Friday 20 February 2015

சன்சைன் லைப்ரரி & கிராபிக்ஸ் நாவல் பட்டியல்கள்..!

வணக்கங்கள் நண்பர்களே,

வெகுநாட்களாக செய்ய நினைத்த ஒரு முறைபடுத்தும் முயற்சி. முதல் கட்டமாக,  சன்சைன் லைப்ரரி & கிராபிக்ஸ் நாவல் ஆகிய இரண்டிலும் வெளிவந்த காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைபடங்கள்,வெளிவந்த ஆண்டு, அளவு,பக்கங்கள் என சின்ன தகவல்களுடன் ஒழுங்கு படுத்தியுள்ளேன்.

பின் வரும் காலங்களிலோ, புதிய வாசகர்களுக்கோ வெளிவந்துள்ள புத்தங்களின் வரிசைகள் தெரிந்துகொள்ள உதவும் ஒரு சின்ன முயற்சி தான் இது. இதன் பயன் கூட்ட வேறு எந்த வகையில் மாற்றங்கள்,தகவல் சேர்க்கலாம் என உங்கள் கருத்துக்களை தெரிவித்தால், என்னால் முடிந்த முயற்சிகள் செய்வேன்...!

இதை எப்போது வேண்டுமானாலும் சட்டென்று உபயோகிக்க 'PDF' file ஆக மாற்றியுள்ளேன். அந்த லிங்க் பார்க்க.. இங்கே 'கிளிக்'

நட்புடன்,
மாயாவி.சிவா

 
 


    
                                     































33 comments:

  1. அருமை நண்பரே.!எங்கே ரொம்ப நாள் ஆளைக்காணோம்.!

    ReplyDelete
    Replies
    1. குஜராத் சுற்றுபயணம் இரண்டு வாரங்கள் சென்றிருந்தேன்...வந்ததும் நண்பர் ஒருவருக்கு உதவவேண்டிய சுழல், அதுதான் கார்த்திக்...!

      Delete
  2. டிசம்பர்வரை வரமாட்டேன்னு சொன்னீங்க.?பிப்ரவரி வரை வராம இருந்துட்டிங்களே.!இப்பவாவது கோபம் தணிந்ததா.?

    ReplyDelete
  3. Replies
    1. விஸ்வா...அட்டாகாஸ்..!

      'தேவரகசியம் தேடலுக்கல்ல' தறுதலாக கிராபிக்ஸ்-ல் தீர்ந்துவிட்டது. தவறை சரியாக சுட்டிகாட்டிய உங்களை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை...!

      உண்மையில் இப்படி காமிக்ஸ் பற்றிய தகல்களை எப்போதும் நினைவிலேயே தாங்கி, விழிப்புடன் இருக்கும் உங்களை போல ஒரு நண்பர் கிடைத்ததில் எனக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சியே...!

      தொடரும் நாட்களில் தொடரும் தவறுகளை (?) சுட்டிகாட்டி...ஆவணத்தை அழகுபடுத்துங்கள் விஸ்வா..!

      Delete
    2. தவறு திருத்தப்பட்டுவிட்டது..நண்பர்களே...!

      Delete
  4. சூப்பர் சார் ...உழைப்புக்கு வாழ்த்துக்கள் ...விஸ்வாஜீ சொல்வது போல தேவ ரகசியம் .....என்னை போலவே தப்பு பண்றீங்களே ...:)

    ReplyDelete
    Replies
    1. தலைவன் பாதிப்பு...கொஞ்சம் தொண்டனுக்கு தொற்றிக்கொண்டது..ஹீ...ஹீ...!

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. சூப்பர் மாயாவி அவர்களே!

    அ..ஆனால், இந்த உலகம் உங்களிடமிருந்து ஒரு அதிரவைக்கும் பதிவை எதிர்பார்க்கிறதே?...

