com/

கனவுகளின் காதலன்
http://kanuvukalinkathalan.blogspot.com/

காமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்!
http://muthufanblog.blogspot.com/

காமிக்ஸ் பூக்கள்
http://ayyampalayam.blogspot.com/

சித்திரக்கதை
http://comicstamil.blogspot.com/

தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை
http://tamilcomicskadanthapaathai.blogspot.com/

தமிழ் காமிக்ஸ் உலகம்
http://tcuintamil.blogspot.com/

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
http://tamilcomic.blogspot.com/

நானுற்றி நாலு
http://vimalaharan.blogspot.com/

முதலை பட்டாளம்
http://mudhalaipattalam.blogspot.com/

மேய்ச்சல் மைதானம்
http://horsethought.blogspot.com/

விகடகவி
http://kavinthjeev.blogspot.com/

ஹாய் தமிழா
http://www.haitamila.com/

35 comments:

 1. அற்புதமான முயற்சி மாயாவி சார் .(100கைதட்டல் படங்கள் )... இத்தனை பேருமே இந்த கதை பற்றி எழுதி உள்ளார்களா...க்ர்ர்...... சரி சரி ஒவ்வொன்றாக பார்க்கிறேன் ....கி.நா.புடிக்கலனு சொல்ரது வெறும் வாயா நண்பர்களே....ஆளாலுக்கு வரிந்து கட்டி கொண்டு வேலை பார்த்து உள்ளீர்களா .....

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றிகள் விஜயராகவன்..! அந்த கடைசி மேட்டர் கொஞ்சம் சரியா படிங்க...விஷயம் வேற...!

   Delete
  2. நெட் மொக்கையில் இப்போது தான் போட்டோக்களை பார்க்க முடிஞ்சது சார் . சூப்பர் அழைப்பு , அட்டகாசமான ஃப்னிசிங் டச்சு (1000கைதட்டல் படங்கள் )

   Delete
 2. அய்யா MV , S.V.V வகையறா ......இனிமேல் ஆவது ஏதும் புரியலனா மாயாவி சார்ட்ட தனியாவே கேட்டு கொள்ளுங்களேன் ......ஒரு முன்னெச்சரிக்கை தான் ...ஹி. ஹி...

  ReplyDelete
  Replies
  1. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத டைனோசர்கள் நாங்கள்.!இருந்தாலும்.,எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் இவ்வளவு கஷ்டப்பட்டு தன்னுடைய பொன்னான நேரம் ., பணம் என்று செலவிட்ட மாயாவி.,ஆதாயம் இன்றி அணுவின்அளவுகூட உதவி செய்யாத நான் வசிக்கும் ஊரின் மத்தியில் மாயாவி வாமனர் போன்று உயர்ந்து தெரிகிறார்.நன்றி சார்.!!!

   Delete
 3. தொல் பொரூன் ஆராய்சியாளர் சிவா அவர் கருக்கு பாராட்டுகள். பட்டாம்பூச்சி ஆங்கிலத்தில் பாப்பிலோன் என வந்திருக்கிறது. பிரேசில் மக்களால் உதாசீனப்படுத்தப்பட்ட நபர் தான் உயிரை பணயம் வைத்து சிறையிலிருந்து தப்பிய பட்டாம்பூச்சியின் ஹீரோ.உள்ளூரில் மதிக்கப்படாமல் தன் சுய சரிதை மூலம் உலக புகழ் பெற்றுவிட்டார் இந்த உண்மை ஹீரோ! பட்டாம்பூச்சி ஒரு உண்மைக்கதை!

  ReplyDelete
  Replies
  1. நிறைய விசயங்கள் உங்களுக்கு உண்மையில் தெரிகிறது கார்த்திக்...நான் தெரிஞ்சா மாதிரி காட்டிகிறேன்..ஹீ..ஹீ..!

   Delete
 4. அப்புறம் அந்த செளதாமினி நாவல்ல வர்ர "கார்க்கி"- உண்மை யில் அசத்தலான ஹீராதான் என்னை பொறுத்து .......அந்த நாவல்ல வர்ர கிளுகிளுப்பான லேடி கேப்டன் க்கு நானும் ஒரு ரசிகன் அப்ப.....

