Saturday 17 January 2015

குமுதம் - முகமூடி தொடர்




இனிவரும் 15 பதிவுக்கு நீங்கள் இந்த தளத்திற்கு வந்து data வீண் செய்யவேண்டியதில்லை. தினசரி அன்றைய படம் மட்டும் பார்க்க இங்கே'கிளிக்' தரப்படும். ஆனால் ஒரு விஷயத்திற்கு நீங்கள் இந்த தளத்திற்கு வரவேண்டும், அது ...உங்கள் கருத்துக்களை இங்கு பதிவுசெய்தான்...ஹீ...ஹீ...! உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து இந்த குகைக்குள் (தளத்தில்) குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு  காத்திருப்பேன் நண்பர்களே...!























 நண்பர்களே...முகமூடி தொடர்முலமாக எதிர்பார்த்த சில நல்ல தகவல்கள், தொடர்புகள், அடுத்து செய்யவேண்டிய விஷயங்கள் பற்றிய குறிப்புகள் கிடைத்துவிட்டதால் அடுத்தகட்டத்திற்கு பயணிப்போம். அதற்கு முன்பு  'முகமூடி' தொடரின் மீதிபகுதிகளை படித்துவிடுங்கள் !
அப்படியே...உங்கள் கருத்துக்களையும் கொஞ்சமேனும் சொல்லுங்கள் !

நட்புடன்,
மாயாவி.சிவா





57 comments:

  1. // உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து இந்த குகைக்குள் (தளத்தில்) குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு காத்திருப்பேன் நண்பர்களே...!///

    ஹாஹாஹா! கற்பனை செஞ்சு பார்த்தேன். சிரிப்பை அடக்கமுடியல! :)))

    ReplyDelete
    Replies
    1. @ ஈரோடு விஜய்

      உங்க சிரிப்ப இன்னுகொஞ்ச ஏத்திவிட ஒரு படம் தேடுறேன்...கிடைக்கமாட்டேங்குது. கிடைச்சதும் ஒரு 'கிளிக்' போடுறேன் ஓகே...!

      Delete
  2. வாவ் !!!இத்தனை வருடங்களுக்கு பிறகும் படங்கள் மிக தெளிவாக உள்ளன ......தினம் படிக்க நானும் ரெடி ...

    ReplyDelete
    Replies
    1. @ selvam abirami

      இது முதல் பாக்கமேன்பதால் சுமாராதான் இருக்கு...அடுத்துவர்ற பக்கங்கள் இன்னும் தெளிவா இருக்கும் நண்பரே...!

      Delete
  3. வாவ் அருமையான ஒரு கதை படிக்க போகிறேன் . நன்றி நண்பரே. நான் படிக்க இருக்கும் முதல் வேதாளர் கதை இது . பார்ப்போம் இவர் தேறுவாரா என்று . கறிநாள் வாழ்த்துக்கள் , ஓ நீங்கள் இன்று சனிக்கிழமை கறி சாப்பிட மாட்டீர்கள் அல்லவா ?. சரி நாளைக்கு சாப்பிடுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. @ சேலம் Tex விஜயராகவன்

      வேதாளர் இன்று தேறுவது கடினமே...ஆனால் அவரை சுற்றி பின்னப்பட்ட விஷயங்களை அசைபோட்டுபார்த்தால் அசந்துவிடுவீர்கள் ! அந்த சுழலை கற்பனை செய்வது சுகமானது...! முயன்று பாருங்கள் டெக்ஸ் ...!!
      சனி பெருசா கறி பெருசான்னு சண்டை போட்டதுல சந்தேகமேயில்லாம இன்னிக்கு சனி தான் ஜெயிச்சது. என்னை சரியா எட போட்டு வேச்சிருக்கிங்க...ஹா...ஹா...!

      Delete
  4. வரவேற்க தகுந்த முயற்சி .வாழ்த்துகள் மாயாவிஜீ ;-)


    ReplyDelete
    Replies
    1. @ saint satan

      பொங்கலன்று நீங்க துவக்கின பட்டைய கிளப்புற 'வாட்ஸ் ஆப்' முயற்சிக்கு முன்னாடி இந்த சின்னபுளத்தனமான முயற்சிய நினைச்ச எனக்கே சிரிப்பு வருது...!
      அப்பப்ப பசங்கள தெளிச்சிவிட்டு இந்த பக்கமும் அனுப்புங்க சாத்தான் அவர்களே...!