    இந்த உலகத்திற்கு நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? ;)

    ReplyDelete
    Replies
    1. விஜய்...
      " நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? " என என்தோளை உலுக்கி கேட்டவேகத்தில்....என் கையில் இருந்த முத்திரை மோதிரங்கள், என் இடுப்பில் இருந்த பெல்ட், துப்பாக்கி என எல்லாம் கழண்டுவிட்டது...ஹீ...ஹீ..!

      கொஞ்சம் காதை கொடுங்கள்..ஒரு டவுட்..." உங்களிடமிருந்து ஒரு அதிரவைக்கும் பதிவை எதிர்பார்க்கிறதே? " என நீங்க கேட்டதுக்கு ரெண்டு அர்த்தம் வருதே !? எதை எடுத்துகிறது...?

      Delete
    2. ரெண்டு அர்த்தமெல்லாம் இல்லீங்கோ! சிங்கிள்தானுங்கோ! :)

      ஆனால் கீழே நான் கடைசியாகக் கொடுத்திருக்கும் எக்ஸ்பிரஸனுக்கு அப்படிப்பட்ட உத்திரவாதம் ஏதும் கிடையாதுங்கோ!

      //என் இடுப்பில் இருந்த பெல்ட், துப்பாக்கி என எல்லாம் கழண்டுவிட்டது //

      ஐயோ... பாவம்! :D

      Delete
    3. //என் இடுப்பில் இருந்த பெல்ட், துப்பாக்கி என எல்லாம் கழண்டுவிட்டது //

      ஐயோ... பாவம்! :D

      அந்தளவுக்கு இளைத்து விட்டீர்களா மாயாவி ஜி ;-)
      ( தங்களின் இரண்டு வார பயணத்தில் )

      Delete
    4. ஈரோடு விஜய் அவர்களே...
      சிபி சக்கரவர்த்தி அவர்களே...
      உழைக்க தெரிந்த அளவிற்கு...ஓட்ட தெரியவில்லையே...நா பழைய மாடல்,எவ்வளவு யோச்சிச்சும் பலன் பூஜ்ஜியம், இந்ததபா மன்னிச்சி விட்டுடுங்கோ...இனி டைப்பிங் சரிபண்ணிக்கிறேன்...!

      Delete
  7. நல்ல முயற்சி சார் .வாழ்த்துக்கள். லயன் கம்பேக் குக்கு அப்புறமா அல்லது 1ல் இருந்தா சார் .

    ReplyDelete
    Replies
    1. 2012 ம் வருடம் வந்த லயன்,முத்துகாமிக்ஸ் ஒரு file.
      2013 ம் வருடம் வந்த லயன்,முத்துகாமிக்ஸ் ஒரு file.
      2014 ம் வருடம் வந்த லயன்,முத்துகாமிக்ஸ் ஒரு file.

      என தனித்தனியே போடலாம் என நினைக்கிறேன். உங்கள் கருத்து...ப்ளிஸ்..!

      Delete
  8. சூப்பர். தொடருங்கள் ஸர்ர்!

    ReplyDelete
    Replies
    1. திருச்செல்வம் பிராதாபன்...
      உடல் நலம் எப்படி இருக்கிறது நண்பரே..! ஹாஸ்பிடலுக்கு 'பை..பை ' சொல்லிவிட்டீர்கள் தானே...!

      Delete
  9. முயற்சிக்கு வாழ்த்துக்கள் மாயாவி சார்

    புத்தங்கள் வெளிவந்த தேதி, மாதம், வருடம் , விலை, எத்தனை பக்கங்கள், பாகங்களின் எண், இவைகளையும் சேர்த்தால் உபயோகமாக இருக்கும் சார்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் ஜெய்சங்கர்..!

      நீங்கள் குறிப்பிட்ட எல்லா விவரங்களும் கிட்டத்தட்ட உள்ளதே. ஒரு முறை சரிபார்த்துவிட்டு, அடுத்து செய்யவேண்டியதை சொல்லமுடியுமா..!