  ReplyDelete
  Replies
  1. கேப்டனின் 'ராட்ச்ச மனைவி'(அராபிய குதிரை), கடுமையான பெண் வார்டன் சார்லி, சின்ன பெண் மர்லின்...பலான ஜோக்குகள் சொல்லும் பக்கிங்ஹாம்..நாடோடி தலைவன் பார்பரஸ்...இவர்கள் நினைவிருக்கிறதா டெக்ஸ்...! ( கண்ணடிக்கும் படங்கள் மூன்று)

   Delete
  2. அல்லாமே ஞாபகம் வந்தது சாரே, அந்த நாய்களுடன் வரும் கிளைமாக்ஸ் , அந்த பழங்குடி தலைவன் , இன்னும் முக்கியமான ஒன்று கண்ணில் நீர் வரச்செய்யும் நிகழ்வு ,அந்த கடுமையான ஆண்களை சூடேற்றி அடிவயிற்றில் உதைத்து இன்பம் காணும் பெண் வார்டன் அவளோட பெண் குழந்தையை கார்க்கியிடம் ஒப்படைக்கும் அந்த மறக்க இயலா சீன் அனைத்தும் ,மீண்டும் வலம் வருகிறது .........ச்சே அற்புதமான உண்மையான கி.நா. அது.....அந்த வகையில் நான் படித்த முதல் கி.நா.கூட......யாரிடமும் இருந்தால் தாருங்கள் மீண்டும் ஒருமுறை படிக்கலாம் ...

   Delete
 5. தெய்வமே, நீங்க மறுபடியும் எங்கயோ போயிட்டீங்க... (நன்றி கிட் ஆர்டின் கண்ணன்)

  ReplyDelete
 6. அப்புறம், போன பதிவில கடைசியா ஏதோ சொல்றேன்னு சொல்லியிருந்தீங்களே... அது இன்னாது?

  ReplyDelete
  Replies
  1. SVV...கீழே இத்தாலி விஜய் குறிப்பிட்டுள்ள..//'டில்மான் ராஸைன்' பேசுவதுபோல தமிழ் காமிக்ஸின் வளர்ச்சி குறித்த உங்கள் எண்ணங்களை வடிவமைத்திருக்கும் அந்தக் கடைசிப் படம் அருமை! அருமை! அருமை!// இதுதான் அது..!

   Delete
 7. விடுதலையே உன் விலை என்ன-வின் மத்த 7 கதைகளையும் படிக்கும் ஆர்வத்தை கிளப்புகிறீர்கள்....

  ReplyDelete
 8. மாயாவி அவர்களே............

  பதிவைப் படித்து முடிக்கும்போது சற்றே பிரம்மை பிடித்தது போலாகிவிட்டேன்! வீரியமான, அழகாகப் புரிய வைத்திடும் பாணியிலான எழுத்து நடையை அமைத்திட உங்களுக்கு எத்தனை நாட்கள் பிடித்ததோ தெரியவில்லை!!! முந்தைய பதிவுகளைக் காட்டிலும் நல்ல தேர்ச்சியும் முதிர்ச்சியும் காட்டி அசத்தியிருக்கிறீர்கள்!!

  நீங்கள் விளக்கியிருக்கும் விசயங்களை மனம் உடனே ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ... உங்கள் உழைப்பும், தேடலும், அர்ப்பணிப்பு உணர்வும், காமிக்ஸ் காதலுமே ஒரு கலவையாய் மாறி வீரியத்தோடு எங்கள் எண்ணங்களைத் தாக்கி வீழ்த்தியிருக்கிறது! நான் வீழ்ந்து கிடக்கிறேன்...

  உங்களது இந்தப் பதிவுகளுக்காகவே மாதம் ஒரு கி.நா வந்தாலும் தவறில்லை என்று தோன்றுகிறது!

  'டில்மான் ராஸைன்' பேசுவதுபோல தமிழ் காமிக்ஸின் வளர்ச்சி குறித்த உங்கள் எண்ணங்களை வடிவமைத்திருக்கும் அந்தக் கடைசிப் படம் அருமை! அருமை! அருமை!

  இதுவரை உங்கள் பதிவுகளில் இதுவே சிறந்த பதிவு!

  இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் அதிகம் உழைத்தேன் என்பது...பிறத்தியாரின் கருத்து என்பதில் சந்தேகமில்லை...என்னை பொறுத்தவரை திருப்திகரமாக செய்து...எண்ணங்களை வெளிப்படுத்தும் அழகை கொஞ்சமேனும் கற்றுக்கொண்டேன் என்பதே நிஜம்..! இந்த மெனககெடலின் முடிவில்...உங்களை போன்ற நண்பர்கள் சொல்லும் விமர்சனம் படிக்க பெருமிதமாக உள்ளது...!
   //இதுவரை உங்கள் பதிவுகளில் இதுவே சிறந்த பதிவு!// எனக்கும் அதே உணர்வே..! நன்றிகள் இத்தாலி விஜய் அவர்களே நன்றி..!