      Delete
  5. நாம் எவ்வளவு பின்னோக்கி சென்றுள்ளோம் என்பது இந்த முதல் பக்கத்தை பார்த்தல் தெரிகின்றது. நீச்சல் உடை சென்சார் இல்லாமல் 1969. இப்போது 2015 கோட்ஸ்டி :( . Keep up the good work :)

    ReplyDelete
    Replies
    1. @ Suresh Natarajan

      நாம் எவ்வளவு பின்னோக்கி இருக்கிறோம் நினைச்சா...இருங்க...இருங்க...இந்தியா பொருளாதார வளர்ச்சி,விழிப்புணர்வு,வாழ்க்கை தரம்,சுற்றுபுற சூழல் விஷயத்தில் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம்ன்னு...பழைய காமிக்ஸ் சித்திரங்களை பாத்த ஏக்கமா இருக்கு.
      காரணம் 30 வருடங்களுக்கு முன்னாடி நான் காமிக்ஸில் பாத்த எந்த கட்டிட வளர்ச்சியும், பொருளாதர வளர்ச்சியும் இன்னும் இங்கு பார்க்கமுடியவில்லை என்பதே...!

      Delete
  6. சூப்பர் மாயாவி....

    ஆரம்பித்தது தான் ஆரம்பித்தீர்கள்... மாயாவியின் இளமைக்கால கதை ஏதாவதொன்றில் இருந்து ஆரம்பித்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும்...

    சரி, வேறொரு இதழில் வந்ததை இப்படி பதிவிடுவது ஏதேனும் சட்டச்சிக்கலை உருவாக்காதா?

    அப்புறம், அடுத்த சந்திப்பு தினத்தை சற்று முன்னதாக தெரியப்படுத்த முடியுமா? இம்முறை முன்னதாக 1 நாள் அறிவிப்பால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. @ S.V.VENKATESHH

      வெங்கடேசன்...இதற்கு முந்தய பதிவில் குறிப்பிட்டதுபோல் இதுதான் குமுதத்தில் வந்த முதல் முகமூடி தொடர் ! இதுதான் காமிக்ஸ் புரட்சிக்கு அடித்தளம் என்பதால், இந்த தொடரை இங்கு பதிவு செய்கிறேன் !
      இதை தகவலுக்காகவே பதிவிடுகிறேன், ரசிக்க முடிந்தால் அடுத்த கட்டமுயற்சிக்கு போவோம்...!

      கண்ணன் ரவியின் உறவினர் ஒருவர் காலமாகிவிட்டதால் நேரம் மாற்றப்பட்டது. மற்றபடி டெக்ஸ் ஒருநாளுக்கு முன்பே sms அனுப்பினார்.இருப்பினும் உங்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே தகவல் கூற சொல்கிறேன்...!

      Delete
  7. வாழ்த்துக்கள் சார் ...தொடருங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. @ Paranitharan K

      நன்றிகள் தலைவரே...! உத்திரவுப்படி செய்கிறேன்..!!

      Delete
  8. தினம் ஒரு ஸ்டிரிப் என்பது வித்தியாசமான இன்ப அவஸ்தை ....எனக்கு பிடித்து இருக்கிறது ....கமெண்ட் பதிவிட முடிந்தாலும் முடியாவிட்டாலும் தினமும் கண்டிப்பாக படிப்பேன் ....தொடர்ந்து பதிவிடுங்கள் ....

    ReplyDelete
    Replies
    1. தினமும் கமெண்ட் போட இதில் ஸ்பெசலாக ஒன்றுமில்லையே, போர்,சுமாரான ஸ்கேன், வேறு ஏதாவது புதுசா போடுங்க...ன்னு முக்கியமா ஏதாவது இருந்தால் சொல்லுங்க போதும்...!
      இதையெல்லாம் போட்டா யாரும் திரும்பி கூட பாக்கமாட்டங்கன்னு நினைச்சேன். 15 முடிச்சதும் இத பத்தி ரெண்டு வார்த்தை சொல்லுங்க...!