      Delete
    2. //வருகைக்கு நன்றிகள் ஜெய்சங்கர்..!///

      நல்லாப் பாருங்க மாயாவி அவர்களே... அவரோட பேரு 'ஜெய சேகர்'.

      இப்படி தப்புத்தப்பா எழுதினா நாங்களும் உங்க பெயரை 'மியாவி சிவா அவர்களே...'னு கூப்பிடுவோம்... ஆம்ம்மா ;)

      Delete
  10. லயன் குரூப்பிலுள்ள அனைத்து காமிக்ஸ்ம் வரிசை எண்ணுடன் பதிவு போடுங்கள்
    உபயோகமாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. கூரியரில் காமிக்ஸ் அனுப்பும் முறை தொடங்கிய 2012 ல் இருந்து தான் வெளிவந்த மாதங்கள் கண்டுபிடிக்க முடிகிறது.அதில் கூட குழப்பம் உள்ளது.

      உதாரணமாக...
      நள்ளிரவு நங்கை & நித்தமும் ஒரு குற்றம் 2104 பட்டியலில் வந்தவரவேண்டியவைகள். ஆனால் 2015 ஜனவரியில் முதல் வாரத்தில்தான் விற்பனைக்கு வந்தது. கேள்வி அவை எந்த வருடத்தில் சேர்ப்பது சொல்லுங்கள் நண்பரே..?

      Delete
  11. Very helpful post. I going to bookmark this post for future reference

    ReplyDelete
  12. மாயாவி/சிவாஜி அவர்களே
    ஆசிரியர் கூட இந்த அளவுக்கு யோசிப்பதில்லை.
    உங்கள் தேடல்கள் தனித்தன்மை வாய்ந்தது .
    காமிக்ஸ் காதலி உங்களை வெகுவாகவே
    ஆலிங்கனம் செய்துள்ளாள் . 😳
    இன்னும் பல சிக்ஸர்கள் அடியுங்கள்
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
    காமிக்ஸின் காதலரே 💐💐💐

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் நான் யோசிப்பதையே யோசித்துக்கொண்டிருந்தால் .....
      அவர் யோசித்து செய்ய வேண்டியதை யார் செய்வது ?

      என்ன சிபி சக்கரவர்த்தி ..சரிதானே !

      Delete
  13. மாயாவி சிவா...நல்ல முயற்சி. உங்களது உழைப்பிற்கும், எடுத்துக்கொள்ளும் நேரத்திற்கும் பாராட்டுக்கள்.

    என்னுடைய தற்போதைய குழப்பம் டைகர் கதைகளின் தொடர்ச்சிகள் பற்றியதுதான். எந்த கதை ஆரம்பம், எது தொடர்ச்சி, எது முடிவு என்பது சுத்தமாக புரியவில்லை. ஆசிரியரும் இதைப்பற்றி 'ஹாட் லயன்'-ல் எழுதலாம்.

    ஒரு ஹீரோவின் பெயரின் மீது 'இங்கே கிளிக்' செய்தால் அவரது முந்தய சாகசங்கள்(அட்டைப் படங்கள்) மற்றும் கதைகளின் தொடர்ச்சிகள் பற்றிய சாராம்சம் வந்தால் அற்புதமாக இருக்கும்.

    ஒவ்வொரு இதழையும் பின்வரும் (என்னைப் பொறுத்த வரையில்) வகைகளில் பிரிக்கலாம்.

    1. இதழ்களின் தலைப்பு.
    2. தேதி/மாதம்.
    3. Hero.
    4. genre. (Cartoon / Cowboy / Action / graphic novel )
    5. Logo (Lion / Muthu / Sunshine / Graphic / reprint )
    6. Colour / BW
    7. விலை.
    8. பாகங்கள். (முந்தய இதழ்களின் தொடர்ச்சி ...)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்ன விஷயம் அருமை ! முயற்சிக்கிறேன் ராஜவேல் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  14. great work Mr. Mayaavi... keep up the good work....akkraja

    ReplyDelete