   Delete
 9. பட்டாம்பூச்சியை வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு அல்லயன்ஸ் பதிப்பகம் அதை வெளியிட்டிருக்கிறார்கள். ரா.கி.ராவின் மொழிபெயர்ப்பில் விறுவிறுப்பான ஒரு கதையை வாசிக்க முடியும். இந்த கதையை வாசித்து இருபது வருடமாகி விட்டது. மலரும் நீனைவுகளை தூண்டி விட்டு விட்டீர்கள் மாயாவி !

  ReplyDelete
  Replies
  1. 'பட்டம்பூச்சி' ஒன்று மட்டுமே இன்று படிக்க நம்மிடம் புத்தகமாக எஞ்சியுள்ளது...நான் குறிப்பிட்ட மற்றவைகள் காலவெள்ளத்தில் காணாமல்போயின..! சுதந்திரமாக வாழ தனிமனிதனாக போராடிய உண்மைகள், அவன் அனுபவங்கள் படிக்கும்போது...'இதுவும் கடந்து போகும்' என்ற தத்துவத்தை ஆழமாக உணர்த்துவதால்...இப்படிபட்ட கதைகள் மேல் அப்படியொரு காதல்..! முக்கியமாக பதிவில் குறிப்பிட மறந்தவை...ஓவியர் திரு: ஜெயராஜ்...வரைந்த தத்துரூபமான படங்கள் மேல் மயக்கமோ..மயக்கம்..!

   Delete
 10. பதிவு அருமை நண்பரே! இல்லாத ஹீரோவை வைத்துக் கதை சொல்லல் ஓகே. ஆனால் மக்களில் எத்தனை பேருக்கு இது பிடிக்கும் என்பது ஆராய வேண்டிய கேள்வியே. கடினமான முயற்சி விஜி சார் ரிஸ்க் நிறையவே எடுக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் இது போன்ற கதைகள் மக்கள் ரசிப்பது சிரமமே..! இப்படிப்பட்ட வரலாற்று உண்மைகளை ஸுகர் கோட்டிங் செய்து தரும் போது...அதை "எப்படிதான் படிப்பது .?" என குழம்பி நிற்கும் நண்பர்களுக்கு...இதை இப்படி படித்தால்...இந்த கோணத்தில் பார்த்தால்...இந்த தகவல்களை பொருத்தி பார்த்தால்...சுவையாக இருக்கும் என...ஒரு மாறுபட்ட கோணத்தை இங்கு நான் சொல்லியிருக்கிறேன்..!

   இதனால் அடுத்தமுறை கி.நாவல் கையில் எடுக்கும்போதே.."இதில் மறைந்திருக்கும் தகவல் என்ன?" என தேடும் விழிப்புணர்வு பகுதி வேலைசெய்ய துவங்கிவிடும்...! செக்குமாட்டு வாழ்க்கையில் மாடிக்கொண்டிருக்கும் மனசுக்கு இந்த தினி அவசியம்..! அதை ஆரம்பித்துவைக்கவே இந்த பதிவு,உழைப்பு..! அதை தேடி பிடித்து(வருடத்திற்கு 2&3) போடும் ஆசிரியர் விஜயனை நாம் உற்சாகபடுத்துவதும், அதை கேட்டு பெறுவதும் முறையே..! ஒருமுறை கூட படிக்க முடியாதா..பக்க நிரப்பிகளை விட...இப்படி வரலாற்று தகவல்களும் சவால் விடும் புதிர்களும் நிறைந்த படைப்புகள் பல மடங்கு வரவேற்க வேண்டியவையே ஜான்..!

   Delete
 11. மாயாவிஜி .....

  அருமையான விளக்கங்கள் .....

  எனக்கு ஏற்புடையதாகவே இருக்கிறது ....

  சொன்ன விதம் லவ்லி .....


  பாரலல் திங்கிங் -க்கு இந்த பதிவு சிறந்த உதாரணம் .