      Delete
  9. ரயில் மெதுவாக வேகமெடுப்பது மாதிரி கதையிலும் கொஞ்சம் கொஞ்சமா வேகம் கூடுது. பேசாம இரண்டிரண்டு பாகங்களாப் போட்டுவிடுங்களேன் மாயாவி அவர்களே? சட்டுபுட்டுனு முடிச்சுட்டு அடுத்த தொடரை ஆரம்பிக்கலாமில்ல? ;)

    ReplyDelete
    Replies
    1. @ ஈரோடு விஜய்

      இது கொஞ்சம் அலுப்பு தட்டும் விஷயம் தான். திட்டமிட்டதுபோல தினம் ஒன்றாகத்தான் உங்களோடு சேர்ந்து நானும் படிக்கிறேன் என்பதே உண்மை !
      தொடரின் சுவை பற்றிய சில உணர்வை பெறவேண்டி இந்த முயற்சி, மற்றபடி இந்த பொக்கிஷத்தையே ஒரேயடியாக கொடுத்தால் மதிப்பும் இழந்து, சந்தையில் சிரித்துவிடும் நண்பரே..!

      Delete
  10. மாயாவி, முகமூடி - 4 படித்தேன். டயலாக்குகளில் என்ன ஒரு நக்கல்? 1969 என்பதை நம்பமுடியவில்லை. சுவாரசியமாக இருக்கிறது. அதுவும் இது நான் படிக்காத கதை வேறு...

    அப்புறம், நண்பர்களுடனான கடந்த சந்திப்பில் படம் எதுவும் எடுக்கப்படவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. @ S.V.VENKATESHH

      வெங்கடேஷ் நேற்று ஏற்காட்டில் கூட நண்பர்கள் வந்து சந்தித்தார்கள்.முழுநாள் நிறையவே பேசினோம்.டெக்ஸ் விஜயராகவன்,ஸ்டாலின் பிளாக்கில் சென்னை பயணம் பற்றி பதிவிடுவார் என நானும் காத்திருக்கிறேன்...! மற்றபடி போட்டோக்கள் 250 தேறும், ஆபிஸ் வந்தால் பார்க்கலாம்+பேசலாம்..!!

      Delete
    2. மாயவி நண்பரே, s.v.v. அவர்கள் கேட்டது சென்னை போட்டோக்கள் அல்ல. உங்கள் அலுவலக மீட்ல மற்றும் ஏற்காட்டில் நண்பர்கள் சந்திப்பில் எடுத்த போட்டோக்கள் பற்றி . நான் இன்னும் சென்னை பயண பதிவு போடாத்தற்கு 2காரணம் . 1.சென்னை விழா இன்னும் முடியவில்லை 2.பதிவு போட விடியற்காலை வரை முழித்து இருக்கனும் , தற்போதைய கடும் குளிரில் அது ஆகாது .

      Delete
    3. அக்காங்...

      Delete
  11. மொழிமாற்றம் சுவாரஸ்யமாக இல்லை! ஈஸியாக ஸ்கோர் செய்யவேண்டிய இடத்தில் அழகாய் கோட்டை விட்டிருக்கிறார்கள்!

    வேதாளர் களமிறங்கும்போது இன்னும் சூடுபிடிக்குமென்று எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சீப் சிராளர் என்ற புது தமிழ்,சூட் போடுறேன் பார் என்ற இந்தி தமிழாக்கம் யார் போன்ற ஒற்றை வரிகள்..இப்படி படிக்கும்போது கொஞ்சம் யோசித்து,யோசித்து படிக்க வேண்டியுள்ளது.
      இது பற்றிய ஆராய்ச்சி செய்ததில் சில விஷயங்கள் தெரியவந்தது விஜய் !
      அது ஒரு முக்கிய குறிப்பு, அதுபற்றி இடையில் பதிவிடுகிறேன்..!

      Delete
  12. சேலம் டெக்ஸ் விஜயராகவன் அவர்களே,

    நான் எங்கே போட்டோ எடுத்தேன் ...? சுசி போனில் தான் எடுத்தோம் .அவர் போனை தரவதரவேஇல்லையே. உங்கள் போனில் கூட எடுத்தோம் .ckk வில் போடுங்கள்!

    ReplyDelete
  13. விமானத்தைக் கடத்தியதாக சீப் சீராளர் மீது பழி விழ, நம்ம வேதாளர் நாயோடு வந்து துப்புத் துலக்குவாராக்கும்?

