Thursday 17 December 2015

மாயஉலகம் தோர்கல்..!


வணக்கங்கள் நண்பர்களே..!

மாயாஜால ஹீரோக்கள் எல்லோர் மனசுலயும் பச்சுன்னு ஓட்டிக்க ஒரு அருமையான பார்முலா இருக்கு..! அந்த பார்முலா படிவந்த சமீபத்திய மெகா வெற்றி ஹாரிபார்ட்டர் கதை..! அந்த பார்முலா என்ன தெரியுமா...???

உலகமே அவனை தெரிந்துவைத்துக்கொண்டிருக்கும், எங்குபோனாலும் அடையாளம் தெரிஞ்சிட்டு மதிப்பும் மரியாதையும் அள்ளிவிசுவாங்க..! எதிரிங்க அவன் பேரை கேட்டாலே அடிவயிறு கலக்கும், பின்னாடி ஒருகால்வைப்பாங்க..! கொசு மாதிரி இருக்குற ஹீரோவை ஒழிக்க அணுகுண்டு சைஸ் பீரங்கி பத்தாதுன்னு எதிரிங்க புலம்புவங்க..! ஆனா இதை எல்லாமே துளி கூட கண்டுக்காம நம்ம ஹீரோ நம்ம ரேஞ்சுக்கு சாதாரணமா நடந்து போவார். எதிர்ல வர்றநோஞ்சான் கிட்ட செமத்தியா அடிவாங்குவான்..! ஆனாலும்கூட பெரிய பெரிய ஆளுங்க அவனுக்கு பயந்து சாவாங்க, அவனோட பிறப்பு வரலாற்றின் ஒரு ஆச்சரியகுறியீடுன்னு விடாம பேசுவாங்க, அவனை தீத்துகட்ட பயங்கரமா பிளான் போடுவாங்க..! ஆனா நம்ம ஹீரோவுக்கு அதுபத்தி ஒண்ணுமே தெரியாது, பலரும் அவனோட கூட்டு வெச்சிக்க வருவாங்க, இருந்தும்கூட எனக்கு எதுவும் வேணாம், என்னைய விட்டுடுங்கோன்னு ஒதுங்கி ஒதுங்கி போவான்..! 

இதுதாங்க அந்த ஸுப்பர் பார்முலா..! இந்த பார்முலாபடிதான் வான்ஹாமே எழுதின அசத்தலான 'தோர்கல்' மாயாஜால கற்பனையை இன்ச் பை இன்ச் ஆச்சரியபடற அளவுக்கு செதுக்கியிருக்கார்..! பக்கத்துக்கு பக்கம் கொட்டிகிடக்குற விதையை பல ஹாலிவுட் படங்கள் எடுத்து சைலண்டா மரமாக்கி காசக்கியிருக்காங்க..! பேர்வாங்கியிருக்காங்க..!அதுல ஒன்னு ஹாரிபார்ட்டர்ன்னு சொல்லலாம்..!

ஒவ்வொரு பகுதி முடிவிலும் ரெண்டுபேரோட தோர்கல் ஸாகசம் செய்ய கிளம்பறதா முடியும், ஆனா அடுத்த பகுதியில தோர்கல் வேறேங்கியோ தனியா போய்ட்டிருப்பார்...ஹேய்..நடுவில சிலபக்கத்தை காணமா..? ன்னு குழம்ப தேவையில்லை. நாம நியாபகம் வெச்சிக்கவேண்டியது ஒன்னேஒண்ணுதான். அது....

தோர்கல் உண்மையா யார் கூடயும் போறது கிடையாது,அவர் பாட்டுக்கு போய்ட்டேயிருப்பார்.அவர் கூட சிலர் ஓட்டிகிறாங்க.தோர்கல் வெட்டிட்டு கழண்டுகிறார் அவ்வளவுதான். நண்பர் கிட் ஆர்ட்டின் கண்ணன் கேட்டது எனக்கு தெரிஞ்ச சின்ன பாயிண்ட் இது..!

கிட்டத்தட்ட 1980 ம் வருஷம் துவங்கிய இந்த தொடர் 2013 வரை விடாம வருஷம் ஒன்னுகிற கோட்பாடுல வந்தவை. 46 பக்கங்கள் உள்ள ஒரு கதையை தயாரிக்க ஒரு வருஷம் விலை..! 34 இதழ்கள் வந்த இந்த தொடர் நமக்கு அருமையான மொழிபெயர்ப்பில், இதுவரையில் 6 பகுதிகள் கிடைச்சிருக்கு..!

இந்த டிஜிட்டல் உலகத்தின் மூலமா, மாயஉலக ஆர்வத்தை தூண்டும் சின்ன முயற்சியா 34 இதழ்களின் அட்டைய அழகுபாக்க உங்க பார்வைக்கு..!அதுமட்டுமில்லாம அடுத்து என்ன வரவேண்டியிருக்கு,எது வந்திருக்குன்னு எப்பவாச்சி பாக்க உவுதவுமே..!அதுக்காக தோர்கல் அணிவகுப்பு தொடர்கிறது..!

நட்புடன்
மாயாவி.சிவா





































தோர்கல் வம்சாவளி அட்டவணை இது. இதுபோல் பின்னால் ஆசிரியரிடம் கேட்டு பெறவேண்டும்..!