Friday, 7 November 2014

கருப்பாய் வருவான் காலன் ! part - 2


வணக்கம் நண்பர்களே,

டக்குனு கொஞ்சம் புரியாத கதை இ.இ.கொ. அது எங்க கைல மாட்டிக்கிட்டு, நாங்க அத புரிய வெக்குரோன்னு செய்யற கலாட்டாபத்தி சொல்லவே வேண்டியதில்ல. இதனால நீங்க எத்தன 'லொச்சு' கொட்டினிங்களோ தெரியலை, இத சொல்லிடனம், அத விட்டுடக்கூடாது, இந்த மாதிரி சொன்ன 'செமையா' இருக்குன்னு ஆளாளுக்கு போட்டி போட்டு 'பாயிண்ட்'டக்கொட்டினோம் (?).
அதோட உச்சம்( மிச்சம்) தாங்க இந்த part 'டூ' . ஊருக்குள்ள 'கண்ணு' 'ரவி' ன்னு பாசக்கார மேச்சேரிகாரங்க கூப்புடற...'மேச்சேரி மங்கூஸ்' ன்னு தனக்கு தானே பேரு வச்சுக்கிட்டு நம்மள சிரிக்கவெக்கற 'கனல்' கண்ணன்...சாரி...'காமெடி' கண்ணன்....
"இந்தப்பா இன்னுஎன்னப்பா...சீரியசா யோசிச்சிகிட்டு...விட்ட என்னையும் சவடிச்சுடிவிங்க போல...நகருங்கப்பா மிச்ச கதையை நா ஒரு கைபாக்குறேன்..."
...ன்னு தடாலடியாக எறங்கி காமெடியா தந்த ஸ்கிரிப்ட பாத்து 'அட இப்பிடியும் ஒரு சூப்பரா ரூட்ல சொல்லலாமில்ல...' ன்னு சிரிச்சு சிரிச்சு அவர பாராட்டி தள்ளிகிட்டே (?) இந்த பதிவை செஞ்சேன், நீங்களே படிச்சுபாருங்க...'குபீர்வெடி' சிரிப்புவந்தா( வரும்) ரெண்டுக்கு மூனா 'கமெண்ட்' போடுங்க...!

நட்புடன்,
மாயாவி.சிவா

பின் குறிப்பு:
இந்த மனுஷன் டிஸ்கசன்ல கெடச்ச பாராட்ட ஒட்டுமொத்த 'வெய்ட்' போட்டு...இன்னு "ரெண்டுநாள்ல ஹிந்து பேப்பர்ல இந்த 'புக்'கபத்தி நியூஸ் வரப்போவுது...அடுத்து டைம்ஸ் ஆப் அமெரிக்கவுல வருவாங்க...நம்ம காமெடி டைலாகபடிச்சி எப்படியும் ஒரு வெள்ளக்காரன் 'வயிறு வெடிச்சி' நியூஸாகும், இதே ரூட்டல போன...'டக்கரான' சான்ஸ் தேடிவரும், அப்போ டீசண்ட ஒரு நேம் இருந்த தேவலாம்..."
...ன்னு ஏதேதோ கணக்கு போட்டு வாஸ்துபடி (?) 'Modern Mangoose' ன்னு மத்திக்கிட்டாருன்னா பாத்துகோங்களேன்...!

























Nov 7 தி இந்து  தினசரியில் நண்பர் 'கிங் விஸ்வா' வின் இ.இ.கொ விமர்சனம்...


Monday, 3 November 2014

கருப்பாய் வருவான் காலன் ! part - 1



வணக்கம் நண்பர்களே,

முதல்முறையாக 'ஈரோடு விஜய்' மற்றும் 'மேச்சேரி மங்கூஸ்'
என்னுடன் இணைந்து சற்றே வித்தியாசமான இந்த பதிவை
வழங்கியுள்ளோம்.
பார்த்து,படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்களேன்....

நட்புடன்,
மாயாவி.சிவா
























Thursday, 30 October 2014

'HALLOWEEN ஸ்பெஷல்' - ஒரு அலசல் ! part - 2

வணக்கம் நண்பர்களே...!

" ஒரு ஆங்கிலபடம் போல எழுதப்பட்ட, சாதாரணமான ஒரு காமிக்ஸ்,
இதை போய் இப்படியெல்லமா அலசுவார்கள்...ஆச்சரியம்! " என நானும்
உங்களை போலவேதான் புருவங்களை உயர்த்தினேன், எப்போது
தெரியுமா...?.
நண்பர்களுடன் இ.இ.கொ கதையை பற்றி அலசும் போது கிடைத்த
கண்ணோட்டங்கள் தான் என் புருவங்களை உயர்த்தியது, " இப்படியெல்லமா...
யோசித்து படிப்பார்கள்" என வியந்தேன்... என்பதே உண்மை !

இன்றைக்கு இந்த அலசல் ஒரு சின்ன நகைப்பை ஏற்படுத்தலாம்...
ஆனால்,சில காலத்திற்கு பின் " அன்று அந்த கதையை எப்படியெல்லாம்
யோசித்து, அலசவைத்தது.... இ.இ.கொ  கதை போலஅலசலுக்கு ஏற்ற
ஆழமான கதைகள் போடுங்கள் சார்... ஜூனியர் கொஞ்சம் பாத்து பிடிச்சி
கொடுங்க " என நிச்சயம் கேட்கப்படும் !

இதை போலவே இவ்வளவு ஆர்வமாக எல்லாகதைகளையும் இப்படி அலச
முடியும் என தோன்றவில்லை....so கிடைத்ததை சிறப்பாக அலசியிருக்கிறேன்.
அதேசமயம்...இதைவிட சிறப்பான கதைக்காக நிறையவே ஆவலுடன்,
உங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்...!

படித்துபார்த்துவிட்டு கொஞ்சம் கருத்து  சொன்னால்  அடுத்து  ஏதாவது  செய்ய  உதவியாக இருக்கும்.

நட்புடன்,
மாயாவி.சிவா