    ReplyDelete
    Replies
    1. தெரியலையே...நானும் உங்களை போலவே வேறு ஒரு கற்பனையில் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டுள்ளேன்..குதிரையும் நாயும் வைத்துக்கொண்டு என் செய்வார் என தெரியவில்லையே....உண்மைதான் நம்புங்கள் என்னிடம் இருப்பதால் நான் படித்துவிடவில்லை...! நானும் நாளைக்காக காத்திருக்கிறேன்..!!

      Delete
  14. மாயாவி... லயன் பிளாக்கில் ஏன் 'இங்கே கிளிக்' இரண்டு நாட்களாக போடவில்லை?

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் "லயன் ப்ளாக்கில் இப்படி 'ஸ்கேன்' பகிர்வதை தவிர்த்துவிடுங்கள்"
      என அறிவுறித்தியாதால் தான் வெங்கடேஷ்...! மற்றபடிக்கு இதன் சாதகம் என்ன ? பாதகம் என்ன என்பது பற்றி எனக்கு தெரியவில்லை...!!

      Delete
  15. ஒரு வழியா வேதாளர் களத்துல இறங்கிட்டார். இனி முத்திரை மோதிரத்துடன் நிறைய குத்துகளை எதிர்பார்க்கலாம்னு நினைக்கிறேன்... ;)

    ReplyDelete
  16. சீப் சீராளரை வெள்ளந்தினு நினைச்சிட்டிருந்தேன். இப்படி திடீர்னு வில்லனாகிட்டாரே... இப்டி :) இப்டி :) சிரிச்சே ஏமாத்திப்புட்டாரே...

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட பாதிகதை முடிந்துவிட்டது, வேதாளர் இரண்டு பிரேம்தான் வந்திருக்கிறார். இனிவந்து என்ன செய்யப்போகிறாரோ ? ஒரு வேளை அவருக்கு 'கெஸ்ட்' ரோலா....

      Delete
  17. //...தன்னுடைய செயலுக்காக கிட் ஆர்டின் வருந்துவாரோ இல்லையோ, திருந்த வேண்டும்...//

    டென்சன் ஆக வேண்டாம் கிட்ஆர்டின் கண்ணன்.... திருந்த என்பதை திருத்த என்பதாகக் கொண்டு, ஒரு பேனாவைக் எடுத்து 'னி' ஐ 'லி' ஆக திருத்திக் கொள்ளுங்கள்.... எப்பூடி என்னோட ஐடியா?

    லயன் பிளாக்கில் இதைச் சொன்னால், பிய்த்து மேய்ந்துவிடுவார்கள் என்பதால், இங்கே கமெண்ட் போட்டடேன். (ஐடியா... டெக்ஸ் விஜயராகவன்)

    ReplyDelete
    Replies
    1. வெங்கடேஷ் உங்க சிந்தனை,அணுகுமுறை அருமை. உண்மையில் லயன் ப்ளாக்கில் பிரித்து மேய்ந்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.இந்த ஐடியா சொன்ன டெக்ஸ் விஜயராகவன் அவர்கள் உங்களுக்கு அவரோட வாட்ஸ் ஆப் லேயும் உங்க இணைச்சி, கருத்த அங்கேயும் போட சொல்லியிருந்தா சம்மந்தப்பட்ட கண்ணன் ரவி குலுங்க குலுங்க சிரிச்சி 'கூல்' ஆயிருப்பார்....!

      Delete
    2. சூப்பர் ஐடியா பாஸ்... ஆனா என்னோட செல்போன் வெறும் 500 ருபாய் போன்... அதுலல்லாம் வாட்ஸ்அப் வராது... அதனால நீங்களே எஞ்சார்பா வாட்ஸ்அப்புங்க....

      Delete
  18. மாயாவி, உங்களுடைய மெயில் ஐடி பிளீஸ்....

    ReplyDelete
  19. விமானக் கம்பெனியின் பிரசிடெண்ட் வேதாளரின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும்போது சிரிப்பு வருகிறது. ஆனாலும் விடாப்பிடியாய் கதவுக்குப் பின் காத்திருந்து நம்ம வேதாளர் ஒரு சாகஸம் செய்யச் சான்ஸ் வாங்குவது பரிதாபம்! :)

    ReplyDelete
  20. ஒருவழியா ஹெலிகாப்டரெல்லாம் வச்சுக்கிட்டு வேதாளர் வெளிக்கிளம்பிட்டார். இனிமே சீராள மன்னருக்கு போறாத வேளைன்னு சொல்லுங்க...