  (90வது மாடியில் வசிக்கும் ஒருவன் லிப்ட் பாய் இல்லாத. லிப்ட் -ல் எப்போதும் 76 மாடி வரை சென்று பின் மீதுள்ள மாடிகளை படிக்கட்டு வழியாக நடந்து செல்வான் ..அது ஏன் ?? என கேட்டு அதற்கான பதிலை parallel thinking -க்கு எடுத்துக்காட்டாக சுஜாதா சொல்வார் ...உங்களது இந்த அற்புத பதிவு அதை ஞாபக படுத்தியது ...)

  திறம்பட்ட முயற்சி ...வாழ்த்துக்கள் !!!!

  ReplyDelete
  Replies
  1. சுஜாதா ஏன் அப்படிச் சொன்னார்னு எனக்கும் சொல்லிடுங்களேன் செ.அ அவர்களே?

   Delete
  2. பதில் ரொம்பவே சிம்பிள் இத்தாலி விஜய்....
   90 வது மாடியில் வசிக்கும் அவனுக்கு 78 வது பட்டனுக்கு மேல் எட்டாது...ஹீ..ஹீ...!

   Delete
 12. @சிவா:
  நண்பரே... கதை நன்றாக இருக்கிறதோ இல்லையோ; நீங்கள் தொகுத்துள்ள பின்னணித் தகவல்களும், இணைத்துள்ள collage படங்களும் சுவாரசியமாகவே உள்ளன! எனக்கும் கூட, இக்கதையைப் படிக்கையில் சிறைச்சாலை திரைப்படம் தான் நினைவிற்கு வந்தது. அசுர உழைப்புக்கு hats off! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் கார்த்திக்...
   எனக்கு இந்த கதை சுமாரோ..சுமார் தான்..!ஆனால் அதில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையா என தேடிய போது கிடைத்த தகவல்கள் எல்லாமே பிரமிப்பை ஏற்படுத்தின. இங்கு பதிவிட்ட தகவல்கள் முறையாக தெரிந்துகொள்ள வேண்டுமானால்...வரும் 'லயன் 250 'குண்டு புக் போல நாலு படிக்கவேண்டும், குகிள் இருந்ததால் தப்பித்தேன்...! இப்படி ஒரு வரலாற்று தகவல் தேட ஒரு கிரியா ஊக்கியாக வி.உ.எ..?(ஒரு காமிக்ஸ்) இருந்தது என்ற வகையில் மகிழ்ச்சி..!

   Delete
 13. அருமை . . . மாத்தி யோசிக்கும் மாயாவி சார். . . !!!!!

  ReplyDelete
 14. அருமை . . . மாத்தி யோசிக்கும் மாயாவி சார். . . !!!!!

  ReplyDelete
 15. Super Mayavi Sir

  +1

  உங்களின் காமிக்ஸ் தேடலின் அழம் ஒவ்வொரு கி நா விழும் அதிகமாகிறது, எடிட் இதற்காகவாவது கி ந quota வை அதிக படுத்துவார் என நம்புவோம் நண்பரே !

  ReplyDelete
 16. நன்றிகள்சதிஸ்..! அதிக படுத்தவேண்டும் என்பதைவிட...வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுப்பதில் ஆழப்படுவதையே விரும்புகிறேன்..!

  ReplyDelete
 17. ஆஹா.......எனக்கு பெரு மூச்சு தான் வருகிறது ..பதிவை இப்பொழுது தான் பார்த்து படிக்கிறேன் தகவல் இல்லையால் ....

  தங்கள் எழுத்து நடையும் ...அருமை ....உழைப்பை பாராட்டி பாராட்டி சொல்லிட்டே இருக்க முடியலை ....அதனால் ஸ்மைல் மட்டுமே ...மாயாஜி :-)))

  ReplyDelete
  Replies
  1. தலீவா...இதுதானா..உங்க 'டக்கு'...! (எல்லாருக்கும் நன்றிகள் நன்றிகள் சொல்லிட்டே இருக்க முடியலை...அதனால் சும்மா...ஜாலிக்கு...தப்பா எடுத்துகாதிங்க பரணி..)

   Delete 18. பாக்யாவில் தொடர் கதையாக வெளிவந்த "ஜென்ம கைதிகளும் ஒரு சின்னப் பொண்ணும்"நாவல் கிடைக்கும்..?
  அந்த நாவலை வெளியிட்ட பதிப்பகம் பெயர் என்ன..?

  ReplyDelete
 19. ஜென்மக் கைதிகளும் ஒரு சின்ன பொண்ணும்
  நாவல் இப்போது கிடைக்குமா..?
  எங்கே தொடர்பு கொள்ள வேண்டும்.?
  யாராவது உதவுங்கள்.

  ReplyDelete