    ReplyDelete
  21. என்னாச்சு? 12 வது அத்தியாயம் இன்னும் வரல?

    12 வது அத்தியாயம் வெளியிட என்னவாவது பேரம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு விஜய் & SVV
      மன்னிக்கவும் நண்பரே ...
      ஒரு வாரம் வெளியூர் பயணம் போகிறேன்...இன்று இரவு கிளம்புகிறேன்...பயணம் அவசரம்...உடனே பதில் சொல்லமுடியாமைக்கு வருந்துகிறேன்..! முழுசும் போட்டுவிட்டேன். படித்துவிட்டு, அடுத்து என்ன செய்யலாம் ? ஒரு ஐடியா சொல்லுங்க..!

      Delete
  22. ஒரு நல்ல , நான் பிறப்பதற்கு வெகு காலம் முன்பு வந்த கதையை தந்ததுக்கு மிக்க நன்றி சார் . இந்த 15நாளில் கட்டாயம் படித்து விமர்சனம் போடுறன் . ஹேப்பி ஜர்னி சார் . பை ஃபார் நவ் .

    ReplyDelete
  23. ஹம்... சிரித்த முகத்துடனே வில்லத்தனம் செய்யும் சீராள மன்னரைத் தவிர வேறு யாருமே மனதில் நிற்கவில்லை( வேதாளரையும் சேர்த்துதான்). கதை ரொம்பவேflat . 25 வருடங்களுக்கு முன் படித்திருந்தால் பிடித்திருக்குமோ என்னவோ!

    ஆனாலும், இப்படியொரு புராதனப் பொக்கிஷத்தைப் புரட்டிப்பார்த்திடும் அனுபவத்தைக் கொடுத்த மாயாவி சிவாவின் மெனக்கெடல்களுக்கு நன்றிகள் பல!

    நெக்ஸ்டு? ;)

    ReplyDelete
  24. சிரித்த முகத்துடனே வில்லத்தனம் செய்யும் சீராள மன்னரையும் கடைசியில் சேலாவையும் ( ;-) )தவிர வேறு யாருமே மனதில் நிற்கவில்லை......

    சேலாவுக்கு சேலை வாங்கி கொடுக்க முடியாத அளவுக்கு சீராளர் "சீப்பாக போயிருக்க வேண்டாம் ;-)

    ரொம்பவே லினயர் ஸ்டோரி ......அட்லீஸ்ட் வேதாளர் இரண்டு மூன்று கபால முத்திரையாவது பதித்திருக்கலாம் .....:-)

    ReplyDelete
    Replies
    1. //சேலாவுக்கு சேலை வாங்கி கொடுக்க முடியாத அளவுக்கு சீராளர் "சீப்பாக போயிருக்க வேண்டாம் ///

      ஹலோ... சீஃப் சீராளர் நம்ம மனதில் நிற்கக் காரணமே, அவர் சேலாவுக்கு சேலை வாங்கித் தராமல் கூலா விட்டதால்தான்! ;)

      ஆனாலும் சும்மா சொல்லக்கூடாதுங்க... சீராளரை நம்ம வேதாளர் கைது பண்ணும்போதுகூட அந்தச் சேலையில்லா சேலா வந்து நின்னுகிட்டு "என்னையும் கூட்டிப் போங்க"ன்னு கெஞ்சிச்சு பாருங்க... அப்படியே நெக்குருகிப் போய்ட்டேன்!

      Delete
  25. ரெண்டு பேரும் சேர்ந்து வேதாளரையே ஓட்டுறிங்க...ம்.....
    மறுபதிப்புல வந்து சிக்கினா வேதாளர் கதி அதோ கதி தான்....ஹா...ஹா...!

    ReplyDelete
  26. ரெண்டு பேரும் சேர்ந்து வேதாளரையே ஓட்டுறிங்க...ம்.....
    மறுபதிப்புல வந்து சிக்கினா வேதாளர் கதி அதோ கதி தான்....ஹா...ஹா...!

    ReplyDelete
  27. சில டம்மி பீஸுகளைக் கைது பண்ணிக் கூட்டிட்டுப் போக வேதாளர் இவ்வளவு மெனக்கெட்டு வாய்ப்புபெல்லாம் வாங்கியிருக்க வேணாம்னு தோணுது! இந்த சப்பை மேட்டருக்கு தன்னோட சொந்த ஹெலிகாப்டரையெல்லாம் வேற யூஸ் பண்ணி தண்டச் செலவு வேற! (ஹெலிகாப்டர்ல தன்னோட நாயை ஏத்திக்கிட்டுப் போனதுகூட சரிதான்... ஆனா குதிரை எதுக்கு?!!)

    பேசாம, சீராளரைக் கைது பண்ண வேதாளர் தன்னோட அஸிஸ்டெண்ட் குரானை அனுப்பிவச்சிருக்கலாம்! ;)

    ReplyDelete
  28. மாயாவியில் பொக்கிஷ குகை போல உங்கள் சேகரிப்பில் இருந்து இன்னும் விஷயங்களை அள்ளி தெளியுங்கள் சிவா.... பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல :)

    ReplyDelete
  29. நேற்றுத்தான் முழுவதும் படித்து முடித்தேன் விமான கடத்தல்காரர்களை... பல அட்டகாசமான அதிரடிகள் பல இருக்க, மிகச்சாதாரணமான இந்தக்கதை வேதாளரின் காதலர்களைத்தவிர வேறு யாரையும் ஈர்க்காது...

    நேயர் விருப்பமாக எனது விருப்பம்... ஏதேனும் ஒரு இந்தர்ஜால் வெளியீடு மாயாவியை பதிவிடலாம்... (இந்தர்ஜால் வெளியீடுகளின் வண்ணச்சேர்கைகளுக்கு நான் அடிமை)

    அப்புறம், லயன் பிளாக்கில் பல பஞ்சாயத்துக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன... பலப்பல அங்கே கிளிக், இங்கே கிளிக் போட வாய்ப்புகள்... உங்களைத்தான் ஆளைக்காணவில்லை....

    வெளியூர் செல்கிறேன்... 17 ம் தேதிதான் தலைகாட்ட இயலும்... அதற்குள் ஏதேனும் புதிய பதிவுகள் போட்டு வையுங்கள் மாயாவி...

    ReplyDelete
    Replies
    1. இன்று மதியம் தான் சேலம் வந்தடைவேன் SVV !

      //அப்புறம், லயன் பிளாக்கில் பல பஞ்சாயத்துக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன... பலப்பல அங்கே கிளிக், இங்கே கிளிக் போட வாய்ப்புகள்... உங்களைத்தான் ஆளைக்காணவில்லை....//

      நானும் கவனித்தேன் , நிறைய யோசிச்சதில் பல விஷயங்களுக்கு விடை மூர்கத்தனமாக கண்டுபிடித்து வைத்திருக்கிறேன் ! விரைவில் பதிவாகவே பட்டையை கிளப்புகிறேன் !

      Delete
  30. அருனமயான பதிவு... ஜேம்ஸ்பாண்டு வின் முதல்கனத (ராணிகாமிக்சு) அழகினய தேடி இருந்தால் தயவு செய்து பதிவிடவும் ... எனது email yazhisaiselva@gmail.com pdf file ஆகஅனுப்பவும்

    ReplyDelete
  31. அருனமயான பதிவு... ஜேம்ஸ்பாண்டு வின் முதல்கனத (ராணிகாமிக்சு) அழகினய தேடி இருந்தால் தயவு செய்து பதிவிடவும் ... எனது email yazhisaiselva@gmail.com pdf file ஆகஅனுப்பவும்

    ReplyDelete
  32. அருனமயான பதிவு... ஜேம்ஸ்பாண்டு வின் முதல்கனத (ராணிகாமிக்சு) அழகினய தேடி இருந்தால் தயவு செய்து பதிவிடவும் ... எனது email yazhisaiselva@gmail.com pdf file ஆகஅனுப்பவும்

    ReplyDelete
  33. அருனமயான பதிவு... ஜேம்ஸ்பாண்டு வின் முதல்கனத (ராணிகாமிக்சு) அழகினய தேடி இருந்தால் தயவு செய்து பதிவிடவும் ... எனது email yazhisaiselva@gmail.com pdf file ஆகஅனுப்பவும்

    ReplyDelete